Pages
- HOME
- ஆசிரியர் தகுதி தேர்வு
- தொடக்க கல்வி
- அரசாணைகள்
- கற்பித்தல்
- பாடப்புத்தகம்
- துறை தேர்வு
- கல்வி
- கணினி நுட்பம்
- தமிழ் செய்தித்தாள்
- TN ABL CARDS
- PallikudamNEWS
- முக்கிய படிவம்
- செயல் முறைகள்
- தனி ஊதியம்
- Teachers resource
- B.Ed
- 2013
- TET CENTER
- முக்கியம்
- ENGLISH
- குழந்தை கதைகள்
- MATHS & SCIENCE
- ஜோசியம்
- HISTORY
- கணிதம்
Thursday, January 29, 2015
Pallikudam
கணிதம் படித்த பட்டதாரிகளுக்கு இந்திய சர்வே துறையில் பணி
Tuesday, January 27, 2015
Pallikudam
ஆசிரியர்களுக்குத் தரப்படும் வருமான வரிச் சலுகை சலுகையல்ல, அங்கீகாரம்...
மில்லியன் என்பது ஒரு சிறிய எண்ணிக்கை அல்ல. குறிப்பாக, 135 மில்லியன் மக்கள் (13 கோடியே 50 இலட்சம் மக்கள்) என்றால் அதனுடைய முக்கியத்துவம் இன்னும் அதிகம். மோரீஷஸ், சுரிநாம், புருனே, டோங்கா போன்ற 50 நாடுகளின் மொத்த மக்கள் தொகையைவிட இது அதிகம்.
பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளிலுள்ள மக்கள் தொகையின் கூடுதலைவிட அல்லது கனடா மக்கள் தொகையின் மூன்று மடங்கைவிட இது அதிகம். ஆனால், கல்வியாளர்களுக்கு, எனக்கு, அந்த எண்ணிக்கை தொடக்க மற்றும் அடிப்படைப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளின் எண்ணிக்கையைத்தான் நினைவுபடுத்துகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட பள்ளிக் கல்வி ஆண்டு அறிக்கையின் புள்ளி விவரங்கள் சில முக்கிய பிரச்னைகளை எழுப்புகின்றன.
அதிகமான குழந்தைகள் பள்ளியில் சேர்ந்து உள்ளனர், பள்ளிக்கு வருகின்றனர் என்கின்ற நல்ல செய்திகளுக்கிடையே கவலையளிக்கும் ஒரு செய்தியும் இருக்கிறது. ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பில் படிக்கும் 5.5 கோடி குழந்தைகளிடையே, எழுத்துகளை இன்னதென்று கண்டறிய முடியாத குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளில் 13% லிருந்து 32% வரை அதிகரித்திருக்கிறது. அதுபோலவே, மூன்று, நான்கு, ஐந்து ஆகிய வகுப்புகளில் பயிலும் எட்டு கோடி மாணவர்களிடையே 50% மாணவர்கள் அடிப்படைக் கணிதத்தில் இன்னும் கூடுதல் பயிற்சி பெற வேண்டியவர்களாக உள்ளனர். அவர்களின் வாசிக்கும் திறன் போதுமானதாக இல்லை.
நம் பள்ளி முறை, தர அடிப்படையில் அமைந்துள்ளது. இது ஒவ்வொரு வகுப்பிலும் கற்க வேண்டிய கல்வியைப் புறக்கணிக்கிறது. கல்லூரிச் சான்றிதழ்களை எடுத்துக் கொண்டால், அவை கல்லூரியை விட்டு வெளியே செல்வதற்காக இருக்கிறதே தவிர, தகுந்த தொழிலுக்கோ வேலைக்கோ மாணவர்களை தயார்படுத்துவதாக இல்லை. இதை உடனே மாற்றிவிட முடியாதுதான். ஆனால், கல்வித் துறையில் தலைமை தாங்கும் ஆசிரிய - ஆசிரியைகள் மனது வைத்து முனைப்புடன் செயல்பட்டால் இதனைக் கவனித்து சரி செய்துவிட முடியும். சுமார் அரை நூற்றாண்டுக்கு முன்னர் ஆசிரியர்களுக்குப் போதிய சம்பளம் இருக்கவில்லை. வாழ்க்கை வசதிகள் கிடையாது. பணி நிரந்தரம், ஓய்வூதியம் என்று எதுவும் கிடையாது. ஆனாலும், அவர்கள் தனிப் பயிற்சி (டியூஷன்) எடுக்கவில்லை.
தனது மாணவ - மாணவியருக்குத் தனி கவனம் செலுத்திப் பாடம் புகட்டினார்கள். வீட்டில் வறுமை இருந்தாலும், ஆசிரியர் பணிக்கு வெளியுலகில் கெüரவம் இருந்தது. வருங்கால சந்ததியரை உருவாக்குகிறோம் என்கிற கடமை உணர்வும், பெருமிதமும் அவர்களுக்கு இருந்தன. ஆசிரியப் பணி என்பது சேவையாகவும், ஆசிரியர்கள் தெய்வீகமானவர்களாகவும் கருதப்பட்ட காலம் அது. இன்று அப்படியில்லை. இன்றைய ஆசிரியர்களுக்கு அவர்களது பணி என்பது ஏனைய அலுவலகப் பணிகளைப் போன்ற ஒன்றாகத்தான் தெரிகிறது. இந்த நிலையில் மாற்றம் ஏற்படுத்தி, நல்ல தரமான மாணவர்களை உருவாக்க ஆசிரியர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். ஆசிரியர்களை சமுதாயம், அதாவது, அரசு அங்கீகரித்து அவர்களது பணியை "தேச சேவை'யாக ஏற்றுக் கொள்கிறது என்கிற உணர்வை ஏற்படுத்தியாக வேண்டும். அதற்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் நல்லாசிரியர் விருதுகள் மட்டுமே போதாது.
பிரதமர் மோடி உணர்ச்சி ததும்பும் தன்னுடைய ஆசிரியர் தின உரையில் ஆசிரியர் தொழிலுக்குப் புத்துயிர் ஊட்ட விரும்புவதாகச் சூளுரைத்தார். உலகத்திற்கு ஆசிரியர்கள் இந்தியாவிலிருந்து தரப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். அது மிகப்பெரிய மாறுதலை உண்டாக்கக்கூடிய லட்சியப் பார்வையாகும். அதற்குத் தகுந்த செயல்பாட்டுத் தலையீடு வேண்டும். என்.சி.டி.ஈ (NCTE) இதில் முனைப்போடு இறங்கி உள்ளது.
சமீபத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட அதன் நான்கு ஆண்டு ஒருங்கிணைந்த இளநிலைப் பட்டப் படிப்புத் திட்டம் ஓர் ஆக்கப்பூர்வ நடவடிக்கை ஆகும். இதன்மூலம், இளைஞர்களை ஆரம்பத்திலேயே கவர முடியும். வழக்குரைஞர்கள், மருத்துவர்களைப் போல ஆசிரியர்களும் தொழில்முறைக் கல்வி பயில இது வழிகோலும். ஒரு பல்கலைக்கழகம் பலத்த போராட்டத்துக்கிடையே ஒருங்கிணைந்த முதுநிலைப் படிப்பை ஆரம்பித்தது போன்ற முயற்சி இது.
அத்தகைய செயல்படும் கல்வித் துறையின் புதிய திட்டத்திற்கு மாறுதலை உண்டாக்கக் கூடிய அளவிற்கு நிதி உதவி அவசியமாகிறது. நிதித் துறையின் தன்னிச்சை அதிகாரத்தினால், கடந்த எட்டு ஆண்டுகளில் பெரு நிறுவனங்கள் அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.40 லட்சம் கோடி வரியானது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதனால் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியை சிலர் பாராட்டுகிறார்கள். சிலர் குறை கூறுகிறார்கள். அது போகட்டும். பெரு நிறுவனங்களுக்கு அளித்தது போன்ற குபேர வரிச் சலுகையை ஆசிரியப் பெருமக்களுக்குத் தர வேண்டியதில்லை. ஒரு குசேல சலுகையாவது ஆசிரியர்களுக்குத் தரப்படுவதில் என்ன தவறு இருக்க முடியும்? அதன் மூலம், ஆசிரியர் சமுதாயமே புத்துணர்வுடன் பிரதமர் மோடி விரும்பும் புதிய இந்தியாவைப் படைக்க முனைப்புடன் செயல்படும் என்றால், ஏன் ஆசிரியர்களுக்கு அதுபோன்ற சலுகையை அரசு தரக்கூடாது?
ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்குவதுடன் வரி விலக்கும் வழங்கப்பட வேண்டிய தருணம் வந்துவிட்டது. பெரு நிறுவனங்களுக்கு வரி விலக்குகள் அளிப்பது பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவில்லையா? அதுபோல ஆசிரியர்களுக்கு வரி விலக்குகள் அளிக்கப்பட்டால், அது அறிவு வளர்ச்சிக்கு உதவும் தானே? இதைச் செய்வதால் அரசுக்குப் பெரிய அளவில் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுவிடப் போவதில்லை.
ஆசிரியர் துறையில் அதிருப்தி வளர்ந்து வருகிறது. ஆசிரியராக விரும்பும் இளைஞர்களின் எண்ணிக்கை அரிதாகி வருகிறது. நல்ல ஆசிரியர்கள் இல்லாமல் நல்ல மாணவர்களை எப்படி உருவாக்க முடியும்? ஆசிரியர் பணியில் ஈடுபட வேண்டும் என்கிற ஆர்வத்தை மீட்டெடுத்தாக வேண்டும். அதற்குக் கையாளப்பட வேண்டிய பல வழிகளில் ஒன்று வரிச் சலுகை. இந்தப் புனிதத் தொழிலுக்கு வருமான வரி விதிப்பை மொத்தமாகக் கைவிடும் கொள்கை (100% Income Tax rebate) ஆசிரியர்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் அடையாளமாக இருக்கும். தவிர, பிரதமர் இந்த புனிதப் பணியின் மீது கொண்டுள்ள அக்கறையையும் அது வெளிப்படுத்தும். ஒட்டுமொத்த ஆசிரிய சமுதாயமே பிரதமரின் கனவை நனவாக்க முனைப்புடன் செயல்படும். ஆசிரியர்கள் தங்களுக்கு பொறுப்பு இல்லாத இலவச சலுகை கிடைப்பதை விரும்புவதில்லை. இது கவனத்திற்குரியது.
எனவே, இந்த முழு வருமான வரிச் சலுகை, "ஆண்டு கல்வி அறிக்கை' (Annual Academic Return)ஒன்றை ஒவ்வொரு ஆசிரியரும் தாமாகவே முன்வந்து கணினி மூலமாக அளிப்பதன் அடிப்படையில் அமைக்கலாம். ஆசிரியர்களின் ஆண்டு அறிக்கை நான்கு பரிமாணங்களைக் கொண்டிருக்க வேண்டும். அவை மாணவர் கல்வி, தன் முன்னேற்றம், நிறுவன வளர்ச்சி, சமுதாய சேவை என்பன ஆகும். இந்த அறிக்கையை தேவை அடிப்படையிலும் பரிசீலனையும் செய்யலாம். நிறைவேற்றக்கூடிய இலக்குகளை எந்த ஆசிரியர் அடையவில்லையோ அவர் 100 சதவீத வரிச் சலுகைக்கு அருகதையற்றவர்.
மேலும், இத்தகைய (AAR) சமர்ப்பிப்பதில் எந்தவிதமான ஊழலும் இல்லாத அளவிற்கு ஒரு திட்டத்தை நிறைவேற்றுவது என்பது இன்றைய கணினி வளர்ச்சியில் சாத்தியமானதே. மக்கள் தொகையில் செழுமையூட்டி ஆதாயம் உண்டாக்குவது ஆசிரியர் கைகளில் உள்ளது. அவர்கள் அறிவு வல்லமையைத் தருபவர்கள். வருமான வரி விலக்கு என்பது அவர்களது புனிதமான சேவைக்கு சமுதாயம் தரும் அங்கீகாரம், அவ்வளவே.
நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் வர இருக்கும் நிதிநிலை அறிக்கையில், சிறப்பு அறிவிப்பாக ஆசிரியர்களுக்கு வருமான வரி விலக்கு என்கிற அறிவிப்பு வருமானால், அது இந்திய சமுதாயத்தின் தலையெழுத்தை மாற்றி அமைக்கக்கூடும். பெரு நிறுவனங்களுக்கு வரிச் சலுகை அளிப்பது குபேரர்களுக்குக் கிடைக்கும் கொள்ளை லாபம். ஆசிரியர்களுக்குத் தரப்படும் வருமான வரிச் சலுகை என்பது குசேலர்களின் பிடி அவல்!
கட்டுரையாளர்: தலைவர், திட்டமிடல் மற்றும் வளர்ச்சித் துறை, சாஸ்த்ரா பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
Pallikudam
பி.எப்., கணக்கிலிருந்து முன்கூட்டியே பணம் பெறும் முறைக்கு கட்டுப்பாடு: 50 வயதானால் மட்டுமே முழு தொகையையும் பெற முடியும்
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியான, பி.எப்., கணக்கில் உள்ள முழு பணத்தையும், முன்கூட்டியே திரும்ப பெறும் நடைமுறைக்கு கட்டுப்பாடு விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 50 வயதுக்கு பின், சந்தாதாரர்கள் முழு தொகையையும் பெற முடியும்.
அரசு துறைகளிலும், பல்வேறு தனியார் துறைகளிலும் பணியாற்றுவோருக்கு, சம்பந்தப்பட்ட துறை அல்லது நிறுவனங்கள் சார்பில், பி.எப்., கணக்கு துவங்கப்படுவது வழக்கம்.
மாதந்தோறும் சம்பளத்தில்... :
ஒவ்வொரு மாதமும், ஊழியர்களின் சம்பளத்திலிருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சார்பில், அவரின் பி.எப்., கணக்கில் செலுத்தப்படும். இந்த தொகைக்கு, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியகம் சார்பில் குறிப்பிட்ட தொகை வட்டியாக அளிக்கப்படும்.இந்த தொகையும், ஊழியர்களின் பி.எப்., கணக்கில் சேரும். ஊழியர் ஓய்வு பெறும்போது, இந்த தொகை அவருக்கு அளிக்கப்படுவதுடன், மாதம் தோறும் அவருக்கு ஓய்வூதியமும் அளிக்கப்படும். ஊழியர்கள், ஒரு நிறுவனத்திலிருந்து மற்ற நிறுவனத்துக்கு செல்லும்போது, தங்கள் பி.எப்., கணக்கில் உள்ள தொகை முழுவதையும் திரும்ப பெறலாம் என்ற விதிமுறை இப்போது உள்ளது. இதுபோன்ற நடைமுறை யால், சம்பந்தப்பட்ட ஊழியர்களின் ஓய்வு காலத்தில் பாதிக்கப்படுவதாக பரவலாக புகார் எழுந்தது. இதையடுத்து, இந்த விதிமுறைகளில் மாற்றம் செய்வது குறித்து ஆலோசிப்பதற்காக, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியத்தின் கூட்டம் சமீபத்தில் நடந்தது.
நடைமுறையில் மாற்றம் :
இதில் ஆலோசிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து, பி.எப்., கமிஷனர் கே.கே.ஜலாலன் கூறியதாவது:சந்தாதாரர்களின் வங்கி கணக்கில் உள்ள தொகையை திரும்ப பெறுவது தொடர்பான நடைமுறையில் மாற்றம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதன்படி, சந்தாதாரர்களுக்கு, 50 வயதான பின், அவர்கள் பி.எப்., கணக்கில் உள்ள முழு தொகையையும் திரும்ப பெற முடியும். அதற்கு முன் திரும்ப பெற வேண்டுமானால், கணக்கில் உள்ள, 90 சதவீத தொகையை மட்டுமே திரும்ப பெற முடியும். மீதமுள்ள, 10 சதவீத தொகை, அவர்கள் கணக்கிலேயே இருக்கும். 50 வயதுக்கு பின், அந்த தொகையை பெற முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் இந்த ஆலோசனையை, தொழிலாளர் மற்றும் ஊழியர் சங்கங்கள் வரவேற்றுள்ளன. 'எந்த நிறுவனத்துக்கு சென்றாலும் பயன்படுத்தும் வகையில், பி.எப்., சந்தாதாரர்களுக்கு 'யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர்' கொடுக்கும் திட்டம் நடைமுறைக்கு வந்தால், பி.எப்., கணக்கிலிருந்து அடிக்கடி பணம் எடுக்கும் நடவடிக்கை குறையும்' என, ஊழியர் சங்கங்கள் தெரிவித்து உள்ளன.
ரூ.27,000 கோடி!
*பி.எப்., கணக்கில் உள்ள முழு தொகையையும் திரும்ப பெறுவதற்கான புதிய விதிமுறை இன்னும் நடைமுறைக்கு வரவில்லை; ஆலோசனை மட்டுமே நடத்தப்பட்டுள்ளது.
*புதிய நடைமுறை அமலுக்கு வந்தாலும், மருத்துவம் மற்றும் திருமணம் தொடர்பான விஷயங்களுக்காக சந்தாதாரர்கள், பி.எப்., கணக்கிலிருந்து பணம் எடுக்கும் நடைமுறையில் மாற்றம் வராது என, கூறப்படுகிறது.
*நாடு முழுவதும், பல்வேறு ஊழியர் மற்றும் தொழிலாளர்களின் பி.எப்., கணக்குகளில் உள்ள, 27,000 கோடி ரூபாய், யாரும் உரிமை கோரப்படாமல் உள்ளது.
*இந்த தொகைக்கு உரியவர்களை கண்டறிவதற்கு பி.எப்., அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
Monday, January 19, 2015
Pallikudam
NMMS தேர்விற்கு நுழைவுச் சீட்டு!
24.01.2015 அன்று நடைபெறவுள்ள NMMS தேர்விற்கு ஆன்லைன் மூலம் விண்ணபித்துள்ள தேர்வர்களின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை நாளை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
24.01.2015 அன்று நடைபெறவுள்ள தேசிய வருவாய்வழி மற்றும் திறன்படிப்பு உதவித்தொகை (NMMS) தேர்விற்கு ஆன்லைன் மூலம் விண்ணபித்துள்ள தேர்வர்களின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் 20.01.2015 முதல் என்ற இணையதள வழியாக
ஏற்கெனவே பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட USER ID & PASSWORD கொண்டு பதிவிறக்கம் செய்து வழங்க வேண்டும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
Pallikudam
சி.பி.எஸ்.இ., - ஐ.சி.எஸ்.இ., பள்ளியில் தமிழ் பாட ஆசிரியர்களுக்கு கிராக்கி.
சி.பி.எஸ்.இ., உட்பட பிறவாரிய பாடத்திட்டங்களை பின்பற்றும் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களுக்கு கிராக்கி அதிகரித்துள்ளது. இது தமிழ் பாடத்தில், பட்டம் பெற்றவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில், தற்போது 590 சி.பி.எஸ்.இ., பள்ளிகள் மற்றும் 200 ஐ.சி.எஸ்.இ., உள்ளிட்ட பிற பாடத்திட்டங்களை பின்பற்றும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில், 2006 கட்டாயம் தமிழ் படிக்கும் சட்டத்தின்படி, வரும் கல்வியாண்டு முதல் (௨௦௧௫- ௧௬) தமிழ் பாடம் கட்டாய பாடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.பிற மொழிகளை தாய்மொழியாக கொண்ட மாணவர்களும் கட்டாயம் தமிழ் பாடத்தில் தேர்வு எழுதுவது அவசியம். இந்நிலையில், தமிழ் பாடத்தில் நல்ல புலமை கொண்ட ஆசிரியர்களை நியமிக்க பள்ளி நிர்வாகங்கள் முடிவுசெய்துள்ளன. தற்போது, பெரும்பாலான சி.பி.எஸ்.இ., சர்வதேச பள்ளிகளில் தமிழ் பாடத்தை தேர்வு செய்து படித்த மாணவர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளனர்.
இந்தி, பிரெஞ்ச், ஜெர்மனி போன்ற பாடங்களை தேர்வு செய்து படித்து வருகின்றனர். அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் இந்தி மொழிப்பாடத்தை தேர்வு செய்து படித்துவருவதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், கட்டாய தமிழ் பாடம் சட்டத்தின்படி தமிழ் ஆசிரியர்களுக்கு கிராக்கி அதிகரித்துள்ளது. கோவை மாவட்டத்தில், தற்போது பிற பாடத்திட்டங்களை பின்பற்றும் வரிசையில், ௯௧ பள்ளிகள் உள்ளன. இதில், ௩௦ சதவீத பள்ளிகளில் மட்டுமே போதிய தமிழ் ஆசிரியர்கள் உள்ளனர்.இப்பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களை நியமிக்கவேண்டிய நிர்பந்தம் எழுந்துள்ளது. கோவை மாவட்ட தனியார் பள்ளி முதல்வர் ஒருவர் கூறுகையில், ' தமிழ் பாடம் கட்டாய சட்டத்தில் நடைமுறைப்படுத்துவது குறித்து, மத்திய அரசிடம் இருந்து எவ்வித தகவலும் வரவில்லை. இதுகுறித்த ஆலோசனை செய்து வருகின்றோம். மாணவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தபடி, தமிழாசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர்' என்றார்.
Pallikudam
பயனளிக்காத புதிய பென்ஷன் திட்டம்: ஆசிரியர் குடும்பங்கள் பாதிப்பு.
புதிய திட்டத்தில் சேர்ந்து ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த, 326 ஆசிரியர்களுக்கு பணப்பலன் கிடைக்காததால் அவர்களது குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதிய ஓய்வூதிய திட்டம் 2003 ஏப்., 1ல் இருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை, இரண்டு லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஊதியத்திற்கு தகுந்தாற்போல் கருவூலத்திலிருந்து மாதந்தோறும் பணம் பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தில் சேர்ந்து 2009 க்கு பின் ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இதுவரை எந்தவித பணப்பலனும் வழங்கப்படவில்லை. தகவல் உரிமைச்சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல் அடிப்படையில் தொடக்கல்வித்துறையில் ஓய்வுபெற்ற மற்றும் உயிரிழந்த, 79 ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறையில் ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த, 247 ஆசிரியர்களுக்கும் பணப்பலன் வழங்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. ஓய்வுபெற்ற ஆசிரியர்களும், உயிரிழந்த ஆசிரியர்களின் குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தகவல் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் பெற்ற திண்டுக்கல்லை சேர்ந்த வழக்கறிஞர் ஜெபஜேம்ஸ் கூறியதாவது: பொதுநல நோக்கத்துடன் தகவல்களை கேட்டு பெற்றேன். புதிய ஓய்வூதிய திட்டத்தில் பணப்பலன் கொடுப்பது தொடர்பாக எந்த அரசு உத்தரவும் வழங்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் இருந்து பிடித்தம் செய்த பணத்தை கூட வழங்காதது அதிர்ச்சியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Thursday, January 1, 2015
Pallikudam.net
Training
அகஇ - தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு BRITISH COUNCIL மற்றும் அகஇ இணைந்து "EARLY LITERACY PROGRAMME (DEVELOPING READING, WRITING SKILLS IN ENGLISH) என்ற தலைப்பில் 4 நாட்கள் வட்டார அளவில் பயிற்சி மூன்று கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 05.01.2015 அன்று கலந்துகொள்ளும் ஆசிரியர்கள் பள்ளிகளில் நடைமுறைபடுத்தி
அடுத்தபடியாக 19.01.2015, 27.01.2015 மற்றும் 03.02.2015 ஆகிய தேதிகளில் கலந்துகொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
Pallikudam.net
CRC
அகஇ - தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு 03.01.2015 அன்று "Child Psychology and Enriching Costitutional and Cultural Values – Primary மற்றும் 24.01.2015 அன்று "Managing Pre-adolescent Children – Upper Primary” என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி குறுவளமைய அளவில் நடைபெறவுள்ளது.
இப்பயிற்சியின் போது ஆசிரியர்களுக்கு விடுப்பு அனுமதிக்க கூடாது