Friday, July 27, 2018

Renewal Pallikudam


வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்க (renewal) தவறியவர்களுக்காக அரசு சலுகை .
வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்க (renewal) தவறியவர்களுக்காக அரசு சலுகை .
முக்கிய தகவல்  2011 ஆம் ஆண்டு முதல் 2015 வரை வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்க (renewal) தவறியவர்களுக்காக அரசு சலுகை அறிவித்திள்ளது.

Monday, July 9, 2018

Pallikudam

ஒரு நாளைக்கு 24 அல்ல... 25 மணி நேரமாம்!

வெ .ஜெயசுப்பிரமணியன்
``தலைக்கு மேல வேலை.. ஒரு நாளைக்கு 24 மணி நேரம்தான்ல?" என அங்கலாய்ப்பவர்களுக்கு பதிலாக வந்திருக்கிறது புதிய ஆய்வு முடிவு ஒன்று. வருங்காலத்தில் ஒருநாளுக்கு 25 மணி நேரமாகலாம் என்கிறது அந்த ஆய்வு.

பல பில்லியன் ஆண்டுகளாகப் பூமியில் நிலவும் நேர மாறுபாட்டிற்கும் நாள்கள் நீள்வதற்கும் காரணமாக நிலவு இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர் விஞ்ஞானிகள். நிலவுக்கும் பூமிக்கும் இடையேயுள்ள தொலைவு அதிகரிக்க அதிகரிக்கப் பூமியின் சுழற்சி வேகம் குறைகிறது. சொல்லப்போனால் கிட்டத்தட்ட 140 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தற்போது உள்ள தொலைவில் நிலவு இருக்கவில்லை என்றும், அப்போது ஒரு நாள் என்பது 18 மணி 41 நிமிடங்களைக் கொண்டிருந்ததாகவும் கூறுகிறது ஆய்வு. மேலும், ஒருநாளுக்கு 24 மணி நேரம் என்ற மணிக்கணக்கு, வருங்காலத்தில் அதிகரிக்கவும் வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் பேராசிரியர் ஸ்டீபன் மேயர்ஸ் மற்றும் அவரது குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வுகுறித்த தகவல்கள் Proceedings of the National Academy of Sciences என்ற ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்டது. பொதுவாக பூமியின் சுழற்சியானது, விண்வெளியிலுள்ள பல்வேறு பொருள்களின் ஈர்ப்புவிசையால் பாதிக்கப்படுகிறது. இதில் நிலவினைத் தவிர பிற கோள்களும் (planets) அடங்கும். இந்த அனைத்துப் பொருள்களும்தாம் பூமியின் சுழற்சி மாறுபாட்டினை நிர்ணயிக்கும் காரணிகளாக விளங்குகின்றன. சூரியக் குடும்பத்தில் காணப்படும் பல்வேறு பொருள்களின் இயக்கங்களால்தாம் கடந்த பல கோடி ஆண்டுகளுக்கும் மேலாக பூமியில் நாளொன்றின் நேர நிர்ணயமானது பல்வேறு மாறுதலுக்குள்ளாகி இருக்கிறது. இந்த விண்வெளி பொருள்களின் இயக்கங்களில் ஏற்படும் எந்தவொரு சிறிய மாற்றமும் பூமியின் காலநேர நிர்ணயத்தில் பெரிய மாற்றங்களை உருவாக்கும். இந்நிலையில், தற்போது நிலவு பூமியிலிருந்து வருடத்துக்கு 3.82 சென்டி மீட்டர் என்ற அளவில் விலகிச்செல்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வு இன்னும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. நிறைய உண்மைகள் வெளிவந்தால், புவியியல் வரலாற்றில் மற்றுமொரு மகத்தான ஆராய்ச்சியாக இது இருக்கவும் வாய்ப்புண்டு!

Pallikudam

27ம் தேதி உள்ளூர் விடுமுறை -மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
நெல்லை மாவட்டத்திற்கு வரும் 27ம் தேதி உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் சில்பா அறிவிப்பு
நெல்லை மாவட்டத்திற்கு வரும் 27ம் தேதி உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
சங்கரன்கோவில் சங்கரநாராயணர் ஆலய ஆடிதபசை முன்னிட்டு 27ம் தேதி நெல்லை மாவட்டத்திலுள்ள அரசு அலுவலங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

Wednesday, July 4, 2018

Pallikudam

புதிய பாடத் திட்டம்: ஆசிரியர்களுக்கு விரைவில் பயிற்சிப் புத்தகம்
புதிய பாடத்திட்டத்தில் மாணவர்களுக்கு பாடம் நடத்த பயிற்சி புத்தகம் ஆசிரியர்களுக்கு விரைவில் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் மாநிலப் பாடத் திட்டத்தில் 1, 6, 9, பிளஸ் 1 ஆகிய வகுப்புகளுக்கான பாடத் திட்டம் மாற்றியமைக்கப்பட்டு புதிய பாடத்திட்டத்திலான பாடநூல்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதையடுத்து புதிய பாடத்திட்டம் குறித்து பயிற்சி பெற்ற கருத்தாளர்கள் மாவட்ட வாரியாக 40,000 ஆசிரியர்களுக்கு ஜூலை 9-ஆம் தேதி முதல் ஜூலை 21 ஆம் தேதிவரை பயிற்சி அளிக்கவுள்ளனர்.
இதற்கிடையே, புதிய பாடத் திட்டத்தின் படி இனி எப்படி பாடங்களை நடத்த வேண்டும் என்பது குறித்த பயிற்சிப் புத்தகம் ஆசிரியர்களுக்கு வழங்கப்படவுள்ளது. இதில், புதிய பாடத் திட்டங்களுக்கு மாணவர்களை எவ்வாறு தயார் செய்வது, புரியும் வகையில் எப்படி பாடங்களை நடத்துவது, பயிற்சிகளை எவ்வாறு அளிப்பது உள்ளிட்ட தீவிரமான ஆலோசனைகள், அறிவுரைகள் இருக்கும். அரசு பள்ளி ஆசிரியர்கள் முறையான வழிமுறைகளில் பாடங்களை மாணவர்களுக்கு நடத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தக் கையேடு வடிவமைக்கப்பட்டு வருகிறது. இது மாநில வழிக் கல்வியை கற்பிக்கும் ஆசிரியர்கள் முறைப்படி கற்பிக்க உதவியாக இருக்கும்.
பாடங்களை திட்டமிடல், வரைபடத்துடன் விளக்குதல், வகுப்புகளில் தேர்வுகள் நடத்துதல் உள்ளிட்டவற்றை சிறப்பாகச் செய்யும் வகையிலான தகவல்கள் இந்தப் பயிற்சி புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். உதாரணமாக, இயற்பியல் பாடத்தை பெயரளவுக்கு நடத்தி விட்டுச் செல்லாமல், அதை தொழில்நுட்பரீதியாக புரொஜெக்டர் மூலம் நடத்தும்போது மாணவர்களுக்கு எளிமையாகப் புரியும். அவ்வாறு செய்வது எப்படி என்று இதில் கொடுக்கப்பட்டிருக்கும்.
கல்வித் துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களால் எழுதப்பட்ட கையேடு என்பதால், ஆசிரியர்கள் திறன் மிகுந்த வகையில் மாணவர்களுக்கு பாடங்களை கற்பிக்கவும் பல்வேறு நவீன புத்தாக்க முறையில் பாடங்களை நடத்தவும் உதவியாக இருக்கும். ஆசிரியர்களுக்கான பயிற்சிப் புத்தகத்தை புதிய பாடத் திட்ட பயிற்சியின்போது வழங்கத் திட்டமிட்டுள்ளோம் என்றனர்.

Monday, July 2, 2018

பள்ளிக்கூடம் செய்தி

திறன்மிகு வகுப்பறை திறப்பு விழா

   பள்ளி வளர்ச்சி பாதையில் பயணிக்க பாடுபட்டு உழைக்கும் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசியர்களுக்கு பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!