Friday, April 17, 2015

Pallikudam

செல்ல மகளுக்கு சேமிப்புத் திட்டம்

மத்திய அரசு சமீபத்தில் பெண் குழந்தைகளின் நலனுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமே “செல்வ மகள் சேமிப்பு திட்டம்” ஆகும். மக்கள் மத்தியில் இத்திட்டம் வெளியான நாளில் இருந்தே பலத்த வரவேற்பு மிகுந்து காணப்படுகிறது. இத்திட்டத்தின் கூறுகளை சுருக்கமாய் பார்ப்போம்..,

பெண் குழந்தைகளின் பெயரில் கணக்கு துங்கலாம்:
பெண் குழந்தைகளுக்காவே பிரத்தியேகமாய் வடிவமைக்கப்பட்ட திட்டம். இத்திட்டம் பெண் குழந்தைகளின் பெயரில் பெற்றோர் அல்லது காப்பாளர்கள் கணக்கு துவங்க இயலும்.

வயது வரம்பு:
பிறந்த குழந்தை முதல் 10 வயது வரை உள்ள பெண் குழந்தைகளைக் கொண்டோர் மட்டுமே கணக்கு துவங்க இயலும். புதிய திட்டம் என்பதால் ஒரு வருடத்திற்கு மட்டும் சிறப்பு சலுகையாக 11 வயது குழந்தைகளுக்கும் கணக்கு துவங்கலாம் என அறிவிப்புகள் தெரிவிக்கின்றன.

மாதத் தவணை:
மாதத் தவணையாக குறைந்தது 100 ரூபாய் முதல் வருடத்திற்கு குறைந்தபட்ச தொகையை 1000 ரூபாய் முதல் அதிகபட்சமாய் 1.5 லட்சம் வரை செலுத்தலாம். செலுத்தப்படும் தொகைக்கு உயர்ந்தபட்சமாய் 9.1 சதவிகித வட்டி எனவும் அறிவித்துள்ளனர்.

முக்கியமான விசயம் இது தான்:
கணக்கு துவங்கிய பெண் குழந்தைக்கு 14 வயது பூர்த்தியான பிறகு தவணை கட்ட வேண்டிய அவசியமில்லை. 18 வயது முடிந்தவுடம் பெண்ணை படிக்க வைப்பதற்காக கணக்கில் உள்ள பணத்தின் 50% எடுத்துக்கொள்ளலாம். திருமணம் நிச்சயம் செய்ததற்கான சான்றிதழை காட்டி முழு பணத்தையும் பெற்றுக்கொள்ளலாம்.

சரி, எல்லாத்தையும் சொல்லிடீங்க, இந்த திட்டம் எங்கு கிடைக்கும் ?
அருகில் உள்ள அனைத்து தபால் நிலையம் மற்றும் அரசு வங்கிகளிலும் இந்த திட்டத்தில் எளிதாய் துவங்கிட இயலும். கணக்கு துவங்க செல்லும் போது மறவாமல் குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ் மற்றும் இருப்பிடச் சான்றிதழ் போன்றவற்றை கொண்டு சென்று சிரமத்தை தவிர்த்திடுங்கள்.

நல்ல திட்டம் மக்களை சென்றடையும் நோக்கிலேயே இந்தப் பதிவு எழுதப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட தகவலில் மாற்றங்கள் இருக்க வாய்ப்புள்ளது. எனவே தபால் நிலையங்களில் இத்திட்டம் குறித்து விரவாக நன்கு கேட்டறிந்து விண்ணப்பித்தல் நல்லது.

No comments: