ஆசிரியர் நியமனத்தில் குழப்பம் அரசு தெளிவுபடுத்த கோரிக்கை
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற செயலாளர் மீனாட்சி சுந்தரம் நேற்று வெளியிட்ட அறிக்கை: பள்ளிக் கல்வித்துறையில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் 4 அமைச்சர்கள் பொறுப்பேற்றுள்ளனர். 5வதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் பொறுப்பேற்றுள்ளார். 2 ஆண்டுகளில் 64,734 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பழனியப்பன் தெரிவித்துள்ளார்.
2011ல் 55,000 ஆசிரியர் நியமிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கு பிறகு வந்த அமைச்சர் 55,000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர் என்றார்.
பின்னர் வந்த அமைச்சர் சிவபதி 2012ல் 26,686 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என்றார். இதுகுறித்து சர்ச்சை எழுந்தது. ஆனால் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 19,000 பேருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டது.
இந்நிலையில்தான் உயர்கல்வித்துறை அமைச்சர் 2 ஆண்டுகளில் 64,734 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று திருச்சியில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
எனவே நியமிக்கப்பட்ட ஆசிரியர்களில் முழு நேர ஆசிரியர்கள் எத்தனைபேர், பகுதி நேர ஆசிரியர்கள் எத்தனை பேர், தொகுப்பூதிய ஆசிரியர்கள் எத்தனைபேர், காலமுறை ஊதிய ஆசிரியர்கள் எத்தனை பேர் என்று தெளிவாக அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment