’செட்’ தேர்ச்சி பெற்றவர்கள் பணியில் சேர நிபந்தனை!!!
செட் தேர்வை, 2002க்கு பின் முடித்தோர், அந்தந்த மாநில கல்லுாரிகளில் மட்டுமே பணியாற்ற முடியும் என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.
செட் தேர்வை, 2002க்கு பின் முடித்தோர், அந்தந்த மாநில கல்லுாரிகளில் மட்டுமே பணியாற்ற முடியும் என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.
கல்லுாரிகளில் உதவி பேராசிரியராக சேரவும், மத்திய அரசின் உதவித்தொகை பெற்று, இளநிலை ஆராய்ச்சி மாணவராக படிக்கவும், மத்திய அரசின், நெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் இத்தேர்வு நடக்கும். மாநில மொழிகளில் எழுதுவோருக்கு, மாநில அளவில், செட் என்ற தகுதித்தேர்வு நடந்தப்படுகிறது.
செட் தேர்வில் தேர்ச்சி பெற்ற பலர், பிற மாநிலங்களில் பணியாற்ற விண்ணப்பித்து வரும் நிலையில், சி.பி.எஸ்.இ., வெளியிட்டுள்ள அறிவிப்பு: பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி.,யின் அங்கீகாரம் பெற்ற, உதவி பேராசிரியர் பணிக்கான, செட் தேர்வில், 2002 ஜூன், 1ம் தேதிக்கு முன், தேர்ச்சி பெற்றோர், நாடு முழுவதும், அனைத்து பல்கலை, கல்லுாரிகளில், உதவி பேராசிரியர் பணிக்கு செல்லலாம்; நெட் தேர்வு தேர்ச்சி அவசியம் இல்லை.
அதன்பின் நடந்த, செட் தேர்வில் தேர்ச்சி பெற்றோர், செட் தேர்வை நடத்திய, மாநில அரசு களின் பல்கலை மற்றும் கல்லுாரிகளில் மட்டுமே உதவி பேராசிரியர்களாக பணியாற்ற முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment