Wednesday, December 13, 2017

Pallikudam

அறம்


இறை பழித்தோர் உண்டு
             அறம் பழித்தோர் இல்லை
                                          -என்பது கூற்று
               தமிழ்மொழியின் ஒரு நுட்பமான சொல் அறம்,அதனை பிறருக்குஉதவி,ஒழுக்கம்,நற்செயல்,நன்னடத்தை,நன்கொடை,போன்ற பல பொருள் கொள்ளலாம்.   தன்னலமில்லாத பொதுவான நன்மையின்,நற்செயலின் பொருட்டு செய்யப்படும் அனைத்தும் “அறம்” ஆகும்.
            பலபேர் கூடிவாழ்கின்ற சமூதாயத்தில் ஒவ்வொருவருக்கும் ஒருசில சமூக கடமைகள் உண்டு, நாம் நம்மை தனிமனிதனாக சிந்திக்க ஆரம்பித்தால் சமுதாயம் உடைந்துபோகும. ஒருசிலஅறம் சமுதாயத்திற்கும்,ஒருசிலஅறம் தனிமனித வாழ்கைக்கும் உண்டு. திருக்குறளில் தனிமனித அறத்தையும், சமூக அறத்தையும் திருவள்ளுவர் மிக அற்புதமாக எடுத்துறைக்கிறார். தனிமனிதனுடைய “தகுதி “ அவனது அறம்சார் வாழ்க்கையை பொருத்தே அமையும்.தனிமனித அறம் காக்கப்படும்போது சமூக அறம் நிலைநாட்டப்படுகிறது.
            உலக நாடுகளைக்காட்டிலும் நம்இந்திய திருநாடு அமைதியாக இருக்க மிகப்பெரிய காரணம் நம் மக்களின் அறச்சிந்தனைகளே ஆகும். தமிழர்களின் பண்பாடு அறம் சார்ந்து அமைந்திருந்ததாலே இன்றும் பெருமிதத்துடன் நிலைத்து நிற்கிறது.
அறம் வழுதலின் காரணமே இன்று நாட்டிலும் தனிமனித வாழ்விலும் பல இன்னல்கள் தலைதூக்கி நிற்கின்றன. எஞ்சி நிற்கும் அறமே நம்மை காக்கின்றது,
அறத்தை பேணிக்காப்பதற்கே மதங்கள் தோன்றின,அறத்தினை மக்களிடம் வலியுறுத்தவே அவை போதிக்கப்பட்டன. திருக்குறள் உள்ளிட்ட அனைத்து  நீதிநூல்களும்,இதிகாசங்களும்,இலக்கியங்களும் அறத்தை முதன்மையாக கொண்டே இயற்றப்பட்டன.
தமிழர்களின் குடும்பங்களின் வாழ்வியல் முறை அறத்தினை பிரதானமாக கொண்டே அமைந்துள்ளது.  நமது முன்னோர்களின் அறசார்  கருத்துக்களை கடைபிடிப்பத்தின்  வாயிலாகவும் “அறத்தை இழந்தால் இழிவு” “பிழை செய்வோரை  அறம் கொல்லும்“என்பது போன்ற ஆழ்ந்த சிந்தனைகளை குழந்தைகளுக்கு சிறுவயது முதலே விதைத்தோமானால்  நாளைய சமூகம் “சீர்மிகு சமுதாயமாக உருபெரும் என்பது திண்ணம்.
இயற்கையை நேசிப்பதே வாழ்க்கையின் அறம்
அறமே உலகின் அரண்.



                                    சீனி.சங்கரநாராயணன்,                                                                                                                      எம்.எஸ்சி.,எம்.பில்.,எம்.காம்.,பி.எட்.டி.டி.எட்.,
                                    பட்டதாரி ஆசிரியர்,
                                    செஞ்சி.     9442224436

No comments: