Wednesday, April 30, 2014

excel form cce

தொடக்க கல்வித்துறை GRADE போடும் EXCEL FORMATE

                                                                              இங்கே கிளிக் செய்ய

Tuesday, April 29, 2014

HSC RESULT

மே 9ம் தேதி காலை 10:00 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவை, நான்கு இணையதளங்களில், தேர்வுத்துறை வெளியிடுகிறது

 பிளஸ் 2 தேர்வு முடிவை, நான்கு இணையதளங்களில், தேர்வுத்துறை வெளியிடுகிறது; முகவரிகளை, தேர்வுத் துறை இயக்குனர், தேவராஜன், நேற்று வெளியிட்டார்.
அதன் விவரம்: மாணவர்கள், மே 9ம் தேதி காலை 10:00 மணி முதல், www.tnresults.nic.inwww.dge2.tn.nic.in,www.dge3.tn.nic.in ஆகிய மூன்று இணையதளங்களில், தேர்வு முடிவை பார்க்கலாம். நான்காவதாக, www.dge1.tn.nic.in, என்ற இணையத்திலும், "ஸ்மார்ட் போன்' மூலம், முடிவைப் பார்க்கலாம்.

இணையதளத்தில் பார்க்க, தேர்வு பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்ய வேண்டும். தேர்வு முடிவை, மதிப்பெண்களுடன், 0928223 2585 என்ற மொபைல் எண்ணிற்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பி பெறலாம். இதற்கு, TNBOARD/RN/DOB என்பதற்கு ஏற்ப, TNBOARD/ மாணவரின் பதிவு எண் (RN)/ பிறந்த தேதி (DOB) ஆகியவற்றை பதிவு செய்து, எஸ்.எம்.எஸ்., அனுப்ப வேண்டும். மே 9ம் தேதி காலை 10:00 மணிக்கு முன், எஸ்.எம்.எஸ்., அனுப்பக் கூடாது. மாவட்டங்களில் உள்ள, தேசிய தகவல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும், கட்டணம் இன்றி தேர்வு முடிவை அறியலாம். மாணவர்கள், தங்களது பள்ளிகளுக்கு, நேரில் சென்றும் தேர்வு முடிவை அறியலாம்.

2003 PANEL

2013ம் ஆண்டின் முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்க நீதிபதி உத்தரவு

2013ம் ஆண்டின் முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையிலேயே பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் வழக்கறிஞர் ராவ் & ரெட்டி வாதாடினார். அவர் 2013 முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என வாதிட்டார். இதனை விசாரித்த நீதியரசர் நாகமுத்து அவர்கள், 2013ம் ஆண்டின் முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார். தீர்ப்பின் நகல் விரைவில் வெளியிடப்படும். வழக்கு எண். W.P.NO:9247.

Friday, April 25, 2014

TRs

ஓட்டுபோடுவதில் அரசு ஊழியர்களுக்கு ஆர்வமில்லை !

தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் தங்களது ஓட்டுரிமையை பயன்படுத்த ஆர்வமின்றி உள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் 57 சதவீதத்தினர் மட்டுமே தபால் ஓட்டு பெற்றுள்ளனர்.


ஜனநாயக நாடான இந்தியாவை நிர்வகிக்கும் மக்கள் பிரதிநிதிகளை, ஓட்டுரிமை பெற்ற மக்களே தேர்வு செய்து வருகின்றனர். இதற்காக தேர்தல் ஆணையம், ஒவ்வொரு தேர்தலுக்கும் வாக்காளர் பட்டியலை தயாரித்து வருகிறது. பட்டியலில் இடம் பெற்றவர்களில் 60 முதல் 70 சதவீதத்தினரே தேர்தலில் ஓட்டு போடுகின்றனர். வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை, ஓட்டுச் சாவடிகளில் நெரிசல், ஓட்டுப்பதிவு நேரம் குறைவாக உள்ளதே ஓட்டுப்பதிவு குறைவிற்கு காரணமாக கூறப்பட்டது. இந்த குறைபாடுகளை 16வது லோக்சபா தேர்தலில் நீக்கிட தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடு செய்துள்ளது. அதனையொட்டி கடந்த 2011 சட்டசபை தேர்தலை தொடர்ந்து வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி மேற்கொண்டு, கடந்த 5ம் தேதி இறுதி பட்டியலை வெளியிட்டது.

நேரம் அதிகரிப்பு
அனைத்து வாக்காளர்களும் ஓட்டுப் போட வசதியாக கிராமங்களில் 1300 பேருக்கும், நகரங்களில் 1500 பேருக்கு ஒரு ஓட்டுச்சாவடி அமைத்ததோடு, ஓட்டுப்பதிவு நேரத்தையும் 2 மணி நேரம் அதிகரித்தது. ஓட்டுரிமையின் அவசியத்தை விளக்கி தேர்தல் ஆணையம் சார்பில் கடந்த மூன்று மாதங்களாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் கலைக்குழுக்களை கொண்டு விழிப்புணர்வு பிரசாரம் நடத்தியது. பிரபல நடிகர்களை கொண்டு ரேடியோ மற்றும் தொலைக்காட்சிகள் வழியாகவும் பிரசாரம் செய்து வருகிறது. தேர்தல் ஆணையத்தின் இந்த முயற்சிக்கு ஆதரவு தெரிவித்து பல வர்த்தக நிறுவனங்களும், தேர்தல் அன்று ஓட்டு போட்டுவிட்டு வரும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை அறிவித்துள்ளது.தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை கிராமப்புற மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ள நிலையில், படித்தவர்களில் குறிப்பாக அரசு ஊழியர்களில் பலர் இன்னமும் ஓட்டுப் போடுவதில் ஆர்வமின்றி உள்ளனர்.

தபால் ஓட்டு
தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மற்றும் போலீசாருக்கு, தபால் ஓட்டு போடும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. இதற்கு, தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் உரிய படிவத்தை பூர்த்தி செய்து தேர்தலுக்கு முன்பாக மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் சமர்ப்பித்தால், அந்த முகவரிக்கு ஓட்டுச் சீட்டு தபாலில் அனுப்பி வைக்கப்படும். அதில், தனது ஓட்டை பதிந்து ஓட்டு எண்ணுவதற்கு முதல் நாளுக்கு முன்பாக தொகுதி தேர்தல் அலுவலகத்தில் வைத்துள்ள சீலிடப்பட்ட ஓட்டுப் பெட்டியில் சேர்க்க வேண்டும். சொந்த தொகுதியிலேயே பணிபுரிபவர்கள், தேர்தல் ஆணைய சான்றை சமர்பித்து, தாங்கள் பணிபுரியும் ஒட்டுச் சாவடிகளிலேயே ஓட்டளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

57 சதவீதம்
விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் பணியில் 14 ஆயிரத்து 530 அரசு ஊழியர்கள், 4,681 போலீசார் ஈடுபடுகின்றனர். இவர்கள் அனைவருக்கும் தபால் ஓட்டிற்கான படிவங்கள் வழங்கப்பட்டுள்ளது. இவர்களில், அரசு ஊழியர்களில் 8,461 பேரும், போலீசாரில் 2,490 பேர் மட்டுமே படிவத்தை பூர்த்தி செய்து, ஓட்டுச் சீட்டு கேட்டு சமர்பித்துள்ளனர். இது தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களில் 57 சதவீதமாகும். அவர்களுக்கு மட்டுமே ஓட்டுச் சீட்டு தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஓட்டுப் போடுவது ஒவ்வொருவரின் ஜனநாயக கடமை என வீதி, வீதியாக பிரசாரம் செய்த அரசு ஊழியர்களே ஓட்டுப்போட ஆர்வமின்றி உள்ளதையே இது காட்டுகிறது.

Saturday, April 19, 2014

FORMS

தொடக்க நடுநிலைப்பள்ளிகள் ஆண்டு இறுதி தேர்ச்சி ஒப்புதல் பெறும் போது உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டிய படிவங்கள்

    தொடக்க கல்வித்துறையில் ஆண்டு இறுதியில் ஒப்டைக்கவேண்டிய படிவங்கள் 

                                                                                                     இங்கே கிளிக் செய்ய

     FONT பெற

                                                                                       FONT இங்கே கிளிக் செய்ய

Monday, April 7, 2014

1 மார்க்

SSLC science ONE MARK
 
    இன்று 7/4/14 நடைபெற்ற அறிவியல் தேர்வு ஒரு மதிப்பெண் வினா விடை

இங்கே கிளிக் செய்ய

Sunday, April 6, 2014

SGT PAY

இடைநிலை ஆசிரியர் ஊதியம் 9300+4200 வழங்க முடியாது என நிதித்துறை கூறிடும் காரணம்

இடைநிலை ஆசிரியர் ஊதியம் 9300+4200 வழங்க முடியாது என நிதி துறை கூறிடும் காரணம் 

அ .ஆ .எண் ;1383 கல்வி .நாள்.23.8.1988.ன் படி தொடக்க கல்வி சார்நிலை பணி விதிகள் .விதி 6 ன் படி இடை நிலை ஆசிரியர் கல்விதகுதி SSLC, மற்றும் சான்றிதழ் கல்வி என உள்ளது ,விதி 9 ன் படி நியமனம் ஒன்றிய அளவிலானது என உள்ளது.


        இதை கல்வி உரிமை சட்டம் 2009 ன் படியும் ,உச்ச நீதி மன்ற தீர்ப்பு படி மாற்றி அமைத்திட மனு அனுப்ப பட்டது .மீண்டும் வரும் 8.4.14.அன்று நேரில் இயக்குனரிடம் கொடுக்கப்பட உள்ளது .

            இந்த அ .ஆ .எண் ;1383 கல்வி .நாள் ;23.8.1988 மாற்றி தற்போதைய உண்மை நிலை படி இடை நிலை ஆசிரியர் கல்வி தகுதி +2 , டிப்ளமா என மாற்றம் செய்ய பட்டால் நமது ஊதியம் 9300+4200 என நிதி துறை மாற்றம் செய்துதான் ஆக வேண்டும்.
செய்தி பகிர்வு : கிப்சன், TATA

Thursday, April 3, 2014

DA GO


தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு அரசாணை வெளியிடப்பட்டது
        தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான 10% அகவிலைப்படி உயர்வு வழங்க முதல்வர் வழங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. முறையான அரசாணை வெளியாகி யுள்ளது ஆசிரியர்களுக்கான 10% அகவிலைப்படி உயர்வு வழங்க முதல்வர் வழங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி ஜனவரி 2014 முதல் 100% ஆக உயரந்துள்ளது எனவும், ஜனவரி 2014 முதல் மார்ச் 2014 வரையிலான 3 மாத அகவிலைப்படி நிலுவை, ரொக்கமாக வழங்க உள்ளது எனவும் அரசாணை 90 நாள் 3/4/2014 வெளியாகியுள்ளது.

GO NO 96 DATE 03.APRIL 2014
இங்கே கிளிக் செய்ய                  

Wednesday, April 2, 2014

EB

EB - MOBILE NUMBER REGISTRATION

            மின் பயனீட்டாளர்கள் செல்போன் எண்ணை பதிவு செய்ய அலுவலகம் செல்ல தேவையில்லை வீட்டிலிருந்தே ஆன்லைன் முலம் பதிவு செய்யலாம்


          இதற்கு முதலில் இந்த லிங்கை கிளிக் செய்யவும், பின்னர் தங்களது மண்டலத்தை தேர்வு செய்யவும்.

           அடுத்து தங்களுடைய 9 அல்லது 10 இலக்க மின்இணைப்பு எண்ணை கொடுத்து Validate என்பதை கிளிக் செய்யவும். இந்த செய்தியை தங்கள் பகிர்ந்து உதவவும்.

DA

10% DA: அரசாணை விரைவில் வெளியாக வாய்ப்பு.

           10% DA: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு வழங்க முதல்வர் ஒப்புதல்; அரசாணை விரைவில் வெளியாக வாய்ப்பு.


          மத்திய அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன் அறிவித்தாலும், அரசாணை கடந்த மார்ச் 27ம் தேதி தான் வெளியானது. 
 
           இதையடுத்து தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான 10% அகவிலைப்படி உயர்வு வழங்க முதல்வர் ஒப்புதல் வழங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.இதையடுத்து இன்னும் ஒரிரு நாட்களில் முறையான அரசாணை வெளியாகும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி ஜனவரி 2014 முதல் 100% ஆக உயரவுள்ளது எனவும், ஜனவரி 2014 முதல் மார்ச் 2014 வரையிலான 3 மாத அகவிலைப்படி நிலுவை, ரொக்கமாக வழங்க உள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.