Monday, July 21, 2014

News

பள்ளிக்கல்வித்துறை :இளநிலை உதவியாளர் கலந்தாய்வு அறிவிப்பு
          பள்ளிக்கல்வித்துறையின் கீழ் குரூப்IV மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 1397 இளநிலை உதவியாளர் கலந்தாய்வு அறிவிப்பு.

            இவர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மாவட்டத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்தில் வரும் 25 தேதி கலந்து கொள்ளலாம்.வேறு மாவட்டம் விரும்புவோர் மறுநாள் 26ம் தேதி கலந்து கொள்ளலாம்.

News

தமிழக பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர் த.சபீதா உத்தரவு
தமிழக பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர் த.சபீதா உத்தரவுபடி பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
* மழைக்காலங்களில் இடி, மின்னல் ஆகியவற்றின் போது மாணவர்களோ அல்லது ஆசிரியர்களோ மரத்தின் அடியில் நிற்கக்கூடாது என்று அறிவுரை வழங்க வேண்டும்.
* பள்ளி வளாகத்தில் உள்ள மதில் சுவர்கள் போதிய அளவுக்கு உயரமாக உள்ளதா என்பதை பார்த்து உயரம் இல்லாவிட்டால் உயரமான அளவுக்கு கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* பள்ளிகளில் கட்டிடங்கள் பாதுகாப்பற்ற நிலையில் இடிந்து விழும் நிலையில் இருந்தால் தகவல் தெரிவித்துவிட்டு அதை பாதுகாப்பாக அகற்ற வேண்டும்.
முதலுதவி பெட்டி
* பள்ளிகளில் மாணவர்கள் அல்லது ஆசிரியர்கள் ஏதாவது கீழே விழுந்தாலோ அல்லது ஏதாவது காயம் ஏற்பட்டாலோ அவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்க வேண்டும். எனவே அனைத்து பள்ளிகளிலும் முதலுதவி செய்யும் வகையில் மருத்துவ பொருட்கள் அடங்கிய முதலுதவி பெட்டி இருக்க வேண்டும்.
* அதுபோல ஏதாவது தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்பு படையினர் வருமுன்னதாக உடனடியாக தீயை அணைக்க தீயணைப்பு சாதனங்கள் எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்கவேண்டும்.
* விளையாட்டு நேரத்தின்போது ஈட்டி எறிதல், குண்டு எறிதல் உள்ளிட்ட பொருட்களை கவனமாக பாதுகாப்பாக கையாள வேண்டும்.
* பள்ளிககளின் அருகில் வேகத்தடை இருக்க வேண்டும். இல்லாவிட்டால் வேகத்தடை அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.புதர்களை அகற்ற வேண்டும்
* பள்ளிகள் அல்லது பள்ளிக்கூடங்களின் அருகில் புதர்கள் ஏதாவது இருந்தால் அவற்றை அகற்ற ஏற்பாடு செய்ய வேண்டும்.
* பள்ளி வளாகத்தை சுத்தமாகவும். பாதுகாப்பாகவும் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

INSPIRE

INSPIRE AWARD REGISTRATION

                                     CLICK HERE

Thursday, July 17, 2014

SSLC


TEACHERS-DHILIP 
SSLC MEMORY POEMS ENGLISH DOWNLOAD MP3

1.MANLINESS                                   DOWNLOAD CLICK    
2.GOING FOR WATER                                  DOWNLOAD CLICK 
3.THE CRY OF THE CHILDREN                 DOWNLOAD CLICK
4.MIGRANT BIRD                                          DOWNLOAD CLICK 

B.Ed news

பி.எட்., எம்.எட். படிப்புக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க புதிய வசதி.
          பி.எட். மற்றும் எம்.எட். படிப்புகளுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க 29ஒருங்கிணைப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு மற்றும்அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் அரசு இட ஒதுக்கீடு இடங்களுக்கு ஒற்றைச் சாளர முறை கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.

           தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் நடத்தும் இந்த கலந்தாய்வுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் முறை முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து சென்னையில், பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜி. விஸ்வநாதன் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது: அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கை ஒற்றைச் சாளர முறையில் நடைபெறவுள்ளது. கலந்தாய்வில் கலந்து கொள்ள இந்தாண்டு முதல் இணையதளம் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க 29 இடங்களில் ஒருங்கிணைப்பு மையங்கள் அமைக்கப்படும். இதில் பல்கலைக்கழக பேராசிரியர்கள் இருப்பார்கள். அவர்களிடம் தகுந்த ஆவணங்களைக் கொடுத்து கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம். ஜூலை 19-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஞாயிற்றுக்கிழமை தவிர பிற நாள்களில் காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை ஒருங்கிணைப்பு மையங்களிலும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தவுடன், மாணவர்களுக்கு ஒரு நகல் தரப்படும். இதனை மாணவர்கள் வைத்துக் கொள்ளவேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ. 300 வசூலிக்கப்படும்.

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களிடம் ரூ. 175 கட்டணம் வசூலிக்கப்படும். மேலும் ஒருங்கிணைப்பு மையத்தின் சேவை கட்டணமாக ரூ. 50 செலுத்தவேண்டும் என்றார் துணை வேந்தர்.ஒருங்கிணைப்பு மையங்கள் எவை? சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள்:தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகம், சென்னை., ஐ.ஏ.எஸ்.இ., சைதாப்பேட்டை, ஸ்டெல்லா மடிடூனா கல்வியியல் கல்லூரி காஞ்சிபுரம்.

News

பி.எட். படிப்பில் சேர 19–ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
         பி.எட். படிப்பில் சேர 19–ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றுதமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி.விஸ்வநாதன் தெரிவித்தார்.

           தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி.விஸ்வநாதன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–

               பி.எட். படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பி.எட். கல்லூரிகள் 21 உள்ளன. 649 சுயநிதி பி.எட். கல்லூரிகள் இருக்கின்றன. இவற்றில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 21 கல்லூரிகளில் 2 ஆயிரத்து400 பி.எட். இடங்கள் உள்ளன. அந்த இடங்களுக்கு மட்டும் ஒற்றைச் சாளற முறையில் கலந்தாய்வு நடத்தி மாணவ–மாணவிகளை சேர்க்க உள்ளோம். இந்த கலந்தாய்வு முதல் முதலாக பல்கலைக்கழகம் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.பி.எட். படிக்க விரும்பும் மாணவ–மாணவிகள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 19–ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

இதற்காக தமிழ்நாடு முழுவதும் 29 மையங்கள்ஏற்படுத்தப்பட்டுள்ளன.சென்னையில் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் 3 மையங்கள் ஏற்படுத்தி அவற்றில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம்ஆகிய மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அதுபோல தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தர்மபுரியில் உள்ள மையத்தில் விண்ணப்பிக்கலாம். மற்ற மாவட்டங்களில் உள்ளவர்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மையத்தை நாடலாம்.இது பற்றிய முழுவிவரமும் இணையதளத்தில் (www.onlinetn.com) தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளம் 19–ந்தேதி தான் செயல்படத் தொடங்கும். அன்று விவரங்களை அறிந்து கொள்ளலாம். 28–ந்தேதி கடைசி நாள் விண்ணப்பிக்க மாணவ–மாணவிகள் அந்த மையங்களுக்கு செல்லும்போது, புகைப்படம் வைத்திருந்தால் கொண்டு செல்லுங்கள். இல்லையென்றால் உங்களை அதிகாரிகளே புகைப்படம் எடுப்பார்கள்.விண்ணப்பிக்க அத்தனை உதவிகளையும் செய்வார்கள். தப்பாக விண்ணப்பிக்க முடியாத அளவுக்கு விண்ணப்பிக்க ஏற்பாடு செய்துள்ளோம். எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து பல்கலைக்கழகத்தை சேர்ந்த 29 பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர்களுக்கு முறையாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்தவர்களுக்கு ரசீது கொடுக்கப்படும்.

விண்ணப்பிக்க 28–ந்தேதி கடைசி நாள்.பல்கலைக்கழக இணைய தள முகவரி www.tntue.in கலந்தாய்வு 28–ந்தேதிக்கு பிறகு 3 அல்லது 4 நாட்கள் கழித்து ரேங்க் பட்டியல் வெளியிடப்படும். பாடம் வாரியாக வெளியிடப்பட உள்ளது. பின்னர் ரேங்க் மற்றும் கலந்தாய்வு தேதி அனைத்து மாணவ–மாணவிகளுக்கும் எஸ்.எம்.எஸ்.மூலம் அனுப்பப்படும். செல்போன் மற்றும் பி.எஸ்.என்.எல். தரைவழி (லேண்ட் லைன்) தொலைபேசி மூலமும் பேசி தெரிவிக்கப்படும். எம்.எட். படிப்பில் சேர விண்ணப்பிப்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு துணைவேந்தர் பேராசிரியர் ஜி.விஸ்வநாதன் தெரிவித்தார். பேட்டியின் போது பல்கலைக்கழக பதிவாளர் கலைச்செல்வன் உடன் இருந்தார்.

Wednesday, July 16, 2014

News

11 ஆயிரம் புதிய ஆசிரியர்கள்ஆகஸ்ட்டில் பணி நியமனம்!!!
சென்னை:

             புதிதாக தேர்வு செய்யப்பட உள்ள, 11 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள், ஆகஸ்ட் மாதத்தில், பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.இதுவரை நடந்த டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வுகள் மூலம், மதிப்பெண் அடிப்படையில், 10,700 பட்டதாரி ஆசிரியர்களை, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்), தேர்வு செய்ய உள்ளது.
இந்த தேர்வு பட்டியல், வரும், 30ம் தேதி வெளியாகிறது.

     பட்டியல் வெளியான, அடுத்த ஓரிரு நாட்களுக்குள், அதன் முழு விவரத்தையும், பள்ளிக்கல்வித் துறைக்கு, டி.ஆர்.பி., அனுப்பும். அதன்பின், 'ஆன் - லைன்' கலந்தாய்வு மூலம், ஆகஸ்ட் இறுதிக்குள், புதிய ஆசிரியர்கள் அனைவரும் பணி நியமனம் செய்யப்படுவர்.

அடுத்த நியமனம்:

          நியமிக்கப்பட உள்ள ஆசிரியர் பணியிடம், 2012ல் ஏற்பட்ட காலி பணியிடங்களுக்கானது. எனவே, 2013ல் ஏற்பட்ட காலி பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பை, சட்டசபையில், இன்று, பள்ளிக்கல்வி துறை அமைச்சர், வீரமணி வெளியிடுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.

செய்தி

நாளை சட்டசபையில் கல்வி மானிய கோரிக்கை. புதிய அறிவிப்புகள் வெளியாகவுள்ளன.
       நாளை சட்டசபையில் கல்வி மானிய கோரிக்கை. புதிய அறிவிப்புகள் வெளியாகவுள்ளன.அதில் பள்ளிகள் தரம் உயர்வு ,ஆசிரியர்களுக்கு லேப்டப்,புதிய ஆசிரியர் நியமனம் தொடர்பான அறிவிப்புகள் வரும் என்று எதிர்பார்க்கபடுகிறது .

News

▼எம்.பி.பி.எஸ்., இடத்திற்கான அனுமதி தாமதம்: 2 கட்ட கலந்தாய்வில் சிக்கல்
           காலக்கெடு நேற்றுடன் முடிந்தும், மூன்று மருத்துவ கல்லூரி இடங்களுக்கு முறையான அனுமதி இன்னும் கிடைக்காததால், எம்.பி.பி.எஸ்., இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

           தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு, கடந்த மாதம் நடந்தது. இதில், சுய நிதி கல்லூரிகளில், 498 இடங்கள் உட்பட, 2,521 இடங்களுக்கு, மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். 'இரண்டாம் கட்ட கலந்தாய்வு, ஜூலை, இரண்டாம் வாரத்தில் நடக்கும்' என, மருத்துவக்கல்வி இயக்ககம் அறிவித்திருந்தது.

240 இடங்கள்:

           திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரியில், 100 இடங்கள் மற்றும் திருச்சி -50, சேலம் - 25 என, மூன்று கல்லூரிகளிலும், 175 இடங்களுக்கு, இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்.சி.ஐ.,) அனுமதி தர வேண்டும். இதுதவிர, கே.கே.நகர் இ.எஸ்.ஐ., மருத்துவக்கல்லூரியில், 65 இடங்கள் மாநிலத்திற்கு கிடைக்கும். ஆனால், அனுமதிக்கான கால அவகாசம் நேற்றுடன் முடிந்தது. நேற்று மாலை வரை, எம்.சி.ஐ., அனுமதி கிடைக்கவில்லை. கோர்ட் விதிமுறைப்படி, இரண்டாம் கட்ட கலந்தாய்வை, இம்மாதம், 27ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். உரிய அனுமதி கிடைக்காததால், இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது.

            மருத்துவ கல்வி இயக்க அதிகாரி ஒருவர் கூறியதாவது: எம்.சி.ஐ., அனுமதிக்கான அவகாசம் நேற்று முடிந்தாலும், முறையான அனுமதி வரவில்லை. அனுமதி வரும் என்ற, வாய்மொழி தகவல்கள் உள்ளன. ஒரு நாள் தாமதம் ஆனாலும், அனுமதி இன்று கிடைத்து விடும் என, நம்புகிறோம். சுய நிதி கல்லூரிக்கான அனுமதிக் கடிதமும் கிடைக்கவில்லை. முறையான அனுமதி வராவிட்டால், அரசுடன் ஆலோசித்து, அடுத்த கட்ட முயற்சிகள் மேற்கொள்வோம். இவ்வாறு, அவர் கூறினார்.

Friday, July 11, 2014

NEws

 ▼அட்டஸ்டேஷன்' தேவையில்லை: மத்திய அரசு அதிரடி
           அரசு தொடர்பான அடிப்படை தேவைகளுக்கான விண்ணப்பங்களுடன், சான்றிதழ் நகல்களை சமர்ப்பிக்கும்போது, அதிகாரிகளின், 'அட்டஸ்டேஷன்' தேவையில்லை; சுய ஒப்புகை மட்டுமே போதுமானது' என,மத்திய அரசு தெரிவித்துள்ளது.

          மத்திய, மாநில அரசுத் துறை சார்ந்த பணிகள், வேலைவாய்ப்பு, கல்வி, உள்ளிட்ட முக்கிய விண்ணப்பங்களுடன், நகல் சான்றிதழ்களை அனுப்பும் போது, அதில், 'நோட்டரி பப்ளிக்' அல்லது பச்சை மை உபயோகப்படுத்தும், தகுதியுள்ள அதிகாரிகளிடம், 'அட்டஸ்டேஷன்' கையெழுத்து பெற்று அனுப்ப வேண்டிய நிலை உள்ளது. இதற்கு, பண விரயம் மட்டுமின்றி, நேர விரயமும் ஆவதால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். 'விண்ணப்பங்களுடன் பொதுமக்கள் அனுப்பும் நகல்களில், தாங்களே கையொப்பம் இட்டு அனுப்பினால் போதுமானது. சான்றிதழ் சரிபார்ப்பின் போது, அசல் சான்றிதழ் காண்பிக்க வேண்டும்' என, அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Thursday, July 10, 2014

IT

▼வரி செலுத்துனர் ஆவலுடன் எதிர்பார்த்த சலுகை: வருமான வரி வரம்பு ரூ.2.5 லட்சமாக உயர்வு
         நடப்பு ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையினை தாக்கல் செய்து பேசிவரும் அருண் ஜேட்லி, வருமான வரி செலுத்தும் சிறிய, நடுத்தர, மூத்த குடிமக்களுக்கான வருமான வரி வரம்பில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது என்பதைத் தெரிவித்தார்.
          வருமான வரி வரம்பு ரூ.2 லட்சம் என்பதில் இருந்து, ரூ.2.5 லட்சமாக உயர்த்தப் படுவதாகக்கூறினார் அருண் ஜேட்லி.

ஆசிரியர்களுக்கு

▼வரும் நிதியாண்டில் அனைத்து ஆசிரியர்களுக்கும் லேப் டாப்: எம்எல்ஏ தகவல்
       ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பசுவந்தனை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ–மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் காமாட்சி என்ற காந்தி தலைமை தாங்கினார். நாகம்பட்டி பஞ்சாயத்து தலைவர் மாரியப்பன் முன்னிலை வகித்தார். பசுவந்தனை பள்ளி தலைமை ஆசிரியர் சூலியனடெய்சிமேரி வரவேற்று பேசினார்.

        சிறப்பு அழைப்பாளராக மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 76 மாணவ–மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:–

         பள்ளி மாணவ மாணவிகளுக்கு லேப்டாப், சைக்கிள், சீருடை உட்பட பள்ளிகளுக்கு தேவையான அனைத்து பொருட்களும் இலவசமாக வழங்கப்படுவது உலகத்திலேயே எந்த நாட்டிலும் கிடையாது. தமிழக முதல்வர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச லேப் டாப் வழங்குவதற்காக ரூ.1850 கோடியை ஆண்டு தோறும் வழங்கி வருகிறார். இந்த லேப் டாப்பை மேல் கல்வி படிப்பிற்கு பயன்படுத்தி கொள்ளவேண்டும். வரும் நிதியாண்டில் அனைத்து ஆசிரியர்களுக்கும் லேப் டாப் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

பட்ஜெட்டு

▼10/07/2014 பட்ஜெட் முக்கிய அம்சங்கள்:
.2014-15 ம் ஆண்டுக்கான பட்ஜெட். அதன் முக்கிய அம்சங்கள்:
11.56 AM: விவசாயத்தில் புதிய யுக்திகளை அறிமுகப்படுத்த அசாம், ஜார்கண்ட் மாநிலங்களில் சிறப்பு மையம் அமைக்கப்படும்.
11.55 AM: நிலமில்லாத விவசாயிகளுக்கு 'நபார்ட்' வங்கி மூலம் ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்க பரிந்துரை.
11.54 AM: காக்கிநாடா துறைமுகத்தில், வன்பொருள் ஏற்றுமதிகளை கையாளும் மையம் உருவாக்கப்படும்.
11.54 AM: ரூ.100 கோடி செலவில் மதரஸாக்கள் நவீனப்படுத்தப்படும்.
11.54 AM: கிராமப்புறங்களில் சுகாதார சேவையை மேம்படுத்த, நவீனமயமாக்கப்பட்ட 15 மாதிரி கிராம சுகாதார மையங்கள் நிறுவப்படும்.
11.52 AM: விவசாய சேமிப்பு கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ. 5000 கோடி ஒதுக்கீடு.
11.50 AM: தெலுங்கானாவில் தோட்டக்கலை பல்கலைக்கழகம் அமைக்கப்படும். ஆந்திரம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் வேளாண் பல்கலைக்கழகங்கள் நிறுவப்படும்.
11.47 AM: ரூ.500 கோடி செலவில் மேலும் 5 ஐ.ஐ.டி.க்களும், 5 ஐ.ஐ.எம்.களும் நிறுவப்படும்.
11.45 AM: பெண்கள் தங்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளுக்கு தீர்வு காண டெல்லியில் சிறப்பு உதவி மையம் அமைக்கப்படும்.
11.41 AM: ஆண் - பெண் பாலின பாகுபாடை தவிர்க்க பள்ளிகளில் இது தொடர்பான விழிப்புணர்வு கல்வி பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும்.
11.40 AM: பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ திட்டம் (Beti Bachao, Beti Padhao yojana) ரூ.100 கோடி செலவில் அமலுக்கு வருகிறது.
11.39 AM: பிரெயில் எழுத்துக்களுடன் கூடிய ரூபாய் நோட்டுகள் அமலுக்கு வரும், இதற்காக 15 பிரெயில் அச்சகங்கள் அமைக்கப்படும்.
11.38 AM: வரிச் சட்டங்களில் தேவையான மாற்றங்களை மேற்கொள்ள தொழில்துறையுடன் ஆலோசிக்க சிறப்பு குழு அமைக்கப்படும்.
11.37 AM: பாதுகாப்புத்துறை, காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீடு 49 சதவிகிதமாக அதிகரிக்கப்படும்.
11.35 AM: அந்நிய நேரடி முதலீடு மூலம் கூடுதல் நிதி ஆதாரம் திரட்ட குறிப்பிட்ட சில துறைகளில் அந்நிய நேரடி முதலீடு ஊக்குவிக்கப்படும்.
11.33 AM: அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியாவின் வளர்ச்சியில் நம்பிக்கை கொள்ள வேண்டும். முதலீட்டாளர்களுக்கு ஏற்றவாறு நிலையான வரி விதிப்பு முறையை கொண்டு வரப்படும்.
11.30 AM: தாழ்த்தப்பட்ட மக்கள் வளர்ச்சிக்காக ரூ.50,548 கோடி ஒதுக்கப்படுகிறது.
11.29 AM: ரூ.200 கோடி செலவில் குஜராத் மாநிலத்தில் சர்தார் வல்லபாய் படேல் சிலை நிறுவப்படும்.
11.27 AM: சுகாதார மேம்பாட்டிற்கு 'பாரத் ஸ்வச் யோஜனா' செயல்படுத்தப்படும்.
11.25 AM: நீர்பாசனத்தை மேம்படுத்த ரூ.1000 கோடி ஒதுக்கப்படும். இதற்காக 'பிரதான் மந்திரி கிருஷி சிச்சாயின் யோஜனா' செயல்படுத்தப்படும்.
11.22 AM: 9 நகரங்களில் இ- விசா திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
11.20 AM: கிசான் விகாஸ் பத்திர திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.
11.19 AM: வீடுகளுக்கு 24 மணி நேரம் மின்சார வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
11.18 AM: 100 நவீன நகரங்களை உருவாக்க ரூ.7060 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
11.17 AM: வங்கிகளுக்கு கூடுதல் சுயாட்சி அதிகாரம் அளிக்க வழிவகை செய்யப்படும்.
11.15 AM: உற்பத்தித் துறையிலும், கட்டுமானத் துறையிலும் வளர்ச்சியை துரிதப்படுத்துவது அவசியம்.
11.13 AM: வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
11.12 AM: அடுத்த 2 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 7% முதல் 8% வரை அதிகரிப்பதே இலக்கு.
11.11 AM: வரி விவகாரங்களை கையாள உயர்நிலைக் குழு அமைக்கப்படும்.
11.11 AM: மானியங்கள், எரிபொருள் பொருளாதார கொள்கைகள், உரங்களுக்கான மானியம் மறு சீரமைக்கப்படும்.

வீட்டு கடன் வட்டி

▼வீட்டுக்கடன் பெறுபவர்கள் வரி விலக்கு சலுகை ரூ.2 லட்சமாக உயர்த்தப்படுவதாக அருண் ஜேட்லி அறிவித்தார்
         நடப்பு ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையினை தாக்கல் செய்து பேசிவரும்அருண் ஜேட்லி, வீட்டுக்கடன் பெறுபவர்கள் தங்களது வருமானத்தில் ரூ. 1.5லட்சம் வரை வரி விலக்கு சலுகை பெறலாம் என்ற நிலை இனி ரூ.2 லட்சமாகஉயர்த்தப்படுவதாக அறிவித்தார். 
 
      இதன் மூலம், வங்கிகளில் கடன்  பெற்று வீடு வாங்குபவர்களின் எண்ணிக்கை உயரக் கூடும் என்றும், ரியல் எஸ்டேட் துறை வேகம் எடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இண்சுரன்சு

புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டம்: அரசு விளக்கம்
           புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், ஓய்வுபெற்ற தமிழக அரசு ஊழியர்களுக்கும், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் மட்டுமே பொருந்தும் என்று நிதித் துறை செயலாளர் க.சண்முகம் விளக்கம் அளித்துள்ளார். பொதுத்துறை நிறுவனங்கள் உள்பட பிற துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றோருக்கும் இந்த மருத்துவக் காப்பீடு பொருந்துமா? என்பது தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டன.

             அதற்கு விளக்கமளித்துள்ள நிதித் துறை செயலாளர் க.சண்முகம், உள்ளாட்சி அமைப்புகள், மாநில பொதுத் துறை நிறுவனங்கள் உள்ளிட்ட தமிழக அரசு சார்பிலான நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு மட்டும்