Tuesday, December 31, 2013

PallikudamNEWS

இன்றைய கல்வி செய்திகள் 01.01.2014

மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற வங்கிகளில் கணக்கு தொடங்க வேண்டும் கலெக்டர் தகவல்

பொறுப்பாளர் நியமனத்தில் வருது மாற்றம்: தேர்வுத்துறை 'ரொம்ப ஸ்டிரிக்ட்'

2014 ஜனவரி முதல் அகவிலைப்படி உயர்வு 100% முதல் 101% வரை உயரக்கூடும்?

மாணவர்கள் சேர்க்கை சரிந்தது : ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் தொடங்க ஆர்வம் இல்லை

மாற்றுத்திறனாளி பி.எட்.,பட்டதாரிகளுக்கு சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு பயிற்சி மையங்கள்: மாவட்ட வாரியாக அமைக்க உத்தரவு

வழக்குகளை விரைந்து முடிக்க பள்ளிக் கல்வித் துறை சுறுசுறுப்பு!

அரசு பள்ளி மாணவர்களுக்கு 1.58 கோடி பாட புத்தகங்கள்

நேற்று, ஒரே நாளில் மட்டும்,1,000க்கும் அதிகமான அரசு ஊழியர்கள் பணி ஓய்வு

பொது தேர்வு பொறுப்பாளர் நியமனம்: தேர்வுத்துறை இனி தேர்ந்தெடுக்கும்

ரூ.2 லட்சம் வரை அனுமதி : ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம்

கொடிநாள் வசூலிப்பதில் திருச்சி முதலிடம்

சளி, காய்ச்சலா? டயல் செய்யுங்க '104'

இணையதளம் மூலம் 288 பள்ளிகள் ஒருங்கிணைக்கும் திட்டம் : முன்னோட்ட பணிகள் கோவையில் துவக்கம்

தமிழகத்தில் 'ஆதார்' எண் பணி ஜனவரி இறுதி வரை நீட்டிப்பு


PallikudamNEWS

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை பள்ளிக்கூடம் இணையதளம் மூலம் தெரிவித்துகொள்கிறது


Monday, December 30, 2013

பள்ளி Pallikudam

உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு அவசியம்: மத்திய அமைச்சர்


           கல்வியில் இடஒதுக்கீடு என்பது அவசியம் வேண்டும். ஏனெனில், நாட்டின் பெரும்பகுதி மக்களுக்கு நெடுங்காலமாக, கல்வி உரிமை உள்ளிட்ட பல்வேறு உரிமைகள் மறுக்கப்பட்டே வந்துள்ளன. இடஒதுக்கீடுதான் அவர்களை பொது களத்திற்கு அழைத்து வந்துள்ளது.
            இதைக் கூறியிருப்பவர் மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சர் ஜெயராம் ரமேஷ்தான். அவர் மேலும் கூறியுள்ளதாவது:
           இந்தியாவின் பப்ளிக் பள்ளிகள், பணக்கார குழந்தைகளுக்காக மட்டுமே அதிகம் பயன்படுகின்றன. அதேசமயம், கீழ் மட்டங்களைச் சேர்ந்த அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள், கல்வியிலிருந்து பின்தள்ளப்படுகின்றனர்.
              நமது நடப்பு கல்வியமைப்பில், ஏழை - பணக்காரர் வித்தியாசம் பெரியளவில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. முன்னேறிய மேற்கு நாடுகளைப் பொறுத்தவரை, கல்வி என்பது முற்றிலும் பொதுப்படையானதாக இருக்கிறது. ஆனால், இந்தியா போன்ற நாட்டிலோ, பணக்கார குழந்தைகள் மட்டுமே பப்ளிக் பள்ளிகளை அணுக முடிகிறது.
                அரசுப் பள்ளிகளின் நிலைமை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. கட்டாய கல்வி உரிமைச் சட்டம், அனைவருக்கும் தரமான கல்வி என்ற இலக்கினை அடைய ஓரளவு துணைபுரிகிறது.
                கல்வித் துறையில் அதிக முதலீடுகள் செய்யப்பட வேண்டும். ஏராளமான குழந்தைகளுக்கு, கற்கும் வாய்ப்புகள் கிடைக்காமல் இருக்கையில், அவர்களால் எப்படி எதிர்காலத்தில் நல்ல வேலை வாய்ப்புகளைப் பெற முடியும்?
                        கேரளாவை எடுத்துக்கொண்டால், அங்கே அரசின் கல்விக்கான நிதியில் 60%, கம்யூனிட்டி பள்ளிகளுக்கே செல்கிறது. அரசுப் பள்ளிகளுக்கு அல்ல. அந்த நிதி, சர்ச்சுகள் மற்றும் தனியார் அமைப்புகளால் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

PallikudamNEWs

இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் ஏன்?

         சம்பளத்திலும்,நியமனத்திலும் பாகுபாடு காட்டுகிறது என்பது விளங்கவில்லை.அவ்வாறு, தகுதியற்ற படிப்பாக இருந்தால் ,அதனை படிக்க வேண்டாம் என அறிவித்து விடலாமே !!!
          இடைநிலை ஆசிரியர்கள் என்றால் ஆட்சியாளர்களுக்கு என்ன மாதிரியான என்னமோ தெரியவில்லை.யார் ஆட்சி கட்டிலில் அமர்ந்தாலும்,ஏளனமாக தோன்றுகிறோம் போல!!! அரசாணை எண 153 நாள் :03.06.2010 இதில் கூறப்பட்டுள்ள பட்டதாரி பணியிடங்கள் பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் பெற்று,இரண்டு ஆண்டுகள் ஆகிறது.ஆனால் 
         .இதே அரசாணையில் உள்ள 1743 இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க கடந்த அரசு மறந்தது.மறுத்தது.ஒருவழியாக தற்போதைய அரசு பதிவி ஏற்றவுடன் கல்வித்துறையில் கடந்த அரசு விட்டுச்சென்ற பணி நியமனங்களை நிரப்ப எடுத்த நடவடிக்கைகளில் முதல் நடவடிக்கை இந்த அரசாணையின் படி உள்ள 1743 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் தான்.நவம்பர் 2011 ஆம் ஆண்டில் துவங்கி ,டிசம்பர் 2011 இல் சான்றிதல் சரிபார்ப்பு நடத்தி முடித்து,அம்மாதமே பணி நியமனம் என அறிவித்து,பின்னர் வழக்கின் காரணமாக பணி நியமனம் செய்யாமல்,இழுத்து தற்போது இன்றுவரை 1743 மற்றும் அதற்கு பிறகு அறிவிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் பணியிடங்களையும் நியமனம் செய்யவில்லை.ஆனால்,இதே அரசாணையில் உள்ள பட்டதாரி பணியிடங்கள் நிரப்பப்பட்டு,அதன் பின் பல்வேறு நியமனங்கள் நிறைவேற்றப்பட்டு ,இப்போது 136 நிரப்பப்படாத பணியிடங்கள் முதற்கொண்டு நிறைவேறியாகிவிட்டது.ஆனால்,சென்ற அரசும் சரி,இந்த அரசும் சரி இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் ஏன்? சம்பளத்திலும்,நியமனத்திலும் பாகுபாடு காட்டுகிறது என்பது விளங்கவில்லை.அவ்வாறு, தகுதியற்ற படிப்பாக இருந்தால் ,அதனை படிக்க வேண்டாம் என அறிவித்து விடலாமே !!!

Sunday, December 29, 2013

PallikudamNEWS

முதுகலை ஆசிரியராக 733 பேருக்கு பதவி உயர்வு

           முதுகலை ஆசிரியராக 733 பேருக்கு 28.12.13 நடந்த கலந்தாய்வில் பதவி உயர்வு உத்தரவுகள் வழங்கப்பட்டன. 
             பட்டதாரி ஆசிரியரில், முதுகலை ஆசிரியர் தகுதி வாய்ந்த 897 பேருக்கு பதவி உயர்வு வழங்க மாநிலம் முழுவதும் நேற்று கலந்தாய்வு நடந்தது. 3,000 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள், காலியாக இருந்தும், கடைசியில், 733 பேர் மட்டுமே, பதவி உயர்வு பெற, முன் வந்தனர்.
     இவர்களுக்கு மட்டும், பதவி உயர்வுக்கான உத்தரவுகள் வழங்கப்பட்டன.பதவி உயர்வு இடம், எதிர்பார்ப்பிற்கு மாறாக, நீண்ட தொலைவில் இருந்ததால், 164 பேர், பதவி உயர்வை புறக்கணித்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், 40, திருவள்ளூரில், 31, வேலூரில், 47, சேலத்தில், 48 பேர், பதவி உயர்வு பெற்றனர். சென்னை மாவட்டத்தில், ஐந்து காலி பணியிடங்கள் மட்டுமே இருந்தன.கலந்தாய்வில், 26 பேர், பங்கேற்றபோதும், "சீனியர்' ஐந்து பேர், காலியிடங்களை தேர்வு செய்தனர். இதனால், 21 பேர், பதவி உயர்வை புறக்கணித்தனர்.

PallikudamNEWS

11ம் வகுப்பிற்கு முப்பருவ கல்வி: வலியுறுத்தும் கல்வித்துறை

             "தனியார் பள்ளிகள், அரசு விதிமுறைகளை மதிக்காமல், பிளஸ் 1 வகுப்பில் முழுக்க முழுக்க பிளஸ் 2 பாடத்தையே நடத்துகின்றன. 
          இதை தவிர்க்கவும், பிளஸ் 1 வகுப்பிற்கு உரிய முக்கியத்துவம் அளிக்கவும், முப்பருவ கல்வி முறையை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும்" என கல்வித்துறை வலியுறுத்தி உள்ளது.
              தனியார் பள்ளிகளின் வளர்ச்சியில், பிளஸ்2, 10ம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகள், 100 சதவீத பங்கை வகிக்கின்றன. 100 சதவீத தேர்ச்சி மற்றும் மாநில அளவில், குறிப்பிடத்தக்க இடங்களை பெறுவதன் மூலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகள், பிரமாண்ட வளர்ச்சியை பெற்றுள்ளன.
               வட மாவட்டங்களைச் சேர்ந்த பெற்றோரும், தங்கள் பிள்ளைகளை, இந்த மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகளில் சேர்த்து, லட்சக்கணக்கில் செலவழிக்கின்றனர். தனியார் பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பிலும், பிளஸ் 1  வகுப்பிலும், அந்த வகுப்பிற்குரிய பாடங்களுக்கு, முக்கியத்துவம் அளிப்பதில்லை. ஒன்பதாம் வகுப்பில், 10ம் வகுப்பு பாடத்தை நடத்துவதையும், பிளஸ்1 வகுப்பில், பிளஸ்2 பாடத்தை நடத்துவதையும், பல ஆண்டுகளாக, கடைப்பிடித்து வருகின்றனர்.
                இரு ஆண்டுகள், ஒரே பாடத்தை படிப்பதன் மூலம், மாணவர்களுக்கு, பாடப் பகுதிகள், நன்றாக மனப்பாடம் ஆகிவிடுகின்றன. தேர்வில் சாதிப்பதற்கு இதுவே காரணமாக உள்ளது. இதுபோன்ற விதிமீறலை தடுக்கவும், பிளஸ்1 வகுப்பிற்கு உரிய முக்கியத்துவம் அளிக்கவும், இந்த வகுப்பிலும் முப்பருவ கல்வி முறையை அமல்படுத்தலாம் என கல்வித்துறை கருதுகிறது.
              அதிகாரி ஒருவர் கூறியதாவது: பிளஸ்1 வகுப்பு, பெயர் அளவிற்குத் தான் உள்ளது. பாடமும், சரியாக நடத்துவதில்லை; தேர்வும், முறையாக நடப்பதில்லை. முப்பருவ கல்வி முறையை அமல்படுத்தினால், தனியார் பள்ளிகள் உட்பட அனைத்து வகை பள்ளிகளிலும், முறையாக, பிளஸ் 1 வகுப்புகள் நடக்கும்.
               அந்தந்த பருவ பாடங்களை, ஆசிரியர் நடத்துவர்; தேர்வும் முறையாக நடக்கும். இதனால், முன்கூட்டியே, பொது தேர்வு பாடங்களை நடத்துவதையும் தடுக்க முடியும்.
              தற்போது, ஒன்பதாம் வகுப்பிலும், முப்பருவ கல்வி முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அனைத்து பள்ளிகளிலும் ஒன்பதாம் வகுப்பு பாடங்கள், சரியாக நடக்கின்றன. 10ம் வகுப்பு பாடத்தை, முன்கூட்டியே நடத்துவதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, அந்த அதிகாரி தெரிவித்தார்.
                பத்தாம் வகுப்பிற்கு, முப்பருவ கல்வி முறை வருவதே, பெரும் குழப்பத்தில் உள்ள நிலையில், பிளஸ் 1 வகுப்பிற்கு வருமா என்பது கேள்விக்குறியே.

Saturday, December 28, 2013

PallikudamTAMS

நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு 25 சதவீதம் பதவி உயர்வு அளிக்க கோரிக்கை

           "நேரடி முதுகலை ஆசிரியர் நியமனத்தில் கடைபிடிக்கப்படும், 50 சதவீதத்தில், 25 சதவீதத்தை, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கி, பதவி உயர்வு செய்ய வேண்டும்" என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம், வலியுறுத்தி உள்ளது.
          சங்க தலைவர், தியாகராஜன், பள்ளி கல்வி இயக்குனருக்கு அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: தொடக்க கல்வித் துறையின் கீழ், நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியரில், முதுகலை ஆசிரியர் தகுதி வாய்ந்தவர்களுக்கு, கடைசி வரை பதவி உயர்வே கிடையாது. பள்ளி கல்வித் துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர் மட்டும், கல்வி தகுதிக்கு ஏற்ப பதவி உயர்வு பெற முடிகிறது.
            தற்போது முதுகலை ஆசிரியர் காலி இடங்களில் 50 சதவீதம், பதவி உயர்வு மூலமும், 50 சதவீதம், நேரடி நியமனம் மூலமும் நிரப்பப்படுகின்றன. இதில், நேரடி நியமனத்திற்கான 50 சதவீத இடங்களில், 25 சதவீதத்தை, நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒதுக்கி, பதவி உயர்வு வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
          தியாகராஜன் கூறியதாவது: முதுகலை ஆசிரியர் பணிக்கு தகுதி வாய்ந்தவர்கள், பட்டதாரி ஆசிரியர் பணிக்கும், தகுதியானவராக இருக்கின்றனர். எனவே, இரு தேர்வுகளிலும் அவர்கள் பங்கேற்கலாம். பட்டதாரி ஆசிரியர், அதிகளவில் தேர்வு செய்யப்படுவதால், அவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு உள்ளது.
            ஆனால், எங்களுக்கு, முதுகலை ஆசிரியர் பதவி உயர்வைத் தவிர, வேறு வாய்ப்பு இல்லை. எனவே, எங்களுக்கு, 25 சதவீதம் பதவி உயர்வு வழங்குவதால், யாருக்கும் பாதிப்பு ஏற்படாது, என்றார்.

PallikudamNEWS

பணி நிரவலுக்கு பிறகே ஆசிரியர் நியமனம்

         உபரி (சர்பிளஸ்) ஆசிரியர்களை பணி நிரவல் செய்த பிறகே, புதிய ஆசிரியர்களை நியமிக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. பணிநிரவலுக்கு பிறகு, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை குறையவாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
        கடந்த ஆக.,17, 18 தேதிகளில் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில், 27ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். "தேர்ச்சி பெற்றவர்கள், மதிப்பெண் அடிப்படையில், பள்ளிகளில் காலியாக உள்ள 15 ஆயிரம் பணியிடங்களில் நிரப்பப்படுவர்" என தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி களில், கூடுதலாக உள்ள ஆசிரியர்களை பணிநிரவல் (ஆசிரியர் இல்லாத இடங்களில், உபரி ஆசிரியர்களை நியமித்தல்) செய்த பிறகு, புதிய ஆசிரியர்களை நியமிக்க, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
            கடந்த ஆக.,1 மாணவர்களின் வருகைப்பதிவேடு படி, ஆசிரியர் பணியிடம் நிர்ணயிக்கும் பணி நடந்து வருகிறது. விதிமுறைப்படி, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்; ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை, 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்; ஒன்பது, பத்தாம் வகுப்புகளில் 160 மாணவர்களுக்கு, ஐந்து ஆசிரியர்களும் இருக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான பள்ளிகளில் குறைவான மாணவர்களே வருகின்றனர்.
              இதையடுத்து, உபரி ஆசிரியர்கள் பணிநிரவல் செய்யப்பட உள்ளனர்; பணிநிரவலுக்கு பிறகு, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை குறையவாய்ப்பு உள்ளது. இதனால், தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, பணியிடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

PallikudamNEWS

முதுகலை ஆசிரியராக 733 பேருக்கு பதவி உயர்வு

           முதுகலை ஆசிரியராக 733 பேருக்கு நேற்று நடந்த கலந்தாய்வில் பதவி உயர்வு உத்தரவுகள் வழங்கப்பட்டன. 
             பட்டதாரி ஆசிரியரில், முதுகலை ஆசிரியர் தகுதி வாய்ந்த 897 பேருக்கு பதவி உயர்வு வழங்க மாநிலம் முழுவதும் நேற்று கலந்தாய்வு நடந்தது. 3,000 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள், காலியாக இருந்தும், கடைசியில், 733 பேர் மட்டுமே, பதவி உயர்வு பெற, முன் வந்தனர்.
     இவர்களுக்கு மட்டும், பதவி உயர்வுக்கான உத்தரவுகள் வழங்கப்பட்டன.பதவி உயர்வு இடம், எதிர்பார்ப்பிற்கு மாறாக, நீண்ட தொலைவில் இருந்ததால், 164 பேர், பதவி உயர்வை புறக்கணித்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், 40, திருவள்ளூரில், 31, வேலூரில், 47, சேலத்தில், 48 பேர், பதவி உயர்வு பெற்றனர். சென்னை மாவட்டத்தில், ஐந்து காலி பணியிடங்கள் மட்டுமே இருந்தன.கலந்தாய்வில், 26 பேர், பங்கேற்றபோதும், "சீனியர்' ஐந்து பேர், காலியிடங்களை தேர்வு செய்தனர். இதனால், 21 பேர், பதவி உயர்வை புறக்கணித்தனர்.

Thursday, December 26, 2013

PallikudamNEWS

உஷார் !!!
   
DRESSING ROOM ல கேமரா மறைத்து வைக்கப்பட்டு பெண்கள் படம் பிடிக்க படுகின்றனர்..! அதை தடுக்க ஒரு அருமையான ஆலோசனை....!! நண்பர் பாலா வால் ல ஒரு ஐடியா போட்டிருந்தார் ஆங்கிலத்தில் இருந்தது நான் தமிழில் உங்களுக்காக கொடுக்கிறேன்..!...! TRIAL ROOM ல் உங்களோட செல் போன்ல இருந்து யாருக்காவது கால் பண்ணுங்கள், உங்கள் போனில் இருந்து கால் பண்ண முடியவில்லை என்றால் அங்கு கேமரா பொருத்தப்பட்டுள்ளது என்று அர்த்தம் காரணம் FIBER OPTIC SIGNAL செல் போன் சிக்னலை தடுக்க கூடியது..! அப்படி கால் பண்ண முடியவில்லை என்றால்... உஷார்..!!! நீங்கள் நோட்டமிடபடுகிறீர்கள்....!!! இதை எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க FRIENDS..! 

Wednesday, December 25, 2013

PallikudamNEWS

மத்திய அரசின் "ஸ்காலர்ஷிப் திட்டம்" நடுநிலைப்பள்ளிகளுக்கு தகவல் இல்லை

       "எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான மத்திய அரசின் ஸ்காலர்ஷிப் திட்டத்தில் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்" என, பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.
       மத்திய அரசு தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை என்னும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் தற்போது எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு, அதில் தேர்ச்சி பெறுவோருக்கு, ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை நான்கு ஆண்டுகளுக்கு மாதம் ரூ. 500 வீதம் உதவி தொகை வழங்கப்படும்.
         இதற்கு தேர்வு எழுத ஏழாம் வகுப்பில் ஆதிதிராவிட வகுப்பினர் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பிற வகுப்பினர் 55 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இத்தேர்வு, பிப்., 22ம் தேதி நடக்க உள்ளது. இத்தேர்வுக்கு தலா ரூ. 50 உடன் விண்ணப்பிக்க வரும் 28ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
       இத்தேர்வு குறித்து முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்திலிருந்து, அனைத்து அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கு "இ-மெயில்" மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இப்பள்ளிகளில் மாணவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, தொகையுடன் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு பட்டியல் அனுப்பப்பட்டு விட்டது.
         ஆனால், அன்னூர் ஒன்றியத்திலுள்ள நடுநிலைப்பள்ளிகளுக்கு இதுவரை உதவி தொடக்கக் கல்வி அலுவலகம் அல்லது மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்திலிருந்து தகவல் வரவில்லை. நேற்று முதல் அரை ஆண்டு தேர்வு முடிந்து விடுமுறை துவங்கியது.
          இந்நிலையில் "எந்த தகவலும் வராததால் 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க முடியாமல், நடுநிலைப் பள்ளியில் உள்ள எட்டாம் வகுப்பு மாணவர்கள் இத்தேர்வு எழுத முடியாமல், உதவி தொகை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது" என, பெற்றோர் புகார் தெரிவிக்கின்றனர்.

