Thursday, February 27, 2014

Pallikudam

வர இருக்கும் 2014 லோக்சபா தேர்தல் பணியில் ஈடுபடும் -வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான கையேடு

Tuesday, February 25, 2014

பள்ளிக்கூடம்

தேர்தல் பணியில் பெண்களுக்கு சலுகை _ நல்ல செய்தி 


Pallikudam

தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி போராட்டம் எதிரொலி: பள்ளி மேலாண்மைக்குழு பயிற்சி தேதி மாற்றம்


Saturday, February 22, 2014

Polio Drops


தமிழகத்தில் நாளை 2ம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம்

சென்னை :
 தமிழகத்தில் 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கு, 43,051 மையங்கள் மூலம், நாளை 2வது தவணையாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்கள் ஜனவரி 19ம் தேதி மற்றும் பிப்ரவரி 23ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.2ம் கட்டமாக நாளை தமிழகம் முழுவதும் 2ம் கட்டமாக ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கியமான இடங்கள் உள்பட 43,051 மையங்களில் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Maths

அரசு நடுநிலைபள்ளிகளில் கணித ஆய்வு கூடம் நிறுவுதல் குறித்து அறிவுரை


         2013-2014ஆம் ஆண்டு பகுதி 2 திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் கணிதம் கற்றல் திறனை வலுப்படுத்தவும் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ  \மாணவியர்களுக்கான ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள் வீதம் 32 மாவட்டத்திற்கு 64 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளுக்கு பள்ளி ஒன்றுக்கு ரூ.2.00 இலட்சம் வீதம் 64 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.128.00 இலட்சம் ( 64 x 2) ""நடுநிலைப் பள்ளிகளில் கணிதம் கற்றல் திறனை வலுப்படுத்துதல்"" திட்டத்தின் மூலம் கணித ஆய்வு கூடங்கள் (Maths Learning in Upper Primary School) நிறுவ நிதி ஒப்பளிப்பு செய்து அரசு ஆணை வழங்கப்பட்டுள்ளது.
              எனவே, மேற்கண்ட திட்டத்தை மாவட்ட ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் செயல்படுத்த ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளை கீழ்காண் நிபந்தனைகளின்படி தேந்தெடுத்து, உரிய படிவத்தில் அனுப்புமாறு அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

1. ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் 6, 7, 8 வகுப்புகளில் குறைந்த பட்சம் 60 மாணவ\மாணவிகள் படிக்கும் பள்ளிகளை தேர்வு செய்யப்படவேண்டும்.
2. தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளில் கணிதம் கற்றல் திறனை வலுப்படுத்த கணித ஆய்வுகூடம் இருப்பதற்கு தனியாக கூடுதல் வகுப்பறை இருத்தல் வேண்டும்.
3. கணித ஆய்வுகூடம் தொடர்பாக கொள்முதல் செய்யப்பட்ட உபகரணங்களை பள்ளிகளில் பாதுகாப்பாக இருப்பதற்கு தகுந்த இடம் இருத்தல் அவசியம்.
4. ஆர்வமும் திறமையும் உள்ள கணித பட்டதாரி ஆசிரியர் பணிபுரியும் பள்ளிகளையே தேர்ந்தெடுக்க வேண்டும்.
        எனவே, மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் இரண்டினை தேர்ந்தெடுத்து 05.03.2014க்குள் இவ்வலுவலகத்திற்கு அனுப்புமாறு அனைத்து மாவட்டத்தொடக்கக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

Pallikudam

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு



இடைநிலை மற்றும் தகுதிவாய்ந்த தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான
 பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வும் இன்றைய நடுநிலைப்பள்ளி தலைமை 
ஆசிரியர் கலந்தாய்வுடன் நடத்தப்படும் என பெரிதும் ஆவலாக எதிபார்க்கப்பட்டது.


        இந்நிலையில் இன்று பட்டதாரி ஆசிரியர் பதவிஉயர்வு கலந்தாய்வு 

அறிவிக்கப்பட்டததை அடுத்து அலுவலகத்தை தொடர்புகொண்டு அதுபற்றி 
விசாரித்ததில் இருக்கின்ற மொத்தமுள்ள பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களில் குறிப்பிட்ட விகிதாச்சாரத்திலேயே பதவிஉயர்வு மூலம் நிரப்பப்படவேண்டும்.
மீதமுள்ளதை நேரடி நியமனத்திற்கு ஒதுக்கவேண்டும் என்ற அரசாணையைபின்பற்ற வேண்டிய காரணத்தினால் பதவிஉயர்வு மூலம் நிரப்பப்பட வேண்டிக காலிப்பணியிடங்களை ஒன்றிய வாரியாக கணக்கெடுக்கும் பணி முழு வீச்சில் இயக்குனரகத்தில
நடைபெற்று வருவதாகவும்,அப்பணி ஓரிரு நாளில் முடிவடைந்தவுடன்
 மாவட்ட தொடக்ககல்வி அலுவலர்களுக்கு விவரம் அனுப்பப்பட்டு வெகு சில
 நாட்களில் பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு கண்டிப்பாக நடத்தப்படும் என தெரிவித்தனர்.

குறிப்பு
    28.02.2014 அல்லது 01.3.2014 ல் கட்டாயம் இருக்கலாம்.

இடைநிலை ஆசிரியர்களுக்கான- பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த களின் பட்டியல் 1.1.2013 இன் படி தயார் நிலையில் வைக்க தொடக்கக் கல்வி இயக்குனர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அவர்களுக்கு உத்தரவு.

Friday, February 21, 2014

NMMS DATE


அவசர அறிவிப்பு - NMMS Exam Time Changed.

          EXAM CONDUCTED IN AFTERNOON INSTED OF FORE NOON AS ALREADY ANOUNCED 

          NMMS - தேசிய திறனாய்வுத் தேர்வு 22.02.2014 அன்று நடைபெறுதம் நேரம் கீழ்கண்டவாறு மாற்றப்படுகிறது.

முதல் தாள்  (Mental Ability Test)      - 2.00 PM to 3.30 PM
இடைவேளை (Break Time)    -3.30 PM to 4.00 PM 
இரண்டாம் தாள் (Scholastic Aptitude Test ) - 4.00 PM to 5.30 PM
        

           NMMS EXAM தேர்வு நடைபெறும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே காலையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது தற்போது பிற்பகல் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Pallikudam News

 நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு

நாளை நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறும் என எதிர்பார்க்கலாம்.


பள்ளிக்கல்வித்துறையில் உள்ள இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியருக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நாளை சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் நடைபெற உள்ளது2013-14ம் ஆண்டுக்கான பள்ளிக்கல்வித்துறையில் உள்ள இடைநிலை ஆசிரியர் பதவியில் இருந்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு இணையதளம் வாயிலாக நாளை காலை 10மணி முதல் நடைபெற உள்ளது. பதவி உயர்வு மூலம் நிரப்ப எதிர்ப்பார்க்கப்படும் முன்னுரிமைப் பட்டியல் விவரம்:தமிழ் - 179வரை
ஆங்கிலம் - 82வரைகணிதம் - 87வரைஅறிவியல் - 65வரைவரலாறு - 72வரைபுவியியல் - 13வரை என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Pallikudam

அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விரைவில் அறிவிப்பு

         டிட்டோஜாக் - பள்ளிக்கல்வித்துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை முடிவு, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்த நிலைபாடு விரைவில் அறிவிப்பு


           டிட்டோஜாக் தலைவர்கள் இன்று காலை தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது. அனைத்து கோரிக்கைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. ஒவ்வொரு கோரிக்கைக்கும் தனித்தனியாக அரசுத் தரப்பில் பதிலளிக்கப்பட்டது. ஆயினும் நிதிச் சார்ந்த கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு வழங்க முடியாது எனவும் அதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் அரசுத் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
           பள்ளிக்கல்வித்துறை சார்ந்த பிரச்சனைகள் எனில் உடனடியாக முடிவுக்கு கொண்டு வருவதாகவும், நிதிச்சார்ந்த தீர்வுகள் உடனடியாக தீர்க்க இயலாது எனவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே இதையடுத்து டிட்டோஜாக் தலைவர்கள் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தலைமையகத்தில் கூடி விவாதிக்கின்றனர். அடுத்தக்கட்ட முடிவு குறித்து விரைவில் வெளியிடப்படும் என தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் திரு. செ. முத்துசாமி தெரிவித்தார். பள்ளிக்கல்விச் செயலாளருடனான சந்திப்பின் போது தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொறுப்பாளர்களும் உடன் இருந்தனர். மூன்று நபர்க் குழுவின் அறிக்கையை உடனடியாக வெளியிட டிட்டோஜாக் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதை நிதித்துறை செயலாளருடன் பேசி வெளியிட ஆவணச் செய்வதாக பள்ளிக்கல்விச் செயலர் தெரிவித்தாக தெரிவித்தார்.

Pallikudam

பள்ளிகூடம்

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நாளை பணி நியமனம் கலந்தாய்வு நடைபெற உள்ளது
ஆசிரியர் தகுதித் தேர்வி தேர்ச்சி பெற்றவர்களில் 152 பேருக்கு நாளை பணி நியமன கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் தமிழ் மொழிப் பாடத்திற்கு 16பேரும், ஆங்கில பாடத்திற்கு 74பேரும், கணித பாடத்திற்கு 27பேரும், அறிவியல் 14பேரும், சமூக அறிவியல் 21பேரும் நியமிக்கப்பட உள்ளனர்.
இதுகுறித்து முறையான சுற்றறிக்கை அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அனுப்ப வைக்க உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

Thursday, February 20, 2014

Pallikudam

மாணவர்களின் எதிர்காலம்தான் முக்கியம்: அமைச்சர் கே.சி. வீரமணி
 
         மாணவர்களின் எதிர்கால நலன்களுக்கு முக்கியத்துவம் அளித்து தமிழக அரசு செயல்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி தெரிவித்தார்.

           சட்டப்பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பேசிய புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண்களில் எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத் திறனாளிகள் மற்றும் சிறுபான்மையினர் பலன்பெறும் வகையில் மேலும் சலுகை வழங்க வேண்டும் என்றார்.
 
அவருக்குப் பதிலளித்து அமைச்சர் வீரமணி பேசியது:
 
           எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கையை ஏற்று ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண்களை இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 60-லிருந்து 55 சதவீதமாக முதல்வர் ஜெயலலிதா குறைத்துள்ளார்.
 
               இப்போது மேலும் மதிப்பெண் சலுகை வேண்டும் என்கிறார்கள். தகுதியான ஆசிரியர்கள் இருந்தால்தான் ஆதிதிராவிடர், பழங்குடியினர் குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைக்கும். நமது காலம் போய்விட்டது. குழந்தைகளில் எதிர்காலம் மிகவும் முக்கியமானது என்றார்.

Pallikudam

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்துடன் அகவிலைபடியை வழங்க திட்டம், மத்திய அமைச்சரவை ஒப்புதல்

           அரசு ஊழியர்களுக்கு 7வது சம்பள கமிஷனின் பரிந்துரையின் அடிப்படையில் அடிப்படை ஊதியத்துடன் உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை இணைத்து வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அரசின் இந்த முடிவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்பு வெளிவந்தால் சுமார் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களும், 30 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவர். லோக்சபா தேர்தலுக்கு முன் இது குறித்த அறிவிப்பு வெளிவரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
              அகவிலைப்படியை 100 சதவீதம் வரை உயர்த்தியும், அதனை அடிப்படை ஊதியத்தொகையுடன் இணைத்தும் வழங்க வேண்டும் என மத்திய அரசு ஊழயர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். சந்தை பணவீக்கம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைஉயர்வு ஆகியவற்றின் அடிப்படையில் வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இது தொடர்பாக அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், அகவிலைப்படியை 50 சதவீதம் உயர்த்தி வழங்க முடிவு எடுக்கப்பட்டது. இது ஊழியர்களின் அடிப்படை சம்பள உயர்விற்கு உதவிகரமாக இருக்கும். உயர்த்தப்பட்ட 50 சதவீதம் அகவிலைப்படியை, அடிப்படை ஊதியத்துடன் இணைத்து வழங்கினால் அரசு ஊழியர்களின் சம்பளம் 30 முதல் 35 சதவீதம் வரை உயரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைத்து வழங்க வேண்டும் என சம்பள கமிஷன் பரிந்துரைத்துள்ளதால், விரைவில் அமலாகலாம் என கூறப்படுகிறது.
                50 சதவீதம் அகவிலைப்படி, அடிப்படை ஊதியத்துடன் இணைத்து வழங்க வேண்டும் என 5வது சம்பள கமிஷன் பரிந்துரைத்தது. ஆனால் 6வது சம்பள கமிஷனில் இந்த பரிந்துரை முன்வைக்கப்படவில்லை. அகவிலைப்படியை 10 சதவீதம் உயர்த்தி, அடிப்படை சம்பளத்துடன் இணைத்து 100 சதவீதமாக வழங்கும் அரசின் உத்தரவு அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு உயர்த்தப்படும் பட்சத்தில், இது அரசு அறிவிக்கும் 2வது இரட்டை இலக்க அகவிலைப்படி உயர்வு ஆகும். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அகவிலைப்படியை 10 சதவீதம் உயர்த்தி அறிவித்தது. இது 2013ம் ஆண்டு ஜூலை 01ம் தேதியிலிருந்து தேதியிட்டு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு அகவிலைப்படி உயர்வு 10 சதவீதத்திற்கும் குறைவாக இருக்காது என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளார். இந்த புதிய அகவிலைப்படி உயர்வு ஜனவரி முதல் தேதியிலிருந்து தேதியிட்டு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளனர்.

Tuesday, February 18, 2014

Pallikudam

ஆசிரியர்களும் போராட்டம் உண்மை நிலை....

 
          அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் போராட்டம் நடத்தினாலே ஊதிய உயர்வுக்குத் தான் என்ற ஒரு தவறான மனநிலையை மக்கள் மனநிலையில் பதிய வைத்துள்ளார்கள் ஆட்சியாளர்கள்.

           உண்மையில் நடப்பது என்னவெனில் எங்களுடைய ஊதியத்தில் 10%தை பிடித்தம் செய்து தனியார் பங்குச்சந்தை எனும் சூதாட்டத்தில் முதலீடு செய்து லாபம் வந்தால் உங்களுக்கு நட்டம் வந்தாலும் உங்களுக்கே என்ற நிலையை மத்தியில் உள்ள ஆளுகிற கட்சியும் ஆளவேண்டும் என்கிற கட்சியும் சேர்ந்து செயல்படுத்தி வருகின்றன.

       இது பல லட்சம் ஊழியர்களின் வாழ்வாதாரத்தையே கேள்வியாக்கியுள்ளது என்பதை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும்.

               உங்கள் பணம் உங்கள் கையில் என்ற திட்டம் கொண்டு வந்த அரசு எங்கள் பணம் யார் கையிலோ என்ற முறையில் செயல்படுத்துவது நியாயம் தானா?

           ஊதியக்குழு என்பது தற்போது வாங்கும் ஊதியத்தை தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப உயர்த்தி வழங்கப் பரிந்துரைக்கும் ஆனால் எங்கும் இல்லாத யாரும் கண்டிராத ஆறாவது ஊதியக்குழு வாங்கிய சம்பளத்தையே குறைத்துக் கொடுக்க பரிந்துரை செய்து வரலாற்றில் இடம் பெற்றுவிட்டது.

            அதில் உள்ள குளறுபடிகளை நீக்கித் தாருங்கள் எனப் போராடினால் அதையும் தவறாக சித்தரிக்க முயல்கின்றனர்.
  
                      இதை வேலைக்கு வரும் வரை எதிர்ப்பவர்கள் வேலைக்கு வந்தவுடன் ஆதரிக்கிறார்கள் இதற்கு காரணம் உண்மைநிலை தெரியாததா ?இல்லை தன் சுயநலமா என்பதும் தெரியவில்லை .

              எனவே ஒரு போராட்டம் எனில் அதன் உண்மைநிலை தெரிந்து விமர்சிப்பதே அறிவார்ந்த செயலாக இருக்க முடியும்.

Monday, February 17, 2014

Pallikudam ID

PallikudamHFL

தொடக்கக்கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு விரைவில் நடைபெற உள்ளது

இது குறித்து தமிழ்நாடு அசிரியர் கூட்டணியின் பொதுச்செயளாலர் திருசெ.முத்துசாமி அவர்கள் தகவல. தொடக்கக்கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு விரைவில் நடைபெற உள்ளது. நேற்று மாலை தொடக்கக்கல்வி இயக்குனர் திரு இளங்கோவன் அவர்களுடன் சுமார் 45 நிமிட நேரம் கோரிக்கை வைத்து அது குறித்து விவாதித்தார்.

அப்போது இயக்குனர் அவர்கள் திரு.முத்துசாமியிடம் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் 2013-14ம் கல்வியாண்டுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு, இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு நிலுவையில் இருந்ததால் பதவி உயர்வு வழங்கபடாமல் இருந்தது.

அண்மையில் இவ்வழக்கு முடிந்து இரட்டைப்பட்டம் பதவி உயர்வு மற்றும் நியமனத்துக்கு செல்லாது என சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வு உத்தரவிட்டிருந்தது
.
எனவே நிலுவையில் இருந்த இடைநிலை ஆசிரியர் மற்றும்தகுதி வாய்ந்த தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்பட்டதாரி ஆசிரியர் பதவிக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த
ஆயுத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது

என்றும், இதற்கான முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தெரிவித்தார். மேலும் அதிகமாக ஆங்கிலம படித்தஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற வாய்ப்பு அதிகமாக உள்ளதாகவும் கலந்தாய்விற்கான பூர்வாங்கப்பணிகளில் தொடக்ககல்வித்துறை ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Pallikudam

Pallikudam

Regulation Order

  1. 2007-08, 2008-09 Maths BT's Regulation Order - Click Here
  2. 2010-2011 DSE -DSE - 2010-11 TRB APPOINTED SCIENCE BT - REGULARISATION ORDER ISSUED - ORDER -  CLICK HERE
  3. 2008-09 Science BT's - Regulation Order - Erratum - Click Here
  4. 2009-10 History BT's - Regulation Order
  5. 2008-09 History BT's - Regulation Order
  6. 2010-11 Science BT's - Regulation Order - Click Here
  7. 2010-11 Social Science BT's - Regulation Order
  8. 01.01.2011 Promoted HSS HM's Regulation Order
  9. 01.01.2011 Promoted HS HM's Regulation Order
  10. 2007-08 Maths BT's Regulation Order
  11. 2009-10 English BT's Regulation Order
  12. 2009-10 Maths BT's Regulation Order
  13. 2009-10 Appointed Science, Maths, Social Science BT's DSE - Regularisation Order 
  14. 2009-10 Social Science BT's Regulation Order
  15. 2009-10 Science BT's Appointed by TRB - Regulation Order.
  16. 498 HRSS HM's & 15 Municipal HM's Regulation Order
  17. (2007-08) & (2008-09) English BT's Regulation Order
  18. (2007-08) & (2008-09) Maths BT's Regulation Order.
  19. 311 HRSS HM's & 15 Municipal HM's Regulation Order 


Wednesday, February 12, 2014

Pallikudam

TET - 2013 CV Announced for Relaxation Candidates

          ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் தளர்வு பெற்றவர்களுக்கு மார்ச் - 12 ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. முதல் தாளைாத் தொடர்ந்து 2 ஆம் தாளுக்கும் நடைபெறும் (2 ஆம் தாளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என டி.ஆர்.பி அறிவித்துள்ளது.)

        மேற்கொண்டு விவரங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் - வலைதளமான www.trb.tn.nic.in - ல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Monday, February 10, 2014

Pallikudam IT

disabled persons 

The Income Tax Act, 1961 provides deduction u/s. 80 in pursuance of which an individual (Indian citizen and foreign national) who is resident of India, and who suffers from not less than 40 per cent of any disability is eligible for deduction to the extent of Rs. 50,000/- and in case of severe disability to the extent of Rs. 100,000/-.
For availing deduction u/s. 80U, the assessee needs to fulfill certain legal formalities like he has to obtain a certificate from medical authority constituted by either the Central or the State Government, along with the Return of Income for the year for which the deduction is claimed. The intricate details of Section 80U is explained below in 

PallikudamTAMS

தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு 50% இடங்கள் ஒதுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சென்னையில் நேற்று உண்ணா விரதம் இருந்தனர்.சேப்பாக்கம் விருந்தினம் மாளிகை அருகே நடந்த இந்த உண்ணாவிரதத்துக்கு தலைமை தாங்கிய தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் தியாகராஜன் கூறியதாவது:
பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு மீண்டும் பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 1.6.06க்கு முன்பு தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றிய காலத்தையும் பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் போது, முதுநிலை பட்டதாரி பணியிடங்களில் இருந்து 50% ஒதுக்க வேண்டும். இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மத்திய மாநில ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும். தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளை மாற்ற ஆசிரியர்களுக்கு தகுந்த சுதந்திரம், பணிப்பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று நாங்கள் அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். ஆனால் அரசு தரப்பில் இது குறித்து பரிசீலிக்கவில்லை. அதனால் மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகை யில் சேப்பாக்கம், விருந்தினர் மாளிகை அருகில் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் இருக்கிறோம். இதில் தமிழகம் முழுவதில் இருந்து ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பங்கேற் உள்ளனர். இவ்வாறு தியாகராஜன் தெரிவித்தார்.
உண்ணாவிரதத்தில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத் தின் செயலாளர் மீனாட்சி சுந்தரம், தொடக்கப் பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் அகில இந்திய செயலாளர்அண்ணாமலை, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக தலை வர் சிதம்பரஹரி, தமிழக ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணியின் செயலாளர் தாஸ் உள்பட பல சங்கங்களின் பிரதிநிதிகள் வாழ்த்திப் பேசினர்.
Sankar Narayanan's photo.



Pallikudam

RTI-அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் தொகை ரூ.150 ஐ வருமான வரி 80D கழித்துக் கொள்ள தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெறப்பட்ட தகவல்.

Friday, February 7, 2014

PallikudamTAMS

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பாக மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம்  9-2-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை சேப்பாக்கம், விருந்தினர்மாளிகை அருகில் நடைபெற உள்ளது. தலைமை திரு. கு. தியாகராஜன் மாநிலத் தலைவர் வரவேற்புரை: மாநிலசெயலாளர் திரு. ஏ. இரமேஷ் வாழ்த்துரை: தோழமை சங்க நிர்வாகிகள் 1. சிதம்பரஹரி, ஆலோசகத் தலைவர் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் 2. க. மீனாட்சி சுந்தரம் பொதுச்செயலாளர், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் 3. வ. அண்ணாமலை அகில இந்திய செயலாளர், அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்களின் கூட்டமைப்பு 4. புலவர் ஆ. ஆறுமுகம் மாநிலத் தலைவர் தமிழக தமிழாசிரியர் கழகம் 5. எம். நடராஜன் மாநிலப் பொருளாளர், தமிழ்நாடு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர் கழகம் 6. இரா. தாஸ் பொதுச்செயலாளர், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 7. சா. மோசஸ் மாநிலப் பொருளாளர், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 8. கா. சி . இளம்பருதி பொதுச்செயலாளர், தமிழக இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் சங்கம் 9. டி. ஆர். ஜான்வெஸ்லி பொதுச்செயலாளர், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கம் 10. மு. இராஜேஷ் மாநில தலைவர், தமிழ்நாடு அரசு பொதுநூலகத்துறை பணியாளர் கழகம் மற்றும் மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றுகின்றனர் 

கோரிக்கைகள் 

1. தன் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தினை  முற்றிலும் இரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தினையே அமுல்படுத்திட வேண்டும். 

2. 01.06.2006க்கு முன்னர் தொகுப்பூதியத்தில் பணியாற்றிய காலத்தையும் பணிக்காலமாக அறிவித்திட வேண்டும். 

3. தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வாய்ப்பே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தொடக்க கல்வித்துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, நேரடி நியமனம் மூலம் பள்ளிக்கல்வித்துறையில் நியமிக்கப்படும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 50… -த்திலிருந்து, அதன் பாதி அளவான 25…-த்தினை பதவி உயர்வு அளித்திட வழிவகை செய்திட வேண்டும். 

4. இடைநிலை, பட்டதாரி & முதுகலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு இணையாக ஊதியம் வழங்கிட வேண்டும். 

5. பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 

6. ஆசிரியர் தகுதித் தேர்வை முற்றிலும் ரத்து செய்திட வேண்டும் 

7. அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தினை தனியார் பள்ளிகளுக்கு இணையாக உயர்த்திட ஆசிரியர்களுக்கு உரிய சுதந்திரத்தினையும், பணிப்பாதுகாப்பினையும் வழங்கிடவேண்டும்.

Pallikudam

TET - மதிப்பெண் சலுகை, 2012ல், தேர்வு எழுதியவர்களுக்கும் வழங்க வேண்டும்' என முதல்வர் அலுவலகத்தில், மனு கொடுத்து உள்ளனர்


          "ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,), இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, 5 சதவீத தளர்வு வழங்கப்படும்' என, முதல்வர் அறிவிப்பு வெளியிட்டதை தொடர்ந்து, நேற்று, அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
         பள்ளி கல்வித்துறை செயலர், சபிதா, நேற்றிரவு வெளியிட்ட அரசாணை: முதல்வர் அறிவிப்பின்படி, டி.இ.டி., தேர்வில், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), சீர்மரபினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர், டி.இ.டி., முதல் தாள் (இடைநிலை ஆசிரியர்), இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர்) ஆகிய இரண்டிலும், 55 சதவீத மதிப்பெண் எடுத்தால், தேர்ச்சி என, அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 55 சதவீத மதிப்பெண்ணான 82.5ஐ, 82 மதிப்பெண்ணாக முழுமையாக்கி, அரசு உத்தரவிடுகிறது. கடந்த 2013ல் நடந்த டி.இ.டி., தேர்வுகளுக்கும், 5 சதவீத மதிப்பெண் சலுகை பொருந்தும். மேலும், வரும் காலங்களில் நடக்கும் அனைத்து டி.இ.டி., தேர்வுகளிலும், பொதுப்பிரிவினர் தேர்ச்சி பெறுவதற்கு, 150க்கு, 90 மதிப்பெண்களும் (60 சதவீதம்), மேற்குறிப்பிட்ட இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, 82 மதிப்பெண்களும் (55 சதவீதம்) பெற வேண்டும் என, நிர்ணயித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு, சபிதா தெரிவித்து உள்ளார்.

          இதற்கிடையில், "ஆசிரியர் தகுதித் தேர்வு, மதிப்பெண் சலுகை, 2012ல், தேர்வு எழுதியவர்களுக்கும் வழங்க வேண்டும்' என, 2012 தேர்வில், 55 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள், முதல்வர் அலுவலகத்தில், மனு கொடுத்து உள்ளனர். மனுவில், அவர்கள் கூறியிருப்பதாவது: மதிப்பெண் சலுகை குறித்த முதல்வர் அறிவிப்பு, மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள், 2012 தேர்வில், 55 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளோம்.

எனவே, மதிப்பெண் சலுகையை, 2012ம் ஆண்டுக்கும் அறிவிக்க வேண்டும்

PallikudamTET

TET - Pass Mark 82 / 150 - GO Issued.

          TRB - TET  ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டு பிரிவினர் 82 / 150 (55%) மதிப்பெண்கள் பெற்றாலே வெற்றி பெற்றவர்களாவர்கள் என புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


         மேலும் இந்த புதிய அரசாணை ஆகஸ்ட் 2013 ல் தேர்வு எழுதியவர்களுக்கும் பொருந்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
  •  ஆனால் 2012 டி.இ.டி. தேர்வில் 82 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற தேர்வர்களுக்கு இந்த மதிப்பெண் சலுகை இல்லை.
  • இடஒதுக்கீட்டு பிரிவினர் என்பவர்கள் (SC, ST, MBC, BC, BC-M, சீர் மரபினர், மாற்றுத்திறனாளிகள் ஆவர்).

Pallikudam

TET - தேர்ச்சிமதிப்பெண்ணை 82 என நிர்ணயித்துள்ளதால் கூடுதலாக 10 ஆயிரம் பேர் வரை தேர்ச்சி பெற வாய்ப்பு

           ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகைக்குப் பிறகு தேர்ச்சி மதிப்பெண் 82 ஆக நிர்ணயிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இதையடுத்து, ஆசிரியர் தகுதித் தேர்வில்தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் 150-க்கு 82 மதிப்பெண் பெற்றாலே தேர்ச்சி பெறலாம்.

          இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அரசாணையின் விவரம்:

                       ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறுவதற்கான தேர்ச்சி மதிப்பெண் (60 சதவீதம்) 150-க்கு 90 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு பதிளித்த முதல்வர் ஜெயலலிதா, ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்படும் என அறிவித்தார்.இந்த மதிப்பெண் சலுகைக்குப் பிறகு இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண் 82.5 ஆகக் குறைகிறது. இந்த மதிப்பெண்ணை முழு மதிப்பெண்ணாக மாற்றுவதற்காக இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண் 82 என நிர்ணயம் செய்யப்படுகிறது.அதேநேரத்தில், ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் மற்றும் இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற பொதுப்பிரிவினர் 150-க்கு 90 மதிப்பெண் பெற வேண்டும்.

                      இந்த மதிப்பெண் சலுகையையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண் 82 ஆக நிர்ணயிக்கப்படுகிறது.இனி நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுகளிலும் பொதுப்பிரிவினருக்கான தேர்ச்சிமதிப்பெண் 90 எனவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான மதிப்பெண் 82 எனவும் நிர்ணயிக்கப்படுவதாக அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 ஆயிரம் பேர் வரை அதிகரிக்கலாம்:

                   இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சிமதிப்பெண்ணை 82.5-க்குப் பதில் 82 என நிர்ணயித்துள்ளதால் 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் கூடுதலாக 10 ஆயிரம் பேர் வரை தேர்ச்சி பெற வாய்ப்புள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.ஆசிரியர் தகுதித் தேர்வில் ஒரு மதிப்பெண் கேள்விகள் மட்டுமே இடம்பெறும்.எனவே, 82.5 என்ற மதிப்பெண்ணுக்குப் பதிலாக 82 அல்லது 83 என்ற முழு மதிப்பெண் மட்டுமே தேர்ச்சி மதிப்பெண்ணாக நிர்ணயிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

               இந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் 82 மதிப்பெண் வரை பெற்ற இடஒதுக்கீட்டுப் பிரிவினர் கணக்கெடுக்கப்பட்டு, அவர்களுக்கென தனியாக சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும்.அதன் பிறகே, பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் இருக்கும்என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Thursday, February 6, 2014

Pallikudam

தொழில் வரி
ரூ21000-30000 =ரூ120
ரூ 30001-45000 =ரூ300
ரூ 45001 -60000 =ரூ590
ரூ 60001 -75000 =ரூ890
ரூ 75001-மேல் =ரூ1175

Tuesday, February 4, 2014

Pallikudam

ஆசிரியர்களுக்கு ஆன்லைனில் பணி பதிவேடு: இ-சர்வீஸ் ரெஜிஸ்டர் தொடங்க திட்டம்

ஆசிரியர்களின் ஜாதகமாக விளங்குவது அவர்களின் பணி பதிவேடு எனப்படும் சர்வீஸ் ரெஜிஸ்டர் ஆகும். ஆசிரியர்களின் விபரங்கள் மட்டுமின்றி அவர்கள் ஆசிரியர் பணியில் சேர்ந்த நாள் முதல் ஒவ்வொரு கட்டங்களிலும் அவர்களின் பதவி உயர்வு, சம்பள விபரங்கள் அனைத்தும் இதில் இடம் பெற்றிருக்கும். மேலும் பணிக்காலத்தில் ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை விபரங்களும் இதில் இடம்பெறும்.

      படிவம் பெற இங்கே கிளிக் செய்ய

இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த பணிபதிவேடு வெள்ளம், தீ போன்ற சூழலால் பள்ளிகளில் இருந்து பாதிக்கப்பட்டால் அந்த ஆசிரியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். அவர்கள் பணிபதிவேட்டை திரும்ப பெறுவதில் சிக்கல்கள் உண்டு.

இந்தநிலையில் பணி பதிவேட்டை ஆன்லைன் மயமாக்கி இ-சர்வீஸ் ரெஜிஸ்டர் என்ற பெயரில் மாற்றம் செய்ய கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் சம்பள கமிஷனின் போது ஊதிய நிர்ணய விபரங்கள், பதவி உயர்வு, இடமாறுதல்கள், ஓய்வு கால பலன்கள் போன்றவை எளிதாக மேற்கொள்ள முடியும்.பள்ளிகளில் தற்போது கல்வி மேலாண்மை முறையில் மாணவ, மாணவியர் விபரங்கள் புகைப்படத்துடன் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஆசிரியர்களின் விபரங்கள் ‘டீச்சர்ஸ் புரொபைல்‘ என்ற பகுதியில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. முதல்கட்டமாக தொடக்க கல்வித்துறையில் ஒன்றிய வாரியாக இந்த பதிவுகள் ஆன்லைனில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதில் இ-சர்வீஸ் ரெஜிஸ்டருக்கான விபரங்களும் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன. இதற்கான கருத்தாளர்களுக்கான கூட்டம் சென்னையில் நடத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘மாவட்டம் தோறும் பள்ளிகள் தொடர்பான தகவல் சேகரிப்பு தொகுப்பில் இ-சர்வீஸ் ரெஜிஸ்டர் என்ற பகுதியில் ஆசிரியர்கள் விபரங்கள் சேகரிக்கப்பட உள்ளன. அதில் ஆசிரியர்கள் பிறந்த தேதி, பணியில் சேர்ந்த நாள், இனம், மொழி, பதவி உயர்வு விபரங்கள், பெறுகின்ற சம்பளம், வீட்டு முகவரி, ரத்த பிரிவு, உடல் அடையாளங்கள், போட்டோ, இ-மெயில் முகவரி, செல்போன் எண், இருசக்கர, 4 சக்கர வாகனம் இருப்பின் அதன் பதிவு எண், பான்கார்டு போன்ற விபரங்கள் பதியப்படும். மேலும் இதன் தொடர்ச்சியாக பணி பதிவேட்டில் பதிவு செய்யப்படுகின்ற விடுப்பு, விடுப்பு ஒப்படைப்பு, டிபிஎப், சிபிஎஸ், எஸ்பிஎப், எச்எப் போன்றவற்றுக்கு வாரிசு நியமனம், ஆதார் அட்டை எண் போன்றவையும் பதிவு செய்யப்படும்‘ என்றார்.இதன்மூலம் இனி ஆசிரியர்களின் பணிபதிவேடு எளிதில் கையாளத்தக்க வகையில் வெள்ளம், தீ போன்றவற்றால் எந்த சூழ்நிலையிலும் சேதப்படுத்தப்படாத இ-சர்வீஸ் ரெஜிஸ்டராக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது


Pallikudam

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 செய்முறை தேர்வு வரும் 7ம் தேதி தொடக்கம்.


          பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் வரும் 7ம் தேதி தொடங்குகிறது. அதன் மதிப்பீட்டை 22ம் தேதிக்குள் முடிக்கவும் தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. 
 
         இதன் தொடர்ச்சியாக எந்த மாணவருக்கு எந்த தேர்வு மையம் என்ற விவரங்கள் 5ம் தேதி அனுப்பி வைக்கப்படுகிறது. 6ம் தேதி அந்தந்த மாணவர்களுக்கு ஹால்டிக்கெட் உள்பட பாடம், மையம், தேர்வு எண்கள் உள்ளிட்டவை கிடைக்கும். 7ம் தேதி முதல் செய்முறைத் தேர்வு தொடங்கும். செய்முறைத் தேர்வில் மாணவர்கள் செய்து காட்ட வேண்டிய செய்முறைகள் குறித்த கேள்விகள் பாடப்புத்தகங்களின் பின் பகுதியில் இருந்தே கேட்கப்பட உள்ளன.அனைவருக்கும் ஒரே கேள்வியே இடம் பெறாமல் மாறிமாறி இருக்கும்.இதன்படி இயற்பியல் பாட மாணவர்கள் 12 செய்முறைகள் செய்து காட்ட வேண்டி வரும்.வேதியியல், தாவரவியல், விலங்கியல் மாணவர்களுக்கும் அதேபோல இடம் பெறும். செய்முறைகளை பொருத்தவரை கடந்த ஆண்டு இருந்த நடைமுறைகளே தொடர்கின்றன.

          கடந்த ஆண்டுகளில் செய்முறைத் தேர்வுகளை பொருத்தவரை ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களே செய்முறைத் தேர்வுக்கான தேதிகளை அறிவிப்பார்கள். ஆனால் இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் ஒரே நாளில் தொடங்க வேண்டும் என்று அரசு அறிவித்ததை அடுத்து 7ம் தேதி தமிழகம் முழுவதும் செய்முறைத் தேர்வுகள் தொடங்க உள்ளன.

Pallikudam

2012 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கும் மதிப்பெண் சலுகை அளிக்க வேண்டும் - திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தமிழக அரசுக்கு கோரிக்கை.

           2012 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கும் மதிப்பெண் சலுகை அளிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேட்டுக் கொண்டுள்ளார்.

 
         இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு மதிப்பெண் சலுகை வழங்கியதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் பின்பற்றப்படுவது போல் தாழ்த்தப்பட்டோருக்கு 40 சதவீத மதிப்பெண் பெற்றாலே தேர்ச்சி என்று அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஆசிரியர் பணிகளுக்கு பட்டயமும், பட்டமும் பெற்ற பிறகு இது போன்ற தேர்வுகளை நீக்குவது குறித்து முதலமைச்சர் பரிசீலிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

               தகுதி,திறமை என்பது தான் தமிழக அரசின் கொள்கை என்று கல்வி அமைச்சர் தொடர்ந்து கூறி வருவதால், இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நிலைபாடு என்ன என்றும் வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்

Pallikudam

TET CV will conduct soon for newly passed candidates.

           டி.இ.டி., தேர்வில் கூடுதலாக 30 ஆயிரம் பேர் தேர்ச்சி, கூடுதலாக தேர்ச்சி பெறுவர்களுக்கும், விரைவில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும். டி.இ.டி., தேர்வில், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை அளிக்கப்பட்டுள்ளதால், தோல்வி அடைந்தவர்களில் 30 ஆயிரம் பேர் வரை தேர்ச்சி பெறுவர் என டி.ஆர்.பி., வட்டாரம் நேற்று மாலை தெரிவித்தது.

             இதனால், தேர்வர்கள், குதூகலம் அடைந்துள்ளனர்.டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற, 55 சதவீதம் பெற வேண்டும் எனில், 82.5 மதிப்பெண் (150க்கு) வருகிறது. இது, 83 மதிப்பெண்ணாக, கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். எனவே 83ல் இருந்து 89 மதிப்பெண் வரை பெற்று தோல்வி அடைந்தவர்கள் தேர்ச்சி பெறுகின்றனர்.கடந்த ஆகஸ்ட்டில் நடந்த தேர்வில், 27 ஆயிரம் பேர் தான், தேர்ச்சி பெற்றனர். தற்போது, அதைவிட, தேர்ச்சி எண்ணிக்கை அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. கூடுதலாக தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல், இன்று, டி.ஆர்.பி., இணையதளத்தில் (http://trb.tn.nic.in/) வெளியாகலாம்.ஏற்கனவே, தேர்ச்சி பெற்ற, 27 ஆயிரம் பேருக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு விட்டது. இப்போது, கூடுதலாக தேர்ச்சி பெறுவர்களுக்கும், விரைவில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும். கடந்த, 2012 தேர்வில், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவில் அதிக தேர்வர்கள், தேர்ச்சி பெறாததால், அவர்கள் பிரிவில், 400 இடங்கள் நிரப்பப்படவில்லை. கடந்த தேர்வில், அதிகமானோர் தேர்ச்சி பெற்றனர். தற்போது, 5 சதவீத சலுகை அளிக்கப்பட்டிருப்பதால், இட ஒதுக்கீடு பிரிவினரின் தேர்ச்சி சதவீதம், கணிசமாக உயரும்."முதல்வர் அறிவிப்பு தொடர்பாக, விரைவில், அரசாணை வெளியிடப்படும்" என பள்ளிக் கல்வித் துறை செயலர், சபிதா நேற்று தெரிவித்தார்.

Monday, February 3, 2014

TET

ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு

ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஆதிதிராவிடர், பழங்குடியினர், மிகவும் பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் இதர பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இச்சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து இப்பிரிவினர் 82.5 மதிப்பெண்கள் பெற்றால் போதுமானது. 2013ம் ஆண்டு தேர்வு எழுதியவர்களுக்கும் இது பொருந்தும் எனவும் தெரிவித்தார்.