Saturday, December 14, 2013

PallikudamNEWS

எஸ்.எஸ்.ஏ.,வை, ஆர்.எம்.எஸ்.ஏ.,வுடன் இணைக்கும் யோசனையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை.

           தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்.எஸ்.ஏ.,) சார்பில்,385 வட்டாரங்கள் செயல்படுகிறது. ஒவ்வொரு வட்டாரத்திலும்,முதுகலை அல்லது பட்டதாரி ஆசிரியர்தகுதி பெற்றவர்களை மேற்பார்வையாளர்களாகநியமித்துள்ளது. 
      இதில், 25 சதவீதம் பேர் முதுகலை ஆசிரியர்கள்.கடந்த 2000ல் துவங்கியஎஸ்.எஸ்.ஏ., திட்ட காலம் 2010ல் முடிந்த நிலையி 3ஆண்டு நீடிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை கலைத்து,அனைவருக்கும் இடை நிலை கல்வி (ஆர்.எம்.எஸ்.ஏ.,)திட்டத்துடன் இணைக்கும் யோசனையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை செயல்படுகிறது. ஒரு திட்டம் துவங்கி 10 ஆண்டுக்குள்முடிய வேண்டும். சிலகாரணத்திற்காக எஸ்.எஸ்.ஏ., ஓரிரு ஆண்டு நீடிக்கலாம்.தமிழகத்தில் இத்திட்டம் 3 ஆண்டு நீடித்த நிலையில்,இனிமேலும் நீடிக்க வாய்ப்பு குறைவாகவே உள்ளதாக,கல்வித்துறைஅதிகாரிகள் தெரிவிக்கின்றன.

Friday, December 13, 2013

PallikiudamKEY

Halfyearly Exam Key Answers

10th Standard Half Yearly Exam - (2013-14) - Key Answers
  • Tamil Paper 1 - Key Answer 
  • Tamil Paper 2 - Key Answer - New -

    Thanks to
    Mr. A. Panner Selvam,
    B.T. Asst., GHS, Gangaleri, Krishnagiri Dt 
    &
    & Our Padasalai's Spl. Volunteer Mr. Subramaniyan
    B.T. Asst., GHS, Gangaleri, Krishnagiri Dt.

PallikudamNEWS

 வட்டார மேற்பார்வையாளர் பதவியிலிருந்து உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணி மாறுதல் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு எண்ணிக்கை முழு விவரம் 
 வட்டார மேற்பார்வையாளர் (உயர்நிலைப் பள்ளி த.ஆ பதவி) பணியிலிருந்து உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பணிமாறுதலுக்கான கலந்தாய்வு நாளை நடைபெறும்
             வட்டார மேற்பார்வையாளர் (உயர்நிலைப் பள்ளி த.ஆ பதவி) பணியிலிருந்து உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பணிமாறுதலுக்கான கலந்தாய்வு நாளை 14.12.2013 காலை நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
            ஆனால் முதுகலை ஆசிரியர் பதவியிலிருந்து பதவி உயர்வு மூலம் மேற்பார்வையாளர்களாக சென்றவர்களுக்கு பணி மாறுதல் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.
 பட்டியலில் இடம் பிடித்த உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள்
    ஏழு பேர் கொண்ட அந்த பட்டியல் 
1.SUTHATHIRAM K         -  THENI
2.THAMOTHARAN R       -   VIRUDHANAGAR
3.NAGARAJAN R             -   VIRUDHANAGAR
4.JAYALATHA E               -  TIRUNELVELI
5.AROCKIASAMY A         -  RAMANATHAPURAM
6.JEYARAJU S                 -   RAMANATHAPURAM7.RAJAMAREES S          -  DINDUGAL
14/12/2013 அன்று நடைபெறும் கலந்தாய்வில்  கலந்த கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு    உதவி தொடக்க கல்வி அலுவலர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
         உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலி பணியிடங்கள் எண்ணிக்கை : 416
        உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவிக்கு மாறுதல் நிரப்படவுள்ளவை மொத்தம் : 196
           வட்டார மேற்பார்வையாளர் பதவியிலிருந்து உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவிக்கு பணி மாறுதல் எண்ணிக்கை : 196
உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவிக்கு பதவி உயர்வு  மூலம் நிரப்படவுள்ளவை மொத்தம் : 220
      பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு எண்ணிக்கை : 214
          முன்னுரிமைப்பட்டியல் 1 முதல் 248 வரை உள்ளவர்கள் கலந்து கொள்ள வேண்டும்.
         உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பதவியிலிருந்து உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு எண்ணிக்கை : 6
 தமிழகத் தமிழாசிரியர் கழகம் சார்பில் அதன் மாநிலத்தலைவர் திரு.ஆ.ஆறுமுகம் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் நாளை 14.12.2013 பிற்பகல் நடைபெறுகிறது. ஆசிரியர்கள் பட்டியலில் பெயர் உள்ளதா என உறுதி செய்துகொள்ளுங்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கு தகுதி வாய்ந்த உ.தொ.க.அ பட்டியல்

Thursday, December 12, 2013

PallikudamNEWS

தேர்வு பணியில் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களையும் சேர்க்க திட்டம்.

              பொது தேர்வுப் பணியில், அரசு நடுநிலைப்பள்ளி, பட்டதாரி ஆசிரியரையும் சேர்க்க, தேர்வுத் துறை முடிவு செய்துள்ளது. 
           பிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்வுப் பணியில், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும், பட்டதாரி, முதுகலை ஆசிரியர் மட்டும் ஈடுபடுத்தப்படுகின்றனர். அரசு நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும், பட்டதாரி ஆசிரியர் சேர்க்கப்படுவதில்லை. 
           ஒரே தகுதி உடைய பட்டதாரி ஆசிரியரில், பள்ளி கல்வி துறையைச் சேர்ந்தவர்களை, தேர்வு பணியில் ஈடுபடுத்துவதும், தொடக்க கல்வித் துறையைச் சேர்ந்த ஆசிரியரை, கண்டுகொள்ளாத நிலையும், இத்தனை ஆண்டுகளாக இருந்து வருகிறது."இந்த நிலையை மாற்றி, இரு துறைகளிலும் உள்ள பட்டதாரி ஆசிரியருக்கும், தேர்வுப்பணி வழங்க வேண்டும்' என, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் முன்னேற்றசங்கம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு போன்ற அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், வரும் பொது தேர்வில், நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியரையும், தேர்வுப் பணியில் ஈடுபடுத்த, தேர்வுத் துறை முடிவு செய்திருப்பதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

