Monday, August 18, 2014

செய்தி

பள்ளி கல்வித்துறையின் நடமாடும் ஆலோசனை மையங்கள் - பலன் எப்படி?

          பதின்பருவம்... ஒரு புதிர்பருவம்! அந்த பருவத்தில், உடலும், உணர்வும் ஒவ்வொரு நாளும் புதிது புதிதாய் மாற துவங்க, உள்ளம் நினைவுகளை எங்கெங்கோ இழுத்துச் செல்ல, நெருங்கிய உறவுகள் சுருங்க, புதிதாய் உறவுகள் நெருங்க ஆரம்பிக்கின்றன. வயதை போலவே, ஆசை, நிராசை, ஏமாற்றம், ஏளனம், குழப்பம், கலக்கம் என, பழக்கப்படாதவைகளின் பட்டியல் நீள துவங்குகின்றன.

     குழந்தையாக இருந்தபோது, இறகுகளை போல லேசாக இருந்த புத்தகங்கள், பதின்பருவத்தில் பாராங்கல்லை போல பாரமாக மாறுகிறது. காலம் காலமாக இந்த பிரச்னைகள், இளைய சமூகத்தை ஆட்டிப்படைத்தாலும், முன்பெல்லாம், தாத்தா, பாட்டிகள் அன்பாய் அணைத்து, ஆறுதலாய் பேசி, எண்ணங்களை திசை திருப்பி, ஏமாற்றங்களுக்கு பழக்கி, இளைஞர்களை வழிநடத்தினர்.

          ஆனால், இன்றைய இளைய சமூகம் பாவம்! இவர்களின் தாத்தா, பாட்டிகள் ஆசிரமத்தில். தாயும், தந்தையும் அலுவலகத்தில். நண்பர்கள் முகநுாலில். யாரிடம் பகிர்ந்து கொள்வர் தங்களின் உணர்வுகளை? பகிரப்படாத அன்பு தற்கொலையாகவும், ஏற்கப்படாத அன்பு வன்முறையாகவும் மாறுவதால், அவர்களுக்கு ஆலோசனை வழங்குவது யார்?

ஆலோசனை மையங்கள்

கடந்த ஆண்டு முதல், மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க அரசே முன்வந்தது. 10 நடமாடும் ஆலோசனை மையங்கள், பள்ளி கல்வித்துறையின் சார்பில் முளைத்தன. அதில், பலன் உண்டா? என்பதை பரிசோதிக்க, செங்குன்றம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளிக்கு சென்றோம். ஆலோசனை பெற்று வந்த, பிளஸ் 2 மாணவியரிடம் பேசினோம்.

"இந்த ஏற்பாடு வரவேற்கத்தக்கது. எங்களின் உடல், மனரீதியாக ஏற்படும் குழப்பங்கள், எங்கள் பருவத்துக்கே உரியதுதான் என்பதை தெரிந்து கொண்டோம். தினம்தோறும், ஒரு மணி நேரமாவது, பெற்றோரிடம் இயல்பாக பேச வேண்டும் என முடிவு செய்திருக்கிறோம். 
ஆண், பெண் நட்பு பற்றியும், அதன் எல்லை பற்றியும் தெரிந்து கொண்டோம். நம் உடலில், நமக்கு மட்டுமே சொந்தமான பகுதிகளை, அடுத்தவர்கள் பார்ப்பதையோ, தொடுவதையோ தைரியமாக எதிர்க்க வேண்டும் என்ற கருத்துடன் அமைந்த ஆவணப்படம், எங்களுக்கு நிறைய புரிதல்களை ஏற்படுத்தி இருக்கிறது.

பெண்களுக்கு ஆதரவான சட்டங்களை பற்றி தெரிந்து கொண்டோம். இதுபோன்ற ஆலோசனைகளை, பெற்றோர்களுக்கும் ஏற்பாடு செய்தால், எங்கள் உறவு நன்றாக இருக்கும்" என்றனர்.

மாணவியருடன் இயல்பாக பேசி, அவர்களின் எண்ணங்களை தெரிந்துகொண்டு, அதற்கான ஆலோசனைகளை வழங்கி கொண்டிருந்த, சென்னை மண்டல, நடமாடும் ஆலோசனை மையத்தின் உளவியல் ஆலோசகர் பேபி தேவ கிருபாவிடம் பேசினோம்...

"பதின்பருவத்தினருக்கு, ஏற்படும் குழப்பங்களையும், பிரச்னைகளையும் தீர்த்து, அவர்களை படிப்பில் சாதனையாளர்களாக மாற்றுவதே எங்கள் எண்ணம். குடும்பம், தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அவர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில், மென்மையாக ஆலோசனை வழங்குகிறோம். தமிழகத்தில், சென்னை, வேலுார், திருச்சி, தஞ்சாவூர், சேலம், புதுக்கோட்டை, மதுரை, கோயம்புத்துார், கடலுார், திருநெல்வேலி ஆகிய இடங்களில் நடமாடும் ஆலோசனை மையங்கள் உள்ளன.

வெற்றி தந்த ஆலோசனை

சென்னை மண்டலத்தில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவடங்கள் உள்ளன. சென்னை மண்டலத்தில், இதுவரை, 87 பள்ளிகளுக்கு சென்று, 7,791 மாணவர்களுக்கும், 13,332 மாணவியருக்கும் ஆக, 21,123 பேருக்கு ஆலோசனைகள் வழங்கி உள்ளேன்.

சென்னை மாவட்டத்தில் மட்டும், 32 பள்ளிகளில், குழு ஆலோசனை மூலம் 9,372 தனி ஆலோசனை மூலம் 163 பேர் பயனடைந்திருக்கிறார்கள். இதில், 2,813 மாணவர்களும், 6,559 மாணவியரும் அடக்கம். இதனால், 2014ம் ஆண்டு நடந்த பொது தேர்வுகளில், அரசு பள்ளி மாணவ, மாணவியரின் தேர்ச்சி 10 சதவீதம் அதிகரித்துள்ளது.

சூழும் பிரச்னைகள்

பொதுவாக, மாணவர்களிடம் உள்ள கற்றல் தொடர்பான பிரச்னைகள் என்றால், தேர்வு குறித்த பயம், பதற்றம், மறதி, கவன சிதைவு, கவன குறைவு, மீட்கொணர்வதில் சிரமம், தவறான கற்றல் முறை, ஆங்கிலத்தில் சரளமின்மை, ஆர்வமின்மை, துாக்கம், தன்னம்பிக்கையின்மை ஆகியவற்றை சொல்லாம்.

குடும்ப தொடர்பான பிரச்னைகள் என்றால், பிரிந்திருக்கும் பெற்றோரால் தவிப்பு, சந்தேகத்தால் தினமும் சண்டையிட்டுக் கொள்ளும் பெற்றோர், மது அருந்தும் பெற்றோர், ஆண், பெண் குழந்தைகளிடம் உரிமைகள், கடமைகள் சார்ந்து வேறுபாடு காட்டும் பெற்றோர் ஆகிய காரணங்களால், மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இவையின்றி, தனிப்பட்ட பிரச்னைகளாக, பகற்கனவு காணும் ஆளுமை கோளாறு, தற்கொலை எண்ணம், தாழ்வு மனப்பான்மை, எதிர்காலம் குறித்த பயம், அறிவற்ற மோகம், அதிலிருந்து விடுபடுவதில் குழப்பம், உடல் குறைபாடு, தாங்களே தண்டித்து கொள்ளுதல், வீட்டை விட்டு ஓடிப்போதல், சமூகத்தின் வக்கிர ஆதிக்கம், மன அழுத்தம், மது, புகை பழக்கம், கோபம், தன் குறைகளை மற்றவர்கள் மேல் புகுத்தி, அடுத்தவர்களையும், பொருட்களையும் சேதப்படுத்துதல் ஆகியவற்றை சொல்லலாம்.

அவற்றை கண்டுபிடித்து, ஆசிரியர், பெற்றோர் ஒருங்கிணைப்புடன், மாணவர்களை நல்வழிபடுத்தி, நல்ல சமூகத்தை உருவாக்க வேண்டும் என்கிறார், பேபி தேவகி.

மாணவியரும், ஆசிரியர்களும், "எங்களுக்கு நிறைய ஆலோசனைகள் தேவைப்படுகின்றன. ஆனால், ஆலோசனை வழங்க ஆட்கள் தான் மிக குறைவாக இருக்கின்றனர். அதற்கான ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும்" என்கின்றனர்.

செய்தி

ஒரு பணியிலிருந்து இன்னொரு பணிக்கு மாறும்போது...

         ஒருவர் ஒரு பணியிலிருந்து விலக பல்வேறு காரணங்கள் இருக்கலாம். குடும்ப காரணங்கள், உள் அலுவலக சிக்கல்கள், செய்யும் பணியில் சலிப்பு மற்றும் புதிய பணி வாய்ப்புகள் என்று பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.

          காரணம் எதுவாக இருந்தாலும், செய்யும் ஒரு பணியிலிருந்து விலகுவது என்பது ஒரு பெரிய மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த முடிவு. எனவே, அந்த முடிவை எடுப்பதற்கு முன்னர், தீர யோசிக்க வேண்யது அவசியம்.


பணியிலிருந்து விலகியே ஆக வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால், உங்களின் பணி விலகல் நடவடிக்கையை எந்த முறையில் மேற்கொள்ளலாம் என்பது குறித்த ஆலோசனைகளை இக்கட்டுரை வழங்குகிறது.

நல்ல முறையிலேயே விலகுங்கள்

உங்களுக்கு உங்களது பணியின் மீதோ அல்லது நிர்வாகத்தின் மீது வெறுப்பு இருந்து, அதன்பொருட்டு, பணியிலிருந்து விலகலாம். ஆனால், அந்த காரணத்தை அலுவலகத்தில் தேவையின்றி கசிய விடவேண்டாம். என்ன காரணத்திற்காக பணியை விட்டு செல்கிறீர்கள் என்று நிர்வாகம் கேட்டாலும்கூட, அவர்களின் மீதான அதிருப்தியை அழுத்தமாக வெளிக்காட்டாமல், நயமான காரணத்தை மட்டுமே சொல்லுங்கள்.

இனிமேல் இந்த நிறுவனத்தைப் பற்றி நமக்கு என்ன இருக்கிறது, நமக்கும், இதற்கும் என்ன சம்பந்தம் என்று நினைத்து, உங்களின் வெறுப்பை வெளிப்படையாக தெரிவித்துவிட்டு வந்துவிட வேண்டாம். ஏனெனில், பின்னாளில் நீங்கள் வேறு நிறுவனத்தில் சேரும்போது, உங்களின் பழைய பணியிடங்களில், புதிய நிறுவனத்தார், உங்களைப் பற்றி விசாரிக்க முடிவெடுத்தால், உங்களுக்கு சிக்கல் ஏற்படலாம். எனவே, நல்லமுறையிலேயே வெளியேறுங்கள்.

முன்னறிவிப்பு நோட்டீஸ்

புதிய பணியில் எப்போது சேரப் போகிறீர்கள் என்பதை உறுதி செய்தவுடன், பழைய நிறுவனத்திலிருந்து எப்போது விலக வேண்டும் என்பதை முடிவுசெய்து, அதன்பொருட்டு, முன்னறிவிப்பு நோட்டீஸ் கொடுக்க வேண்டும். இது, பல இடங்களிலும் கடைபிடிக்கப்படும் ஒரு பொதுவான நடைமுறைதான்.

Notice Period என்று அழைக்கப்படும் அந்த காத்திருப்பு காலம், நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடும். சில இடங்களில், 2 வார காலஅளவும், சில இடங்களில் 2 மாத காலமும் உண்டு. ஆனால், பெரும்பாலான இடங்களில், 1 மாத காத்திருப்பு காலம்தான் கடைபிடிக்கப்படுகிறது.

முறையாக, நோட்டீஸ் கொடுத்து வெளியேறும்போதுதான், உங்களுக்கான அனுபவ கடிதம் மற்றும் வெளியேறும் அனுமதி(Relieving order), முழு salary settlement உள்ளிட்ட பல விஷயங்கள் முறையாக கிடைப்பதுடன், புதிய நிறுவனத்திற்கும் உங்களின் மீது ஒரு மதிப்பு உண்டாகும்.

காரணம் தெரிவித்தல்

ஒரு நிறுவனத்தைவிட்டு, ஏன் விலகுகிறீர்கள் என்ற காரணம், பெரும்பாலான இடங்களில், சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம், நேரடியாக சொல்லப்படுகிறது. நிறுவனத்தையும், பதவியையும் பொறுத்து, அதிகாரி அளவிலோ அல்லது நிறுவனர் அளவிலோ காரணத்தை சொல்ல வேண்டியிருக்கும்.

காரணத்தை சொல்லும்போது, எதையும் எதிர்மறையாக அணுக வேண்டாம். சரியான நடைமுறையைக் கடைபிடித்து, உங்களின் விலகுதலை சுமுகமாகவே முடித்துக் கொள்ளவும்.

பணி விலகல் கடிதம்

பணி விலகல் கடிதத்தை எழுதும்போது மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். ஏனெனில், வேலையைத்தான் விடப்போகிறோமே, இனி இவர்களின் தேவை நமக்கெதற்கு? என்று அலட்சியம் காட்டிவிடக்கூடாது. ஏனெனில், பழைய நிறுவனத்தின் Reference எப்போது வேண்டுமானாலும் தேவைப்படலாம்.

எனவே, கடிதத்தை எழுதும்போது, உங்களுக்கான காரணங்களை நயமாக தெரிவித்து எழுத வேண்டும். உங்களின் கடிதம், நீங்கள் விலகும் நிறுவனத்தின் ஆவண பாதுகாப்பில்(Record maintenance) வைக்கப்படக்கூடிய ஒன்று என்பதையும் மறக்க வேண்டாம்.

பரிந்துரைக் கடிதம்

பெரும்பாலான நிறுவனங்களில், பரிந்துரைக் கடிதங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. எனவே, உங்களின் உறவு சிறப்பாக இருந்தால்தான், பழைய நிறுவனத்திடமிருந்து நீங்கள், உங்களுக்குத் தேவையான பரிந்துரைக் கடிதத்தை வாங்க முடியும். பரிந்துரைக் கடிதத்தைப் பெற்றிருப்பதன் மூலம், நீங்கள் பணிக்கு சேரும் நிறுவனத்தில், உங்களின் முக்கியத்துவத்தைக் கூட்டி காண்பித்து, அதன்மூலம் அதிக ஊதியம் உள்ளிட்ட நன்மைகளைப் பெற முடியும்.

நன்றி தெரிவித்தல்

உங்களுக்கு ஒரு வாய்ப்பளித்து, வளர்ச்சிக்கு உதவியமைக்காக, உங்களின் பழைய நிறுவனத்திற்கு கட்டாயம் நன்றி தெரிவிக்க வேண்டும். அதை கடிதம் மூலமாகவும் தெரிவிக்கலாம். நீங்கள் நிறைய கற்றுக்கொள்வதற்கு, அவர்கள் வாய்ப்பளித்ததாக குறிப்பிட வேண்டும்.

நீங்கள், பழைய நிறுவனத்தில் எந்த புதிய விஷயத்தைக் கற்றுக் கொண்டீர்கள் மற்றும் எந்த திறமையை மெருகேற்றிக் கொண்டீர்கள் என்பதை குறிப்பிட்டால், அவர்கள் இன்னும் மகிழ்ச்சியடைவார்கள்.

எதையும் மறக்க வேண்டாம்

நீங்கள் பணியை விட்டு விலகும்போது, உங்களுக்கு வர வேண்டிய இறுதி சம்பள செட்டில்மென்ட் மற்றும் இதர நன்மைகள் பற்றி நீங்கள் தெளிவாக அறிந்திருக்க வேண்டும். மேலும், உங்களின் PF கணக்கை அத்துடன் மூடிவிட்டு பணத்தைப் பெற்றுக்கொள்வதா? அல்லது நீங்கள் பணி மாறிச்செல்லும் நிறுவனத்தின் PF கணக்கிற்கு மாற்றிக்கொள்வதா? என்பதை முடிவுசெய்ய வேண்டும்.

நீங்கள் பழைய நிறுவனத்தில், பணியில் சேரும்போது, உங்களின் அசல் சான்றிதழ்கள் உள்ளிட்ட ஏதேனும் ஆவணங்களைக் கொடுத்திருந்தால், அதை மறக்காமல் பெற்றுக்கொள்ள வேண்டும்.

திரும்ப ஒப்படையுங்கள்

நீங்கள் பழைய நிறுவனத்தில் பணியாற்றும்போது, உங்களுக்கு பணியின் பொருட்டு, அந்த நிறுவனத்தின் சார்பில், Lap top, Data Card, Pen drive and Cell Phone உள்ளிட்ட ஏதேனும் பொருட்கள் வழங்கப்பட்டிருக்கலாம். மேலும், சில நிதி தொடர்பான கணக்கு வழக்குகளும் உங்களிடம் இருக்கலாம்.

எனவே, பணியிலிருந்து விலகும்போது, நீங்கள் பெற்ற பொருட்களை, முறையாக ஒப்படைத்து, நிதி தொடர்பான கணக்கு வழக்குகள் இருந்தால், அதையும் சரியாக செட்டில் செய்துவிட வேண்டும். அப்போதுதான் உங்களின் நம்பகத்தன்மை காப்பாற்றப்படுவதுடன், உங்களின் மதிப்பும் உயரும்.

ஒருவேளை இப்படி நடந்தால்...

நீங்கள் பணி விலகலைப் பற்றி உங்களின் பழைய நிறுவனத்தில் தெரிவிக்கும்போது, உங்களுக்கு சில எதிர்பாராத இன்ப அதிர்ச்சிகளும் காத்திருக்கலாம். நீங்கள் புதிய நிறுவனத்தில் என்ன சம்பளம் பெறப்போகிறீர்களோ, அதேயளவிற்கு அல்லது அதைவிட அதிகமாக உயர்த்தி வழங்க, பழைய நிறுவனம் முன்வரலாம்.

அத்தகைய சூழலில், நீங்கள் நன்கு யோசித்து முடிவெடுக்க வேண்டும். சற்று அவகாசம்கூட கேட்கலாம். பழைய நிறுவனத்திலேயே, புதிய சலுகையைப் பெற்றுக்கொண்டு இருந்துவிடலாமா? அல்லது புதிய நிறுவனத்தின் புதிய சூழலுக்கு செல்வதே சிறந்ததா? என்பதை நன்கு யோசித்து முடிவு செய்தல் வேண்டும்.

அவர்கள் வற்புறுத்தினால்...

சில நிறுவனங்கள், தங்களின் பணியாளர்கள், வேறு நிறுவனங்களுக்கு மாறுதலாகி செல்லும்போது, நோட்டீஸ் காலஅளவை விட, கூடுதலாக இருந்துவிட்டு, சில பணிகளை முடித்துவிட்டு செல்ல நிர்பந்திக்கும். அப்படி ஒரு சூழலில், அது நியாயமானது என்று கருதினால், நீங்கள் புதிய நிறுவனத்திடம் அனுமதி கேட்டு, அதற்கேற்ப முடிவெடுக்கலாம்.

ஒருவேளை அது சாத்தியமே இல்லை எனும் நிலை இருந்தால், அதைப்பற்றி நாசுக்காக தெரிவித்து, சுமுகமாக மறுத்துவிடுதலே சிறந்தது.

அதை செய்யவில்லை என்றால்...

ஒருவேளை, உங்களால் Notice period கொடுக்க முடியவில்லை என்றால், அதற்கு பதிலாக வேறுமாதிரியான பிரதியுபகாரத்தை செய்ய வேண்டும். உங்களுக்கு பதிலாக பணியமர்த்தப்படும் ஒருவருக்கு பயிற்சியளித்தல், வேலை நேரத்திற்கும் கூடுதலாக இருந்து பணிபுரிந்துவிட்டு செல்லுதல், வேலையை விட்டு நீங்கிய பிறகு, தேவைக்கருதி, தொலைபேசி அல்லது மின்னஞ்சல் வாயிலாக, பழைய நிறுவனத்திடம் தொடர்பில் இருந்து உதவுதல் மற்றும் சில விடுமுறை நாட்களில், பழைய நிறுவனத்திற்கு வந்து, புதிதாக பணியமர்த்தப்பட்ட நபருக்கு பயிற்சியளித்துவிட்டு செல்லுதல் போன்ற மாற்று செயல்களை மேற்கொள்ளலாம்.

எதிர்மறை பேச்சு வேண்டாம்

நாம் பணியை விட்டு செல்லப்போகிறோம் என்று சொல்லும்போது, சில நண்பர்கள், பழைய நிறுவனம் பற்றிய எதிர்மறை கருத்துக்களை தெரிவிப்பார்கள். அந்த சமயத்தில், நீங்கள் அதை நாசுக்காக தவிர்த்து விடுவதே நல்லது.

பொதுவாக, ஒரு பணியிலிருந்து செல்லும்போது, அய்யோ, அவன் சென்றுவிட்டானே! என்று பிறர் வருந்தும் நிலையை நாம் உருவாக்குவதுதான் நமது வெற்றி. எனவே, நிர்வாகம் பற்றியோ அல்லது சக பணியாளர் பற்றியோ, எதிர்மறை கருத்துக்களை எக்காரணம் கொண்டும் உதிர்க்க வேண்டாம். ஏனெனில், நாம் அறியாத வண்ணம், சில எதிர்மறை விளைவுகளை நாம் அதன்மூலம் எதிர்கொள்ள நேரலாம்

Sunday, August 17, 2014

NEWS


TET TOP

TOP MARKS IN TAMIL-CASTE WISE
OCSUNDAR73.27
BCMOHANASUNDARAM78.03
BCMRUSSIA BHANU70.61
MBCSANGEETHA76.08
SCAMIRTHAVALLI74.84
SCASHENBAGAVALLI75.28
STSARAVANAMURUGAN70.83
STATE FIRST - MOHANASUNDARAM BC 78.03

TOP MARKS IN ENGLISH-CASTE WISE
OC
SRI PRIYA 
74.71
BC
VINUSHA 
80.38
BCM
SHANNUBEGAM 
76.11
MBC
YOGESWARAN
73.85
SC
NAVEENA
75.79
SCA
GIRISH
73.49
ST
SELVAKUMAR
69.17
STATE FIRST - VINUSHA BC 80.38
 
TOP MARKS IN MATHS-CASTE WISE
OC
KAMALA
75.78
BC
KARTHIGADEVI
80.17
BCM
FOIRAZ BANA
75.32
MBC
ATHILAKSHMI
77.5
SC
PRIYANGA
76.25
SCA
BHUVANESHWARI
71.44
ST
MANJULA
68.14
STATE FIRST - KARTHIGADEVI BC 80.38
 
TOP MARKS IN HISTORY-CASTE WISE
OCUSHA RANI72.25
BCLOGESWARI74.13
BCMAJEETHA70.81
MBCSIVAGAMI73.34
SCSHANTHAKUMARI71.4
SCASHANTHAMANI67.84
STRAJA63.67
STATE FIRST - LOGESWARI BC 74.13

news

ICT TRAINING - பயிற்சி பணிமனை

         மா.க.ஆ.ப.நி - கல்விசார் கணினி வளங்கள் தயாரித்தல் சார்பான பயிற்சி பணிமனை 21.08.2014 முதல் 23.08.2014 வரை சென்னையில் நடைபெறவுள்ளது

SCERT - ICT TRAINING FOR TEACHERS FROM 21.08.2014 TO 23.08.2014 @ SIEMAT HALL, CHENNAI REG PROC CLICK HERE...

SCERT - ICT TRAINING PARTICIPANTS LIST CLICK HERE...

Wednesday, August 13, 2014

Teacher

ஆசிரியர்கள் எவ்வாறு இருக்க வேண்டும்?
     ஆசிரியர்கள் என்பவர்கள் எவ்வாறு இருக்க வேண்டும்?.?.?.?. ஆசிரியர் என்பவர் வேராக இருந்து, மாணவர்கள் மலராய் மலர உறுதுணையாய் இருக்க வேண்டும்.  அறிவை உருவாக்குதல், ஊட்டுதல், அன்பை விதைத்தல், புதுப்பிப்பவர்களாக இருக்க வேண்டும்

         பாதை போட்டுக் கொண்டே பயணம் செய்ய வேண்டும், பயணம் செய்து கொண்டே பாதை போட வேண்டும். 'வெற்றி என்பது பெற்றுக் கொள்ள, தோல்வி என்பது கற்றுக் கொள்ள' என்ற நம்பிக்கையை ஊட்ட வேண்டும்.ஆசிரியர்களுக்கு நம்பிக்கை என்பது தேவை. நமக்கு மீறிய சக்திதான் நம் அறிவை தீர்மானிக்கும். தீர்மானிக்கும் இடத்தில் தான் நாம் உதவி செய்ய முயல வேண்டும்.

      மாணவர்களின் படைக்கும் திறன் சிந்திக்கும் ஆற்றலை முதல் வேலையாக எடுத்து செயல்பட வேண்டும்.மாணவர்களின் புத்தாக்கச் சிந்தனையை வெளிப்படுத்த வேண்டும்.ஆசிரியன் என்பவன், 'வாழ்ந்தால் வானத்தின் எல்லை, வீழ்ந்தால் மரணத்தின் படி' என்பது போல் இருக்க வேண்டும். ஆசீர்வதிக்கப்பட்டவன் மட்டுமே ஆசிரியர். ஆசிரியர்தான் உலகிற்கு சொந்தமானவன்.மாணவர்களிடம் கேள்வி கேட்கும் திறனை ஊக்குவிக்க வேண்டும்.ஏன்? எதற்கு? என்ற கேள்வி கேட்க ஒரு சூழலை உருவாக்க வேண்டும்.

        எல்லா இடத்திலும் கேள்வி கேட்பவன் புத்திசாலி அல்ல என்றும், காலம் நேரம் பார்த்து கேட்பவனே அறிவாளி என்றும், கேட்கப்படாத கேள்விகளில் வாழ்க்கையின் மதிப்பு உள்ளது என்பதனையும் உணர்த்த வேண்டும்.

     மாணவர்களை கை கட்டி, வாய் மேல் விரல் வைக்கும் பழக்கத்தை ஆசிரியர்கள் கைவிட வேண்டும். இவ்வாறு செய்வதால் அவனின் கேள்வி கேட்கும் திறன், துணிவு குறையும்
.
வகுப்பில் பாடம் எடுப்பது எப்படி???
வகுப்பில் பாடம் எடுப்பது என்பது cinema,
வகுப்பில் பாடம் எடுப்பது என்பது drama,
வகுப்பில் பாடம் எடுப்பது என்பது entertainment-ஆக இருக்க வேண்டும்.
எந்தப் பாடதையும் கஷ்டமானது, நானே கஷ்டப்பட்டு படித்து வந்தேன் என மாணவர்கள் முன் கூறக் கூடாது.
      நாம் பெற்ற கல்வியில் நம்பிக்கை, ஆதிக்கம் வர வேண்டும். ஆசிரியன் என்பவன் நிரந்தரமானவன், அவரின் உண்மை நிலையை விட்டுக் கொடுக்கக் கூடாது.
      ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கொடுக்கும் தன்னம்பிக்கை மூலமே நாளைய உலகின் அதிசய மனிதர்கள் உருவாகுவார்கள் என்பதனை உணர வேண்டும். ஆசிரியர்கள் கண்ணாடியில் பட்ட பிம்பம் போல் மாணவர்கள் மேல் விழ வேண்டும். வரம்புக் கெடாமல் இருக்க பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.
      மாணவர்கள் பார்வையில் ஆசிரியர்கள்:  ஆசிரியரானவர், நடந்தால் ஒவ்வொன்றிற்கும் இலக்கணமாய் -----→ இருக்க வேண்டும்.
பார்த்தால்
ஆசிரியர் அறிவின் அடையாளம்
ஆசிரியர் அறிவின் பிரதிபலிப்பு
ஆசிரியர் அறிவின் பிரமாண்டமாய்த் தெரிய வேண்டும்.
ஆசிரியரின் கடமை:
அறிவை உருவாக்குவது,
அறிவை ஊட்டுவது,
அறிவை விதைப்பது,
அறிவை புதுப்பிப்பது,
மாணவர்களை மதிப்பது,
மாணவர்களுக்கு மரியாதை செலுத்துவது.
தர்மத்தின் கருத்து:
சுண்ணக்கட்டி (Chalk piece) தான் தர்மத்தின் கருத்து.
ஆசிரியன் நிரந்தரமானவன்; அவனுக்கு என்றும் அழிவே இல்லை.
ஆசிரியரின் சிந்தனை செயல் ஒன்றாக இருக்குமாறு நடந்து கொள்ள வேண்டும்.
Chalk piece எடுத்து பாடம் நடத்துபவர் ஆசிரியராக மட்டும் அல்லாமல், மாணவர்களின் கண்ணாகவும், காதாகவும் இருக்க வேண்டும்.
ஆயிரம் மாணவர்கள் இருந்தாலும் ஒவ்வொருவரின் தன்மைக்கேற்றவாறு மாறி செயல்பட வேண்டும்.
ஆசிரியர்களின் 6 தகுதிகள்(6 Qualifications of a Teacher)
உடல் நலம் நன்றாக இருக்க வேண்டும் (sick teacher=sick class).
கற்பிக்கும் பாடத்தில் ஆழமான அறிவு (intellectual equipment).
ஒழுக்க சீலர்கள் (moral equipment).
உணர்வுகளைக் கட்டுப்படுத்துபவர்கள் (emotional equipment) எ.கா., கோபப்படுவது, திட்டுவது, அடிப்பது, மனம் புண்படும்படி பேசுவது இருக்கக்கூடாது.
கதா நாயகர்களாக (Spiritual equipment, role model).
தன்னலமின்மை (social equipment).
இந்த 6 பண்புகள் இருந்தால்தான் கனவு ஆசிரியர்கள்.
IDEAL Teacher:
I - Initiative
D - Dependable
E - Emotional Intelligent
A - Adoptable
L - Learning

Saturday, August 9, 2014

NEWS

உரிய முன் அனுமதி பெறாமல் படித்த உயர் கல்விக்கு ஊக்க ஊதியம் இல்லை.

       தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும்ஆசிரியர்கள் முன் அனுமதி பெறாமல் படித்த உயர் கல்வித் தகுதிக்கு ஊக்க ஊதியம் வழங்க தொடக்க கல்வி இயக்குநர் தடை விதித்துள்ளார்.
 
              அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்கள் பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதியைக் காட்டிலும் கூடுதல் கல்வித் தகுதி பெற்றிருந் தால் அவர்களுக்கு ஊக்க ஊதியம் (இன்சென்டிவ்) வழங்கப்படுகிறது. ஓர் ஆசிரியர் தனது பணிக்காலத் தில் 2 ஊக்க ஊதியங்கள் பெற தகுதியுடைவர் ஆவார். ஓர் ஊக்க ஊதியம் என்பது இரண்டு வருடாந்திர ஊதிய உயர்வை (இன்கிரிமென்ட்) குறிக்கும்.

                      அடிப்படைச் சம்பளம் மற்றும் தர ஊதியத்தில் 3 சதவீதமும், அதற்குரிய அகவிலைப்படியையும் உள்ளடக்கியது ஓர் இன்கிரிமென்ட். உதாரணத்துக்கு, பட்டதாரி ஆசிரியர் ஒருவர், தனது பதவிக்கான கல்வித் தகுதியான இளங்கலை பட்டம் மற்றும் பி.எட் படிப்புடன் கூடுதலாக முதுகலைப் பட்டம் பெற்றிருந்தால் ஓர் ஊக்க ஊதியமும், எம்.எட். முடித்திருந்தால் இன்னொரு ஊக்க ஊதியமும் ஆக 2 ஊக்க ஊதியங்கள் பெறுவார். இன்றைய நிலவரப்படி, அரசு பணியில் சேரும் ஒருபட்டதாரி ஆசிரியர் 2 ஊக்க ஊதியங்கள் பெற தகுதியாக இருந்தால் அவருக்கு கூடுதல் சம்பளமாக ரூ.1,668 கிடைக்கும். பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் மேற்படிப்பு படிக்க வேண்டுமானால் தங்கள் மேல் அதிகாரியின் முன் அனுமதி பெற வேண்டும். தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் உதவி தொடக்கக் கல்வி அதிகாரியிடமும், பள்ளிக் கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரி யர்கள் தலைமை ஆசிரியர்களிடமும் முன்அனுமதி வாங்க வேண்டும்.

முன் அனுமதி பெறாமல் உயர் கல்வி பெற்றுவந்த ஆசிரியர்களுக் கும் உரிய விளக்கம் பெற்று அவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங் கப்பட்டு வந்தது. தற்போது அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆரம்பப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடை நிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் முன்அனுமதியின்றி படித்த உயர்கல்வித் தகுதிக்கு ஊக்க ஊதியம் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்அனுமதி இல்லாமல் படித்த படிப்புக்கு ஊக்க ஊதியம் வழங்கக்கூடாது என்று மாநில தொடக்கக்கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன், அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி களுக்கும், உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

விதிகளை மீறி ஊக்க ஊதியம் வழங்கினால் சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதிரடி உத்தரவினால், ஆரம்பப் பள்ளி, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள்அதிர்ச்சி அடைந் துள்ளனர். அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், “முன்அனுமதி பெறாமல் ஏற்கெனவே படிப்பில் சேர்ந்துவிட்ட ஆசிரியர்களுக்கு இந்த உத்தரவில் இருந்து விதி விலக்கு அளிக்க வேண்டும். புதிய உத்தரவை இனிவரும் நாட்களில் நடைமுறைப்படுத்த வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தனர்.

Thursday, August 7, 2014

மா நில அரசு ஊழியர்களுக்கு வாகன மற்றும் கணினி முன்பணம் வழங்குதல் சார்ந்த அறிவுரை
       தொடக்கக் கல்வி - கடனும் - முன்பணமும் - மா நில அரசு ஊழியர்களுக்கு வாகன மற்றும் கணினி முன்பணம் வழங்குதல் சார்ந்த இயக்குனரின் அறிவுரைகள்
      தொடக்கக் கல்வி - கடனும் - முன்பணமும் - மா நில அரசு ஊழியர்களுக்கு வாகன மற்றும் கணினி முன்பணம் வழங்குதல் சார்ந்த இயக்குனரின் அறிவுரைகள்

Tuesday, August 5, 2014

news

பள்ளி அளவிலான போட்டிகள் நடத்த இயக்குநர் உத்தரவு

தொடக்கக் கல்வி - திட மற்றும் திரவ கழிவு பொருட்களின் மேலாண்மை சார்பாக பள்ளி அளவிலான போட்டிகள் நடத்த இயக்குநர் உத்தரவு