தமிழகம் முழுவதும் பிளஸ் 2 செய்முறை தேர்வு வரும் 7ம் தேதி தொடக்கம்.
பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் வரும் 7ம் தேதி தொடங்குகிறது. அதன் மதிப்பீட்டை 22ம் தேதிக்குள் முடிக்கவும் தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக எந்த மாணவருக்கு எந்த தேர்வு மையம் என்ற விவரங்கள் 5ம் தேதி அனுப்பி வைக்கப்படுகிறது. 6ம் தேதி அந்தந்த மாணவர்களுக்கு ஹால்டிக்கெட் உள்பட பாடம், மையம், தேர்வு எண்கள் உள்ளிட்டவை கிடைக்கும். 7ம் தேதி முதல் செய்முறைத் தேர்வு தொடங்கும். செய்முறைத் தேர்வில் மாணவர்கள் செய்து காட்ட வேண்டிய செய்முறைகள் குறித்த கேள்விகள் பாடப்புத்தகங்களின் பின் பகுதியில் இருந்தே கேட்கப்பட உள்ளன.அனைவருக்கும் ஒரே கேள்வியே இடம் பெறாமல் மாறிமாறி இருக்கும்.இதன்படி இயற்பியல் பாட மாணவர்கள் 12 செய்முறைகள் செய்து காட்ட வேண்டி வரும்.வேதியியல், தாவரவியல், விலங்கியல் மாணவர்களுக்கும் அதேபோல இடம் பெறும். செய்முறைகளை பொருத்தவரை கடந்த ஆண்டு இருந்த நடைமுறைகளே தொடர்கின்றன.
கடந்த ஆண்டுகளில் செய்முறைத் தேர்வுகளை பொருத்தவரை ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களே செய்முறைத் தேர்வுக்கான தேதிகளை அறிவிப்பார்கள். ஆனால் இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் ஒரே நாளில் தொடங்க வேண்டும் என்று அரசு அறிவித்ததை அடுத்து 7ம் தேதி தமிழகம் முழுவதும் செய்முறைத் தேர்வுகள் தொடங்க உள்ளன.

No comments:
Post a Comment