PallikudamNEWS

குழந்தைகளுக்கு செய்ய வேண்டியவை - கேள்விகளும், பதில்களும்

              குழந்தை வளர்ப்பு தொடர்பான குழப்பங்கள் பல பெற்றோர்களை வாட்டி வதைப்பதாய் உள்ளன. தங்களின் பங்களிப்பை சரியாகத்தான் செய்கிறோமா, தங்களின் குழந்தைகளுக்கு உண்மையில் தேவையானது எது? என்பவை குறித்த சந்தேகங்கள் பல பெற்றோர்களுக்கு உண்டு.
          குழந்தை வளர்ப்பில் தெளிவான சிந்தனையற்ற பெற்றோர்களால், பல குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். மேலும், குழந்தைகளைப் புரிந்துகொள்ள முடியாமல் பல பெற்றோர்களும் திணறுகிறார்கள்.
            எனவே, குழந்தை வளர்ப்பு பற்றிய சில சந்தேகங்களுக்கு, நிபுணர்களின் பதில்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன.
                நான் என் மகளுக்கு வேண்டாததை செய்கிறேன் என்பதை எவ்வாறு அறிந்துகொள்வது? நான் அவளை மிகவும் நேசிக்கிறேன். அவள் மகிழ்ச்சிக்காக அதேசமயம், என் சக்திக்கு உட்பட்டு அவளை மகிழ்ச்சிப்படுத்த முடிந்ததை செய்கிறேன். அவள் அழுவதை என்னால் தாங்க முடியாது.
               குழந்தைக்கு வேண்டாததை செய்வது போன்றதல்ல, குழந்தையை நேசிப்பது. கட்டிப்பிடித்து கொஞ்சுவது, அன்பு செலுத்துவது, அவளுடன் நேரம் செலவழிப்பது, வீட்டுப்பாடம் செய்வதிலும், பாடத்தை படிப்பதிலும் உதவி புரிவது, சிறந்த செயல்களை மனதார பாராட்டுவது மற்றும் பரிசளிப்பபது போன்றவை ஏற்கக்கூடியவை மற்றும் தேவையானவையும்கூட.
              அதேசமயம், கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்தல், மனம்போன போக்கில் போகவிடுதல் உள்ளிட்டவை தவறு. உங்கள் மகளால், அவளுக்கென்று அவளே செய்துகொள்ளக்கூடிய விஷயங்களைக்கூட, நீங்களே செய்துகொடுப்பது கூடாது.
               புத்தகப் பையை சரிசெய்து எடுத்து வைப்பது, தேவையான பென்சில், பேனா மற்றும் இதர பொருட்களை எடுத்து வைப்பது, பென்சில் சீவுதல் மற்றும் பேனாவிற்கு மை ஊற்றுதல் உள்ளிட்ட விஷயங்களை நீங்களே செய்வது மற்றும் குழந்தையை அதிகமான நேரம் டி.வி பார்க்க அனுமதிப்பது மற்றும் வீட்டுப்பாடத்தை நீங்களே செய்வது உள்ளிட்டவை தவறான ஒன்றாகும்.
               உடலுக்கு தீங்குதரும் பொருட்களை, கேட்கிறாளே என்பதற்கான அளவுக்கு அதிகமாக வாங்கித் தருவது தவறு. எனவே, மேற்கூறிய விஷயங்களை தெளிவாகப் புரிந்துகொண்டால், உங்கள் குழந்தைக்கு வேண்டாததை செய்கிறோமா, இல்லையா? என்ற தெளிவு பிறக்கும்.
                     நான் குழந்தை பருவத்தில் பல சிரமங்களை சந்தித்தேன். ஆனால், அந்த கஷ்டங்களை என் குழந்தை படக்கூடாது என்று நினைப்பதோடு, அவனுக்கு ஒரு சிறந்த தகப்பனாக இருக்க வேண்டுமென விரும்புகிறேன். அவனுக்கு வேண்டிய அனைத்தையும் செய்கிறேன் மற்றும் கேட்பதையெல்லாம் வாங்கியும் தருகிறேன். நான் செய்வது சரியா?
                இதுபோன்ற கேள்விகள் பல பெற்றோர்களாலும் கேட்கப்படுவதுதான். பொதுவாக, ஒவ்வொரு குழந்தையும் தங்களுக்கான சொந்த விருப்பங்களுடனேயே பிறக்கின்றன என்பது ஒரு அறிவியல் உண்மை. ஒரு குழந்தை புரண்டு படுப்பது, தவழ்ந்து செல்வது, எழுந்து உட்காருவது மற்றும் எழுந்து நடப்பது உள்ளிட்ட குழந்தையின் உடல்ரீதியான செயல்பாடுகள் நாம் அறிந்ததே.
              குழந்தைகள், தங்களுக்கான ஒரு சமூக உளவியலைக் கொண்டிருப்பார்கள். உங்களின் மகன், குழந்தையாக இருக்கும்போது, அவனுக்கு தேவையான அனைத்து வேலைகளையுமே நீங்கள் செய்திருப்பீர்கள். ஆனால், குழந்தை வளர வளர, அவர்கள் தங்களுக்கான தனித்தன்மையையும், சுதந்திரத்தையும் எதிர்பார்க்கிறார்கள்.
                    உதாரணமாக, உங்கள் மகன் 2 வயதில் இருக்கையில், அவன் பல விஷயங்களை நான் செய்கிறேன், நான் செய்கிறேன் என்று அடிக்கடி சொன்னது உங்களுக்கு நினைவிருக்கலாம். அவன் தனது சுயத்தை வெளிப்படுத்த விரும்புவதன் வெளிப்பாடுதான் இது. நிலைமை இப்படியிருக்கையில், நீங்கள் உங்கள் மகனின் மேல் வைத்திருக்கும் அபரிமித அன்பால், அவனுக்கான அனைத்தையுமே செய்ய எப்போதுமே முயலும்போது, அவனின் சுதந்திர செயல்பாடுகளில் நீங்கள் குறுக்கிடுகிறீர்கள் மற்றும் அவனின் திறன் வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கிறீர்கள்.
                   குழந்தையின் தன்னம்பிக்கை, திறன் மற்றும் சுய சிந்தனை உள்ளிட்ட விஷயங்கள் மேம்பட வேண்டுமெனில், நீங்கள் அனைத்திலும் தலையிடுவதை நிறுத்த வேண்டும். உங்கள் மகனுக்குத் தேவையான அனைத்து வேலைகளையும் செய்யாமல், மாறாக, தேவையான உதவிகளையும், ஆலோசனைகளையும் மட்டுமே செய்யவும்.
                   இங்கே ஒரு பழமொழியை யோசித்துப் பார்ப்பது நல்லது. அதவாது "பசியோடு இருக்கும் ஒருவனுக்கு நீங்கள் பிடித்த மீன்களில் சில துண்டுகளை கொடுப்பதற்கு பதிலாக, மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பதே சிறந்தது" என்பதே அது.
            நானும், எனது மனைவியும் ஒரு குழந்தை மட்டும் போதுமானது என்று நினைக்கிறோம். அப்போதுதான், அந்த குழந்தைக்கு தேவையான அனைத்தையும் செய்து, அதன் மேம்பட்ட வளர்ச்சியில் கவனம் செலுத்தி, அதற்கு சிறப்பான வழிகாட்டுதல்களை கொடுக்க முடியும் என்று நினைக்கிறோம். ஆனால், என் மாமனாரும், மாமியாரும், இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்வது மிகவும் அவசியம். ஏனெனில், ஒரு குழந்தை என்றால் அதிக செல்லம் கொடுத்து, அது கெடுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள். உங்களின் கருத்து என்ன?
              இதுபோன்ற குழப்பங்கள் பலருக்கும் இருக்கின்றன. உங்களின் கருத்துப்படி, ஒரே குழந்தையாக இருந்தால், அனைத்து விஷயத்திலும் சிறப்பான கவனம் செலுத்தி, தேவையானதை நன்றாக செய்து கொடுத்து, படிப்பு உள்ளிட்ட விஷயங்களில் சிறப்பாக உதவிசெய்து அதை முன்னேற்றலாம் என்பது ஏற்கக்கூடிய வாதமே.
                அதேசமயம், ஒரு குழந்தை என்றால் அதிக செல்லமாகிவிடும் என்ற கருத்தைப் பற்றி சொல்ல வேண்டுமெனில், இதற்கு பெற்றோர்தான் காரணம். சரியான மற்றும் தெளிவான அறிவுடைய பெற்றோர்கள், ஒரு குழந்தையாக இருந்தாலும் சரி, 4 குழந்தைகளாக இருந்தாலும் சரி, சிறப்பாகவே அவற்றை வளர்ப்பார்கள்.
               பல ஆய்வு முடிவுகள் கூறுவது என்னவெனில், வீட்டில் ஒரே குழந்தைகளாக இருப்பவர்கள், பிற குழந்தைகளைவிட, சமூக குணநலன்கள், பண்புநலன்கள் மற்றும் உணர்ச்சி நிலைகள் ஆகியவற்றில் எந்த வித்தியாசத்தையும் காட்டுவதில்லை என்பதுதான். எனவே, ஒரு குழந்தை பெற்று வளர்த்தாலே சிறப்பாக வளர்ந்துவிடும் என்றோ அல்லது கட்டாயம் அது தடம் மாறிவிடும் என்றோ அறுதியிட்டு கூறிவிட முடியாது. அனைத்தும் நம் கையில்தான் உள்ளது.
                    எனது மகளுக்கு 9 வயது. அவள் ஒரு வித்தியாசமானவள். தனக்கென்று எதுவும் வேண்டுமென கேட்பதில்லை. அவள் பொருட்களின் மீது ஆசைப்படுபவளாக இல்லை. ஆனால் அவளுக்குத் தேவையான அனைத்தையும் நானே முன்வந்து செய்து கொடுக்கிறேன். பள்ளிக்கு தயார் செய்வதிலிருந்து, உணவு கொடுப்பதிலிருந்து, அவளுக்கு தேவையான உடைகளை குளித்தப் பின்பு எடுத்துக் கொடுப்பதிலிருந்து, அவளின் அறையை சுத்தம் செய்வதிலிருந்து, அவளுக்கு பிடித்தமான உணவை மட்டுமே சமைப்பதிலிருந்து என அனைத்துமே நான் செய்து கொடுக்கிறேன். இதனால், எனது மகளுக்கு, மறைமுகமாக நானே தீங்கு செய்கிறேனா?
                இந்த உலகில் உள்ள ஆடம்பர மற்றும் தேவையற்ற பொருட்களின் மீது உங்களின் மகள் விருப்பமில்லாமல் இருக்கிறாள் என்று கேள்விப்படும்போது சந்தோஷமாக இருக்கிறது. அதேசமயம், ஒரு தாயாக உங்களின் செயல்கள் குறித்து விவாதிக்க வேண்டியுள்ளது.
                  9 வயது பிள்ளைக்கென்று ஒரு தனியான சிந்தனையும், செயல்படும் திறனும் கட்டாயம் இருக்கும். எனவே, அவளுக்குத் தேவையான பல விஷயங்களை அவளாலேயே செய்துகொள்ள முடியும். தனக்கான உணவை தானே போட்டுக்கொண்டு சாப்பிடுவது, தனது அறையை தானே சுத்தம் செய்வது, தானே குளித்துக் கொள்வது போன்றவை அவற்றுள் முக்கியமானவை.
               தேவையான விஷயங்களிலும், உடல்நிலை பாதிக்கப்பட்டிருத்தல் போன்ற நெருக்கடியான நேரங்களிலும் மட்டுமே உங்களின் உதவி தேவைப்படலாம். ஏனெனில், அனைத்தையும் நாமே செய்து கொடுப்பதன் மூலமாக, அவர்களின் சுய ஆற்றல் திறனை நம்மை அறியாமலேயே மழுங்கடிக்கிறோம். இதனால், எதிர்காலத்தில் அவர்கள் தனித்து இயங்கும் ஆற்றல் இல்லாமல் போகிறார்கள்.
               எனவே, அவளுக்கென்று தேவையான சுதந்திரம் கொடுத்து, அவளின் தனித்தியங்கும் ஆற்றலை வலுப்படுத்தி, தன்னம்பிக்கையையும் வளர்த்தெடுக்க வேண்டும். இதன்மூலம் அவளின் செயல்பாட்டுத் திறன் மேம்பாடு அடையும்.

Pallikudamnews

பள்ளிக்கூட வளாகத்துக்குள் வெளி ஆட்கள் நுழைய தடை பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

           பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ – மாணவிகளுக்கு பாதுகாப்பு அவசியம் தேவை என்றும் வெளியாட்கள் சம்பந்தம் இல்லாமல் பள்ளிகளுக்கு வர அனுமதிக்கக்கூடாது என்றும் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
           பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகள் வழியாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:–
மாணவர்களுக்கு பாதுகாப்பு தேவை
           ஒரு சில பள்ளிகளில் பொருட்கள் காணாமல் போவதாகவும், பள்ளிக்கூட வளாகத்திற்குள் வெளியாட்கள் சம்பந்தம் இல்லாமல் நடமாட்டம் இருப்பதாகவும், பள்ளிகளுக்குள் அத்துமீறி செல்வதாகவும், அவர்களால் பள்ளிக்கூட பொருட்கள் சேதப்படுத்தப்படுவதாகவும் என்னுடைய நேரடி கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
               எனவே இத்தகைய நடவடிக்கையை தலைமை ஆசிரியர்கள் விழிப்புடன் இருந்து தவிர்க்கவேண்டும். இது தலைமை ஆசிரியர்களின் கடமை.
                பள்ளிக்கூட மாணவர்–மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு தேவை. மாணவர்கள் அரையாண்டு மற்றும் பொதுத்தேர்வு எழுத உள்ளனர். மாணவர்களின் கல்வி மற்றும் தேர்வு பாதிக்காத வகையிலும், கற்றல் மற்றும் கற்பித்தல் பணிக்கு இடையூறு ஏதும் நேரிடாத வகையிலும் பாதுகாப்புஅளிக்கப்படவேண்டும்.
பொருட்களுக்கு பாதுகாப்பு
               அதுமட்டுமல்லாமல் பள்ளிகளுக்கு வழங்கப்படும் நலத்திட்ட பொருட்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் பள்ளிக்கூட வளாகத்தினுள் பள்ளியைச்சாராத வெளிநபர்கள் வந்து செல்லும் நிலை கண்டிப்பாக தவிர்க்கப்படவேண்டும். பள்ளிக்கூடங்களை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும். பள்ளிக்கூட பொருட்களுக்கு பாதுகாப்பு குறைவு எந்தக்காரணம்கொண்டும் வரக்கூடாது. இந்த அறிவுரைகளை அனைத்து தலைமை ஆசிரியர்களும் கேட்டு அதன்படி நடக்கவேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

PallikudamNEWS

ஆசிரியர்களுக்கு சம்பளம் தர மத்திய அரசு மறுப்பு தமிழக கல்வி துறை அவசர ஆலோசனை

               அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் (எஸ்.எஸ்.ஏ.,) பணியாற்றும், வட்டார வள மைய ஆசிரியர், 4,500 பேருக்கு, சம்பளமாக, 148 கோடி ரூபாய் வழங்க, மத்திய அரசு மறுத்துள்ளது. இதனால், இந்த ஆசிரியரை, மாநில அரசின் சம்பள கணக்கிற்கு மாற்றுவது குறித்து, கல்வித் துறை அவசரமாக ஆலோசித்து வருகிறது.
          அனைவருக்கும் கல்வி திட்டம், மத்திய இடைநிலை கல்வி திட்டம் (ஆர்.எம்.எஸ்.ஏ.,) உள்ளிட்ட சில திட்டங்களுக்கு, மத்திய அரசு நிதி உதவி அளித்து வருகிறது.
           ஆசிரியர் சம்பளம் உள்ளிட்ட, பல திட்டங்களுக்கு, ஆண்டுதோறும் நிதி வழங்குகிறது. இதில், எஸ்.எஸ்.ஏ., கீழ், ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு, பயிற்சி அளிக்கும் பணியில், வட்டார வள மைய ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். வட்டார வாரியாக, 4,500 பேர், பணிபுரிந்து வருகின்றனர். பட்டதாரி ஆசிரியர் நிலையில் பணியாற்றி வரும் இவர்களுக்கு, மத்திய அரசு நிதியில் இருந்து தான், சம்பளம் வழங்கப்படுகிறது. 'இந்த வகையில், 148 கோடி ரூபாய் தர முடியாது' என, மத்திய அரசு கைவிரித்து விட்டதாக, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
          இதனால், 4,500 ஆசிரியருக்கும், இம்மாதம் சம்பளம் தர முடியாத நிலை உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், 148 கோடி ரூபாய் நிதியை, தமிழக அரசு விடுவிக்கக் கோரி, எஸ்.எஸ்.ஏ., அதிகாரிகள், கடிதம் எழுதி உள்ளதாகவும், துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த பிரச்னையை சரி செய்யும் வகையில், மத்திய அரசு சம்பள பட்டியலில் உள்ள ஆசிரியர் அனைவரையும், மாநில சம்பள கணக்கிற்கு மாற்ற, தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

PallikudamNEWS

தமிழக கல்லூரிகளில் சமச்சீர் கல்வி : அரசு பரிசீலனை

                  கல்லூரிகளில் சமச்சீர் கல்வியை கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.தமிழகத்தில் நடைமுறையில் இருந்து வந்த 4 கல்விவாரியத்தை கலைத்து விட்டு பொது கல்வி வாரியம் 2008ல் அறிவிக்கப்பட்டது. 
                   அதன் பிறகு தமிழகத்தில் சமச்சீர் கல்விநடைமுறைக்கு வந்தது. இந்த முறை வரவேற்பு பெற்றது.தமிழகத்தில் உள்ள 16 பல்கலைக்கழகங்களில் வெவ்வேறு பாடத்திட்டங்கள் தற்போது நடைமுறையில் உள்ளது. இதனால் சில பட்டங்கள் வேலைவாய்ப்புக்கு ஏற்றதல்ல என்று நிராகரிக்கப்படுகிறது. 
           சில பட்ட படிப்புகள் இணையில்லை என்றும் நிராகரிக்கப்படுகிறது.இதனால் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெறுபவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இதை தொடர்ந்து ஒரே சமச்சீரான கல்வியை நடைமுறைபடுத்த அரசு சார்பில் ஆலோசிக்கப்பட்டது. இதைதொடர்ந்து கடந்த வாரம் அண்ணா பல்கலைக்கழகத்தில் அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்கள் கூட்டம் நடந் தது. அதில், கல்லூரிகளில் சமச்சீர் கல்வி கொண்டுவருவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இதற்கு பெரும்பாலான துணை வேந்தர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். சமச்சீர் கல்வி தொடர்பாக கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்து அறிய உயர் கல்வி துறை திட்டமிட்டுள்ளது. எனவே விரைவில் சமச்சீர் கல்வியை கொண்டுவருவதற்கான அறிவிப்பை அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

PallikudamNEWS

 
2012-13ஆம் ஆண்டு சத்துணவு அமைப்பாளர்கள் சிறப்பு தேர்வு மூலம் பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் - முறைப்படுத்தி ஆணை வழங்கி பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
  click here to download the DSE proceeding of Noon Meal Organisers To BT appoinment by Special exam- regularisation reg

Wednesday, December 11, 2013

PallikudamNEWS

வட்டார மேற்பார்வையாளர்களை, உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக இடமாற்றம் விரைவில் நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது

              வட்டார மேற்பார்வையாளர்களை உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராகவும், மேலும் 1000 வட்டார வளமைய பயிற்றுநர்களை, ஆசிரியர்களாக பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
            வட்டார வளமைய  மேற்பார்வையாளர் பொறுப்பினை அருகில் உள்ள பள்ளிகளில் உள்ள மூத்த முதுகலை ஆசிரியரோ, அல்லது பட்டதாரி ஆசிரியரோ ஏற்றுக்கொள்ளவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

PallikudamNEWS

PallikudamTEST

Blue Print and Model Question Paper for Subject Wise

Saturday, December 7, 2013

PallikudamTEST

PallikudamNEWS.

ஆரம்ப பள்ளி ஆசிரியர்களுக்கு மொபைலில் "டிப்ஸ்"

ஆரம்ப பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆங்கிலத்தில் கற்பிக்கும் திறனை மேம்படுத்தி கொள்வதற்கான யுத்திகள், ஆலோசனைகள், மொபைல் போன் மூலம் வழங்கப்பட உள்ளன.


இதற்கான திட்டம் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது. இத் திட்டம், பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் மேற்கு வங்க ஆரம்ப பள்ளி வாரியம் கூட்டாக இணைந்து நடத்துகிறது.

PallikudamNEWS

ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கான முன்னுரிமை பட்டியல் ஜனவரி முதல் நாளில் வெளியிட கோரிக்கை

           ஆசிரியர்களின் உதவி உயர்வுக்கான முன்னுரிமை பட்டியலை ஜனவரி முதல் நாளில் இருந்து வெளியிட வேண்டும் என்று ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்து உள்ளது. 
            பதவி உயர்வு முன்னுரிமை பட்டியல் ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கான முன்னுரிமைப் பட்டியல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் நாளை அடிப்படையாக கொண்டு தயார் செய்து வெளியிடப்பட வேண்டும்.
                   இந்த பட்டியல் அந்த ஆண்டு முழுவதும் ஏற்படும் காலிபணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கு செல்லத்தக்கதாகும். துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசியர்களுக்கு தனியாகவும், துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோருக்கு தனித்தனியாகவும் முன்னுரிமை பட்டியல் தயார் செய்யப்படும். அந்த பட்டியலின் முன்னுரிமைப்படி பதவி உயர்வும் வழங்கப்படும். ஆய்வு செய்ய வேண்டும் அதன்படி ஒவ்வொரு ஒன்றியமும் தனி யூனிட்டாக இருப்பதால், ஒன்றிய அளவில் ஆசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியல் அந்தந்த உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களில் தயார் செய்யப்படுகிறது. 
               தயார் செய்யப்பட்ட முன்னுரிமைப் பட்டியல் அந்தந்த ஒன்றிய ஆசிரியர்களின் பார்வைக்கு வைக்க வேண்டும். ஆசிரியர்களிடம் இருந்து ஆட்சேபனை ஏதும் வந்தால் விதிகளின்படி பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பின்பு உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்தில் இருந்து அனுமதிக்காக மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில் ஒன்றியங்களில் இருந்து பெறப்பட்ட முன்னுரிமைப் பட்டியல்களை ஆய்வு செய்து, மேல்முறையீடு வரப்பெற்றால் முறையாக பரிசீலனை செய்து, குறைகள் இருப்பின் நிவர்த்தி செய்து அனுமதி வழங்கப்பட வேண்டும். கலந்தாய்வில் குழப்பங்கள் நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளில் ஏப்ரல் மாத இறுதி வரையிலும் பெரும்பாலான ஒன்றியங்களில் முன்னுரிமைப் பட்டியல் தயார் செய்து ஆசிரியர்களின் பார்வைக்கு வைக்கப்படவில்லை.
                 இதனால் ஆசிரியர்கள் தங்களின் முன்னுரிமையைப் பற்றி அறிந்து கொள்ள இயலவில்லை. பட்டியலில் தவறுகள் இருக்கிறதா என்பதையும் காண முடியவதில்லை. சில சூழ்நிலைகளில் பட்டியலில் தவறுகள் ஏற்படுவதால் கலந்தாய்வு நேரத்தில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படுகின்றன. பின்னர் இயக்குனர் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும். அதுவரையில் தற்காலிகமாக பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்படுகிறது என அறிவிக்கப்படுகிறது. நடவடிக்கை இதனால் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதில் தேவையற்ற காலதாமதங்கள் ஏற்படுகின்றன. களக்காடு, வள்ளியூர் போன்ற ஒன்றியங்களில் மேற்கண்ட சூழ்நிலைகளால் பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. எனவே மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், அனைத்து உதவி மற்றும் கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் 2014 முன்னுரிமைப் பட்டியலை ஜனவரி முதல் நாள் அன்று வெளியிட அறிவுறுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

PallikudamNEWS

சென்னை பள்ளி வகுப்பறைகளில் சுவர் வரைபடங்கள் - ஜனவரியில் வழங்க ஏற்பாடு

          வரலாறு, புவியியல் பாடங்களை பள்ளிக் குழந்தைகள் எளிதாக படிக்கும் வகையில் ஒவ்வொரு வகுப்பறையிலும் சுவர் வரைபடங்கள் (வால் மேப்) ஒட்டப்பட உள்ளன. இதற்காக 35 ஆயிரம் அரசுப் பள்ளிகளுக்கு வரும் ஜனவரியில் சுவர் வரைபடங்கள் வழங்கப்பட உள்ளன.
         பள்ளிப் பாடத்திட்டத்தில் வரலாறு, புவியியல் பாடம் முக்கிய இடத்தை வகிக்கிறது. 3-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை சமூக அறிவியல் என்ற பெயரில் வரலாறு, புவியியல் பாடம் இடம்பெறுகிறது. மேல்நிலைக் கல்வியில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பில் குறிப்பிட்ட பிரிவுகளுக்கு மட்டும் வரலாறு, புவியியல் பாடங்கள் உண்டு.
          வரலாறு, புவியியல் பாடங்களில் மன்னர்களின் ஆட்சி எல்லைப் பகுதி, முக்கிய அமைவிடங்கள், நிலப்பரப்பு, கடல்கள், ஆறுகள், தட்பவெப்ப நிலை, விவசாயம், பயிர்கள் போன்றவை குறித்து எளிதாக அறிந்துகொள்ள வரைபடங்கள் பெரிதும் உதவும்.
வரலாறு, புவியியல் வரைபடங்கள்
           அதுமட்டுமல்லாமல் வரைபடங்கள் தொடர்பாக வினாக்களும் தேர்வில் கேட்கப்படுகின்றன. இந்தக் கேள்விகளுக்கு சரியாக விடையளித்தால் முழு மதிப்பெண் வழங்கப்படும் என்பதால் மாணவர்கள் இதில் அதிக கவனம் செலுத்துகின்றனர். குறிப்பாக 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவோர், வரைபடம் பகுதியில் கூடுதல் கவனம் செலுத்துவர். தேர்வுக்கு மட்டுமின்றி பொது அறிவை வளர்ப்பதிலும் வரைபடங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு.
            இந்நிலையில், 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் சமூக அறிவியல் பாடத்தை நன்கு புரிந்து படிக்கும் வகையில், பள்ளிகளில் சுவர் வரைபடங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 35 ஆயிரம் அரசுப் பள்ளிகளுக்கு சுவர் வரைபடங்களை வழங்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. இவை ஒவ்வொரு வகுப்பறையிலும் ஒட்டப்படும். இந்தியா, தமிழ்நாடு, மாவட்டம் என 3 வகைகளாக வரைபடங்கள் அமைந்திருக்கும்.
ஜனவரியில் விநியோகம்
             லேமினேஷன் செய்யப்பட்ட இந்த வரைபடங்களில் அனைத்து விவரங்களும் தமிழில் குறிப்பிடப்பட்டிருக்கும். அரசு மற்றும் ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளுக்கு மட்டுமே வரைபடங்கள் வழங்கப்படும். வரைபடங்கள் தயாரிப்புக்கான பணியில் அரசு நிறுவனமான தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்விப் பணிக் கழகம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. வரைபடங்களை ஜனவரி மாத இறுதியில் பள்ளிகளுக்கு வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

Friday, December 6, 2013

PallikudamNEWS

உண்மைத்தன்மை கண்டறிய அனைத்து பல்கலைக் கழகங்களின் வரைவோலை தொகை (DD AMOUNT)
1. அண்ணாமலைப் பல்கலைக் கழகம்- 600   
2. அழகப்பா பல்கலைக்கழகம்- 250   
3. தமிழ்நாடு பல்கலைக் கழகம்- 500  
4. இந்திராகாந்தி பல்கலைக் கழகம் -200   
5. தஞ்சை தமிழ் பல்கலைக் கழகம்-1000   
6. பாரதியார் பல்கலைக் கழகம்- 500.  
7. பாரதிதாசன் பல்கலைக் கழகம் -1000  
8. சென்னைப் பல்கலைக் கழகம்- அரசு ஊழியர்களுக்கு இலவசம் 
9. மதுரை காமராஐர் பல்கலைக் கழகம் - 1500   
10. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் -500   
11. சாஸ்த்ரா பல்கலைக் கழகம்- 500  
12. பெரியார் பல்கலைக் கழகம்- 250   
13. Tamilnau Teacher Education University -350.   
14. சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழகம் - துறை ரீதியாக பணம் பெற்று வழங்கும் அலுவலர் மூலமாக அனுப்பும் போது எந்த விதமான கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை.    
15. திருவள்ளுவர் பல்கலைக்கழகம்- 275. 
மேலும் விடுப்பட்ட அல்லது அந்தந்த பல்கழைக்கழகத்தில் உண்மை தன்மை சான்று பெற்றவர்கள் தற்பொழுது நடைமுறையில் உள்ள DD தொகையினைக் குறிப்பிடவும்.

பள்ளிக்கூடம்

பணிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் - 2014 தேதி அறிவிப்பு

          12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு மார்ச் 3 முதல் 25 வரையும்,10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு மார்ச் 26 முதல் ஏப்ரல் 9 வரை நடைபெறும் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 12ஆம் வகுப்புக்கு காலை 10மணிக்கு தொடங்கி மதியம் 1.15மணிக்கு முடிவடைகிறது. 10ஆம் வகுப்பிற்கு காலை 9.15மணிக்கு 12மணிக்கு முடிவடைகிறது. கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும்.  

பாடவாரியாக தேர்வு தேதிகள்:  
மார்ச் 03: தமிழ் முதல்தாள்; 
மார்ச் 5: தமிழ் இரண்டாம் தாள்; 
மார்ச் 6: ஆங்கிலம் முதல் தாள்
மார்ச் 7: ஆங்கிலம் 2ம் தாள்;  
மார்ச் 10: இயற்பியல், பொருளியல்,
மார்ச்13: வணிகவியல், புவியியல், மனையியல்; 
மார்ச் 14: கணிதம், விலங்கியல், நுண்ணுயிரியியல்: 
மார்ச் 17: வேதியியல், கணக்கு பதிவியல்:
மார்ச் 20: உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதம்; 
மார்ச் 24: அரசியல் அறிவியல். நர்சிங், புள்ளியியல்,
மார்ச் 25: கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ-கெமிஸ்ட்ரி.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் - 2014

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் - 2014 தேதி அறிவிப்பு
10ஆம் வகுப்பு தேர்வு தேதிகள்:
மார்ச் 26: தமிழ் முதல்தாள், 
மார்ச் 27: தமிழ் இரண்டாம் தாள், 
ஏப்.1: ஆங்கிலம் முதல் தாள், 
ஏப் 2ம் தேதி ஆங்கிலம் 2ம் தாள், 
ஏப்.4ம் தேதி: கணிதம், 
ஏப்.7ம் தேதி: அறிவியல்,
ஏப்.9ம் தேதி: சமூக அறிவியல்.

Tuesday, December 3, 2013

PallikudamNEWS

சென்னையில் 5ம் தேதி கல்வித்துறை ஆய்வுக்கூட்டம்


           சென்னையில் வரும் 5ம் தேதி கல்வித்துறை தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற உள்ள நிலையில் அனைத்து அதிகாரிகளும் பட்டியல்களுடன் கூட்டத்தில் பங்கேற்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் மற்றும் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் வரும் 5ம் தேதி காலை 9.30 மணிக்கு தாம்பரம், கார்லி மேல்நிலை பள்ளியில் நடைபெற உள்ளது. 

          இந்த கூட்டத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர், பள்ளி கல்வித்துறை முதன்மை செயலா ளர் மற்றும் அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர். அமைச்சரவை மாற்றத்திற்கு பின்னர் பள்ளி கல்வித்துறை அமைச்சர் வீரமணி பங்கேற்கின்ற முதல் ஆய்வு கூட்டம் இது ஆகும். மேலும் இதன் தொடர்ச்சியாக டிசம்பர் 6ம் தேதி பொதுத்தேர்வுகள் தொடர்பான கூட்டமும் சென்னை தாம்பரத்தில் உள்ள கார்லி மேல்நிலை பள்ளியில் நடத்தப்பட உள்ளது.

                இந்த கூட்டத்தில், நடப்பு கல்வியாண்டில் 10, 12ம் வகுப்புகளின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், பெற்றோர் ஆசிரியர் கழகம் வாயிலாக காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் கணிதம், அறிவியல், ஆங்கிலம் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்ட விபரம் மற்றும் முதுகலை ஆசிரியர் நியமிக்கப்பட்ட விபரம் போன்றவை தொடர்பாக ஆய்வு செய்யப்பட உள்ளது.