Thursday, November 12, 2015

pallikudam

CPS திட்டத்தில் கட்டணம் வசூலிக்க உத்தரவு அரசு ஊழியர் அதிர்ச்சி

         மத்திய அரசின் புதிய பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டத்தில், பல்வேறுதலைப்புகளின் கீழ், கட்டணம் வசூல் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.மத்திய, மாநில அரசுகளின் கீழ் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு, 1.1.2004 முதல் புதிய பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

         இத்திட்டம் நடைமுறைக்கு வந்து பத்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், மற்ற மாநிலங்கள் எல்லாம் நிதி பிடித்தம் செய்து, ஓய்வு ஊதிய நிதி ஒழுங்காற்று ஆணையத்தில் செலுத்தி உள்ளன. ஆனால், தமிழகத்தில் இதுநாள் வரை ஒரு பைசா கூட ஓய்வு ஊதிய திட்டத்தில் பணம் செலுத்தவில்லை என்பது தெரியவந்துள்ளது. இந்த பிரச்னை ஒரு புறம் நீடித்து வருகிறது.இந்நிலையில், புதிய பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்ட சந்தாதாரர்களுக்கு கணக்குகளை பராமரிக்க, கட்டணம் வசூல் செய்ய மத்திய அரசின் ஓய்வு ஊதிய துறை உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி மத்திய கணக்கு பதிவு முகமைக்கு (சி.ஆர்.ஏ) வந்துள்ள உத்தரவில், கணக்கு துவங்குவதற்கு ரூ.50 ம், ஆண்டு பராமரிப்பு கட்டணமாக ரூ.190 ம், ஒவ்வொரு பண பரிவர்த்தனையின் போதும் ரூ.4 ம், ஓய்வு ஊதிய நிதி மேலாளர்களுக்கும் கணக்கு பராமரிப்புகட்டணம் செலுத்த வேண்டுமென அறிவிப்பு வெளியிடப்பட்டது.இந்நிலையில், 1.1.04 க்கு முன்பே பணியில் சேர்ந்த அனைத்து அரசு ஊழியர்களுக்கும், வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட கணக்குளை பராமரிக்க, பராமரிப்பு கட்டணம் வசூல் செய்வதில்லை. மத்திய அரசின்தற்போதைய அறிவிப்பானது, அரசு ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக குமுறுகின்றனர்.திண்டுக்கல் பிரடெரிக் ஏங்கல்ஸ் கூறியதாவது: புதிய ஓய்வு ஊதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு 12 ஆண்டுகள் ஆகியும், ஒருவருக்கு கூட ஓய்வூதியம் வழங்கவில்லை.
கடந்த சட்டசபை தேர்தலின்போது, புதிய ஓய்வு ஊதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய திட்டத்தையே நடைமுறை படுத்த உள்ளதாக, முதல்வர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார். அதை இதுவரை நிறைவேற்றாததால், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் இந்த புதிய கட்டண அறிவிப்பானது, மேலும் அதிருப்தியை அதிகரிப்பதாக உள்ளது.இது குறித்து தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் மவுனம் சாதிப்பதுவியப்பை ஏற்படுத்துகிறது. குடும்ப ஓய்வு ஊதியம், மற்றும் ஓய்வு ஊதியம் உள்ளிட்ட பலன்களை முறையாக வழங்க முன்வர வேண்டும், என்றார்.

pallikudam

pallikudam

New School & Upgrade School Proposals - Requested Proceeding

         2016 - 2017 கல்வியாண்டில் புதிய தொடக்கப்பள்ளி துவங்க மற்றும் நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்துவதற்கானவிண்ணப்பங்கள் வரவேற்று இயக்குனர் செயல்முறைகள் 

 

Wednesday, November 11, 2015

Pallikudam

பள்ளிகளில் மழை காலங்களில் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

Tuesday, November 10, 2015

Pallikudam

ஆசிரியர்கள் உயர்கல்வி பயில முன் அனுமதி கட்டாயம்.
         தமிழகத்தில் செயல்படும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் ஆசிரியர்கள் உயர்கல்வியை தொடர, முன் அனுமதி பெறுவது கட்டாயம் என, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

             அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், நேரடியாக உயர்கல்வியை தொடர, அரசு தடை விதித்துள்ளது. ஆனால், பகுதி நேரமாகவோ, தொலை துார கல்வி மையங்கள் வாயிலாகவோ உயர்கல்வியை தொடர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பதவி உயர்வு, ஊக்க ஊதியம் போன்வற்றுக்கு கல்வி தகுதிகள் மதிப்பீடு செய்யப்படுகிறது. இதன் காரணமாக, அரசு பணியில் சேரும் பலர் உயர்கல்வியை பகுதி நேரமாகவும், தொலைதுாரக்கல்வி வாயிலாகவும் தொடர்ந்து வருகின்றனர். ஆனால், துறை அனுமதி இன்றி உயர்கல்வியில் சேர்பவர்கள், பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதனால், உயர்கல்வி பயில விரும்பும் ஆசிரியர்கள் முன் அனுமதி பெறுதல் தொடர்பாகவும், யாரிடம் பெறவேண்டும் என்பது குறித்து குழப்பங்கள் எழுந்ததால், தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில், கோவை மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் மூலம் தகவல்கள் பெறப்பட்டது. அதன் படி, எம்.பில்., பிஎச்.டி., போன்ற ஆராய்ச்சி படிப்புகளில் சேர்பவர்கள் துறை தலைவரான பள்ளிக்கல்வித்துறை இயக்குனரிடம் முன் அனுமதி பெற்று இருப்பது அவசியம். பி.எட்., எம்.எட்., போன்ற படிப்புகளுக்கு, பள்ளி தலைமையாசிரியரிடமே முன் அனுமதி பெற்றிருந்தால் போதுமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pallikudam

தப்பியது தமிழகம் ! புயல் அபாயத்தில் இருந்து தமிழகம் .....பல மாவட்டங்களில் கொட்டியது மழை.
Dinamalar Banner Tamil News வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த, காற்று அழுத்த தாழ்வு மண்டலம், கடலுார் அருகே, நேற்று இரவு கரையை கடந்தது. இதனால், புயல் அபாயத்தில் இருந்து தமிழகம் தப்பியது. எனினும், தமிழகத்தின் பல மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும், பரவலாக கனமழை கொட்டியது.

      வங்கக் கடல் பகுதியில் இருந்து, அரபிக் கடலை நோக்கி, காற்று அழுத்த தாழ்வு நிலை திரும்ப வாய்ப்பு உள்ளதால், தமிழகத்தின் வட மாவட்டங்களில், இன்றும் மழை உண்டு.

       சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறியதாவது:வங்கக் கடலில், சென்னை - புதுச்சேரி இடையே மையம் கொண்டு இருந்த காற்று அழுத்த தாழ்வு நிலை, குறைந்த காற்று

             அழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. 'இது, புயலாக மாற வாய்ப்பு உள்ளது; இன்று காலை, 6:30 மணியளவில் கரையை கடக்கும்' என, கணிக்கப்பட்டது.ஆனால், குறைந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறாமல், கணிக்கப்பட்டதை விட முன்னதாகவே, நேற்று இரவு புதுச்சேரிக்கும், கடலுாருக்கும் இடையே கரையை கடந்தது. இது, தற்போது, அரபிக் கடலை நோக்கி திரும்பும் வாய்ப்பு உள்ளது. எனவே, தமிழகத்தின் வட மாவட்டங்களில், இன்றும் மழை நீடிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
வேகம் தணிந்தது:
         புயல் உருவாகவில்லை என்பதால், தமிழகம் தப்பியதுஎன்றே கருதப்படுகிறது. எனினும், காற்று அழுத்த தாழ்வு காரணமாக, சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும், நேற்றும் கனமழை தொடர்ந்தது. மாலைக்கு பின், மழையின் வேகம் சற்று தணிந்தது.காற்று அழுத்த தாழ்வு மண்டலம், கரையை கடந்த போது, மணிக்கு, 70 கி.மீ., வேகத்தில் காற்று வீசியது; பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன. மின் கம்பங்கள் சாய்ந்து, விபத்து ஏற்படாமல் இருக்க, கடலுார் மற்றும் வட மாவட்டங்களின் சில பகுதிகளில், நேற்று முன்தினம் மதியம் முதலே, மின் வினியோகத்தை, தமிழ்நாடு மின் வாரியம் நிறுத்தி இருந்தது. கடற்கரை பகுதி மக்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாற்று இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். குறைந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலத்தால், எட்டு மாவட்டங்களில், 10 செ.மீ.,க்கு மேல் மழை பெய்துள்ளது.காஞ்சிபுரம், நாகப்பட்டினம் மாவட்டங்களில் அதிகபட்சமாக, 20 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.
7 பேர் பலி:
        தமிழகத்தில் கனமழைக்கு, ஏழு பேர் பலியாகி உள்ளனர். சென்னையில், மூன்று பேர்; விழுப்புரம் மற்றும் அரியலுார் மாவட்டங்களில், தலா ஒருவர்; காஞ்சிபுரம் மாவட்டத்தில், இருவர் உயிரிழந்து உள்ளனர். மாநிலம் முழுவதும், நேற்று பிற்பகல், 2:00 மணி நிலவரப்படி, 300 வீடுகள் சேதமடைந்தன; 8,500 மரங்கள் சாய்ந்தன.
40 விமானங்கள் தாமதம்:
          வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால், சென்னை விமான நிலையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், நேற்று முன்தினம் முதல், கனமழை பெய்து வருகிறது. இதனால், சென்னைக்கு வந்து செல்லும் விமானங்கள், நான்கு மணி நேரம் வரை தாமதமாக வந்து சென்றன; 40 விமானங்களின் சேவையில், நேற்று பாதிப்பு ஏற்பட்டது; பயணிகள் அவதிக்குள்ளாகினர். சென்னை துறைமுகத்தில், மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

Pallikudam

'சஞ்சாயிகா' சேமிப்பு திட்டம் புத்துயிர் தருமா கல்வித்துறை
          பள்ளி குழந்தைகள் மத்தியில் சிக்கனம், சேமிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பல ஆண்டுகளுக்கு முன், பள்ளி கல்வித்துறை மூலம், 'சஞ்சாயிகா' என்ற சிறுசேமிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது.

      துவக்கத்தில் நல்ல வரவேற்பை பெற்ற இத்திட்டம், நாளடைவில் முடங்கியது. இன்றைய காலகட்டத்தில் மாணவ, மாணவியர் மத்தியில், பணப்புழக்கம் அதிகமாக உள்ளது. அலைபேசி, சினிமா, சுற்றுலா என, வீணாக இப்பணத்தை செலவிடுகின்றனர்.

சிறு வயதில் மாணவ, மாணவியர் மத்தியில் சிக்கனம், சேமிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். பள்ளிகளில், 'சஞ்சாயிகா' சிறுசேமிப்பு திட்டத்துக்கு புத்துயிர் தந்து, தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் இத்திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்.

Sunday, November 8, 2015

Pallikudamnews

7ம் வகுப்பு முதல் மாணவியருக்கு 'சுடிதார்':
          அடுத்த கல்வியாண்டில் இருந்து, ஏழாம் வகுப்பு முதல், மாணவியருக்கு, 'சுடிதார்' வழங்க, துவக்க கல்வித்துறை, அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

       அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு, 'சைக்கிள் பாக்யா, ஷிர பாக்யா, ஷூ பாக்யா' கொடுக்கப்பட்டது. இதையடுத்து, தற்போது, ஏழாம் வகுப்பு முதல், மாணவியருக்கு, 'ஸ்கர்ட் - சர்ட்'க்கு பதிலாக, 'சுடிதார்' கொடுக்க வேண்டும் என, துவக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக கல்வித்துறை, அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.
முதல்வருடன், துவக்க கல்வித்துறை அமைச்சர் கிம்மனே ரத்னாகர் பேச உள்ளார்.அரசு ஒப்புதல் அளித்தால், அடுத்த கல்வியாண்டு முதல் இத்திட்டம் அமலுக்கு வரும். இதன் மூலம், ஏழாம் முதல், 10 வகுப்பு வரை படிக்கும் மாணவியருக்கு, 'சுடிதார்' வழங்கப்படும். இதற்காக, அரசுக்கு, 85 கோடி ரூபாய் செலவாகும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

Pallikudamnews

திறனாய்வு தேர்வில் தவறான விடையால் குழப்பம்
           தமிழகத்தில், 1.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்ற, தேசிய திறனாய்வு தேர்வில், ஒரு வினாவுக்கு, தவறான விடை கொடுத்திருந்ததால், மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆராய்ச்சி படிப்பு வரை, மத்திய அரசின் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கு இரண்டு கட்ட தேசிய திறனாய்வுத் தேர்வை எழுத வேண்டும்.

             மாநில அளவில் தேர்ச்சி பெறும், முதல், 300 மாணவர்கள், தேசிய தேர்வு எழுதலாம். இதில், முதல், 1,000 இடங்களுக்குள் வந்தால், உதவித்தொகை கிடைக்கும்.

மாநில அளவிலான முதற்கட்ட தேர்வு, நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது. இதில், 6,766 பள்ளிகளைச் சேர்ந்த, 1.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். அறிவுத்திறன் தேர்வு, கல்வித்திறன் தேர்வு என, இரண்டு தாள்களுக்கு தலா, 100 மதிப்பெண்களுக்கு தேர்வு நடந்தது. முதல் தாளில், 50 மதிப்பெண்களுக்கு ஆங்கில இலக்கணத் தேர்வு உண்டு.

இதில், குறைந்தபட்சம், 20 மதிப்பெண்கள் பெற்றால் தான், மற்ற கேள்விகளுக்கு விடைகள் திருத்தப்படும்; தேர்விலிருந்து மாணவர் நீக்கப்படுவார். நேற்றைய தேர்வில், முதல் தாளில், சிந்தனை மற்றும் கணிதத் திறன் குறித்த, 25ம் எண் கேள்விக்கு, வினாத்தாளில் கொடுக்கப்பட்ட நான்கு விடைகளும் தவறாக இருந்தன.

அந்தக் கேள்விக்கு, 'ரூட்' அடையாளத்துடன், 90 (√90) என்பது விடையாக வர வேண்டும். ஆனால், அந்த விடை கொடுக்கப்படவில்லை. அதனால், மாணவர்கள் நீண்ட நேரம் குழப்பம் அடைந்தனர். இந்த கேள்விக்கு எப்படி மதிப்பெண் வழங்கப்படும் என, தேர்வு மையத்தில் எந்த அறிவிப்பும் வழங்கப்பவில்லை.

Pallikudamnews

மின் வாரியத்தில் 1,950 பேருக்கு வேலை விரைவில் வெளியாகிறது அறிவிப்பு
         மின் வாரியத்தில், புதிதாக, 1,950 ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதுதொடர்பான அறிவிப்பு, விரைவில் வெளியாக உள்ளது. தமிழ்நாடு மின் வாரியத்தில், உதவியாளர், பொறியாளர் என, 1.38 லட்சம் பணியிடங்கள் உள்ளன. இதையடுத்து, 1,950 காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

            புதிய ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கான, நிதி ஒதுக்கீடு குறித்து, உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். தற்போது, அந்தப் பணியும் முடிவடைந்ததால், ஊழியர்கள் நியமனம் குறித்த அறிவிப்பு, விரைவில் வெளியாக உள்ளது.

இதுகுறித்து, வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'உதவி பொறியாளர், தொழில்நுட்ப உதவியாளர், இளநிலை உதவியாளர் என, 1,950 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். இதற்கான அறிவிப்பு, தீபாவளி முடிந்த, 10 நாளில் வெளியிடப்படும். 2016 மார்ச்சில், ஊழியர்கள் தேர்வு முடிக்கப்பட்டு விடும்' என்றனர்.

Pallikudam

கனமழை :
       இன்று பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
வேலூர்,
அரியலூர்,
தஞ்சை,
திருவாரூர், திருவண்ணாமலை
சென்னை
திருவள்ளூர்
கடலூர்
காஞ்சிபுரம்
காரைக்கால்
புதுச்சேரி
விழுப்புரம்
ஆகிய மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு கனமழை காரணமாக
இன்று விடுமுறை அறிவிப்பு.

pallikudam

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் தமிழ் இணையக் கல்விக்கழகம் இணைந்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அடிப்படை கணினி பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது. மூன்று நாட்களுக்கு நடைபெறும் பயிற்சியில் இரண்டு நாட்கள் கணினி சார்ந்த பயிற்சியும், ஒரு நாள் தமிழ் வளர்ச்சி சார்ந்த பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது. ஐ.சி.டி (தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் ) குறித்த முக்கியத்துவத்தை உணர்ந்து இப்பயிற்சியானது திரு. ஆசிர் ஜூலியஸ், திருமதி. உமா மகேஸ்வரி, திருமதி. சித்ரா திரு அசோக் மற்றும் பலர் இணைந்து சரியாக திட்டமிட்டு சிறப்பான முறையில் SCERT – ஆல் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இப்பயிற்சி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு Sri Balaji Chokkalingam Engineering College வளாகத்தில் 04.11.2015 முதல் 06.11.2015 வரை நடைபெற்ற Basics of ICT வகுப்பு நடைபெற்றது. இதில் 50 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி கருத்தாளர்களாக சங்கரநாராயணன் சத்தியவேல் மற்றும் விஜயகுமார் ஆகியோர்
கலந்துகொண்டனர். பயிற்சி ஒருங்கிணைப்பாளராக கமலி மேடம் அவர்கள் கலந்துகொண்டனர்.
முதல் நாளில் துவக்க விழா கீழ்பென்னத்தூர் ஆசிரியர் பயிற்சி பள்ளியின் முதல்வர் தலைமை தாங்கினார். துணை முதல்வர் வரவேற்புரை நிகழ்த்தினார். SBC Eng college முதல்வர் வாழ்த்துரை வழங்கினார். திருவண்ணாமலை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் விரிவுரையாளர் திருமதி. கமலி அவர்கள் சிறப்பாக ஒருங்கிணைத்தார்.
அதை தொடர்ந்து பயிற்சியில் ஆசிரியர்களுக்கு கணினியை எவ்வாறு இணைப்பது எனவும், Auto Collage மூலம் படங்களை எவ்வாறு Collage செய்வது எனவும், NHM Writer பற்றியும் அவற்றின் சிறப்புகள் பற்றியும், NHM மூலம் எவ்வாறு டைப் செய்வது எனவும், டைப் செய்ததை எவ்வாறு Convert செய்வது எனவும், Google input tools பற்றியும், PhotoStory யை பயன்படுத்தி video தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. ஒவ்வொரு Software பற்றியும் பயிற்சி அளித்தவுடன் பயிற்சி செய்ய நேரம் ஒத்துக்கப்பட்டதால் சந்தேகமின்றி செய்து கற்றுக்கொண்டனர். முதல் நாள் முடிவில் Assingment கொடுக்கப்பட்டது.
இரண்டாம் நாளில் முதல் நாள் கற்றதை நினைவு கூறுவதற்காக கண்களை மூடி நிற்க செய்து முதல் நாள் கற்றதை நினைவுபடுத்தப்பட்டது.முதல் நாள் கொடுக்கப்பட்ட Assingment யை அனைவரும் செய்து வந்து அசத்தினர். பிறகு Hot Potato, Mousemischief ஆகியவற்றில் பயிற்சி அளிக்கப்பட்டது.
 மூன்றாவது நாளில் TVA குழுமம் சார்பில் தமிழ்விக்கிபிடியா தொடர்பான பயிற்சியை என்னால் அனைவருக்கும்  தமிழ் விக்கிபீடியாவில் கணக்கு தொடங்குதல் மற்றும் TVA குழுமம் சார்பில் தமிழ்விக்கிபிடியா பங்களிப்பு குறித்து கருத்துகள் வழங்கப்பட்டது மேலும் திரு.கி. மூர்த்தி அவர்கள் கட்டுரை எழுதுதல் குறித்து பயிற்சியளித்தார். கருத்தாளர் விஜயகுமார் அவர்கள் தாங்கள் எழுதிய கட்டுரைகள் படங்களை பதிவேற்றம் செய்வது குறித்து விளக்கினார். ஆசிர் சார் whatsapp  video play செய்யப்பட்டது. பயிற்சியில் கற்றவற்றை scert feedback link இல் எல்லோரும் தங்கள் பயற்சி அனுபவங்களை பதிவு செய்தனர்.இதன் மூலம் இப்பயிற்சியின் சிறப்பை அறியமுடிந்தது.
இறுதியாக பயற்சி நிறைவு விழாவில் scert பயிற்சி ஒருங்கிணைப்பாளர் மற்றும் diet துணை முதல்வர் கலந்து கொண்டு பயிற்சியில் பங்கேற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் திருவண்ணாமலை மாவட்ட பயிற்சி ஒருங்கிணைப்பாளர் திருமதி கமலி நன்றிகள் கூற பயிற்சி இனிதே நிறைவு பெற்றது.

                           நன்றிகள் SCERT AND ICT TEAM.

Tuesday, November 3, 2015

pallikudam

டெங்கு' பாதிப்பை கட்டுப்படுத்த புதிய கஷாயம் வழங்க அரசு முடிவு

'டெங்கு' காய்ச்சலால் இறப்புகள் தொடரும் நிலையில், சித்தா மருத்துவர்களுடன் ஆலோசித்த தமிழக அரசு, ரத்த தட்டணுக்களை அதிகரிக்கச் செய்யும், 'ஆடாதொடை மணப்பாகு' என்ற, கசப்பில்லா கஷாயத்தை, அரசு மருத்துவமனைகளில் வழங்க முடிவு செய்துள்ளது; ஓரிரு நாளில், புதிய கஷாயத்தின் வினியோகம் துவங்கும்.

தமிழகத்தில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் முதல், ஜன., 15 வரை, டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்து வருகிறது. நன்னீரில் உருவாகும், 'ஏடிஸ்' வகை கொசுக்களே இதற்கு காரணம். 2012ல் டெங்கு பாதிப்பால், 66 பேர் இறந்தனர்.

அலோபதி மருத்துவர்களே தகுந்த சிகிச்சை தர திணறிய நிலையில், சுதாரித்த தமிழக அரசு, சித்த மருத்துவர்கள் ஆலோசனைப்படி, நிலவேம்பு கஷாயம், பப்பாளி இலைச்சாறு கொடுத்து நிலைமையை கட்டுப்படுத்தியது. இந்த ஆண்டும், டெங்கு பாதிப்பு மக்களை ஆட்டிப்படைத்து வருகிறது. 

தமிழக அரசின் பல துறைகளும் ஒருங்கிணைந்து, தடுப்பு நடவடிக்கைகள் எடுத்தாலும், இரு மாதமாக இறப்புகள் தொடர்கின்றன. கடந்த, இரு மாதங்களில், 20 பேர் உட்பட, இந்த ஆண்டில், 30 பேர், டெங்கு பாதிப்பு மற்றும் அறிகுறியால் இறந்துள்ளனர். ஆனால், எட்டு பேர் மட்டுமே இறந்துள்ளதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. 

'ரத்த தட்டணுக்கள் வேகமாக குறைவதால், இறப்புக்களை கட்டுப்படுத்த முடியவில்லை' என, மருத்துவர்கள் தரப்பில் காரணம் கூறப்படுகிறது. இதை உணர்ந்த தமிழக அரசு, மீண்டும் சித்த மருத்துவர்களின் உதவியை நாடியுள்ளது.

தமிழ்நாடு அரசு சித்த மருத்துவர் சங்க தலைவர் பிச்சையா குமார், சித்தா மருத்துவர்கள் சங்கர்ராஜ், சைலஷா, ஆராய்ச்சி மாணவர் வீரபாபு குழுவினருடன், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், நேற்று ஆலோசனை நடத்தினார். ரத்த தட்டணுக்கள் குறைவை தடுக்க, 'ஆடாதொடை மணப்பாகு' என்ற கஷாயத்தை, இக்குழுவினர் பரிந்துரைத்து உள்ளனர்.

இதை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு, ஆடாதொடை மணப்பாகு கஷாயத்தை, பொதுமக்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'நிலவேம்பு கஷாயம், பப்பாளி இலைச்சாறுடன், ஆடாதொடை மணப்பாகு கஷாயமும், அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும். இது ஏற்கனவே, 'டாம்ப்கால்' நிறுவனத்தின் தயாரிப்பில் உள்ளதால் சிக்கல் இல்லை. இந்த கஷாய வினியோகம், ஓரிரு நாளில் துவங்கும்' என்றனர். 

தமிழக அரசின் இந்த முயற்சிக்கு, நல்ல பலன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


அது என்ன மணப்பாகு?

சித்தா ஆராய்ச்சி மாணவர் வீரபாபு கூறியதாவது:
ஆடாதொடை இலை, 700 கிராம் எடுத்து, நடுவில் உள்ள நரம்பு மற்றும் காம்பை அகற்ற வேண்டும். அவற்றை, 5.5 லிட்டர் தண்ணீரில் காய்ச்ச வேண்டும். 1.3 லி., அளவுக்கு வற்றியதும், 805 கிராம் நாட்டுச் சர்க்கரையை சேர்த்து கொதிக்க வைத்து, கம்பி பதம் வந்ததும் இறக்கலாம்; இது தான், ஆடாதொடை மணப்பாகு. பழங்கால ஓலைச்சுவடிகளில், இந்த அளவு தான் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. 

இது, ரத்த தட்டணுக்கள் குறையாமல் தடுக்கும்; தட்டணுக்கள் அதிகரிக்கவும் வழி வகுக்கும். ஐந்து வயதுக்கு கீழானோர் - 2.5 மில்லி; 10 வயது வரை உள்ளோர் - 5 முதல் 10 மில்லி; பெரியவர்கள் - 10 முதல் 20 மில்லி வரை அருந்தலாம். தினமும் உணவுக்கு முன், காலை, மாலை என இரண்டு வேளை குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.


அலட்சியம் வேண்டாம்!
பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
* டெங்கு பாதிப்புக்கு, பகல் நேரத்தில் கடிக்கும், 'ஏடிஸ்' கொசுவே காரணம். இது, நன்னீரில் உற்பத்தியாவதால், வீட்டின் உள் பகுதி, சுற்றுப்புற பகுதிகளில், நாள் கணக்கில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்

* தண்ணீர் தேங்க வாய்ப்புள்ள பிளாஸ்டிக் கப், குடம், தேங்காய் மட்டை, டயர்களை அகற்ற வேண்டும். தண்ணீர் தொட்டிகள், தண்ணீர் பாத்திரங்களை, வாரம் ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும்

* சாதாரண காய்ச்சல் என, அலட்சியம் வேண்டாம். உடனடியாக, மருத்துவர்களிடம் செல்வது நல்லது. மருந்து கடைகளில், தானாக மருந்து வாங்கி சாப்பிடுவது தேவையற்ற சிக்கலை ஏற்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த, நிலவேம்பு கஷாயம் நல்ல தீர்வு.இவ்வாறு அவர்கள் கூறினர்.

pallikudam

பொதுத்தேர்வு வினாத்தாளில்புதிய மாற்றங்கள் அறிமுகம்

பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாளில், புரிந்து விடை எழுதுதல், சிந்தனைத் திறன் மற்றும் படித்ததை பயன்படுத்துதல் என, மூன்று வகையான கேள்விகள் இடம்பெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான வினாத்தாள் தயாரிப்பு பணி துவங்கியுள்ளது; ஆசிரியர்கள் மற்றும் நிபுணர்கள் மூலம், 100க்கும் மேற்பட்ட வினாத்தாள்கள் உருவாக்கப்பட்டுள்ளன.முதலில், நுாறு வினாத்தாள்களில், சிறந்த, 10 வினாத்தாள்கள் தேர்வு செய்யப்படும்; பின், அந்த, 10ல் இடம்பெற்றுள்ள, சிறந்த வினாக்களை மட்டும் எடுத்துச் சேர்த்து, இறுதி வினாத்தாள் தயாரிக்கப்படும்.

இதுகுறித்து, தேர்வுத்துறை அதிகாரிகள் கூறியதாவது:தற்போதைய பாடத்திட்டத்தின், 'புளூ பிரின்ட்'டில் உள்ளது போல் தான் வினாத்தாள் இருக்கும். ஆனால், பாடங்களை புரிந்து படித்ததை உறுதி செய்ய உதவும் கேள்விகள்; படித்ததை விடையாக எழுதும் கேள்விகள்; பாடங்களின் அடிப்படையில், சிந்தித்துஎழுதும் கேள்விகள் என, மூன்று வகைகளில் இருக்கும்.புத்தகத்தின் பின்பக்க கேள்விகள் மற்றும் முந்தைய ஆண்டு பொதுத்தேர்வு வினாத்தாளில் உள்ள கேள்விகள் மட்டுமின்றி, தற்போது, புதிய கேள்விகளும் கேட்கப்பட உள்ளன.எனவே, புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் மாணவர்கள் படிக்க வேண்டும்; நிச்சயமாக, பாடங்களை தவிர்த்து எந்த கேள்வியும் இருக்காது. அதே நேரத்தில், பாடங்களின் அடிப்படையில் சிந்தித்து எழுதும் வகையிலான கேள்விகள், நிச்சயம் இடம்பெறும். இந்த முறையில்தான், இந்த ஆண்டுக்கான அரையாண்டுத் தேர்வு வினாத்தாளும் அமையும்.அதன் மூலம் பொதுத்தேர்வு வினாத்தாள் எப்படி இருக்கும் என்பதை மாணவர்கள் அறிய முடியும்.இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏன் புரிந்து படிக்க வேணடும்?

பல பள்ளிகளில், புளூ பிரின்ட்டில் உள்ளது போல், ஒரு குறிப்பிட்ட பாடத்தில் இரண்டு மதிப்பெண் வினாக்கள், இரண்டு கேட்கப்படும் என கூறப்பட்டிருந்தால், அதன்படி, இரண்டு மதிப்பெண் வினாக்களை மட்டுமேகற்றுக் கொடுத்து, பாடத்தின் மற்றஅம்சங்களை விட்டு விடுகின்றனர்.அதேபோல் கேள்வியையும், அதற்கான புத்தக பதிலையும் புரிந்தோ, புரியாமலோ படித்து, அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள், பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளில் திணறுகின்றனர். இதைத் தவிர்க்க, பள்ளி கல்வித்துறைக்கு, அண்ணா பல்கலையில் இருந்து பல்வேறு ஆலோசனைகள் கூறப்பட்டுள்ளன.எனவே, பள்ளி கல்வியை முடிக்கும் மாணவர்கள், உயர்கல்வியில் தடுமாறாமல் இருக்கவும்; பாடங்களை புரிந்து படித்த மாணவர்கள் அதிகமதிப்பெண்ணில் தேர்ச்சி பெறவும், இந்த வினாத்தாள் மாற்றம் உதவும்என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

pallikudam

pallikudam

உங்களுடைய பழைய செல்போனை விற்பதற்கு முன் நீங்கள் கட்டாயம் செய்ய வேண்டியவைகள்...!!

செல்போன் மெமரியை ஏன் நீக்க வேண்டும் ?

நீங்கள் உங்களது மொபைலை நிரந்தரமாக  நண்பர்களுக்கு பயன்படுத்த கொடுப்பதற்கு முன்பும், மொபைலை எக்சேன்ஜ் செய்து புதிய மொபைல் பெறுவதற்கு முன்பு மொபைல் சாப்பில் கொடுப்பதற்கு முன்னரோ... அல்லது தெரிந்தவர்களுக்கு, பழக்கமானவர்களுக்கு நிரந்தரமாக பயன்படுத்த கொடுப்பதற்கு முன்பு நீங்கள் கண்டிப்பாக செய்ய வேண்டிய சில வேலைகள் உள்ளன. 
உங்களிடமுள்ள பழைய/புதிய போன்களை மற்றவர்களுக்கு நிரந்தரமாக கொடுப்பதாக இருந்தால் உங்களுடைய மொபைலில் உள்ள மெமரியை அழித்துவிடுங்கள். 

செல்போனில் மெமரியை அழிப்பது எப்படி ?  

முதலில் உங்களுடைய மொபைலில் உள்ள மெமரி கார்ட்டை எடுத்துவிடுங்கள். காரணம் அதில் உங்களுடைய தனிப்பட்ட படங்கள் உட்பட முக்கியமான தகவல்களும் அதில் இடம்பெற்றிருக்கலாம். 

அடுத்து நீங்கள பயன்படுத்தும் சிம்கார்டை மறக்காமல் எடுத்துவிடுங்கள். இதன்மூலம் உங்களது காண்டாக்ட்டில் இருக்கும் முக்கியமான நபர்களின் செல்போன்கள் எண்களை நீங்களே பாதுகாக்க முடியும். மற்றவர்கள் தவறாக பயன்படுத்துவதையும் தவிர்க்கலாம். 

அடுத்து உங்களுடைய போனில் உள்ள Text message, voice message, picture message போன்ற அனைத்து வகையான SMS களையும் அழிக்க வேண்டும்.

இதற்கு அந்த போனிலேயே ஆப்சன்கள் கொடுத்திருப்பார்கள். எனவே அதில் உள்ள inbox, outbox, draft, sent items போன்ற அனைத்து போல்டர்களிலும் உள்ள குறுந்தகவல்களை அழித்துவிடுங்கள். 

அதற்கடுத்தாற்போல் நீங்கள் கண்டிப்பாக இதைச் செய்தே ஆகவேண்டும். போன் மெமரியில் உள்ள அனைத்து தகவல்களையும் அழிக்க வேண்டும். (Delete Phone memory)

அனைத்து விதமான போன்களுக்கு பொதுவான வழிமுறைகள்: 
(General methods of Reset mobile memory)
  • உங்களுடைய செல்போன் செட்டிங்ஸ் மெனு செல்லுங்கள்..
  • அதில் Data wipe, Memory,  Clear, Master Reset போன்ற ஏதேனும் ஒரு மெனு இருக்கும். 
  • அதில் தொடருங்கள்....
  • பாஸ்வேர்ட் கேட்டதெனில் பொதுவாக 1234, 12345, அல்லது 00000 என்பவையே இருக்கும். 
  • அதைப் பயன்படுத்தி தேவையான செல்பேசியில் உள்ள தகவல்களை நீக்கிவிடலாம். 
மேற்கண்ட முறைகளைப் பயன்படுத்தியும் தகவல்களை அழிக்க முடியவில்லை எனில் உங்கள் மொபைல் கம்பெனியின் கஷ்டமர்கேர்க்கு (custom care) போன் செய்து மொபைலை ரீசெட் (how to reset mobile memory) செய்வது எப்படி என்பதை அறிந்துகொண்டு, அதன்படி செய்யலாம். 

Saturday, October 31, 2015

Pallikudamnews

CTET - மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு வெளியீடு
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) சார்பில் நடத்தப்பட்ட மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (சி.டி.இ.டி.) முடிவு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை www.ctet.nic.in,​​ www.cbse.nic.in​ ஆகிய இணையதளங்களில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
CLICK HERE - CENTRAL TEACHER ELIGIBILITY TEST (CTET) - SEP 2015 RESULTS

மத்திய அரசு பள்ளிகளான கேந்திரிய வித்யாலயா, நவோதயா, அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள், சைனிக் உள்ளிட்ட பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணிகளுக்கு சி.டி.இ.டி. தேர்வு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

2015-ஆம் ஆண்டு தேர்வு கடந்த செப்டம்பர் 20-ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் சேர்த்து மொத்தம் 959 மையங்களில் நடத்தப்பட்ட இந்தத் தேர்வை 7.5 லட்சம் பேர் எழுதினர். இந்தத் தேர்வுக்கான முடிவை சி.பி.எஸ்.இ. வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

தேர்வில் பங்கேற்ற அனைவருக்குமான மதிப்பெண் பட்டியலும், தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கான தகுதிச் சான்றிதழும் விரைவில் விநியோகிக்கப்படும் என சி.பி.எஎஸ்.இ. தெரிவித்துள்ளது.

அடுத்த தேர்வுகள்: 2016-ஆம் ஆண்டுக்கான சி.டி.இ.டி. தேர்வுகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 21-ஆம் தேதியன்றும், செப்டம்பர் 18-ஆம் தேதியன்றும் அடுத்தடுத்து நடத்தப்படும் எனவும் சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.