PallikudamNEWS

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிருப்தி நீதித்துறை ஊழியர்களுக்கு மட்டும் ஊதிய உயர்வு

                அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய, கிருஷ்ணன் தலைமையில் ஊதிய குறைதீர்க்கும் குழுவை அரசு அமைத்தது. 
          இந்த குழுவின் அறிக்கையை அடிப்படையாக கொண்டு அரசாணையில் 89 அறிவிப்புகளை வெளியிட்டது. இதற்கு பின்பும் அரசு ஊழியர்கள் ஊதிய முரண்பாடு சரி செய்யப்படவில்லை என ஆசிரியர்கள், பட்டு வளர்ச்சி ஆய்வாளர்கள், ஊர்புற நூலகர்கள், சாலை ஆய்வாளர்கள், புள்ளியல் துறை அலுவலர்கள் முறையிட்டு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
           இந்நிலையில், நீதித்துறையில் சிராஸ்தார், ஏஏஓ, மேலாளர்களுக்கான கிரேடு ஊதியம் ஸீ4,900 லிருந்து ஸீ5,100, நகல் எடுப்போர், பரிசோதகர்களுக்கு ரூ.2,000லிருந்து ஸீ2,400, உதவியாளர், பெஞ்ச் கிளார்க் அலுவலர்களுக்கு ஸீ2,400லிருந்து ஸீ2,800, ரெக்கார்டு கிளார்க், அசிஸ்டென்ட் ஸீ2,000லிருந்து ஸீ2,400 என உயர்த்தி நிதித்துறை ஒப்புதலுடன் துறை ரீதியான அரசாணை நவ. 8ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. 
          ஊதிய உயர்வு தொடர்பான அரசாணைகள் எப்போதும் நிதித்துறை சார்பில் வெளியிடப்படுவது வழக்கம். ஆனால், தற்போது நிதித்துறை சார்பில் துறை ரீதியான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு உறுப்பினர் சங்கர் கணேஷ் கூறுகையில், ‘’இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை 
களையக்கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். ஆனால் நீதித்துறைக்கு தற்போது ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. 

அரசு இடைநிலை ஆசிரியர்களை வஞ்சித்து வருதாக கருது கிறோம்’’ என்றார்.அரசு ஊழியர் சங்க மாநில நிர்வாகிகள் கூறுகையில், ‘‘ நீதித்துறை நெருக்குதலின் பேரில் அந்தத் துறைக்கு மட்டும் ஊதிய உயர்வுக்கான அரசாணை துறை ரீதியாக வெளியிட்டுள்ளனர். அனைத்து தரப்பில் உள்ள குறைகளை களைய வேண்டும்’’ என்றனர்.

PallikudamNEWS

இடைநிலை ஆசிரியர் சம்பளம் தொடர்பாக மனு தாக்கல்

            இடைநிலை ஆசிரியர்களுக்கான சம்பளத்தை, மத்திய அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இணையாக மாற்றியமைக்க கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 மனு மீதான விசாரணை, இரண்டு வாரங்களுக்கு, தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

PallikudamNEWS

Dec 28ம் தேதி,பட்டதாரி ஆசிரியர்களுக்கான முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு கலந்தாய்வு.

            பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு ஆன் லைன் மூலம் 28ம் தேதி நடைபெற உள்ளது.
          இக்கலந்தாய்வில் 1000 பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கபட உள்ளது. . எஞ்சியுள்ள முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் தற்போது சரிபார்ப்பில் உள்ள முதுகலை ஆசிரியர் தேர்வில் இறுதிசெய்யப்படும் தேர்வர்கள் மூலம் விரைவில் நிரப்பப்படவுள்ளது.

Tuesday, December 24, 2013

பள்ளிக்கூடம் பி.எட்

பி.எட் படிக்கும் மாணவர்களுக்கு மாடல் வினாத்தாள்களை
பள்ளிக்கூடம் பெருமையுடன் வழங்குகிறது

   பி .எட் மாணவர்கள் இங்கே கிளிக் செய்ய

Sunday, December 22, 2013

Pallikudam

அரசு பள்ளிகளில் 'கனெக்டிங் கிளாஸ் ரூம்

முதல்கட்ட நடவடிக்கை துவக்கம்

           தமிழக அரசு பள்ளிகளில், கற்றலை நவீனப்படுத்தும் விதமாக, அனைத்து அரசு பள்ளி வகுப்பறைகளையும் ஒருங்கிணைக்கும் விதமாக, 'கனெக்டிங் கிளாஸ் ரூம்' திட்டம் அறிவிக்கப்பட்டது. 

 
         இத்திட்டத்தில், இணையதள வசதி மூலம், புராஜக்டர் மற்றும் ஆடியோ சிஸ்டம் கொண்டு, ஒரு வகுப்பறையில் நடத்தும் பாடத்தை, அனைத்து பள்ளிகளிலும், அதே பிரிவை சேர்ந்த மாணவர்கள் கவனிக்கவும், விவாதம் நடத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
          இதில் முன்னோட்டமாக, மாவட்டத்துக்கு, ஐந்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தேர்வு செய்யப்பட்டு உள்ளது. ஒவ்வொரு பள்ளிக்கும் இதற்கான உபகரணம் வாங்கவும், வகுப்பறை அமைக்கவும், 42 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்துக்கு, ஐந்து பள்ளி வீதம், இத்திட்டம் முதல்கட்டமாக செயல்படுத்தப்பட்டு, அதில் உள்ள குறைபாடுகள், சிக்கல்கள் களையப்பட்டு, மேம்படுத்திய பின், அனைத்து அரசு பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட உள்ளது. 
            தற்போது, கனெக்டிங் கிளாஸ் ரூம் எப்படி அமைக்க வேண்டும்? எதன் செயல்பாடுகள் எவ்வாறு அமையும் என்பது குறித்த, பயிற்சி முகாம் ஏற்பாடு செயப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆங்கிலத்திறன், கம்ப்யூட்டர் திறன் படைத்த ஆசிரியர் ஆகியோருக்கு இப்பயிற்சி வழங்கப்படுகிறது. கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, சேலம், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, நாமக்கல் மாவட்டங்களில் உள்ளவர்களுக்கு, கோவை, ராஜாவீதி, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், டிச., 30ம் தேதி நடக்கிறது. இப்பயிற்சி முடிந்த பின், பள்ளிகளில் கனெக்டிங் கிளாஸ் ரூம் அமைக்கப்பட்டு, செயல்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Pallikudam

வாக்காளராக சேர மீண்டும் வாய்ப்பு: ஜன.,7 முதல் விண்ணப்பிக்கலாம்


         லோக்சபா தேர்தலில் ஓட்டளிக்க வசதியாக, ஜன.,7 முதல், புதிய வாக்காளர் சேர்க்கைக்காக மனுதரலாம், என, தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.        2014 ஜன.,1ஐ தகுதி நாளாகக்கொண்டு, 18 வயதுநிரம்பியோர், தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது, நீக்குவது, முகவரி மாற்றம் உள்ளிட்ட வாக்காளர் சுருக்கத்திருத்தப்பட்டியல் பணிக்காக, அக்.,1 முதல் 31 வரை மனுக்கள் பெறப்பட்டன. ஆன்லைனிலும் விண்ணப்பம் செய்யப்பட்டது. இதை சரிபார்க்கும் பணி நடக்கிறது. அடுத்தாண்டு, ஜன.,6ல், திருத்தப்பட்ட வாக்காளர் பெயர்பட்டியல் வெளியிடப்படுகிறது. இதனிடையே, விண்ணப்பிக்க தவறியோர் லோக்சபா தேர்தலில் ஓட்டளிக்க வசதியாக, ஜன.,7 முதல், அந்தந்த தாலுகா அலுவலகங்களில், வாக்காளர் பெயர் சேர்ப்பு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, தேர்தல் கமிஷன் அறிவுரை வழங்கி உள்ளது. அது சரிபார்க்கப்பட்டு, வாக்காளர் துணைப்பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இருபட்டியல்களும் தொகுக்கப்பட்டு, லோக்சபா தேர்தலுக்கான வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட உள்ளன. ""இப்பணிகளை விரைந்து முடிக்க, தேர்தல் கமிஷன் அறிவுரை வழங்கி உள்ளது.

PallikudamNEWS

மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு: கல்வித்துறை உத்தரவு

        உயர்நிலை,மேல்நிலை தலைமை ஆசிரியராக இருப்பவர்கள், மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதற்கு சமமான அலுவலர் பணியிடங்களுக்கு, விருப்பம் தெரிவித்து விட்டு அதை மாற்ற கூடாது என பள்ளி கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.

        2014ம் ஆண்டுக்கான மாவட்ட கல்வி அலுவலர், அதற்கு சமமான அலுவலர் பணியிடங்களுக்கான, முன்னுரிமை உள்ள தேர்வு செய்யப்பட்டோர் பட்டியலை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதில், உயர்நிலை, மேல்நிலை ஆகிய இரண்டில், எதிலிருந்து மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு பெற விரும்புகிறார்? என்பதை தெரிவிக்க வேண்டும்.
   
          தலைமை ஆசிரியர்களால் அளிக்கப்படும், விருப்ப உரிமை இறுதியானது, எதிர்காலத்தில் எந்தவித காரணத்தினாலும் மாற்ற இயலாது. மாவட்ட கல்வி அலுவலராக, பதவி உயர்வு, பணி மாறுதலில் செல்ல விருப்பம் தெரிவித்து விட்டு, பதவி உயர்வு அளிக்கும்போது, தனது விருப்பமின்மையை தெரிவிப்பதால், மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள், காலியாக உள்ள சூழ்நிலை ஏற்படுகிறது.
           இதனால், நிர்வாக பணிகளில் காலதாமதம் ஏற்படுவதோடு, மீண்டும் ஒரு துணை தேர்வாளர்கள் பட்டியல் தயார் செய்யப்படும் நிலை உள்ளது. எனவே, விருப்ப உரிமை அளிப்பதில் கவனமாக செயல்பட வேண்டும். மேலும், மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு பெறவிருக்கும், தலைமை ஆசிரியர்கள், 2009 ஜன.1ம் தேதி முதல், 2013 டிசம்பர் 31 வரை உள்ள காலங்களுக்கு பணிக்காலத்தில் அவரின் தலைமையில் பள்ளியின் சிறப்பு வரவு, செலவு திட்ட அறிக்கை தவறாமல் பெற்றனுப்பட வேண்டும்.
           தலைமை ஆசிரியர்கள் சார்பில் விருப்ப கடிதம் மற்றும் படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு கடந்த ஆண்டு அளித்திருந்தாலும், இந்த ஆண்டும் புதிய விருப்ப கடிதம், படிவம் இணைத்தனுப்ப வேண்டும் என பள்ளி கல்வி இயக்குனரகம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

Saturday, December 21, 2013

PallikudamNEWS LInK

Pallikudamseithi

நில அளவை - Land Measurement

PallikudamNEWS

அனைவருக்கும் கல்வி இயக்கம் கலைக்கப்படாது - முதன்மை செயலர் சபிதா

          அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தை, ( எஸ்.எஸ்.ஏ.,), அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கத்துடன் இணைப்பது குறித்து, எவ்வித ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை' என, பள்ளிக்கல்வித்துறை, முதன்மை செயலர் சபிதா தெரிவித்தார்.

          கடந்த, 2000ம் ஆண்டில், அனைவருக்கும் கல்வித்திட்டத்தை, மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதன் மூலம், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல், பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மாற்றுத்திறனாளி மாணவர்களின் வாழ்கை தரத்தை மேம்படுத்துதல், இடைநிற்பதை தவிர்த்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. 
           இத்திட்ட காலம், 2010ல், முடிந்தது; தொடர்ந்து, மூன்றாண்டுகள் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், மத்திய மனித வளமேம்பாட்டு துறை இத்திட்டத்தை, அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தில் இணைக்க, ஆலோசித்து வருவதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சமீபத்தில், அனைவருக்கும் கல்வி இயக்க முக்கிய பணியான, வட்டார வள மைய மேற்பார்வையாளர் பணியிடங்கள் கலைக்கப்பட்டு, அதில் பணிபுரிந்தவர்கள், கலந்தாய்வின் மூலம் மீண்டும் பள்ளிகளுக்கே அனுப்பப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, சம்பளம் வழங்குவதற்கான நிதியை, மத்திய அரசு நிறுத்தியதே காரணம் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் பணியிடங்கள் கலைப்பு,, இத்திட்டத்தை நிறுத்துவதற்கான, மறைமுக நடவடிக்கை என்று கூறப்பட்டது. திட்டம், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்துடன் இணைக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் கிளம்பியுள்ளது. இதுகுறித்து, பள்ளிக்கல்வி முதன்மை செயலர் சபிதாவிடம் கேட்டபோது, ""அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தை, அனைவருக்கும் இடைநிலைக்கல்வி இயக்கத்துடன் இணைப்பது தொடர்பாக எவ்வித ஆலோசனைகளும், மேற்கொள்ளப்படவில்லை. தற்போதைக்கு, அனைவருக்கும் கல்வி இயக்கம் கலைக்கப்படாது,'' என்றார்.

PallikudamNEWS

ரேஷன் கார்டு செல்லத்தக்க காலம் நீட்டிப்பு.

               புழக்கத்தில் உள்ள, ரேஷன் கார்டுகளின் செல்லத்தக்க காலத்தை, மேலும் ஓராண்டிற்கு நீட்டித்து, முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்,'' என, உணவு துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். சென்னை எழிலக வளாகத்தில், உணவு துறை ஆய்வு கூட்டம், நேற்று, நடந்தது. இதில், அமைச்சர் காமராஜ் பேசியதாவது:
           நடப்பாண்டிற்கு புதுப்பிக்கப்பட்ட, ரேஷன் கார்டுகளின் பயன்பாட்டு காலம், வரும், 31ம் தேதியுடன் முடிவடைகிறது. உடற்கூறு முறையிலான, தேசிய மக்கள் தொகை பதிவாளர் கணக்கெடுப்பு பதிவுகளின் அடிப்படையில், "ஸ்மார்ட் ரேஷன் கார்டு' வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.எனினும், மத்திய அரசின், மக்கள் தொகை பதிவாளரின் கணக்கெடுப்பு பணி முழுமையாக முடிந்து, தகவல் தொகுப்பை பெற, காலதாமதமாகும் என்பதால்,2014 15ல் தான், "ஸ்மார்ட் ரேஷன் கார்டு' வழங்க முடியும் என, தெரிகிறது. எனவே, தற்போது புழக்கத்தில் உள்ள, ரேஷன் கார்டுகளின் செல்லத்தக்க காலத்தை, 31.12.14 வரை என, மேலும் ஓராண்டிற்கு நீட்டித்து, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். தற்போது,புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகளில், 2014ம் ஆண்டிற்கும் உள்தாள் ஒட்டப்பட்டு இருப்பதால், இதையே பயன்படுத்தி, உணவு பொருட்களை பெறலாம். இவ்வாறு, அவர் பேசினார்.

PallikudamNEWS

தொழில் வரி இந்த அரையாண்டு முதல் உயர்வு.

            தமிழகத்தில் பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில், (அக்.,1) முதல் தொழில் வரியை 35 சதவீதமாக உயர்த்த உத்தரவிடப்பட்டுள்ளது. வணிக நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு, தொழில் வரி வசூலிக்கப்படுகிறது. 
           ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை சீராய்வு செய்து, வரி நிர்ணயம் செய்யப்படும். இதற்குமுன் 1.10.2008ல் தொழில் வரி சீராய்வு செய்யப்பட்டது.தற்போது 25 சதவீதம் தொழில் வரி வசூலிக்கப்படுகிறது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட வரி சீராய்வு அடிப்படையில், 1.10.2013 முதல் 25 சதவீதமாக இருந்த தொழில் வரி, 35 சதவீதமாக உயர்த்தப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, அனைத்து மாநகராட்சி, நகராட்சி கமிஷனர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்களுக்கும், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி இயக்குனர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். வரி உயர்வு தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றவும் உத்தரவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

PallikudamNEWS

PallikdamNEWS
to get our Elementary Directer`s diary

DEE diary


பள்ளிக்கூடம்

உண்மை தன்மை அறியும் விண்ணப்பம்

விண்ணப்பம்

    வல்லம் ஒன்றிய ஆசிரியர்களுக்கு

இங்க கிளிக் செய்ய

Wednesday, December 18, 2013

PallikudamNEWS

மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் 2016க்குள் டெட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் - இயக்குனர்தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்: மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களுக்கு சிக்கல். அனைத்து ஆசிரியர்களும், 2016க்குள்,தகுதித்தேர்வில்தேர்ச்சி பெற்றிக்க வேண்டுமென,மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் உத்தரவு

          கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் ,பள்ளிகளில்10ம் வகுப்பு வரை,தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் எனவும், 2010ஆக., 23க்கு பிறகு,நியமனம் பெற்ற ஆசிரியர்கள் 5 ஆண்டுகளுக்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



              இதை,ஏற்கனவே பள்ளிக் கல்வித்துறை செயல்படுத்தியதால்,அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளின் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டனர்.இந்நிலையில், 2016க்குள் மெட்ரிக் பள்ளிகளின் ஆசிரியர்களும்,தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென,இயக்குனரகமும் உத்தரவிட்டது. இதனால்,பல தனியார் பள்ளிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.தனியார் மெட்ரிக் பள்ளி நிர்வாகி ஒருவர் கூறுகையில், "ஏற்கனவே,தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற சில ஆசிரியர்கள்,அரசு பள்ளிக்கு சென்று விட்டனர். வருங்காலங்களிலும்,தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் ஆசிரியர்கள் அரசு பணிக்கு தான் செல்வர்,தனியார் பள்ளியை விரும்ப மாட்டார்கள். இதனால்,தனியார் பள்ளிகளை நடத்துவதில் சிக்கல் ஏற்படும்" என்றார்.

PallikudamNEWS

பொது தேர்வில் முறைகேட்டை தடுக்க மாஸ்டர் பிளான்


               தமிழக கல்வித்துறை வரலாற்றில் மாவட்டங்களில் உள்ள கல்வித்துறை அதிகாரிகளே அரசு பொது தேர்வுக்குரிய சூப்ரவைசர்கள், பறக்கும்படை உறுப்பினர்களை அந்தந்த மாவட்டத்திற்கு நியமனம் செய்து வந்தனர். தேர்வுகளில் முறைகேட்டை தடுக்கும் வகையில் முதல், முதலாக சென்னையில் உள்ள பள்ளிக் கல்வித்துறையில் இயக்குனர்களே இந்த நியமனத்தை செய்ய உள்ளனர்.

               தமிழகத்தில் பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி அரசு பொது தேர்வு முறைகளில் ஆண்டுக்கு ஆண்டு புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. தற்போது பிளஸ் 2 பொதுதேர்வுகள் வரும் மார்ச் 3ம் தேதி துவங்கி மார்ச் 25ம் தேதி வரையும், எஸ்.எஸ்.எல்.சி தேர்வு மார்ச் 26ல் துவங்கி ஏப்ரல் மாதம் 9ம் தேதி வரையும் நடக்கும் என்று தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

                    தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டதை தொடர்ந்து தேர்வு எழுதுவோர் பட்டியல் விபரம் ஏற்கனவே தோராயமாக கேட்கப்பட்டு தற்போது இறுதி பட்டியல் கேட்கப்பட்டும் முழு விபரத்தையும் தனித்தனியாகவும், ஆன்லைன் மூலமாகவும் அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் ஆன்லைனில் இதனை அனுப்புவதற்கான படிவம் விபரம் நேற்று அனைத்து மாவட்டத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

