Saturday, October 31, 2015

Pallikudamnews

CTET - மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு வெளியீடு
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) சார்பில் நடத்தப்பட்ட மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (சி.டி.இ.டி.) முடிவு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை www.ctet.nic.in,​​ www.cbse.nic.in​ ஆகிய இணையதளங்களில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
CLICK HERE - CENTRAL TEACHER ELIGIBILITY TEST (CTET) - SEP 2015 RESULTS

மத்திய அரசு பள்ளிகளான கேந்திரிய வித்யாலயா, நவோதயா, அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள், சைனிக் உள்ளிட்ட பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணிகளுக்கு சி.டி.இ.டி. தேர்வு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

2015-ஆம் ஆண்டு தேர்வு கடந்த செப்டம்பர் 20-ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் சேர்த்து மொத்தம் 959 மையங்களில் நடத்தப்பட்ட இந்தத் தேர்வை 7.5 லட்சம் பேர் எழுதினர். இந்தத் தேர்வுக்கான முடிவை சி.பி.எஸ்.இ. வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

தேர்வில் பங்கேற்ற அனைவருக்குமான மதிப்பெண் பட்டியலும், தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கான தகுதிச் சான்றிதழும் விரைவில் விநியோகிக்கப்படும் என சி.பி.எஎஸ்.இ. தெரிவித்துள்ளது.

அடுத்த தேர்வுகள்: 2016-ஆம் ஆண்டுக்கான சி.டி.இ.டி. தேர்வுகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 21-ஆம் தேதியன்றும், செப்டம்பர் 18-ஆம் தேதியன்றும் அடுத்தடுத்து நடத்தப்படும் எனவும் சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.

Thursday, October 22, 2015

pallikudam

TNTET தேர்விற்கு மட்டும் ஏன் இந்த பாகுபாடு?...எப்போது விடிவுகாலம் பிறக்கும்.?

டெட் என்று ஒரு நாடகம் நடத்தி படித்தவர்களின் மனநிலையை கெடுக்கும் தமிழக அரசு, மேலும் படித்தவர்களின் மீது தொடுக்கப்படும் ஒரு கலியுக வன்கொடுமைதான் ஆசிரியர் தகுதித்தேர்வு என்றுதான் சொல்ல தோன்றுகிறது. நான் இவ்வாறு பேச எண்ணற்ற காரணங்கள் உண்டு அவற்றை பட்டியலிடுகிறேன்.

தமிழ்நாடு அரசு மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் .சில கேள்விகள்:
.
1. டி.இ.டி என்பதன் விளக்கம் தான் என்ன? அது தகுதி தேர்வு என்றால் வெறும் தகுதியாக மட்டும் கருதுவது தானே முறை.
.
2. SLET, NET, PGTRB, TNPSC Exam, Bank Exam, Railway Exam, அவ்வளவு ஏன் இந்திய அரசியல் அமைப்புகள் மிக முக்கிய தேர்வாக கருதப்படும் IAS தேர்விற்கும் கூட படிப்பு மற்றும் வயது சார்ந்த அடிப்படை தகுதிகளை அடுத்து தேர்வாளர்களுக்கு அந்தந்த துறையில் நடத்தப்படும் மதிப்பெண் அடிப்படையில்தான் பணி வழங்கப்படுகிறது. டெட் தேர்வில் மட்டும் முரண்பாடு ஏன்?
.
3. டெட் தேர்வில் மட்டும் வெயிட்டேஜ் முறை கொண்டு வந்ததற்கான காரணம் என்ன? வெயிட்டேஜ் முறையில் எத்தனை முரண்பாடுகள் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை நிலவி வருகிறது.
.
4. இரண்டு முறை டெட் தேர்வுகள் நடைபெற்ற பின்பு திடீரென மதிப்பெண் சலுகை வழங்கியதற்காண காரணம் என்ன? சலுகை வழங்குவதாக இருந்தால் 2012 - ல் நடைபெற்ற டெட் தேர்விற்கும் சலுகை வழங்குவதுதானே முறை.
.
5. 2012 தேர்வு அறிவிக்கும்போதே சரியான வரைமுறை கொடுத்து தேர்வுகள் வைத்திருந்தால் பலரின் வாழ்வு பறிக்கப்படாமல் இருந்திருக்கும், 
எகா:- 2012 டெட் தேர்வில் 82 மதிப்பெண் முதல் தகுதி என்றால் அந்த ஆண்டு 82,83,84,85,86,87,89 மதிப்பெண் பெற்ற பல தேர்வர்கள் 18 மாதம் ஊதியம் பெற்று வாழ்வில் மதிக்கதக்க நிலை பெற்று இருப்பார்கள் அல்லவா? அவர்கள் மட்டும் பாவம் செய்தவர்களா?
.
6. 2012 தேர்விற்கு ஒரு வெயிட்டேஜ் முறை, 2013 தேர்விற்கு மற்றொரு வெயிட்டேஜ் முறை என்பதே முற்றிலும் தவறான ஒன்றாகவே தோன்றுகிறது.
.
7. 10 வருடங்களுக்கு முன் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்குவது மிகவும் தவறான ஒன்று. வெயிட்டேஜ் முறை ஆசிரியர் பணிக்கு படித்தவர்களை ஏமாற்றும் செயல். 1980 - களில் இருந்து 2014 ஆம் ஆண்டுகள் வரை கல்வி முறைகள், பாடத்திட்டங்கள், கற்பிக்கும் முறை போன்றவை ஒரே மாதிரியாக உள்ளதா? 1980 -ஆம் வருடங்களில் +2, கல்லூரி படிப்பும், 2000 ஆண்டிற்கு பின்பு உள்ள +2, கல்லூரி படிப்பும் ஒன்றுக்கொன்று நிகராணவையா? ஒரே மாதிரியானவையா? இதனை கேட்டால் தரமான ஆசிரியர்களை உருவாக்குவோம், என்று ஒரு போலித்தனமான பதில் கூறப்படுகிறது.
.
8. PG TRB -க்கும், +2 -விற்கு 10 மதிப்பெண், பி.எட்-க்கு 10 மதிப்பெண், UG க்கு 10 மதிப்பெண், PG க்கு 10 மதிப்பெண் என்றும் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணிற்கு 60 மதிப்பெண் என்று வெயிட்டேஜ் முறையை கடைபிடித்தால் மேல்நிலை பள்ளி ஆசிரியர்களும் தகுதியான மற்றும் தரமானவர்களாக இருப்பார்கள் அல்லவா? டெட் தேர்விற்கு மட்டும் ஏன் இந்த பாகுபாடு?
.
9. முன்பு படித்த படிப்பிற்கு பணி வழங்குவது, 1. திருமணம் முடிந்து பல வருடங்கள் கழித்து ஒரு ஆண் ஏன் எனக்கு வரதட்சணை வழங்கவில்லை என்று கேட்டு கொடுமை செய்வது போல் இருக்கிறது. வரதட்சணை (வெயிட்டேஜ்) வாங்குவது குற்றம். 2. ஒருவன் பிறக்கும் போதே ஆசிரியராக பணி செய்ய வரம் பெற்று பிறந்திருக்க வேண்டும் என்று படித்தவர்களை பார்த்து ஆசிரியர் தேர்வு வாரியம் கேட்பதுபோல இருக்கிறது இந்த வெயிட்டேஜ் முறை. இது சரிதானா?
.
10. இளங்கலை பட்டம் முடித்து பி.எட் சேர்வதற்கு தேவையான குறைந்தபட்ச அடிப்படை மதிப்பெண்ணை அனைத்து பிரிவினருக்கும் குறைத்தது இன்றைய முதல்வர்தான் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. இப்பொழுது அவற்றிற்கு வெயிட்டேஜ் முறை பின்பற்றுவது நியாயம் தானா?
.
11. என் டெட் மதிப்பெண் 93, +2 mark 747, UG மதிப்பெண் சதவீதம் 49.00% பி.எட் 75% டெட் வெயிட்டேஜ் 62.2%. தற்போது பணி பெற சற்றும் வாய்ப்பற்ற என்னை போன்ற பல பட்டதாரிகளின் நிலைதான் என்ன?
.
12. வெயிட்டேஜ் முறையால் +2, UG, மதிப்பெண் குறைவாக உள்ள என் போன்ற பட்டதாரிகள் என்றுமே ஆசிரியர் பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது அல்லவா? மீண்டும் +2, இளங்கலை பட்ட மதிப்பெண்களை அதிகரிக்க வாய்ப்பு இல்லாத போது டெட் தேர்வில் பல மதிப்பெண் அதிகமாக பெற்றால்தான் வெயிட்டேஜ் மதிப்பெண் 1 அல்லது 2 கூடும், இப்படிப்பட்ட சூழலில் எத்தனை முறைதான் டெட் தேர்வு எழுதுவது?
.
13. டெட் தேர்வில் முதலில் குறிப்பிட்ட தகுதி (90 மதிப்பெண் மற்றும் அதற்குமேல்) மதிப்பெண் பெற்றும் வேலை வாய்பை இழந்த பலரின் நிலை பற்றி எந்த நீதிவான்களும் யோசிக்காமல் போனதன் காரணம் என்ன?
.
14. பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 10+2+3+1 என்ற வரிசை அமைப்பில் படித்தால் போதும் என்றுதான் நினைத்தோம், ஆனால் மீண்டும் மீண்டும் 6 வகுப்பு முதல் 12 வகுப்பு வரை பலமுறை படிக்க வேண்டும் என்ற சட்டம் வந்துள்ளதை இப்போதுதான் பலர் உணர்கிறோம். இதுதான் கல்வியாளர்களின் சாதனையா?
.
15. இந்த டெட் தேர்வில் பணி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் எத்தனை ஆசிரியர்கள் தாங்கள் ஏற்கனவே செய்துகொண்டிருந்த வேலையை இழந்துள்ளனர் என்று ஆசிரியர் தேர்வு வாரியமும், தமிழக அரசும் அறியுமா? தேர்விற்கு முன்பே தெளிவான அறிவிப்பை வெளியிட்டிருந்தால் பல ஆசிரியர்கள் தனியார் பள்ளிகளுக்கு சென்றிருப்பார்கள் அல்லவா? இவர்களின் நிலைதான் என்ன? 2014-2015 ஆம் கல்விஆண்டு துவங்குவதற்கு முன்பாக பணி நியமனம் பற்றிய அறிவிப்பு விடாமல் இருந்தது பலரின் வாழ்வை அழித்துள்ளது.
.
16. மேலும் பலர் என்னை போன்று மேல்படிப்பை இழந்து இருக்க மாட்டார்கள், வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் PG, M.Phil சேர்க்கை தவிர்க்காமல் இருந்திருப்பார்கள், இதுபோன்றோரின் வாழ்விற்கு அரசால் பதில் கூற முடியுமா?
.
17. இந்த டெட் தேர்வால் பலரின் வாழ்வில் ஒளி வந்ததைவிட வயிறு பற்றி எரிந்ததுதான் அதிகம். இங்கே மனிதாபிமானம் காக்கப்படுகிறதா?
.
18. ஒவ்வொரு முறையும் எத்தனை புத்தங்களை தான் படிப்பது, ஒரு அறிவியல் அல்லது கணிதம் படித்த தேர்வர் எத்தனை புத்தகங்களை படிப்பது என்று இந்த அரசிற்கும், கல்வியாளர்களுக்கும் தெரியுமா? உளவியல் அடிப்படையில் படித்தால் ஒவ்வொரு மனிதனின் அறிவும், நுண்ணறிவும் 16 வயதில் நின்றுவிடும் என்பதை கல்வியாளர்கள் மறந்து விட்டார்களா?
.
19. மாணவர்கள் மனநிலையை ஆசிரியர் அறிய உளவியல் பாடத்திட்டம் உள்ளதை போல ஆசிரியர்களின் மனநிலையை அறிந்துகொள்ள அரசாங்கம் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் போன்றவற்றிற்கு ஏதாவது புதிய பாடத்திட்டம், புத்தகம் ஏற்படுத்த வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. இதற்கு கல்வியாளர்களின் பதில் என்ன? 
.
20. இதன் மூலம் என்னை போல எத்தனைபேர் மன உலைச்சல் பெற்று வாழ்வை இழந்து வருந்துகிறார்கள் என்று தெரிந்தால் யாராவது சொல்லுங்கள் பார்க்கலாம்?
.
21. என்னைபோல பலருக்கு மனித உரிமை மீறலுக்கு அர்த்தம் இப்போதுதான் தெரிந்திருக்கும்.
.
22. மனித உரிமை மீறல் மற்றும் மன உலைச்சல் ஏற்பட்டதன் காரணமாக இவர்கள் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்த தோன்றுகிறது. இதற்கு சட்டத்தில் இடம் உண்டா? 
********************************************************************************************
தமிழக அரசு, கல்வித்துறை, கல்வியாளர்கள், சமுக ஆர்வலர்கள் - இவர்களை கேட்கிறேன்.
.
1. ஒரு தேர்வின் மூலம் பணிவழங்குவதாக இருந்தால் அரசாங்கம் அதற்காண அறிவிப்பின்போதே காலிப்பணியிடங்கள், அதற்கான தகுதி, எதன் அடிப்படையில் தேர்வர்கள் பணிநியமிக்கப்படுவார்கள் போன்ற அனைத்து விவரங்களையும் அறிவித்த பின்னரே தேர்வை நடத்த வேண்டும் அல்லவா? அதை கடைப்பிடிப்பதுதான் சரியான முறையல்லவா? நடந்து முடிந்த தேர்வின் முடிவு அறிவிக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு நடந்து முடிந்த பின்னர் சலுகை வழங்குவதும், தேர்வு செய்யும் முறையை மாற்றுவதும் சட்டப்படி சரிதானா?
.
2. தேர்வின் வினாக்களுக்கு விடையை வெளியிடுவதில்தான் எத்தனை சிக்கல், எத்தனை முறை மாற்றியமைத்தல் நடைபெறுகிறது, இதன் காரணம்தான் என்ன? வினா, விடை வழங்கிட அரசாங்கம் தேர்வுக்குழு அமைத்தும் ஏன் இத்தனை குழப்பம்? சரியான விடை எது என்று தேர்வு குழுவிற்கே தெரியவில்லை போலும், தேர்வர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பின்னர்தான் தேர்வு குழு - வினாவிற்கான விடையை தெரிந்துகொள்கின்றன.
.
3. டெட் Syllabus பற்றி ஒரு கேள்வி :
டெட் தேர்வில் B.Sc Maths அல்லது B.Sc Physics படித்த தேர்வர் ஏன் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல் மற்றும் உளவியல் படிக்க வேண்டும்? ஒவ்வொரு பள்ளியிலும் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என்று தனித்தனி ஆசிரியர்கள் எதற்கு நியமிக்கப்படுகிறார்;கள்? ஒரு ஆசிரியர் அனைத்தும் அறிந்திருக்க வேண்டும் என்று நீங்கள் கூறினால் அதற்கும் ஒரு கேள்வி எழுகிறது என் மனதில், அறிவியல் அல்லது கணிதம் படித்த ஆசிரியருக்கு சமூக அறிவியல் பற்றிய அறிவு இல்லாமல் இருந்தாலும் சரியா? முறையா? ஒரு தமிழ் அல்லது ஆங்கிலம் அல்லது வரலாறு படித்த ஆசிரியர் கணிதம், அறிவியல் சார்ந்த அறிவு இல்லாமல் இருந்தால் சரியா? முறையா? ஒரு ஆசிரியர் எல்லாம் தெரிந்து இருக்கவேண்டும் என்று சொல்லும் பொழுது அனைத்து பட்டதாரிகளும் டெட் தேர்வில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என அனைத்து பாடங்களையும் படிப்பதுதானே மிகவும் சரி?
.
4. டெட் தேர்வை இவ்வாறு நடத்தும் அரசாங்கம் மேல் படிப்பு என்று சொல்லப்படும் B.Sc, M.Sc போன்ற பட்டப்படிப்புகளில் அனைத்து பாடங்களையும் பாடதிட்டமாக அமைக்க வேண்டும் அல்லவா?
.
5. டெட் தேர்விற்கு மட்டும் +2, UG போன்ற கல்விகளுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிட்டு பணி வழங்கும் முறையை கடைபிடிக்கும் அரசு PG, TRB,TNPSC போன்ற தேர்வுகளின் மூலம் வழங்கும் அனைத்து பணிகளுக்கும் இந்த முறையை கடைபிடிப்பதுதான் நியாயமான செயல் ஆகும்.
ஆசிரியர் தகுதித் தேர்வினால் பணியையும், வாழ்க்கையையும் இழந்து துடிக்கும் பலருக்கு எப்போது விடிவுகாலம் பிறக்கும்.?

pallikudam

தீபாவளி போனஸ் 2 மடங்கு உயர்வு: உச்சவரம்பு ரூ.3,500-ல் இருந்து ரூ.7,000 ஆகிறது- மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் தீபாவளி போனஸ் உச்சவரம்பு தொகை ரூ.3,500-லிருந்து ரூ.7,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.

தொழிற்சாலை மற்றும் பிற நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் தீபாவளிக்கு முன்னதாக போனஸ் வழங்கப்படுகிறது. இதற்கான போனஸ் சட்டம் கடந்த 1965-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது.

இந்தச் சட்டத்தில் கடந்த 1993-ல் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, போனஸ் உச்சவரம்பு அதிகபட்சமாக 3,500 என்று அறிவிக்கப்பட்டது. மேலும் போனஸ் பெறுவதற்கான சம்பள உச்சவரம்பும் 10 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது.

அதன்பின், இந்தச் சட்டத்தில் திருத்தம் செய்யப்படவில்லை. போனஸ் தொகை ரூ.3,500 என்றே வழங்கப்பட்டது. கடந்த 12 ஆண்டு களாக போனஸ் தொகை உயர்த்தப் படாததை கண்டித்து மத்திய தொழிற் சங்கங்கள் கடந்த செப்டம்பர் 2-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டன. மத்திய அமைச்சர்கள் குழு, தொழிற்சங் கங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை யில், போனஸ் தொகையை இரட்டிப்பாக்கவும், போனஸ் பெறுவதற்கான சம்பள உச்ச வரம்பை உயர்த்தவும் ஒப்புக் கொண்டது.

இந்நிலையில், மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று கூடியது. அப்போது பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். மேலும், இந்த ஆண்டு போனஸ் தொகையை ரூ.3,500-இல் இருந்து ரூ.7,000 ஆக உயர்த்தவும், போனஸ் பெறுவதற்கான சம்பள உச்ச வரம்பை தற்போதுள்ள ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.21 ஆயிரமாக உயர்த்தவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இந்த தொகை 20 ஊழியர்கள் அல்லது அதற்கு மேல் உள்ள எல்லா நிறுவனங்களுக்கும் பொருந்தும். இந்த போனஸ் உயர்வு ஏப்ரல் 1, 2015 முதல் அமலுக்கு வருகிறது. இதற்காக, ‘போனஸ் (திருத்த) மசோதா-2015’, நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.

போனஸ் சட்டத்திருத்த மசோதா, நாடாளுமன்ற அனுமதிக் காக அனுப்பப்பட்டுள்ளது. நாடாளு மன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நடத்துவது குறித்து நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. எனினும் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், வரும் 26-ம் தேதி மீண்டும் அமைச்சரவை கூடி முடிவெடுக்க உள்ளது. நவம்பர் மாத இறுதியில் குளிர்கால கூட்டத் தொடர் நடைபெறும் போது, போனஸ் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.

pallikudam

ஆர்.கே. நகரில் புதிய அரசு கல்லூரிக்கு ரூ.8 கோடி நிதி - 2015/2016 கல்வியாண்டு முதல் செயல்படும் : முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

சென்னை ஆர்.கே.நகரில் அமையவுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கென புதிய கட்டடம் கட்டுவதற்காக ரூ.8 கோடி ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு கல்விக்கு உரிய முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது.


கடந்த நான்கரை ஆண்டுகளில் தமிழகத்தில் 4 அரசு பொறியியல் கல்லூரிகள் உள்பட 53 கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 959 புதிய பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

எனவே, உயர்கல்வித் துறைக்கு அளிக்கப்பட்டு வரும் முக்கியத்துவம் காரணமாக 2011–ஆம் ஆண்டில் 18 சதவீதம் என்ற அளவில் இருந்த மொத்த மாணவர் சேர்க்கை விகிதம், தற்போது 42.8 சதவீதத்தை எட்டி இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

சென்னை டாக்டர் ராதா கிருஷ்ணன் நகர் பகுதியில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஒன்று தொடங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தார்.

இதன் அடிப்படையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை தண்டையார்பேட்டையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான நடுநிலைப் பள்ளியில் தற்காலிகமாக 2015–2016 கல்வியாண்டு முதல் செயல்படுவதற்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இக்கல்லூரியில் பணியாற்றுவதற்காக 11 ஆசிரியர் மற்றும் 17 ஆசிரியரல்லாத பணியிடங்களை உருவாக்குவதற்காக தொடர் செலவினமாக 77 லட்சத்து 7 ஆயிரத்து 800 ரூபாய், கல்லூரிக்கென மரத்தள வாடங்கள், புத்தகங்கள், கணினிகள் மற்றும் இதர தளவாடங்கள் வாங்குவதற்காக தொடரா செலவினமாக 26 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மற்றும் இக்கல்லூரிக்கென புதிய கட்டடம் கட்டுவதற்காக 7 கோடியே 25 லட்சம் ரூபாய் என மொத்தம் 8 கோடியே 28 லட்சத்து 57 ஆயிரத்து 800 ரூபாய்க்கு நிர்வாக ஒப்புதல் வழங்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

pallikudam

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திலுள்ள அரசு ஊழியர், ஆசிரியர் வட்டி வரவுக் கணக்கை இணையதளத்தில் சரிபார்க்க வேண்டும் தமிழக அரசு வேண்டுகோள்

புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் இணைந்துள்ள அரசு ஊழியர், ஆசிரியர்கள் தங்களது பங்குத்தொகைக்கான வட்டி வரவுக்கணக்கை இணையதளத்தில் சரிபார்க்க வேண்டும் என்று அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–


4.20 லட்சம் பேர்

தமிழகத்தில் 2003–ம் ஆண்டு ஏப்ரல் முதல் அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகம்செய்யப்பட்டது.


இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்பட 4 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.இத்திட்டத்தில் அடிப்படை ஊதியம், தர ஊதியம் மற்றும் அகவிலைப்படிக்கு பிரதி மாதம் 10 சதவீதம் பிடிக்கப்படும். அதே அளவுத் தொகையை அரசும் தன் பங்காக செலுத்தும். அரசு பங்குத் தொகைக்கும் பணியாளரின் பங்குத் தொகைக்கும் சேர்த்து வட்டி கணக்கிட்டு கணக்கில் சேர்க்கப்பட்டு வருகிறது.விடுபட்ட கணக்குகள்விடுபட்ட 21 லட்சத்து 70 ஆயிரத்து 464 வரவு நேர்வுகள், கருவூலக் கணக்குத் துறையால் சரிபார்க்கப்பட்டு உரிய அரசுப் பணியாளர்களின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளன. இந்த விவரங்கள் அனைத்தும் பதிவேற்றப்பட்டு 2014–15ம் ஆண்டிற்கான கணக்குத் தாள்கள் (அக்கவுன்ட் சிலிப்ஸ்) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


இதில் யாரும் விடுவிக்கப்பட்டு இருந்தாலோ, குறைகள் இருந்தாலோ சம்பந்தப்பட்ட சம்பள கணக்கு அலுவலர் அல்லது மாவட்ட கருவூல அலுவலரை அணுகி குறைகளை நிவர்த்தி செய்துகொள்ள அரசு அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.வலைதள முகவரிஅரசு ஊழியர்கள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் நிறுவனப் பணியாளர்களுக்கான 2014–15ம் ஆண்டுக்கான கணக்குத் தாள்களை, URLhttp://218.248.44.123/auto_cps/public என்ற வலைதள முகவரியில் அவரவர் கணக்குத் தாள்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Saturday, October 17, 2015

Pallikudam

எல்.இ.டி., பல்புகளால் தினமும் ரூ.2.71 கோடி மிச்சம், நாடு முழுதும் விரிவாக்க மத்திய அரசு திட்டம்
நாட்டின் பல மாநிலங்களில், எல்.இ.டி., மின் விளக்குகள் பயன்பாடு அதிகரித்துள்ளதால், மின்சாரத்தை தயாரிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு ஏற்படும் செலவில், நாள்தோறும், 2.71 கோடி ரூபாய் மிச்சமாகிறது. தற்போது, 10க்கும் குறைவான மாநிலங்களில் பின்பற்றப்படும் இந்த திட்டத்தை, அனைத்து மாநிலங்களும் முழுமனதுடன் பின்பற்றத் துவங்கினால், காற்றின் மாசு குறைவதுடன், அரசின் மின் செலவும் கணிசமாக வீழ்ச்சி அடையும்.

எல்.இ.டி., என்பது, 'லைட் எமிட்டிங் டையோடு' என்ற ஆங்கில வார்த்தைகளின் சுருக்கம். குறைந்த மின்சாரத்தை பயன்படுத்தி அதிக ஒளியை, நீண்ட காலத்திற்கு வழங்கும் திறன் கொண்ட இந்த புதுமையான மின் விளக்குகள், சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தாதவை. இந்த விளக்குகளை பயன்படுத்துபவர்களுக்கும், அரசுக்கும் பல விதங்களில் நன்மை கிடைப்பதால், எல்.இ.டி., விளக்குகளை அதிக அளவில் பயன்படுத்துவதற்கு, மத்திய அரசு ஊக்கம் அளிக்கிறது. மின்துறை சார்பில், இதற்கென சிறப்பு பிரிவை உருவாக்கி, வீடுகள் தோறும் விதவிதமான, எல்.இ.டி., விளக்குகளை பயன்படுத்த, பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. மத்திய அரசின் தீவிர முயற்சியால், ஆந்திரா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில், குண்டு மின் விளக்குகள் மற்றும் சி.எப்.எல்., எனப்படும் பாதரசம் கொண்ட விளக்குகளின் பயன்பாடு, 90 சதவீதம் தவிர்க்கப்பட்டு, எல்.இ.டி., விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன.

இதனால், மின் நுகர்வோருக்கு மின் கட்டணமும் குறைவதால், பொதுமக்களும் ஆர்வமாக, எல்.இ.டி., விளக்குகளை வாங்கி, வீடுகளில் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், சமீபத்தில் எட்டப்பட்டுள்ள முன்னேற்றம்:

* ஜனவரி முதல், டி.இ.எல்.பி., எனப்படும், முழுவதும், எல்.இ.டி., விளக்குகளை பயன்படுத்தும் திட்டம், மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், டில்லி, உத்தர பிரதேசம், ஹிமாச்சல பிரதேச மாநிலங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது
* அடுத்தகட்டமாக, ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், கேரளா, சத்தீஸ்கர், ஜம்மு - காஷ்மீர், அசாம், சண்டிகர், கர்நாடகாவிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது
* இ.இ.எஸ்.எல்., எனப்படும், மத்திய மின்துறை யின் துணை அமைப்பு, எல்.இ.டி., மின் விளக்குகள் வினியோகத்தை மேற்கொள்கிறது
* இதுவரை, இரண்டு கோடி எல்.இ.டி., விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன
* நாட்டில், ஒவ்வொரு ஆண்டும் தயாரிக்கப்படும், 77 கோடி சாதாரண விளக்குகள், 40 கோடி, சி.எப்.எல்., விளக்குகளை அடியோடு நிறுத்திவிட்டு, அதிக அளவில், எல்.இ.டி., விளக்குகளை புழக்கத்தில் கொண்டு வருவது தான், இ.இ.எஸ்.எல்.,லின் இலக்கு.

எந்த வகையில் சிக்கனம்? சாதாரண குண்டு மின் விளக்கு, 350 - 400, 'லுமென்' வெளிச்சத்தை உமிழ, 60 வாட் மின்சாரத்தை எடுத்துக் கொள்கிறது. பாதரசத்தை மூலப்பொருளாக கொண்ட, சி.எப்.எல்., எனப்படும் விளக்குகள், 450 - 550 லுமென் திறன் வெளிச்சத்தை உமிழ, 14 - 16 வாட் மின்சாரத்தை எடுத்துக் கொள்கிறது. ஆனால், எல்.இ.டி., விளக்குகள், 6 வாட் மின்சாரத்தை மட்டுமே எடுத்துக் கொண்டு, 600 - 700 லுமென் திறன் வெளிச்சத்தை உமிழ்கிறது. மேலும், இந்த விளக்குகள், பிற விளக்குகளால் அறவே கொடுக்க முடியாத, 15 ஆயிரம் முதல், 20 ஆயிரம் மணி ஆயுட்காலத்தை கொடுக்கும்.லுமென் என்பது, ஒளியின் திறனை அளவிடும் அளவீடு.

என்ன கிடைக்கிறது? *அதிக அளவில், எல்.இ.டி., விளக்குகளை பயன்படுத்தும் மாநிலங்களால், தினமும், 68 லட்சம் கிலோவாட் மின்சக்தி மிச்சமாகிறது
* 'பீக் ஹவர்' எனப்படும், உச்சகட்ட நேர மின் தேவை, 645 மெகாவாட் ஆக குறைந்துள்ளது
* தினமும், 5,520 டன் கார்பன் மாசு வீழ்ச்சி அடைந்துள்ளது
* மின் கட்டணம், உற்பத்திச் செலவு போன்றவற்றில், தினமும், 2.71 கோடி ரூபாய் மிச்சம் ஏற்பட்டுள்ளது.

விலை எப்படி? மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளால், ஓராண்டிற்கு முன், 650 - 700 ரூபாயாக இருந்த ஒரு எல்.இ.டி., விளக்கின் விலை, இப்போது பாதியாக குறைந்துள்ளது; தற்போதைய சந்தை விலையில், 300 - 350 ரூபாய் வரை விற்கப்படுகிறது.மத்திய அரசின் திட்டப்படி, ஒரு எல்.இ.டி., விளக்கு, 78 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது; மீதமுள்ள தொகை, மானியமாக வழங்கப்படுகிறது

பள்ளிகூடம்

விரைவில் பி.எஃப். பணத்தை ஆன்லைன் மூலம் எடுக்கும் வசதி

2016-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ஊழியர் வருங்கால வைப்பு நிதியை ஆன்லைன் மூலம் எடுக்கும் வசதி செய்யப்படும் என்று வருங்கால வைப்பு நிதி ஆணையம் தெரிவித்துள்ளது.

பி.எஃப். தொகைக்கான விண்ணப்பங்களைப் பெற்றவுடன் 3 மணி நேரத்துக்குள் உரியவர்களுக்கு பணம் கிடைக்குமாறு இந்த ஆன்லைன் வசதி செய்யப்படவிருக்கிறது.

இது நடைமுறைக்கு வந்தவுடன் பி.எஃப். சந்தாதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பிறகு உரிய தொகை சந்தாதாரர்களின் வங்கிக் கணக்கில் சேர்ப்பிக்கப்படும்.

இது குறித்து மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையர் கே.கே.ஜலன் கூறும்போது, "ஆன்லைன் பி.எப். பண எடுப்பு முறையை அனுமதிக்க மத்திய தொழிலாளர் துறை அமைச்சகத்திடம் அனுமதி கேட்டு எழுதியுள்ளோம். மார்ச் மாத இறுதியில் இத்திட்டம் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம்.

பிஎஃப் பண எடுப்பு முறையை அறிமுகம் செய்வதற்காக சில அனுமதிகளை நாங்கள் கோரியுள்ளோம். இத்திட்டத்தை அறிமுகம் செய்வதற்கு முன்பாக தங்கள் ஆதார் விவரங்களைக் குறிப்பிடும் சந்தாதாரர்களின் விண்ணப்பங்களை மிகவிரைவில் சரிபார்க்க உறுதி அளிக்கிறோம்.

இந்தக் காலக்கட்டத்தில் ஆதார் எண்கள் உள்ள பிஎப் சந்தாதாரர்களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு 3 நாட்களுக்குள் பணம் அளிக்கப்படும்” என்றார்.

Thursday, October 15, 2015

pallikudam

சபதமேற்ப்போமே வீடியோ பாடல் குறுந்தகடு வெளியீடு!
       விழுப்புரம் மாவட்டம் ,ஒலக்கூர் ஒன்றிய அரசுப்பள்ளி ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் திரு APJ அப்துல்கலாம் அவர்களின் கனவுகள் தொடர்பான வீடியோ பாடல் ஒன்றை தயாரித்துள்ளார்.திரு கலாம் அவர்களின் விருப்பங்களாக நமக்கு எடுத்துரைத்த கனவு இந்தியா 2020, அறிவியல் தொழில்நுட்பம், தேசப் பாதுகாப்பு,விவசாயம்,வீட்டிற்க்கு ஒரு நூலகம்,குழந்தை தொழிலாளர் ஒழிப்பு,அமைதி,நட்புணர்வு,சமாதானம் போன்றவற்றை பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு,குறிப்பாக  மாணவ சமுதாயத்திற்க்கு ஏற்ப்படுத்தும்வண்ணம் இந்த குறுந்தகடு தயாரிக்கப்பட்டுள்ளது.திரு கலாம் விட்டுசென்ற பணியை ஆசிரிய சமூகத்தின்  துணையோடு மாணவ சமூகம் தொடர இக்குறுந்தகடு ஊக்கமளிக்கும்  வகையில் கோனேரிக்குப்பம் நடுநிலைப்பள்ளியின் ஆசிரியர் திரு ஆரோக்கியராஜ் மற்றும் ராஜேஷ் அவர்களின் குழுவால் தயாரிக்கப்பட்டுள்ளது.இளைஞர்களின் உந்து சக்தியாக விளங்கிய திரு கலாம் அவர்களின் பிறந்த நாளான அக்டோபர் 15 அன்று , இக்குறுந்தகடு வெளியிடப்படுகிறது.

Thanks Rajes

Tuesday, October 13, 2015

Pallikudam DA

தமிழக அரசு ஊழியர் / ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்பு!
தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி ஜுலை'15 முதல் உயர்த்தி வழங்குவதற்கான அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுசார்பான கோப்பில் இன்று காலை மாண்புமிகு தமிழக முதல்வர் கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Pallikudam

TNPSC :தமிழ்நாடு அரசு துறைகளில் 1863 உதவியாளர், இளநிலை கூட்டுறவு கணக்காளர் பணி: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
      தமிழ்நாடு அரசு துறைகளில் நிரப்பப்பட உள்ள ஒருங்கிணைந்த நேர்முகத் தேர்வு இல்லாத 1863 குரூப்-2 பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்:1863
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:Tamil Nadu Secretariat Service1. Personal Clerk in Tamil Nadu Public Service Commission (Post Code No:1082 ) - 01Assistant in various Departments in the Tamil Nadu Ministerial Service2. Assistantin Civil Supplies and Consumer Protection Department (Post Code No:1026) - 363. Assistant in Industries and Commerce Department (Post Code No: 1027) - 404. Assistant in Commissioner of Revenue Administration Department (Post Code No: 1030) - 11
5. Assistant in Land Administration Department (Post Code No: 1031) - 08
6. Assistant in Land Reforms Department (Post Code No:2204) - 017. Assistant in Prison Department (Post Code No: 2205) - 168. Assistant in Medical and Rural Health Services Department (Post Code No: 2207) - 2139. Assistant in Transport Department(Post Code No: 2216) - 3510. Assistant in Registration Department(Post Code No. 2218) - 3510. Assistant in Registration Department (Post Code No. 2218) - 5911. Assistant in Rural Development Panchayat Raj Department (Post Code No: 2257) - 40312. Assistant in Backward Classes Department (Post Code No: 2259) - 3212. Assistant in Fisheries Department (Post Code No: 2261) - 3213. Assistant in Fisheries Department (Post Code No: 2261) - 4514. Assistant in Technical Education Department (Post Code No: 2263) - 6215. Assistant in NCC Department (Post Code No: 2272) - 0616. Assistant in Public Health and Preventive Medicine Department (Post Code No: 2273) - 13617. Assistant in School Education Department (Post Code No: 2274) - 7618. Assistant in Directorate of Vigilance and Anti CorruptionDepartment (Post Code No: 2277) - 0719. Assistant in Survey and Land Records Department (Post Code No: 2280) - 10520. Assistant in Urban Land Ceiling and Urban Land Tax Department (Post Code No:2281) - 41Assistant in the Divisions of Commercial Taxes Department21. Commissioner of Commercial Taxes (Post Code No: 1025) - 1422. Commercial Taxes, Chennai (South )Division (Post Code No:2208) - 5623. Tiruchirappalli Division (Post Code No: 2209) - 2924. Salem Division (Post Code No: 2210) - 1025. Vellore Division (Post Code No: 2211) - 1026. Coimbatore Division (Post Code No: 2212) - 4527. Madurai Division (Post Code No: 2213) - 1528. Tirunelveli Division (Post Code No: 2214) - 12Assistant in various Departments in the Tamil Nadu Ministerial Service/ Secretariat Service / Legislative Assembly Secretariat Service/ Cooperative Subordinate Service29. Planning Junior Assistant, Tamil Nadu State PlanningCommission (Post Code-1032) - 0230. Assistant in Finance Department (Post Code No:1077) - 2631. Assistant in Tamil Nadu Public Service Commission(Post Code No: 1081) - 0232. Lower Division Clerk in Tamil Nadu Legislative Assembly (Post Code No:1086) - 0133. Junior Co-operative Auditor in the Co-operative AuditDepartment (Post Code : 1016) - 298+ 10
வயதுவரம்பு:01.07.2015 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும். அதிகபட்ச வயதுவரம்பு எதுமில்லை.
தகுதி:ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:11.11.2015
வங்கியில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி:13.11.2015எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி:27.12.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/17_2015_not_eng_ccs_ii%28g2a%29_2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Pallikudam

தலைவராக கே.அருள்மொழி நியமனம்: தமிழக அரசு அறிவிப்பு.
தமிழக அரசு தலைமை செயலாளர் கே.ஞானதேசிகன் நேற்றிரவு வெளியிட்டுள்ளஅரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி) தலைவராக ஐ.ஏ.எஸ். அதிகாரி கே.அருள்மொழி நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் பதவியேற்ற காலத்தில் இருந்துஇன்னும் 6 ஆண்டுகளோ அல்லது அவரது 62 வயது வரையிலோ அவர் இந்த பதவியில் இருப்பார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.