Pages
- HOME
- ஆசிரியர் தகுதி தேர்வு
- தொடக்க கல்வி
- அரசாணைகள்
- கற்பித்தல்
- பாடப்புத்தகம்
- துறை தேர்வு
- கல்வி
- கணினி நுட்பம்
- தமிழ் செய்தித்தாள்
- TN ABL CARDS
- PallikudamNEWS
- முக்கிய படிவம்
- செயல் முறைகள்
- தனி ஊதியம்
- Teachers resource
- B.Ed
- 2013
- TET CENTER
- முக்கியம்
- ENGLISH
- குழந்தை கதைகள்
- MATHS & SCIENCE
- ஜோசியம்
- HISTORY
- கணிதம்
Monday, November 16, 2015
working days
WhatsApp புதிய பதிப்பு 2.12.357 APP Download...
Sunday, November 15, 2015
pallikudam
2 மாதங்களுக்கு ஒரு முறை ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் சரிபார்ப்பு
2 மாதங்களுக்கு ஒரு முறை ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் சரிபார்ப்பு
உதவி, கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் தங்களுக்கு கீழ் பணிபுரியும் ஆசிரியர்களின் பணிப் பதிவேடு களை உரிய காலத்தில் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.ஆசிரியர்களின் பணி பதிவேட்டில் அவர்கள் பயின்ற உயர்கல்வி விவரங்களை பதிவு செய்யும் முன்பு உயர்கல்வி பயில்வதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பதையும்,சான்றிதழ்கள் தற்காலிகமா? நிரந்தரமானதா என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.ஒவ்வொரு ஆண்டிலும் டிச.31ம் தேதி ஒவ்வொரு ஒன்றியத்தில் பணிபுரியும் ஆசிரியர்களின் முன்னுரிமை பட்டியல், பதவி உயர்விற்கான தேர்ந்தோர் பட்டியல் ஆகியவை பணி பதிவேட்டில் உள்ள பதிவேடுகளின் அடிப்படையில் தான் தயாரிக்கப்படுகிறது. எனவே, சரியான சான்றிதழ்கள் அடிப்படையில் மட்டுமே பதிவுசெய்ய வேண்டும். ஏதேனும் தவறுகள் நடந்தது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட அலு வலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.ஆசிரியர்களின் வளர் ஊதியம், பதவி உயர்வு, ஊதியம் நிர்ணயம் மற்றும் ஓய்வூதியம் ஆகிய அனைத் தும் பணி பதிவேட்டில் உள்ள பதிவுகளின் அடிப்படையில்அனுமதிக்கப்படுகிறது.
எனவே ஒவ் வொரு உதவி, கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் தங்கள் கீழ் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களின் பணி பதிவேடுகளில் விவரங்கள் விடுபட்டிருந்தால் 15 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். 2 மாதங்களுக்கு ஒரு முறை அனைத்து பணி பதிவேடுகளும் அலுவலகத்தில் உள்ளது என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.உதவி, கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் பணி மாறுதல் மூலம் வேறு ஒன்றியங்களுக்கு மாறுதல் பெற்று செல் லும் போது அனைத்து ஆசிரியர்களின் பணி பதிவேட்டில் ஆசிரியர் எடுத்த விடுப்புகள் மற்றும் பணி சரிபார்ப்புகள் அனைத்தையும் பதிவு செய்து விட்டுத் தான் செல்ல வேண் டும்.உதவி தொடக்க கல்வி அலுவலகங்களை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் ஆய்வு செய் யும் போது இந்த விவரங்களை சரிபார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
Friday, November 13, 2015
pallikudam
அரசு ஊழியர் குடும்ப முன்பணம் அதிகரிப்பு
சென்னை:பணியின் போது இறக்கும், அரசு ஊழியர் குடும்பத்தின் உடனடி தேவைக்காக வழங்கப்படும் முன்பணம், 5,000 ரூபாயில் இருந்து, 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.
அரசு ஊழியர்கள், பணியில் இருக்கும் போது இறந்தால், அவர்கள் குடும்பத்தின் உடனடித் தேவைக்காக, குடும்ப பாதுகாப்பு நிதியில் இருந்து, 5,000 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது.
'இத்தொகை, 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்' என, செப்., 29ல், சட்டசபையில், நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் அறிவித்தார். அதன்படி, முன்பணத்தை உயர்த்தி வழங்க, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த உத்தரவு, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் உட்பட, அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும்.
pallikudam
முகநூலில் அரசுக்கு எதிராக இயங்குபவரா- உங்களை குறித்த விவரம் தற்போது அரசின் கையில்
உலகில் உள்ள பல்வேறு நாடுகள், முகநூலில் (பேஸ்புக்) தங்களுக்கு எதிராக இயங்குபவர்கள் குறித்த தகவல்களை சேகரிப்பது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது என பேஸ்புக் நிர்வாகம் கூறியுள்ளது.
இந்தியாவில் மட்டும், சட்டத்துக்குப் புறம்பான கருத்துகளை வெளியிட்டதாக இந்த ஆண்டில் 15,155 பேரின் தகவல்கள் நீக்கப்பட்டுள்ளன.
பேஸ்புக் நிறுவனத்தில் ஆண்டுக்கு இருமுறை வெளியிடப்படும் ஆய்வறிக்கையில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகில் உள்ள அரசாங்கங்கள் கேட்கும் தகவல்கள் கடந்த ஆறு மாதத்தைவிட தற்போது 18 மடங்கு அதிகரித்துள்ளது. 2014 ஆண்டு பிந்தைய ஆறுமாதங்களில் 35,051 பேரின் தகவல்கள் கேட்கப்பட்ட நிலையில், நிகழ் ஆண்டின் முதல் ஆறு மாதத்தில் 41,214 பேரின் தகவல்கள் கேட்கப்பட்டுள்ளன.
அரசுகளின் கோரிக்கையை ஏற்று, இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை, 20,568 ஆட்சபேகரமான கருத்துகள் பேஸ்புக் பக்கங்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இது கடந்த 6 மாதத்தைவிட இரு மடங்காகும்.
மேலும் அரசுக்கு எதிரான கருத்துகளை பதிவு செய்யும் நபர்களின் அடிப்படை தகவல்கள், அவர்கள் பயன்படுத்தும் கணினி, மொபைல் போன்கள் குறித்த தகவல்கள் (IP address), அவர்கள் பதிவிடும் தகவல்களை தர வேண்டும் என்பது உலக அரசுகளின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
பேஸ்புக் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 1.55 மி்ல்லியனை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க ஐக்கிய அரசாங்கத்திடமிருந்துதான், தனிநபர்கள் குறித்த தகவல்கள் கேட்டு அதிகமான கோரிக்கைகள் வந்துள்ளன. இதைத் தொடர்ந்து பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளிலிருந்து அதிக கோரிக்கைகள் வந்துள்ளன.
உள்ளூர் சட்ட விதிகளை மீறியதாகவும், தகவல்களை நீக்க வலியுறுத்தி இந்தியா மற்றும் துருக்கி நாடுகளிலிருந்து அதிக வேண்டுகோள்கள் வந்துள்ளன. 190 மில்லியன் இந்திய வாடிக்கையாளர்கள் பேஸ்புக்கில் உள்ள நிலையில், இந்த ஆண்டு மட்டும் இந்தியாவைச் சேர்ந்த 15,155 பேரின் தகவல்கள் நீக்கப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டைவிட 3 மடங்கு அதிகமாகும்.
அரசாங்கங்கள் விடுக்கும் கோரிக்கையை தட்டிகழிக்க இயலாமல், தனிநபர் விவரங்கள் பாதுகாப்பு குறித்து வாடிக்கையாளர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மீறி, அவர்கள் குறித்த விவரங்களை அரசுகளுக்கு வழங்கி வருகிறது பேஸ்புக்.
எனினும், தனது வாடிக்கையாளர் விவரங்களை எந்த அரசும் நேரிடையாக பயன்படுத்திகொள்வதற்கு அனுமதி அளிக்கவில்லை என்று அறிவித்துள்ளது பேஸ்புக் நிறுவனம்.
pallikudam
பள்ளிகளில் 4 முறை வருகைப்பதிவு
தொடக்கக் கல்வி இயக்குனர் முனைவர் இளங்கோவன் அவர்கள், பள்ளிகளுக்கு அனுப்பிஉள்ள சுற்றறிக்கை:
மாணவர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தினமும், நான்கு வேளையும், மாணவர்களின் வருகையை உறுதிபடுத்த வேண்டும். காலையில் வகுப்பு துவங்கியதும், இடைவேளை முடிந்து,
மாணவர்கள் மீண்டும் வகுப்புக்கு வந்ததும், வருகை பதிவேடு சரிபார்க்கப்பட வேண்டும்; தொடர்ந்து, மதிய உணவு முடிந்து, வகுப்பு துவங்கும் போதும்; மாலைஇடைவேளைக்கு பிறகும் சரிபார்க்கப்பட வேண்டும்.
pallikudam
TNPSC OFFICIAL GROUP-I Tentative Answer Keys
Sl.No.
|
Subject Name
|
POSTS INCLUDED IN CCS-I EXAMINATION (GROUP-I SERVICES)
(Date of Examination:08.11.2015 FN)
| |
1 | |
|