Sunday, May 24, 2015

Pallikudam

பிறப்பு சான்று இருந்தால் மட்டுமே மாணவர் சேர்க்கை : அரசு உத்தரவு
         பிறப்பு சான்றிதழ் பெற்றிருந்தால் மட்டுமே தொடக்க பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு தொடக்க கல்வி இயக்குநர் அனுப்பி வைத்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

         பள்ளிகளில் சேர்க்கப்படும் அனைத்து மாணவர்களையும் பிறப்பு சான்றிதழ் இருந்தால் மட்டுமே சேர்க்க வேண்டும். மேலும் பள்ளி பதிவேடுகளில் பிறப்பு சான்றிதழில் உள்ள தேதியை மட்டுமே குறிப்பிட வேண்டும். சில ஊரக பகுதிகளில் தலைமை ஆசிரியர்கள் பிறப்பு சான்றிதழை சரிபார்க்காமலேயே அவர்களின் விருப்பப்படி தோராயமான பிறந்த தேதியை பதிவேடுகளில் பதிவு செய்து மாணவர்களை பள்ளியில் சேர்க்கை செய்வதாக அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இது மிகவும் வருந்தத்தக்கது ஆகும்.
இதுபோன்ற நிகழ்வுகள் வருங்காலங்களில் நடைபெற கூடாது.

பிறப்பு சான்றிதழில் உள்ள தேதியை மட்டுமே பள்ளி பதிவேடுகளில் பதிவு செய்ய வேண்டும் என்பது குறித்து அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் மூலமாக தக்க அறிவுரை வழங்க வேண்டும். ஜூன் 1ம் தேதி அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளை திறக்க வேண்டும். பள்ளி திறக்கும் நாளன்றே மாணவ, மாணவிகளுக்கு பாட புத்தகம், சீருடைகள், நோட்டு புத்தகங்கள் வழங்க வேண்டும். இலவச பஸ் பாஸ் தாமதம் இன்றி பெற்றுத் தர போக்குவரத்து அலுவலர்களை தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

Pallikudam

மே 25-ம் தேதி தொடக்க நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நடத்த இயக்குநர் உத்தரவு!!
        தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான சிறப்பு கூட்டத்தை மே 25-ம் தேதி (திங்கள்கிழமை), அந்ததந்த உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் நடத்தி அதில் இயக்குநர் கொடுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை விளக்க வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களு்ககு 20-ம் தேதி அனுப்பியுள்ள உத்தரவு விவரம்:
மே 25-ம் தேதி அனைத்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களும், தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தை நடத்தி கீழ்கண்ட அறிவுரைகளை தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கி அவை உறுதியாக கடைபிடிக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும். அனைத்து தொடக்க, நடுநிலைப் பள்ளிகளும் ஜூன் 1-ம் தேதி திறக்கப்பட வேண்டும். பள்ளிக்கு வரும் மாணவர்களை அன்புடன் வரவேற்று, நல்லதொரு கற்றல் சூழல் உருவாக்கித் தருவதை உறுதி செய்ய வேண்டும். 
அரசு அளித்துள்ள விலையில்லா பாடபுத்தகம், விலையில்லா சீருடைகள், விலையில்லா நோட்டுப் புத்தகங்கள் உள்ளிட்ட அனைத்தும் பள்ளி திறக்கும் நாளன்றே வழங்கப்பட வேண்டும். விலையில்லா பேருந்து பயண அட்டைகள் தேவைப்படும் மாணவ மாணவிகள் அனைவருக்கும் காலதாமதமின்றி, வில்லையில்லா பேருந்து பயண அட்டைகள் பெற்றுத் தருவதற்கு போக்குவரத்து அலுவலர்களை தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அனைத்துப் பள்ளிகளிலும் உள்ள தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பறைகள் பயன்பாட்டில் உள்ளதை பள்ளி திறக்கும் முன்தினமே உறுதி செய்து கொள்ள வேண்டும். அனைத்துப் பள்ளிகளிலும் பாதுகாப்பான சுத்தமான குடிநீர் வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
பள்ளி குழந்தைகளுக்கு ஊறுவிளைவிக்கும் விதத்தில் பள்ளி வளாகத்தில் திறந்தவெளி கிணறுகள், உயர் அழுத்த மின்கம்பிகள், மின்கசிவுகள், பழுதடைந்த கட்டடங்கள், புல் புதர் போன்றவை இல்லாமல் இருப்பதையும் பாதுகாப்புையும் உறுதி செய்ய வேண்டும்.
பள்ளி திறப்பதற்கு முன்தினம் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரிந்து பள்ளி வளாகம் மற்றும் பள்ளி வகுப்புறைகள் தூய்மையாக உள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
பள்ளி மாணவர்களுக்கு வசதியான காற்றோட்டம், பாதுகாப்பான குடிநீர் வசதி மற்றும் மின் இணைப்பு வசதி ஆகியவைகளை பள்ளி திறக்கும் முன்தினமே தயார் நிலையில் வைத்திருக்க அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரை வழங்க வேண்டும்.
ஆங்கிலப் பிரிவு தொடங்கப்படும் பள்ளிகளின் எண்ணிக்கையினை உயர்த்தி மாணவர்கள் சேர்க்கையினை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு காலதாமதமின்றி குறித்த நேரத்தில் வருகை புரிதலை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
அரசாணை (நிலை) எண் 264-ன்படி காலை வழிபாட்டு முறை, மாணவர்களின் திறன்களையும் தன்னம்பிக்கையும் வெளிக்கொணரும் விதமாக பேசுதல், நடித்தல், மனக்கணக்கு கூறுதல், பொன்மொழி கூறுதல், படைப்பாற்றல் போன்ற செயல்பாடுகள் தவறாமல் நடைபெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பள்ளி வயதுக் குழந்தைகளைக் கண்டறிந்து பள்ளியில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து பள்ளிகளில் இடைநின்ற மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 
பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள செயல்வழிக் கற்றல் அட்டைகள், கணித உபகரணப் பெட்டி, கணினி, பல்நோக்கு கருவி, தொலைக்காட்சிப் பெட்டி, டிவிடி, புத்தகப் பூங்கொத்து, 75-க்கும் மேற்பட்ட பாடவாரியான குறுந்தகடுகள், அறிவியல் உபகரணங்கள் ஆகிய அனைத்தையும் பயன்பாட்டில் கொண்டுவர வேண்டும். இவ்வாறு தொடக்கக் கல்வி இயக்குநர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Pallikudam

அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க விரைவில் வருது...விருட்சுவல் கிளாஸ்
       அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை, கற்றல் திறன், தேர்ச்சி விகிதத்தைஅதிகப்படுத்த தமிழக அரசு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த உள்ளது. முதல் கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 25 அரசு பள்ளிகளில் ‘விருட்சுவல் கிளாஸ் ரூம்கள்’ அமைக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் ‘மாடர்ன்பள்ளியாக’ அரசு பள்ளிகள் செயல்பட உள்ளன.

         ஒரு பள்ளியில் ஆசிரியர் எடுக்கும்பாடம் இந்த முறை உள்ள மற்ற பள்ளிகளிலும் பார்வையிடும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் இவ்வசதி துவங்க உள்ளது. தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை என 53,772 பள்ளிகள் உள்ளன. இதில், 36,962 மேல்நிலைப்பள்ளிகள் அடங்கும். அரசு பள்ளிகளில் 5 லட்சத்து 20,532 ஆசிரியர்கள் பணி புரிந்து வருகின்றனர்.
ஒரு காலத்தில் அரசு பள்ளிக்கென்று இருந்த கம்பீரம் கடந்த சில ஆண்டுகளாக காற்றில் பறந்துக் கொண்டிருக்கிறது. தனியார் பள்ளிகளின் வசதிகள், பாடமுறைகளுக்கு ஈடுகொடுக்க முடியாததால் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை சதவீதம் குறைந்து வருகிறது. கிராமங்களில் வசிப்பவர்கள், ஏழை, எளிய மக்கள் மட்டுமே தங்களது பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்கின்றனர். அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கூட தங்களது பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பதிலேயே ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழக அரசு சார்பில் சத்துணவு, காலணிகள், சைக்கிள், பாடபுத்தகங்கள், லேப்டாப் என வழங்கினாலும் மாணவர்கள் சேர்க்கையில் அரசு பள்ளிகள் பின்தங்கியே உள்ளன. பல இடங்களில் ஆசிரியர் எண்ணிக்கையை விட மாணவர்கள் குறைவாக(!?!) இருக்கும் அரிய சம்பவமும் நடந்து வருகிறது. ஒரு சில ஊர்களில் அரசு பள்ளிகளை மாணவர்களின்றி பூட்டும் கொடுமையும் நடந்து வருகிறது. இந்த முறையை மாற்ற தற்போது ஸ்மார்ட் கிளாஸ் ஒரு சில அரசு பள்ளிகளில் செயல்பட்டு வருகிறது.அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைவதை தடுக்கும் வகையில் கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதற்கட்டமாக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆங்கில வகுப்புகள் நடத்தப்பட்டன. எனினும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கவில்ைல. தனியார் பள்ளிகளில் கம்ப்யூட்டர் மூலம் கற்பிக்கும் வகுப்பறைகள், ஸ்மார்ட் கிளாஸ் ரூம்கள் என அடுத்தடுத்து நவீனப்படுத்தப்பட்டுவருகின்றன. இதனை தொடர்ந்து முதல்கட்டமாக, அனைத்து மாவட்டங்களிலும் தலா 25 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ‘விருட்சுவல் கிளாஸ் ரூம்’ அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இவைகள் இந்த கல்வியாண்டு முதல்அமலுக்கு வர உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். விருட்சுவல் வகுப்பறைகளில் கம்ப்யூட்டர்கள், ஹெட்போன், புரஜெக்டர் உள்ளிட்ட கணினி சார் உபகரணங்கள் இருக்கும். இந்த வகுப்பறைகளில் 6 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்படும்.
மாணவர்களின் குறைகளை தீர்க்கும் வகையில் குறைதீர் கற்றல்முறை வழங்கப்படும். வீடியோ மூலம் பாடங்கள், பாடப்பொருட்கள் வடிவமைத்தல் கற்றல் ஆர்வத்தை அதிகரிக்கும். இந்த வசதி உள்ள வகுப்பறையில் இருந்து எடுக்கப்படும் பாடத்தை, இதே வசதி கொண்ட மற்றொரு வகுப்பறையில் உள்ள மாணவர்களும் கற்கலாம். உதாரணத்திற்கு, மதுரையில்எடுக்கப்படும் ஒரு பாடத்தை, அதே நேரம் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களும் பயிலும் விதத்தில் நவீனமயமாக்கப்பட உள்ளது. இதுகுறித்து விருதுநகர் மாவட்ட முதன்மைகல்வி அலுவலர் ஜெயக்குமார் கூறுகையில், ‘தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தலா 25 விருட்சுவல் கிளாஸ் ரூம்கள் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் குறைவாக உள்ள 25 அரசு பள்ளிகளில் நடப்பாண்டில் விருட்சுவல் கிளாஸ் ரூம்கள் அமைக்கப்படும். இதன்மூலம் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையும், பொதுத் தேர்வில் தேர்ச்சி விகிதமும் அதிகரிக்கும்’ என்றார். இதுகுறித்து ஸ்டூடண்ட்ஸ் இயக்குனர் ராஜராஜன் கூறுகையில், ‘ஒரு காலத்தில் அரசு பள்ளிகளில் படித்தால்தான் கவுரவம் என்ற பெற்றோரின் மனநிலை மெல்ல, மெல்ல மாறி வருகிறது. கடனை வாங்கியாவது தனியார் பள்ளிகளில் சேர்த்து நல்ல மதிப்பெண் எடுக்க வைத்துவிட வேண்டும் என்னும் மனநிலை ஏழை பெற்றோரிடமே ஏற்பட்டு விட்டது.
அரசு பள்ளிகளில் மாணவர்களுக்காகதியாகம் செய்யும் ஆசிரியர்கள் சரளமாக குறைந்து விட்டனர். அரசு இந்த விஷயத்தில் கூடுதல் அக்கறை காட்டி மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்’ என்றார்.அரசு பள்ளி தலைமையாசிரியர் ஒருவர் கூறுகையில், ‘மாணவர்கள் சேர்க்கைைய அதிகப்படுத்த ஒரு சில அரசு பள்ளிகளில் உள்ள தலைமையாசிரியர்கள், ஊர் பிரமுகர்கள், ஊராட்சி தலைவர்கள் நிதி திரட்டி கம்ப்யூட்டர் வசதியுடன் ஸ்மார்ட் கிளாஸ் திட்டத்தை நிறைவேற்றி வருகின்றனர். தமிழக அரசு கூடுதல் அக்கறை காட்டும் பட்சத்தில் அரசு பள்ளிகளும் தனியார்களுக்கு ஈடு கொடுத்து முன்னேறும்’ என்றார்.

Pallikudam

ஆய்வக உதவியாளர் தேர்வு நடக்குமா?
          அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வழங்கும் பணி, இரண்டாவது முறையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், தேர்வு திட்டமிட்ட படி நடக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

           தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பதவிக்கு, 4,362 இடங்களை நிரப்ப, பள்ளிக்கல்வித்துறை முயற்சி மேற்கொண்டுள்ளது. ஆனால், 'ஆசிரியர்களை மட்டும் தான் நியமிப்போம். ஏற்கனவே பல நியமனங்கள் தொடர்பாக வழக்குகள் நிலுவையில் உள்ளதால், புதிய தேர்வு நடத்துவது மற்றும் நியமனம் தாமதமாகும்' என, டி.ஆர்.பி., தெரிவித்துவிட்டது. இதையடுத்து, கல்வித்துறையே தேர்வு நடத்த முடிவு செய்து, தேர்வை, அரசு தேர்வுத்துறையிடம் ஒப்படைத்தது. 'தேர்வு, வரும் 31ம் தேதி நடக்கும்' என, அறிவிப்பு வெளியானது. இதில், 8.7 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். முதலில், மே 21ம் தேதி நுழைவுச்சீட்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, பின், 23ம் தேதிக்கு மாற்றியமைக்கப்பட்டது. இப்போது, அதுவும் தள்ளிப் போகிறது. 'வரும் 25ம் தேதி நுழைவுச்சீட்டு வழங்கப்படும்' என, இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Wednesday, May 20, 2015

Pallikudam

ஆசிரியர்கள் வகுப்பறையில் செல்போனில் பேசக்கூடாது: பள்ளிக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை
           ஆசிரியர்கள் வகுப்பறையில் செல்போனில் பேசக்கூடாது என்றும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாணவர்களுக்கு வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.

          பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர் த.சபீதா அறிவுரையின்படி பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் மாணவர்கள் நலன் கருதி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் வழியாக அனைத்து தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:- 

2015-2016 கல்வியாண்டு தொடங்க உள்ள இந்நேரத்தில் அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வருகிற கல்வி ஆண்டின் தொடக்க நாளான ஜூன் 1-ந்தேதி முதலே பள்ளி வழக்கம் போல முழு அளவில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அன்றே அனைத்து விலை இல்லா பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள் உள்பட அனைத்து விலை இல்லா பொருட்களை மாணவ-மாணவிகளுக்கு வழங்கவேண்டும். தங்கள் பாடத்தில் கடந்த மூன்றாண்டுகளாக 10 அல்லது பிளஸ்-2 தேர்வில் ஆசிரியர்கள் கொடுத்த தேர்ச்சி சதவீதம் ஆகியவற்றை குறிப்பிட்டு தங்களுடன் வைத்திருக்க வேண்டும். தலைமை ஆசிரியர்கள் பள்ளி வளாகம் முழுவதும் சுற்றிப் பார்த்து உட்கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் நல்ல நிலையில் உள்ளதா? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.    

எக்காரணம் கொண்டும் ஆசிரியர்கள் வகுப்பறையில் செல்போனை பயன்படுத்தக்கூடாது. தலைமை ஆசிரியர்கள் இதை கண்காணிக்க வேண்டும்.  

தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மாணவர்களுக்கு ஒழுக்கம், நற்பண்புகள் சார்பான கருத்துக்களை எடுத்துக் கூற வேண்டும். ஒழுக்கம் உள்ள மாணவர்களை உருவாக்குவதுதான் ஒரு ஆசிரியரின் முழுமுதற்கடமை ஆகும்.

6 முதல் 8 வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு தினமும் தமிழ் மற்றும் ஆங்கில மொழி வாசிப்பு பயிற்சி அளிக்க வேண்டும்.  

பள்ளியில் அனைத்து கல்வி இணைச் செயல்பாடுகளையும் ஊக்குவிக்க வேண்டும். மாணவர்களுக்கு பாடங்களை கற்பித்து, மதிப்பெண்கள் பெற வைப்பதோடு, அவர்களை சிறந்த ஒழுக்கமும் பண்பும் உள்ளவர்களாக உருவாக்க வேண்டியது நம் கடமை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். வழிபாட்டுக் கூட்டம் மற்றும் பிற செயல்பாடுகளை முழுமையாக பின்பற்றி நடத்த வேண்டும்.

சத்துணவு தரமானதாகவும் சுத்தமானதாகவும் சுகாதாரமானதாகவும் வழங்குவதை உறுதி செய்யவேண்டும். உண்மையான கல்வி என்பது மாணவர்களுக்கு அறிவை கொடுப்பதுடன் ஒழுக்கம், தன்னம்பிக்கை, மனிதநேயம் மற்றும் படைப்பாற்றலை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும். வருகிற கல்வி ஆண்டில் 100 சதவீத தேர்ச்சி பெற கல்வியாண்டின் தொடக்கத்தில் இருந்தே நன்கு திட்டமிட்டு பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Thursday, May 14, 2015

Pallikudam

உதவி பேராசிரியர் பணிக்கான ‘நெட்’ தகுதி தேர்வு முடிவு வெளியாகாததால் குழப்பம்
          உதவி பேரா சி ரி யர் பணிக் காக கடந்த டிசம் பர் மாதம் நடத் தப் பட்ட ‘நெட்’ தகு தித் தேர்வு முடிவு இது வரை வெளி யா கா த தால் குழப் பம் நீடிக் கி றது. அடுத்த மாதம் நடக் கும் தேர் வுக்கு விண் ணப் பிக்க நாளை (15ம் தேதி) கடைசி நாளா கும்.

           நாடு முழு வ தும் அரசு, அரசு உதவி பெறும் கல் லூ ரி கள், பல் க லைக் க ழ கங் களில் உதவி பேரா சி ரி யர் பணி யில் சேர ‘நெட்’ எனப் ப டும் தேசிய தகு தித் தேர் வில் தேர்ச்சி பெற வேண் டும். இந் தத் தேர்வை பல் க லைக் க ழக மானி யக் குழு (யுஜிசி) ஒரு ஆண் டிற்கு இரண்டு முறை, அதா வது ஜூன், டிசம் பர் ஆகிய மாதங் களில் நடத்தி வரு கி றது.
இந் நி லை யில் கடந்த ஆண்டு டிசம் பர் மாதம் முதல் ‘நெட்’ தகு தித் தேர்வு நடத் தும் பொறுப்பை யுஜிசி மத் திய இடை நி லைக் கல்வி வாரி யத் தி டம் (சிபி எஸ்இ) ஒப் ப டைத் தது. ஒவ் வொரு முறை யும் நெட் தகு தித் தேர்வு முடி வு கள் அடுத்த தேர்வை அறி விக் கும் முன்பு வெளி யா கும்.
இதன் மூலம் ‘நெட்’ தகு தித் தேர் வில் தேர்ச்சி பெற் ற வர் கள் அடுத்த தேர் விற்கு விண் ணப் பிக்க வேண் டிய அவ சி யம் இருக் காது.
குறிப் பாக கடந்த 2013ம் ஆண்டு டிசம் பர் 29ம் தேதி நடத் தப் பட்ட நெட் தகு தித் தேர் விற் கான முடி வு கள் 2014ம் ஆண்டு ஏப்.21ம் தேதியே அறி விக் கப் பட்டது. ஆனால், கடந்த ஆண்டு (2014) டிச.28ம் தேதி நடந்த நெட் தகு தித் தேர்வு முடி வு கள் இது வரை வெளி யா க வில்லை. இந் நி லை யில் ஜூன் 28ம் தேதி நடக் கும் ‘நெட்’ தகு தித் தேர்வு குறித்த அறி விப் பும் சிபி எஸ்இ மூலம் வெளி யி டப் பட்டு கடந்த ஏப்.16ம் தேதி முதல் விண் ணப் பங் கள் பெறப் பட்டு வரு கின் றன. இதற்கு விண் ணப் பிக்க கால அவ கா சம் நாளை யு டன் (15ம் தேதி) முடி கி றது.
இது கு றித்து தேர்வு எழு தி ய வர் கள் கூறு கை யில், ‘ஒரு தேர் வின் முடி வு களை அடுத்த தேர் விற்கு முன் பாக வெளி யிட்டால் தான் தேர்ச்சி பெறா த வர் கள் அடுத்த தேர் விற்கு விண் ணப் பிக்க முடி யும். தேர்ச்சி பெற் ற வர் கள் அடுத்த தேர் விற்கு விண் ணப் பிப் பதை தவிர்க் க லாம். ஆனால் கடந்த டிச.28ம் தேதி நடந்த நெட் தேர்வு முடிவு வெளி யா காத நிலை யில், ஜூன் மாதம் நடக் கும் தேர் வுக்கு விண் ணப் பிக்க நாளை கடைசி நாள் என் ப தால் அடுத்த தேர் வுக்கு விண் ணப் பிப் பதா, வேண் டாமா என்ற குழப் பம் உரு வா கி யுள் ள து’ என் ற னர்.
ஜூன் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
இது கு றித்து தேர்வு எழு தி ய வர் கள் கூறு கை யில், ‘ஒரு தேர் வின் முடி வு களை அடுத்த தேர் விற்கு முன் பாக வெளி யிட்டால் தான் தேர்ச்சி பெறா த வர் கள் அடுத்த தேர்விற்கு விண் ணப் பிக்க முடி யும். தேர்ச்சி பெற் ற வர் கள் அடுத்த தேர் விற்கு விண் ணப் பிப்பதை தவிர்க் க லாம். ஆனால் கடந்த டிச.28ம் தேதி நடந்த நெட் தேர்வு முடிவு வெளி யா காத நிலை யில், ஜூன் மாதம் நடக் கும் தேர் வுக்கு விண் ணப் பிக்க நாளை கடைசி நாள் என்பதால் அடுத்த தேர் வுக்கு விண் ணப் பிப் பதா, வேண் டாமா என்ற குழப் பம் உருவாகியுள்ளது’ என் ற னர்.

Pallikudam

அறிவிப்பு
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிக்கூடங்களும் எந்த வித புகாருக்கும் இடம் அளிக்காமல் சிறப்பாக நடத்தவேண்டும்; முதன்மை செயலாளர் த.சபீதா
             தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிக்கூடங்களும் எந்த வித புகாருக்கும் இடம் அளிக்காமல் சிறப்பாக நடத்தவேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா அறிவுரை வழங்கினார்.

கல்வி அதிகாரிகள் கூட்டம்

வருகிற ஜூன் 1-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிக்கூடங்களும் திறக்கப்பட உள்ளன. பள்ளிக்கூடங்கள் திறக்கும் முன்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளையும், அனைத்து மாவட்ட மெட்ரிகுலேசன் ஆய்வாளர்களையும் அழைத்து சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் நேற்று கூட்டம் நடத்தப்பட்டது.

கூட்டம் முடிந்ததும் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆய்வு நடத்தவேண்டும்

2015-2016-ம் கல்வி ஆண்டு ஜூன் 1-ந்தேதி தொடங்க உள்ளது. அன்று அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள், விலை இல்லா நோட்டுபுத்தகங்கள், விலை இல்லா சீருடைகள் 2 செட், விலையில்லா அட்லஸ் ஆகியவை வழங்கப்பட உள்ளன. இவை வழங்கப்படும்போது சரியாக வழங்கவேண்டும். வழங்குவதில் எந்தவித குறையும் இருக்கக்கூடாது.

பள்ளிக்கூடங்களில் பாழடைந்த கிணறு, பழைய பள்ளிக்கட்டிடம், பழுதடைந்த கழிவறை ஆகியவை இருக்கக்கூடாது. அவை பழுதுபார்த்து பயன் உள்ள வகையில் இருக்க அனைத்து ஏற்பாடும் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளன.

இருப்பினும் அவை சரியாக இருக்கின்றனவா என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிக்கூடங்களை அவை திறக்கும் முன்பாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும். பெரும்பாலான பள்ளிகளில் அனைத்தும் சரி செய்யப்பட்டு இருக்கும் என்று நினைக்கிறேன். மேலும் மாணவர் சேர்க்கையும் சிறப்பாக இருக்க ஏற்பாடு செய்யவேண்டும்.

புகாருக்கு இடம் அளிக்காமல்...

கடந்த வருடத்தை விட பள்ளிக்கூடங்களில் பிளஸ்-2 தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது. இருப்பினும் தேர்ச்சி சதவீதம் குறைந்த பள்ளிகளில் ஏன், எப்படி குறைந்தது என்று ஆராய்ந்து அதற்கான காரணத்தை கண்டுபிடித்து வரும் கல்வி ஆண்டில் தேர்ச்சியை அதிகரிக்க முதன்மை கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதற்காக மாவட்ட அளவில் கூட்டம் நடத்தி பள்ளித்தலைமை ஆசிரியர்களை அழைத்து குறைகள் இருந்தால் அவற்றை போக்கவேண்டும். மொத்தத்தில் எந்தவித புகாருக்கும் இடம் அளிக்காமல் பள்ளிக்கூடங்களை தலைமை ஆசிரியர்கள் சிறப்பாக நடத்தவேண்டும்.

இவ்வாறு த.சபீதா கூறினார்.

ஆய்வக உதவியாளர் தேர்வு

முன்னதாக கூட்டத்தில் அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசுகையில் ‘பள்ளிக்கூட ஆய்வக உதவியாளர் தேர்வு மே 31-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது. அந்த தேர்வை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும் அந்தந்த மாவட்ட கலெக்டர்களின் ஆலோசனையை பெற்று சிறப்பாக தேர்வை நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுங்கள்’ என்றார்.

Tuesday, May 12, 2015

pallikudam

48 மணி நேரத்தில் 'பான்' எண் மத்திய அரசு விரைவில் நடவடிக்கை

'பான்' எண் அட்டைகளை, 48 மணி நேரத்தில் வழங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.வருமானவரித் துறையால் வழங்கப்படும், 'பெர்மனென்ட் அக்கவுன்ட் நம்பர்' என்பதன் சுருக்கம் தான், பான். வருமான வரி செலுத்துபவர்களும், வங்கிகளில், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல், வரவு - செலவு மேற்கொள்பவர்களும், பான் எண்ணை கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.

நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த, நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ஒரு லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட, பொருட்கள், சேவை, கொள்முதல் மற்றும் விற்பனைக்கு, பான் எண்ணை தெரிவிக்க வேண்டும் என, அந்த எண்ணுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்தார்.இதன்மூலம், கறுப்புப் பணத்தை கட்டுப்படுத்தலாம் என்பது, அரசின் எண்ணம்.
ஆனால், இந்த பத்து இலக்க எண் கொண்ட அட்டை, 21 கோடி பேருக்கு தான் கிடைத்துள்ளது; இன்னமும், நுாறு கோடி பேருக்கு மேல், அட்டை வழங்கப்பட வேண்டியுள்ளது.
'ஜன் தன்' வங்கிக் கணக்குத் திட்டம், ஒரு லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு, பான் எண் அவசியம் என்பதால், அனேகமாக, அனைவருக்கும் பான் எண் வழங்கவும், அதை விரைவாக வழங்கவும், மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பான் எண் பெற, இப்போது, குறைந்தபட்சம், ஒரு வாரம் முதல், இரு வாரங்கள் வரை ஆகும் நிலையில், அதை, 48 மணி நேரத்தில் வழங்கவும், அதற்காக இணையதள வசதிகளை பயன்படுத்திக் கொள்ளவும், முடிவு செய்யப்பட்டு உள்ளது.பான் எண், 48 மணி நேரத்தில் கிடைக்கவும், அட்டையை ஒரு வாரத்திற்குள் அனுப்பி வைக்கவும், வருமானவரித் துறை நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக, அத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
பான் எண் பெற, வயது சான்றிதழுக்கான ஆதாரமாக, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் 'ஆதார்' அடையாள அட்டை நகலை வழங்கலாம் என, வருமானவரித் துறை தெரிவித்து உள்ளது.

Sunday, May 10, 2015

Pallikudam

அரசுப்பள்ளி ஆசிரியர் உலகளாவிய சாதனை
       27.04.2015 முதல் 02.05.2015 வரை  மைக்ரோசாப்ட்     நிறுவனம்  நடத்திய கல்வி கருத்தரங்கில் MIELA விருது பெற்று ஆசிரியர்கள் சார்பில் சத்தியமங்கலம் அரசு பள்ளி ஆசிரியர் திரு.ஸ்ரீ.திலிப் கலந்துகொண்டார் .மேற்கு வங்க கல்லூரி பேராசிரியர் MIE சார்பில் 5 ஆசிரியர்களும்  மாணவ பிரதிநிதிகளில் 30 மாண்வர்கள் உலக நாடுகள் அனைத்திலிருந்தும் அழைக்கப்பெற்றதில் இந்தியாவிலிருந்து ஆறு மாணவர்கள் என மொத்தம் 13  நபர்கள் அமெரிக்கா சென்று .கருத்தரங்கில்  87  நாடுகளிலிருந்து  கலந்து கொண்ட 300 ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களில் இந்தியாவிலிருந்து அதிகப்படியான  நபர்கள் கலந்து கொண்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட  87  நாடுகளில்  300 ஆசிரியர்களில் ஒரே அரசு பள்ளியை சார்ந்த ஆசிரியர் சத்தியமங்கலம் ஆசிரியர் இவர் அக்கருத்தரங்கிள் முதல்  நாள் மைக்ரோசாப்ட்   நிறுவனம்  நடத்திய போட்டித் தேர்வில் 100க்கு 74 மதிப்பெண் பெற்று MCE (Microsoft Certified Educator) ஆக அறிவிக்கப்பட்டார்.இக்கருத்தரங்கம்  நடத்தப்பெற்றதன்  நோக்கம் பல்வேறு  நாடுகளில் கணினியக் கொண்டு புதுமையான முறைகளில் கற்ப்பிக்கும் ஆசிரியர்கள் தங்களுக்குள் அந்த புதுமைகளை பகிர்ந்துகொள்வதாகும்.

இந்த கருத்து பரிமாற்றத்தின்பொழுது அவரவர் செயல்பாடுகளை  விளக்க    நடந்த கருத்தரங்கத்தின்பொழுது  நமது அரசு பள்ளி ஆசிரியர்  நமது பாரம்பரிய உடையில் சென்றது அனைவரையும் கவர்ந்தது.மைக்ரோசப்ட்  நிறுவன  CEO இந்தியாவை சார்ந்த திரு .சத்திய நாதல்லா அவர்கள்  நிகழ்த்திய உரையின்பொழுது.திலிப் அவர்கள் எழுப்பிய வினாவையும் அவர் கூரிய கருத்தையும் CEO அவர்கள் பெரிதும் வரவேற்றார்.
அரசு பள்ளிகளில் இத்தகைய தகவல் தொழில் நுட்ப பயன்பாடு என்னை வியப்பில் ஆழ்த்துகிரது என பாராட்டினார் மைக்ரோசாப்ட் கல்விக்கான  vice president திரு.ஆண்டனி சல்சிடோ அவர்கள்.  இக்கருத்தரங்கத்திற்கு வந்திருந்த ஆசிரியர்களை கூழுக்களாகப் பிரித்து அவர்கள் வரும் கல்வி ஆண்டில் வேறு  நாடுகளில் அப்பள்ளிகளுடன் இணைந்து கற்க செயவதற்காக ஏற்பாடு செய்யப் பட்டதே இந்த கருத்தரங்கு

இதில் சத்தியமங்கலம் அரசு பள்ளியுடன் அமெரிக்கா,இஸ்ரேல்,பிரான்ஸ்,தாய்வான் ஆகிய  நாடுகளில் உள்ள பள்ளிக் குழந்தைக:ளுடன் இந்த அரசு பள்ளி மாணவர்கள் இணைந்து கற்பர்,அவ்வாறு கற்கும்பொழுது  நாடுகளுக்கிடையே கலாச்சார பகிர்வு ஏற்படும்.