                        அந்த படிவத்தின் அடிப்படையில் மாணவ, மாணவிகள் விபரத்தை அனுப்பி வைக்கும் பணியினை அதிகாரிகள் துவக்கி இருப்பதாக கூறப்படுகிறது.இந் நிலையில் தேர்வில் சில பள்ளிகளில் முறைகேடு புகார் திடீர், திடீரென ஏற்படுவதால் அதனை முற்றிலுமாக ஒழித்து கட்டி நூற்றுக்கு நூறு சதவீதம் தேர்வினை சிறப்பாக எந்தவித பிரச்னையும் இல்லாமல் நடத்தி முடிக்க வேண்டும் என்று கல்வித்துறை முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இதற்காக முதல் முறையாக இதுவரை இருந்த சில நடைமுறைகளை மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு தேர்வு அறையிலும் கண்டிப்பாக 20 மாணவர்கள் தான் தேர்வு எழுத வைக்க வேண்டும். அதற்கு மேல் எண்ணிக்கையில் மாணவர்களை அனுமதிக்க கூடாது.ஒரு மையத்தில் உதாரணத்திற்கு 145 மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள் என்றால் 7 அறையில் தலா 20 மாணவர்களையும், ஒரு அறையில் 5 மாணவர்களும் தேர்வு எழுத வைக்க வேண்டும். 

                        இதேபோல் தேர்வு அறையின் கண்காணிப்பாளர்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். அதில் சீனியர்கள், தலைமையாசிரியர்கள் போன்றோர் பறக்கும்படைக்கு நியமிக்கப்படுவர். இந்த நியமனம் அனைத்தும் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் அளவில் தேர்வு செய்து கொள்வர்.ஆனால் வரும் தேர்வுக்கு ஹால் சூப்ரவைசர்கள், பறக்கும்படைக்கு யார் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதை சென்னையில் உள்ள இயக்குனர் நேரடி கண்காணிப்பில் அவர்களே தேர்வு செய்வர். 

                         தேர்வுக்கு பயன்படுத்தக் கூடிய ஆசிரியர்கள் லிஸ்ட் மட்டும் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் அனுப்பி வைத்து விட வேண்டும்.எந்த மையத்திற்கு எந்த ஆசிரியர் சூப்ரவைசர், பறக்கும்படையில் இடம் பெறப் போவது யார் என்பது குறித்த விபரத்தை இயக்குனர் தேர்வு செய்து அனுப்புவார். அதன் அடிப்படையில் தான் தேர்வு பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்த முறையும் புதியதாக வரும் தேர்வில் அமல்படுத்தப்படுகிறது.இதே போல் விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர் தேர்வும் சென்னையில் உள்ள கல்வித்துறை இயக்குனர் அளவில் தான் நடக்கிறது. 

                  இதன் மூலம் எனக்கு உடல்நிலை சரியில்லை உள்ளிட்ட பொய்யான காரணங்களை சொல்லி விடைத்தாள் திருத்தும் பணிக்கு செல்லாமல் டிமிக்கி கொடுக்கும் ஆசிரியர்களுக்கும் வரும் தேர்வு மூலம் அதிரடி ஆப்பு வைக்கப்பட்டிருப்பதாக கல்வித்துறையினர் தெரிவித்தனர்.விடைத்தாள் திருத்துவோர் பட்டியல் இயக்குனர் அலுவலகத்தில் இருந்து தான் வரும். அந்த லிஸ்டில் இடம் பெற்றுள்ள ஆசிரியர்கள் அனைவரும் கண்டிப்பாக விடைத்தாள் திருத்துவதற்கு சென்று ஆக வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டிருக்கிறது.

                         இயக்குனர் அளவில் தான் இந்த முடிவு என்பதால் ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள கல்வித்துறை அதிகாரிகளுக்கு புதிய முறை மூலம் பல்வேறு வேலைகள் இல்லாத நிலை உருவாக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் வரும் எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் புதிய அதிரடி திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு நடக்க உள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

PallikudamNEWS

2,695 ஆசிரியர் பணியிடங்களை நேரடியாக நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அரசு அனுமதி


     அரசு பள்ளிகளில் 981 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் உள்பட 2,695 பணியிடங்களை நடப்பு கல்வியாண்டில் ( 2013-14 ) நேரடியாக நிரப்ப தேர்வு வாரியத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. பணியிடங்கள் விவரம் வருமாறு:

பள்ளிக்கல்வித்துறையில்

PG. -981
BT TAMIL. -115
BT OTHERS -417
PET -99
ஓவிய ஆசிரியர் -57
இசை ஆசிரியர் -31
தையல் ஆசிரியர் -37

தொடக்கக் கல்வித்துறையில்

இடைநிலை ஆசிரியர் -887
உடற்கல்வி ஆசிரியர் -37

            மேற்கண்ட காலிப்பணியிடங்களின் பட்டியல் பாடவாரியாக ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இப்பணியிடங்கள் அண்மையில் நடந்து முடிந்துள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு மூலம் நிரப்பப்படுமா? அல்லது புதிய தேர்வுகள் வைத்து நிரப்பப்படுமா? என்பதை ஆசிரியர் தேர்வு வாரியம்தான் முடிவு செய்யும் என பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.இராமேஸ்வரமுருகன் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tuesday, December 17, 2013

PallikudamNEWS

வருமான வரி செலுத்தும் சம்பளதாரர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அம்சங்கள்

பிரீத்தி குல்கர்னி - இக்கனாமிக் டைம்ஸ் ஆய்வு பிரிவு
வருமான வரி செலுத்தும் சம்பளதாரர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நடப்பு நிதி ஆண்டிற்கான வரி சேமிப்பு திட்டங்கள், பிடித்தம் செய்யப்பட வேண்டிய தொகை குறித்த விவரங்களை பணிபுரியும் நிறுவனங்களுக்கு சம்பளதாரர்கள் தெரிவிக்க வேண்டும்.

வீட்டு வாடகைப்படி
ஆண்டு வருமானத்திலிருந்து வீட்டு வாடகையை கழிப்பது தொடர்பான விதிமுறைகளில் இந்த ஆண்டு மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆண்டிற்கு ரூ.1 லட்சத்துக்கும் அதிகமாக வீட்டு வாடகை செலுத்துபவர்கள் வீட்டு உரிமையாளரின் ‘பான்’ எனப்படும் நிரந்தர வருமான வரி கணக்கு எண்ணை சமர்ப்பிக்க வேண்டும்.
வீட்டு உரிமையாளரிடம் ‘பான்’ அட்டை இல்லையென்றால், அவரிடமிருந்து ஒரு உறுதிமொழியை பெற்று அதனுடன் அவரது பெயர் மற்றும் முகவரியை முழுமையாக தெரிவிக்க வேண்டும்” என்று கூறினார்.

புதிதாக வீடு வாங்குவர்களுக்கு நடப்பு நிதி ஆண்டில் புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, வீட்டுக்கடன் வாங்குபவர்கள் வருமான வரிச் சட்டம் பிரிவு ‘80 இஇஇ’-ன் கீழ் அவர்கள் செலுத்தும் வட்டியில் கூடுதலாக ரூ.1 லட்சத்தை ஆண்டு வருமானத்திலிருந்து கழித்து கொள்ளலாம். இந்த நிதி ஆண்டில் அவர் செலுத்தும் வட்டி ரூ.1 லட்சத்துக்கும் குறைவாக இருந்தால் அடுத்த நிதி ஆண்டில் எஞ்சியுள்ள தொகைக்கு வருமான வரிச் சலுகை பெறலாம்.

இந்த சலுகையை பெறுவதற்கு வாடிக்கையாளர் பெறும் வீட்டுக்கடன் ரூ.25 லட்சத்துக்கும் குறைவாகவும், வாங்கும் வீட்டின் மதிப்பு ரூ.40 லட்சத்துக்கும் அதிகமாகவும் இருக்க கூடாது. மேலும், கடன் பெற்ற தினத்தன்று வாடிக்கையாளர் சொந்தமாக வீடு வைத்திருக்க கூடாது.
குறைந்த வருவாய் பிரிவினர்
வரி விதிப்பிற்கு உட்பட்ட ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கும் குறைவாக உள்ளவர்களுக்கு இந்த நிதி ஆண்டில் ரூ.2,000 வரித் தள்ளுபடி (டாக்ஸ் ரீபேட்) அளிக்கப்படுகிறது. அவர் செலுத்த வேண்டிய வரி அல்லது ரூ.2,000 இதில் எது குறைவானதோ அந்த தொகைக்கு தள்ளுபடி அளிக்கப்படுகிறது.

PallikudamNEWS

இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய விகிதம் தொடர்பான வழக்கு இரண்டு வாரம் ஒத்திவைப்பு

        இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய விகிதம் தொடர்பான TATA பொதுச்செயலாளர் திரு.கிப்சன் அவர்கள் தொடர்ந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் 11ஆம் எண் நீதிமன்றத்தில் நீதியரசர் சுப்பையா அவர்கள் முன்னிலையில் விசாராணைக்கு வந்த போது அரசு தரப்பு  வழக்கறிஞர் இரண்டு வார காலஅவகாசம் கேட்டதை தொடர்ந்து வழக்கு 2 வாரம் ஒத்திவைத்து நீதிபதி  உத்தரவிட்டார்.

PallikudamNEWS

வருங்கால வைப்பு நிதி - 8.5 சதவீத வட்டி இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது.

    தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்ட, சந்தாதாரர்களின் கணக்கில் உள்ள டிபாசிட்டுக்கு, 8.5 சதவீத வட்டி வழங்கப்பட உள்ளது. 
          இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது.வருங்கால வைப்பு நிதி திட்டத்தில், சேர்ந்து கணக்கு வைத்துள்ளவர்களுக்கு, அவர்கள் கணக்கில் வரவு வைக்கப்படும் தொகைக்கு, ஆண்டுதோறும், வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டி, எவ்வளவு சதவீதம் என்பதை, இ.பி.எப்.ஓ., என்ற, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தின் கீழ் செயல்படும், டிரஸ்டிகளின் மத்திய போர்டு கூடி முடிவு செய்யப்படும்.இந்த வகையில், 2013 14ம் ஆண்டுக்கான, வட்டியை முடிவு செய்வதற்காக, நேற்று, டிரஸ்டிகளின் மத்திய போர்டு கூடுவதாக இருந்தது. போர்டின் தலைவரும், மத்திய தொழிலாளர் நல அமைச்சராக இருந்த சிஸ்ராம் ஓலா மறைவையடுத்து, நேற்றைய கூட்டம் ரத்து செய்யப்பட்டது.தற்போது, தொழிலாளர் துறை அமைச்சராக, ஆஸ்கர் பெர்னாண்டசுக்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. விரைவில், இவர் தலைமையில் வாரிய கூட்டம் நடைபெறும். கடந்தாண்டு, இ.பி.எப்., டிபாசிட்டுக்கு, 8.5 சதவீத வட்டி அளிக்கப்பட்டது. இதுவே, 2013 14ம் ஆண்டிற்கு வழங்கப்படும் என தெரிகிறது.

Saturday, December 14, 2013

PallikudamNEWS

சொந்த ஊரில் தேர்வு தனித்தேர்வர்கள் குஷி

           பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தனித்தேர்வு எழுதுவோர், அவர்களது சொந்த ஊரிலேயே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளது.
           பத்தாம் வகுப்பு, பிளஸ் 2வில் பள்ளிகளில் பயிலாதோருக்கு, தனித்தேர்வு மையங்கள் செயல்படுத்தப்பட்டு வந்தது. ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் பல கி.மீ., தூரத்தில் உள்ள ஏதேனும் ஒரு மையத்தில், தேர்வு எழுதி வந்தனர். தற்போது அந்தந்த ஊரிலேயே உள்ள ஏதேனும் ஒரு தேர்வு மையத்தில் எழுத அனுமதிக்கப்பட உள்ளனர். இதனால் தனித்தேர்வர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

PallikudamNEWS

கல்வி உதவித்தொகை பெற திறன் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: தேர்வுத்துறை அறிக்கை

           8–ம் வகுப்பு மாணவர்கள் உதவித்தொகை பெற திறன் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
         தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தின் கீழ்படிப்புதவித்தொகை எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. உதவித்தொகை வழங்க மாணவர்களை தேர்வு செய்யும் பொருட்டு என்.எம்.எம்.எஸ். தேர்வு அனைத்து வட்டார அளவில் நடைபெறவுள்ளது. தேர்வு தேதி 22–2–2014 இத்தேர்வுக்கான விண்ணப்பங்களை16–ந்தேதி முதல் 20–ந்தேதி வரை இத்துறையின் இணையதளம் வழியாக 16–ந்தேதி முதல் 20–ந்தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம்.
               அரசுமாநகராட்சிநகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்2013–2014 கல்வி ஆண்டில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவமாணவியர் அவர்தம் பெற்றோரின் குடும்ப வருமானம் ஆண்டொன்றுக்கு ரூ.1,50,000–க்கு மிகாமல் இருக்கவேண்டும். இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க தாங்கள் பயிலும் பள்ளியின் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
           தலைமை ஆசிரியர்கள் வெற்று விண்ணப்பங்களை எட்டாம் வகுப்பு பயின்று வரும் மாணவர்களிடம் கொடுத்து பெற்றோர் உதவியுடன் பூர்த்தி செய்தல் வேண்டும். புகைப்படம் ஒட்டி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தேர்வர்கள் தாம் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியரிடம் தேர்வுக் கட்டணம் ரூ.50 உடன் 25–12–2013–க்குள் ஒப்படைத்தல் வேண்டும்.
        தலைமை ஆசிரியர் பூர்த்தி செய்யப்பட்ட அனைத்து விண்ணப்பங்களையும் www.tndge.in என்ற இணையதளம் மூலம் 23–ந்தேதி முதல் 31–ந்தேதிக்குள் பதிவு செய்தல் வேண்டும். இந்த தகவலை அரசு தேர்வுத்துறை இயக்குனர் கு.தேவராஜன் வெளியிட்டுள்ளார்.