Monday, January 19, 2015

Pallikudam

சி.பி.எஸ்.இ., - ஐ.சி.எஸ்.இ., பள்ளியில் தமிழ் பாட ஆசிரியர்களுக்கு கிராக்கி.
              சி.பி.எஸ்.இ., உட்பட பிறவாரிய பாடத்திட்டங்களை பின்பற்றும் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களுக்கு கிராக்கி அதிகரித்துள்ளது. இது தமிழ் பாடத்தில், பட்டம் பெற்றவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

             தமிழகத்தில், தற்போது 590 சி.பி.எஸ்.இ., பள்ளிகள் மற்றும் 200 ஐ.சி.எஸ்.இ., உள்ளிட்ட பிற பாடத்திட்டங்களை பின்பற்றும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில், 2006 கட்டாயம் தமிழ் படிக்கும் சட்டத்தின்படி, வரும் கல்வியாண்டு முதல் (௨௦௧௫- ௧௬) தமிழ் பாடம் கட்டாய பாடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.பிற மொழிகளை தாய்மொழியாக கொண்ட மாணவர்களும் கட்டாயம் தமிழ் பாடத்தில் தேர்வு எழுதுவது அவசியம். இந்நிலையில், தமிழ் பாடத்தில் நல்ல புலமை கொண்ட ஆசிரியர்களை நியமிக்க பள்ளி நிர்வாகங்கள் முடிவுசெய்துள்ளன. தற்போது, பெரும்பாலான சி.பி.எஸ்.இ., சர்வதேச பள்ளிகளில் தமிழ் பாடத்தை தேர்வு செய்து படித்த மாணவர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளனர்.

             இந்தி, பிரெஞ்ச், ஜெர்மனி போன்ற பாடங்களை தேர்வு செய்து படித்து வருகின்றனர். அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் இந்தி மொழிப்பாடத்தை தேர்வு செய்து படித்துவருவதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், கட்டாய தமிழ் பாடம் சட்டத்தின்படி தமிழ் ஆசிரியர்களுக்கு கிராக்கி அதிகரித்துள்ளது. கோவை மாவட்டத்தில், தற்போது பிற பாடத்திட்டங்களை பின்பற்றும் வரிசையில், ௯௧ பள்ளிகள் உள்ளன. இதில், ௩௦ சதவீத பள்ளிகளில் மட்டுமே போதிய தமிழ் ஆசிரியர்கள் உள்ளனர்.இப்பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களை நியமிக்கவேண்டிய நிர்பந்தம் எழுந்துள்ளது. கோவை மாவட்ட தனியார் பள்ளி முதல்வர் ஒருவர் கூறுகையில், ' தமிழ் பாடம் கட்டாய சட்டத்தில் நடைமுறைப்படுத்துவது குறித்து, மத்திய அரசிடம் இருந்து எவ்வித தகவலும் வரவில்லை. இதுகுறித்த ஆலோசனை செய்து வருகின்றோம். மாணவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தபடி, தமிழாசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர்' என்றார்.

No comments: