Tuesday, November 12, 2013

PallikudamNEWS

மாணவர்களிடம் சேமிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்த அஞ்சலக சேமிப்பு சேர்க்க ஆசிரியர்கள் ஒத்துழைப்பு தர தொடக்கக்கல்வி இயக்ககம்உத்தரவு

PallikudamNEWS

தொடக்கக்கல்வி நாட்காட்டி (2013-14)

           தொடக்கக்கல்வி 2013-14 ஆம் கல்வியாண்டிற்கான நாட்காட்டி , மாதிரி கால அட்டவணை மற்றும் தினசரி செயல்பாடுகளுக்கான கால அளவு வழிக்காட்டு அட்டவணையினை தொடக்கக்கல்வி இயக்ககம் வெளியீடு | Elementary Dept 2013 -14 calendar



Saturday, November 9, 2013

PallikudamNEWS

ஆசிரியர் தகுதித் தேர்வு: இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் வருகிறது மாற்றம்

            ஆசிரியர் தகுதித் தேர்வுக்குப் பிறகு மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களின் பணி நியமனம் செய்யும் முறை இந்த ஆண்டு மாறலாம் எனத் தெரிகிறது.
           உச்ச நீதிமன்றத்தில் இதுதொடர்பாக நீண்ட நாள்களாக நிலுவையில் இருந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ள நிலையில், மாநிலப் பதிவு மூப்புக்குப் பதிலாக வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்யலாமா என அரசு பரிசீலித்து வருகிறது.
                ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறும் இடைநிலை ஆசிரியர்கள் மாநிலப் பதிவு மூப்பின் அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் "வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையிலும் பணி நியமனம் செய்யப்பட்டு வந்தனர்.
             இதில் உச்ச நீதிமன்றத்தின் நிலுவையில் உள்ள வழக்கு முடியும் வரை மட்டுமே மாநிலப் பதிவு மூப்பின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
                இந்த ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை இரவு வெளியிடப்பட்டன. இதில் இரண்டு தாள்களையும் சேர்த்து மொத்தம் 4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
            இடைநிலை ஆசிரியர்களுக்கான முதல் தாளில் 14,496 பேரும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான இரண்டாம் தாளில் 12,596 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
            இந்த ஆண்டு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 10 ஆயிரம் காலிப்பணியிடங்களும், இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் 2 ஆயிரம் காலிப்பணியிடங்களும் உள்ளன.
           கடந்த ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் மறுதேர்வு ஆகிய இரண்டு தேர்வுகளிலும் காலிப்பணியிடங்களை விட குறைவான ஆசிரியர்களே தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்ததால் நியமன முறை அதிக முக்கியத்துவம் பெறவில்லை.
              என்ன வழக்கு? இடைநிலை ஆசிரியர்களை மாநிலப் பதிவு மூப்பின் அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் வரை இடைநிலை ஆசிரியர்களை மாநிலப் பதிவு மூப்பின் அடிப்படையில் மட்டுமே நியமனம் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டது.
                அந்தத் தீர்ப்பின் அடிப்படையிலேயே கடந்த ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் மறுதேர்வு இரண்டிலும் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
                 இந்நிலையில் தமிழக அரசின் சார்பில் சில மாதங்களுக்கு முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
               அதில், ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதால், இந்த வழக்கை திரும்பப் பெற அனுமதி வழங்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.
               மனுவை ஏற்று இந்த வழக்கை முடித்துவைத்து உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, மாநிலப் பதிவு மூப்பின் அடிப்படையில் நியமனம் செய்யப்பட வேண்டும் என்ற இடைக்கால உத்தரவு காலாவதியாகியுள்ளது.
                   எனவே, இப்போது ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளவர்களை பட்டதாரி ஆசிரியர்களைப் போல வெயிட்டேஜ் மதிப்பெண் முறை (அரசாணை எண் 252) மூலம் நியமனம் செய்யலாமா அல்லது மாநிலப் பதிவு மூப்பின் அடிப்படையில் நியமனம் செய்யலாமா என தமிழக அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
                            ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றுவதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளிலும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றுவதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளிலும் தேர்ச்சி பெற வேண்டும்.

PallaikudamNEWS

PallikudamNEWS

EMIS - மாணவர்களின் புகைப்படும் எடுக்க உத்தரவு

              பள்ளிக்கல்வி- EMIS - பள்ளிக்கல்வி இயக்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்துவகை மேலாண்மையின் கீழ் செயல்படும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் புகைப்படும் எடுக்க உத்தரவு 

Friday, November 8, 2013

PallikudamNEWS

ஆசிரியர்களின் வருகையை தெரிவிக்கும் திட்டம் விரைவில் மாநிலமெங்கும்!


             "கல்விசார் மேலாண்மை தகவல் முறைமை திட்டத்தின் கீழ், 5.63 லட்சம் ஆசிரியர்களின் விவரம் இம்மாத இறுதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்" என பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் தெரிவித்து உள்ளார்.


           அவரது அறிக்கை: முதல்வர் உத்தரவுப்படி, பள்ளி கல்வித் துறையில் ஆசிரியர்களின் வருகை பதிவை அதிகாரிகளுக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பும் திட்டம் கல்விசார் மேலாண்மை தகவல் முறைமை திட்டத்தில் (இ.எம்.ஐ.எஸ்.,) ஒரு அங்கமாக சேர்க்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை முதலில் திருச்சி மாவட்டத்தில் செப்., 5ல் முதல்வர் துவக்கி வைத்தார்.

           இ.எம்.ஐ.எஸ்., திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும் 56,573 பள்ளிகள், 5.63 லட்சம் ஆசிரியர், 1.35 கோடி மாணவர்களின் விவரம், இணையதளத்தில் சேர்க்கப்பட்டு வருகின்றன. இப்பணியை, இம்மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து விவரமும் ஒருங்கிணைக்கப்பட்ட பின், எஸ்.எம்.எஸ்., திட்டம், மாநில அளவில் செயல்படுத்தப்படும். இவ்வாறு, இயக்குனர் தெரிவித்து உள்ளார்.

Thursday, November 7, 2013

PallikudamNEWS

அரசு பள்ளி மாணவர்களிடையே தினசரி நாளிதழ், புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை கல்வித்துறை தீவிரம்
         அரசு பள்ளி மாணவர்களிடையே தினசரி நாளிதழ்புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த கல்வித்துறை தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது.       தர்மபுரி மாவட்டத்தில் ஊர்ப்புற நூலகங்கள்பகுதி நேர நூலகங்கள், என மொத்தம் 117 நூலகங்கள் உள்ளன. இவற்றில் 1.21 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த நூலகங்களில் 20 லட்சத்து 66 ஆயிரத்து587 நூல்கள் உள்ளன. கடந்த ஆண்டில் மட்டும் 16 லட்சத்து 41 ஆயிரத்து 879வாசகர்கள் இந்த நூலகங்களை பயன்படுத்தி படித்து சென்றுள்ளனர். நடப்பாண்டில் 20 ஆயிரம் மாணவர்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். 50 ஆயிரம் மாணவமாணவிகளை புதிய உறுப்பினர்களாக சேர்க்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 1,750புரவலர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.         தர்மபுரி மாவட்ட மைய நூலகம் மற்றும் இதர கட்ட நூலகங்களில் குடிமை பணிகளுக்கான பயிற்சி மையம் செயல்படுகிறது. இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான புத்தகங்கள் உள்ளன. தினசரி500க்கும் மேற்பட்ட வாசகர்கள் மாவட்ட மைய நூலகத்திற்கு வந்து படித்து செல்கின்றனர். மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க மாவட்ட நூலகம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.           இந்நிலையில் அரசு பள்ளிகளில் மாணவமாணவிகள் தினசரி நாளிதழ்புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த பள்ளிகளில் நூலகம் அமைக்க கல்விதுறை தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது.               கடந்த வாரம் நல்லம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய நூலகம் திறக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான நூல்கள் நூலகத்தில் வைக்கப்பட்டது. தினசரி நாளிதழ்கள்மாணவர்களின் எதிர்காலத்திற்கு தேவையான பொதுஅறிவு புத்தகம்அப்துல்கலாம் புத்தகம்தலைவர்களின் வரலாறு புத்தகம் வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாணவரும் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் நாளிதழ்புத்தகம் படிக்க வேண்டும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதுபோல காரிமங்கலம் மாதிரி பள்ளியிலும் நூலகம் திறக்கப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:            பள்ளிகல்லூரி மாணவமாணவிகள்இளைஞர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் நூலகங்கள் மூலம் அறிவை வளர்த்து கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.                 அனைத்து பள்ளிகளிலும்மாணவமாணவிகளுக்கு நூலகம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நூலகம் தொடர்பான வாசகங்களை பள்ளி தலைமை ஆசிரியர்கள் எழுதி வைத்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில்89 மேல்நிலைப் பள்ளி, 114 உயர்நிலைப் பள்ளிகளில் நூலகம் திறக்கப்பட்டுள்ளது. நூலகம் இல்லாத பள்ளிகளில் நூலகம் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

PallikudamNEWS

ஆசிரியர் தகுதித்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்கள் பட்டியல் வெளியீடு


முதல் தாள் (இடைநிலை ஆசிரியர் தேர்வு)
1. சி. இராஜம்மாள் - ஈரோடு மாவட்டம் - 126 மதிப்பெண் - முதல் இடம்

2. பி. சத்யா - திண்டுக்கல் மாவட்டம் - 122 மதிப்பெண் - இரண்டாவது
இடம்
ஆர்.இராமசந்திரன் - விழுப்புரம் மாவட்டம் - 122 மதிப்பெண்
(ஒரே மதிப்பெண் இருந்தால்பிறந்த தேதி அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படும்)
இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர் தேர்வு)
1. ஆர். வினுஷா - தூத்துக்குடி மாவட்டம் - 126 மதிப்பெண் - முதல் இடம்

2. பி. இராஜகாளீஸ்வரி - இராமநாதபுரம் மாவட்டம் - 123 மதிப்பெண் - இரண்டாவது இடம்

3. வி. மேகலா - காஞ்சிபுரம் மாவட்டம் - 122 மதிப்பெண் - மூன்றாவது இடம்

சி. குருமூர்த்தி - ஈரோடு மாவட்டம் - 122 மதிப்பெண் - மூன்றாவது இடம்

பி. அன்பரசி - திருவண்ணாமலை மாவட்டம் - 122 மதிப்பெண் - மூன்றாவது இடம்

PallikudamNEWS

போலீஸ் சோதனையில் பேப்பர் இல்லையா? இன்சூரன்ஸ் தகவலை எஸ்எம்எஸ்சில் பெறலாம்
                 மேலும், விபத்து சமயங்களில் சம்பந்தப்பட்ட வண்டியின் எண் மட்டும் தெரிந்திருந்தால் போதும், அதன் மூலம் அதன் உரிமையாளர் பெயர், விவரம் ஆகியவற்றை இதே எஸ்எம்எஸ் மூலம் தெரியவரும். போலீசாருக்கும் இத்திட்டம் மிக உதவியாக இருக்கும். விரைவில் இத்திட்டம் அமலுக்கு வர உள்ளது என்றார்.

             போலீசில் ஆவணம் இன்றி சிக்கும்போது எஸ்எம்எஸ் மூலம் இனி இன்சூரன்ஸ் பற்றிய முழு தகவலையும் பெறலாம். எல்லா வாகனங்களுக்கும் இன்சூரன்ஸ் மிக அவசியம். சில சமயங்களில் சர்வீஸ் விடும்போது, வண்டியை கழுவும்போது, ஜெராக்ஸ் எடுக்க மறந்துவிடும்போது வாகனங்களில் இன்சூரன்ஸ் பேப்பரை மீண்டும் எடுத்து வைக்க மறந்துவிடுகிறோம். இதுபோன்ற சமயங்களில் சாலைகளில் போக்குவரத்து போலீசாரிடம் சிக்கினால், தர்மசங்கடமான நிலை ஏற்படும்.


              இந்த பிரச்னையை தீர்ப்பதற்காக இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையம் (ஐஆர்டிஏ) அதிரடி திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதுகுறித்து அதன் வாகனங்கள் காப்பீடு பிரிவு உறுப்பினர் ராம்பிரசாத் கூறியதாவது:


                வாகனத்துக்கு காப்பீடு செய்துள்ளவர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய ஆரம்பித்துள்ளோம். இதன் மூலம், வாகன எண்ணுடன் எங்களின் குறிப்பிட்ட எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பினால், அதன் காப்பீடு பற்றிய விவரம் முழுமையாக அனுப்பி வைக்கப்படும். இது சட்டப்பூர்வமானது என்பதால், போலீசாரிடம் அதை காண்பிக்க முடியும்.

PallikudamNEWS

பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே  70வது பிறந்தநாளை கொண்டாடினார்.


1.பீலே மொத்தம் 1,283 கோல்களை அடித்துள்ளார்.இதில் 92 கோல்கள் பிரேசிலுக்காக அடித்தது.

2.மூன்று முறை உலக கோப்பையை வென்றுள்ளார்.

3.அமெரிக்க விஞ்சானி தாமஸ் ஆல்வா எடிசனை நினைவாகவே எட்சன் அரான்டஸ் டி நாசிமென்டே என்ற இயற்பெயர்  அவருக்கு சூட்டப்பட்டது.

4.பீலேவை 15 வயதில் பிரபல பிரேசில் அணியான சான்டோஸ் ஒப்பந்தம் செய்தது.

5.1956ம் ஆண்டு செப்டம்பர் 7ந் தேதி கொரிந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பீலே களம் இறங்கினார்.இந்த போட்டியில் 4 கோல்களை அடித்து பிரமிக்க வைத்தார்.

6.17 வயதில் பீலே உலக கோப்பையை வென்று சாதனை படைத்தார்.இந்த சாதனை இன்னும் முறியடிக்கப்படவில்லை.இறுதி போட்டியில் சுவீடனுக்கு எதிராக இரு கோல்களும் அடித்தார்.

7.கடந்த 1995ம் ஆண்டு முதல் 1998ம் ஆண்டு வரை பிரேசில் விளையாட்டுத்துறை அமைச்சராக பீலே இருந்தார்.

8.1999ம் ஆண்டு சர்வதேச ஒலிம்பிக் சங்கம் 20ம் நுற்றாண்டின் சிறந்த விளையாட்டு வீரராக பீலேவை அறிவித்தது.

9.1969ம் ஆண்டு நவம்பர் 19ந் தேதி சான்டோஸ் அணிக்காக பீலே ஆயிரமாவது கோலை அடித்தார்.10 ஆயிரம் ரசிகர்கள் மைதானத்திற்குள் வந்து பீலேவை தலையில் வைத்து கொண்டாடினார்கள்.

10.ஒவ்வொரு நவம்பர் 19ந் தேதியையும் சாபாலோ நகரத்தில் பீலே தினமான கொண்டாடப்படுகிறது.

11.உலக கோப்பையில் பீலே 12 கோல்களை அடித்துள்ளார்.உலக கோப்பை போட்டியில் அதிக கோல் அடித்த வீரர்களில் பீலேவுக்கு 5வது இடம்.

12.உலக கோப்பையில் அதிக கோல் அடித்த பிரேசில் வீரர்களில் பீலேவுக்கு 2வது இடம்.ரொனால்டோவுக்கு முதலிடம்.

13.நைஜீரியாவில் அரசு படைகளுக்கும் தீவிரவாத கும்பலுக்கும் இடையே போர் நடந்த சமயத்தில் பீலே ஒரு கண்காட்சி போட்டியில் விளையாட நைஜீரியா வந்தார்.அவரது ஆட்டத்தை காண்பதற்காக 48 மணி நேரம் போர்நிறுத்தம் செய்யப்பட்டது.

14.நியூயார்க் காஸ்மோஸ் அணிக்காக பீலே விளையாடிய போது,ஒவ்வொரு போட்டி முடிந்த பிறகும் பீலேவிடம் ஜெர்சியை மாற்றிக் கொள்ள எதிர் அணி வீரர்கள் முண்டியடிப்பார்கள்.(கால்பந்தி் போட்டி முடிந்தவுடன் எதிர் அணி வீரர்களிடம் இருந்து ஜெர்சியை பரஸ்பரம் மாற்றிக் கொள்வது வழக்கம்)பீலே விளையாடும் ஒவ்வொரு போட்டியின் போதும் 30 பீலேவின் ஜெர்சிகளை நியூயார்க் காஸ்மோஸ் வைத்திருக்கும்.

15.ஆயிரக்கணக்கான அறக்கட்டளை அமைப்புகள் நிதி திரட்டுவதற்காக பீலேவை விளையாட அழைத்துள்ளன.அவரும் சளைக்காமல் சென்று வருவார்.

16.2001ம் ஆண்டு பீலே நியூயார்க் காஸ்மோசின் கவுரவத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

17.பீலேவும் மரடோனாவும் அடிக்கடி மோதிக் கொள்வார்கள்''மரடோனா குழந்தைகளுக்கு நல்ல ரோல் மாடல் இல்லை'' என்று பீலே சொன்னால் மரடோனா,''பீலே மியூசியத்தில் இருக்க வேண்டியவர்''என்று பதிலளிப்பார்.

18.1966ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பாபி மூர்,''பீலேவை போன்ற ஒரு கால்பந்தாட்டக்காரரை தன் வாழ்நாளில் கண்டது இல்லை'' என்று குறிப்பிட்டுள்ளார்.

18.அவரது குடும்பத்தினர் பீலேவுக்கு வைத்த இன்னொரு பெயர் டீகோ. பின்னர் அவரது பள்ளி பருவத் தோழர்கள் வாஸ்கோடகாமா அணியின் கோல்கீப்பர் பெலேவின் பெயரை சூட்டினர்.அதுவே பின்னர் பீலே என்று மாறியது.

19.பீலேவின் தந்தையும் ஒரு கால்பந்து வீரர்தான்.ஒரே போட்டியில் ஐந்து கோல்களை தலையால் முட்டி அவர் அடித்துள்ளார்.ஆனால் பீலேவால் அந்த சாதனையை முறியடிக்க முடியவில்லை.அதிக பட்சமாக ஒரு போட்டியில் 4 கோல்களை பீலே தலையால் முட்டி அடித்துள்ளார்.

20.1970ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் பிரேசிலுக்கான 100வது உலக கோப்பை கோலையும் பீலே அடித்தார்.

21.1958ம் ஆண்டு உலக கோப்பை கால் இறுதி ஆட்டத்தில் வேல்ஸ் அணிக்கு எதிராக பீலே முதல் கோல் அடித்தார்.

22.1994ம் ஆண்டு மனதத்துவ நிபுணரும் பாடகியுமான அசிரியா லீமோசை 2வது திருமணம் செய்தார்.

23.கால்பந்து விளையாடும் ஒவ்வொரு குழந்தையும் என்னைப் போல வர முயற்சி செய்கின்றன.அந்த குழந்தைகள் என்னை போல் ஆவதை விட நல்ல மனிதர்களாக உலகத்தில் வலம் வரவே நான் விரும்புகிறேன் என்று பீலே ஒரு முறை சொன்னார்.

24. வெற்றி பெறுவதற்கு பீலே கொடுத்துள்ள விளக்கம் ''சக்சஸ் தற்செயலாக நிகழ்வது இல்லை,கடின உழைப்பு,கற்றுக் கொள்வது,கற்றுக் கொடுப்பது,தியாகம் எல்லாவற்றுக்கும் மேலாக நாம் விரும்புவதை நேசிப்பதில் நமது வெற்றி அடங்கியிருக்கிறது'' 

25.20ம் நுற்றாண்டின் சிறந்த விளையாட்டு வீரராக குத்துச்சண்டை வீரர் முகமது அலியையும் பீலேவையும் கடந்த 2000ம் ஆண்டு பி.பி.சி தேர்வு செய்தது-

26.இத்தாலியின் புகழ்பெற்ற தடுப்பாட்டக்காரரான டாஸ்சிரியோ பர்ஸ்கிச்,1970ம் ஆண்டு உலக கோப்பை போட்டியின் போது பீலே பற்றி குறிப்பிட்டதாவது'' எல்லாரையும் போலத்தானே அவரும் சதையாலும் எழும்புகளாலும் படைக்கப்பட்டுள்ளார் என்று நினைத்தேன்.ஆனால் எனது கணிப்பு தவறு என்பது பின்பு எனக்கு புரிந்தது''


27.பெரும்பாலான பிரேசிலியர்கள் பீலேவை 'பெரோலா நெக்ரா' என்றே கூறுகின்றனர்.இதற்கு அர்த்தம் 'கருப்பு முத்து'

27. பெரும்பாலான நாடுகள் பீலேவை தங்கள் நாட்டு குடிமகனாக்க முயற்சி செய்தன.இதனை தடுக்க 1961ம் ஆண்டு பிரேசில் பீலேவை தேசிய சொத்தாக அறிவித்தது.

28.1975ம் ஆண்டு நியூயார்க் காஸ்மோஸ் பீலோவை ஒப்பந்தம் செய்ய விரும்பியது.அப்போது அந்த அணியின் பொது மேலாளர் கிளைவ் டோயே,''இத்தாலிக்கு போக வேண்டாம் ஸ்பெயினுக்கு போக வேண்டாம்.அங்கே சென்றால் கோப்பைகளையும் பதக்கங்களையும் வெல்லலாம்.ஆனால் அமெரிக்காவுக்கு வந்தால் ஒரு நாட்டையே வெல்லலாம்'' என்று பீலேவிடம் கூறினார்.

29.இளமை பருவத்தில் பீலேவும் அவரது நண்பர்களும் ஒரு கால்பந்து அணி வைத்திருந்தனர்.அந்த அணியின் பெயர் 'காலணி இல்லாதவர்கள்'
30.கோகோ&கோலா நிறுவனம் பிரேசிலில் பீலேவை பற்றிய ஒரு கண்காட்சி வாகனத்தை உருவாக்கியுள்ளது.இந்த கண்காட்சி வாகனம் பிரேசில் நாட்டை சுற்றிக் கொண்டே வருகிறது.

31.கிறிஸ்டியானோ ரொனால்டோ பீலே பற்றி சொன்னது'' பீலே ஒரு முறைதான் பிறக்க முடியும்''

32. மூன்று முறை உலக கோப்பையை வென்ற அணியில் இடம் பிடித்த ஒரே வீரர் பீலேதான்.

33.இளமை பருவத்தில் கால்பந்து வாங்க பணம் இல்லாத பீலே,''துணி,சாக்ஸ்,பேப்பர்கள் ஆகியவற்றை அடைத்து பந்து செய்து பயிற்சி எடுப்பார்.

34.ரெயில் நிலையங்களில் ஷ§க்களுக்கு பாலீஸ் போடும் பணியையும் பீலே செய்துள்ளார்.

35.''முதலிடத்தில் இருக்க வேண்டும்.இரண்டாவது இடத்தில் இருந்தால் அது வேஸ்ட்'' வெற்றி குறித்து பீலே சொன்னது.

36.பீலே ஐ.நா.அமைப்பு,யுனிசெப் அமைப்புகளின் நிரந்தர அம்பாசடர்.

37. பிரேசிலில் கால்பந்தில் இருக்கும் லஞ்ச ஊழல்களை தடுக்க பீலே ஒரு அமைப்பை ஏற்படுத்தியுள்ளார்.

38.1964 நவம்பர் 24ந் தேதி பொடபாகோ அணிக்கு எதிராக சான்டோஸ் வீரரான பீலே 8 கோல்களை அடித்தார்.இந்த ஆட்டத்தில் சான்டோஸ் 11-0 என்று வெற்றி பெற்றது.

39.ஒரு முறை 8 கோல்களையும், 6 முறை 5 கோல்களையும் பீலே அடித்துள்ளார்.

40. 31 முறை 4 கோல்களும் 92 ஹாட்ரிக் கோல்களும் பீலேவின் கோல் கணக்கில் அடக்கம்.

41. 1971ம் ஆண்டு ஜுலை 18ந் தேதி யூகோஸ்லோவாகியா அணிக்கு எதிராக கடைசி சர்வதேச ஆட்டத்தில் பீலே விளையாடினார்.இந்த போட்டி 2-2 என்று டிராவில் முடிந்தது.

42.கிளப் போட்டியில் கடைசி ஆட்டம் பிளமிங்கோ அணிக்கு எதிரானது.இந்த போட்டியில் சான்டோஸ் 2&0 என்று வெற்றி பெற்றது.இது 1976 அக்டோபர் 6ந் தேதி நடைபெற்றது.

43.1977ம் ஆண்டு அக்டோபர் 1ந் தேதி பீலே விளையாடிய சான்டோஸ் மற்றும் நியூயார்க் காஸ்மோஸ் அணிகள் ஒரு கண்காட்சி போட்டியில் நியூயார்க்கில் மோதின.இந்த போட்டியில் முதல் பாதியில் சான்டோஸ் அணிக்காகவும் இரண்டாவது பாதியில் நியூயார்க் காஸ்மோஸ் அணிக்காகவும் பீலே விளையாடினார்.

44.மறக்கப்பட்ட மாவீரன் கரிஞ்சாவும் பீலேவும் இணைந்து விளையாடிய எந்த போட்டியிலும் பிரேசில் தோற்றது இல்லை.

45.பிரேசில்  அணிக்காக 92 கோல்கள் அடித்துள்ளார்.இந்த சாதனை எந்த பிரேசில் வீரரும் இன்னும் வரை முறியடிக்கவில்லை.

46.உலக கோப்பையில் பிரேசிலின் 100வது கோலை பீலே தலையால் முட்டி அடித்தார்.

47.1980ல் பீலேவின் கால்பந்தாட்டதை வைத்து வீடியோ கேம் வந்தது.அதன் பெயர் 'பீலேஸ் சாக்கர்'

48.கராத்தே வீரர் ஜோஸ் லேன்டி ஜேனுக்கும் பீலே என்ற நிக்நேம் உண்டு.

49.புகழ் பெற்ற நெதர்லாந்து நாட்டு ஓவியர் டிக் பிரினிஸ்டன் பீலேவை ஓவியமாக வரைந்து பரிசளித்துள்ளார்.

50.1975ம் ஆண்டு பீலே நியூயார்க் காஸ்மோசில் இணைந்தார்.நியூயார்க்கில் பீலே ஆடி வந்த காலத்தில்தான் கால்பந்து அமெரிக்காவில் பிரபலமாகத் தொடங்கியது.பீலே ஆடிய போட்டியை காண சராசரியாக 13 ஆயிரம் ரசிகர்கள் திரண்டனர்.அமெரிக்காவில் அப்போது இது ஒரு சாதனை ஆகும்.

51. 1956 ஜுன் 9ந் தேதி லேவ்ராஸ் அணிக்கு எதிரான சான்டோஸ் வீரர் பீலே முதல் ஹாட்ரிக் கோல் அடித்தார்.

52.1975ம் ஆண்டு ஜுன் 5ந் தேதி நியூயார்க் காஸ்மோஸ் அணிக்காக பீலே டல்லாஸ் டொர்னாடோஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் களம் இறங்கினார்.இதில் கோலும் அடித்தார்.இந்த ஆட்டம் 2-2 என்று டிரா ஆனது.

53.பீலே நடித்த 'எஸ்கேப் டு விக்டரி' என்ற ஆங்கிலப் படம் உலக மக்களை வெகுவாக கவர்ந்தது.

54.2005ம் ஆண்டு வயகராவை பயன்படுத்த வேண்டாம் என்று பீலே ஒரு விளம்பர படத்தில் நடித்தார்.

55.1970ம் ஆண்டு மெக்சிகோ உலக கோப்பை போட்டியில் ஒரு ஆட்டம் துவங்க இருந்தது.காலணி லேஸ் அவிழ்ந்து விட்டது வெயிட் என்று நடுவரிடம் பீலே கையை காட்டினார்.ஏதோச்சையாக கேமரா பீலே லேசை கட்டுவதை காட்டியது.அப்போது அவர் 'பூமா' காலணியை பயன்படுத்தி வந்தார்.அந்த ஒரே நாளில் மட்டும் லட்சக்கணக்கான பூமா காலணிக்கள் விற்று தீர்ந்தன.

56.பீலே 129 முறை 3 கோல்களுக்கு மேல் அடித்துள்ளார்.

57.பீலேவின் 1000வது கோல் பெனால்டி முறையில் அமைந்தது.இதே போல் ஆயிரம் கோல் அடித்துள்ள இன்னொரு வீரர் ரொமாரியோ.இவரும் பெனால்டி மூலம்தான் 1000வது கோலை அடித்தார்.

58.பீலே பிறந்த நகரம் சாபாலோ.

59.பீலேவின் உயரம் 5 அடி 8 அங்குலம்.

60.பீலே இரண்டு கிளப் அணிகளுக்கு மட்டுமே விளையாடியுள்ளார்.1956 முதல் 74 வரை சான்டோஸ்காக விளையாடி 1087 கோல்களை அடித்துள்ளார்.1975 முதல் 77 வரை நியூயார்க் காஸ்மோஸ் அணிக்காக விளையாடி 67 கோல்களை அடித்துள்ளார்.

61.பீலேவின் தந்தை பெயர் டோன்டினோ.இவர் பிளமினெஸ் அணி வீரர்.

62.பிரேசிலின் புகழ்பெற்ற கால்பந்து மைதானமான மரக்கானாவில் பீலேவின் காலடித்தடம் பதிக்கப்பட்ட நினைவு சின்னம் உள்ளது.

63.பீலேவுக்கு 1966ம் ஆண்டு திருமணம் நடந்தது.ரோஸ்மேரி என்பவரை அவர் மணந்தார்.இவர்களுக்கு இரண்டு மகள்கள்.மூத்தவர் பெயர் கெல்லி கிறிஸ்டியானா,இளையவர் ஜெனிபர்.மகன் பெயர் எடின்கோ.1978ம் ஆண்டு இந்த தம்பதிகள் விவாகரத்து செய்தனர்.

64.1994ம் ஆண்டு பீலே இரண்டாவது திருமணம் செய்தார்.இதன் மூலம் பீலேவுக்கு இரட்டை குழந்தைகள் உண்டு.பெயர் ஜோசுவா,செலாஸ்டே

65.டைம் இதழ் 20ம் நுற்றாண்டின் 20 முக்கிய மனிதர்களில் ஒருவராக பீலேவை தேர்வு செய்தது.

66.கடந்த 2000ம் ஆண்டு 'பிபா' இணையம் மூலம் 20ம் நுற்றாண்டின் சிறந்த கால்பந்து வீரர் யார்?என்று ஓட்டெடுப்பு நடத்தியது.இதில் மரடோனா முதலிடம் 
பிடித்தார்.இளைய தலைமுறையின் ஆதரவு மரடோனாவுக்கு அதிகமாக இருந்தது.ஏனென்றால் அவர்கள் பீலேவின் விளையாட்டை பார்த்தது இல்லை.இதனால் வேறு ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது.இந்த கமிட்டி சிறந்த வீரராக இருவரையும் தேர்வு செய்தது.

67.உலகின் மிகப் பழமையான அணியான 'ஷெட்பீல்டு' துவங்கப்பட்டு 150 ஆண்டுகள் ஆனதையட்டி கடந்த 2007ம் ஆண்டு இன்டர்மிலானுடன் ஒரு நட்பு போட்டியில் மோதியது.இந்த போட்டியை துவக்கி வைக்கும் பெருமை பீலேவுக்கு வழங்கப்பட்டது.

68.திரைப்படம்,குறும்படம்,டி.வி.தொடர்கள் என 13 படங்கள் பீலேவைப் பற்றி வெளி வந்துள்ளன.

69.1989ம் ஆண்டு வடகொரியா பீலேவுக்கு தபால் தலை வெளியிட்டது.

PallikudamNEWS

நவ.15க்குள் தகவல் சேகரிக்க உத்தரவு ஸ்மாட்கார்டு மூலம் மாணவர் வருகை பதிய திட்டம்

           கல்வி தகவல் மேலாண்மை முறையில் மாணவர் தகவல் தொகுப்பு சேகரிப்பு பணிகளை வரும் நவம்பர் 15ம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
      தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் படிக்கின்ற மாணவ,மாணவியரின் விவரங்கள் பள்ளி கல்வி இயக்கத்தின் சார்பில் ஆன்லைனில் சேகரிக்கப்பட்டு வருகிறது. கல்வி தகவல் மேலாண்மை முறையின் கீழ் மாணவர் தகவல் தொகுப்பு மூலம் மாணவ மாணவியரின் விபரத்தை அதிகாரிகள் எந்த ஒரு கல்வி அலுவலகத்தில் இருந்தும் ஆன்லைனில் கண்காணிக்க முடியும். அரசின் திட்டங்கள் முறையாக மாணவ மாணவியரிடம் சென்றடைந்துள்ளதா என்பது இதன் மூலம் சரிபார்க்க முடியும்.
       மேலும் மாணவர்கள் பள்ளிக்கு தொடர்ந்து செல்கின்றனரா அல்லது இடையில் பள்ளி செல்லாமல் இடை நின்றுள்ளனரா என்பதும் தெரியவரும். அவர்களின் கல்வி முன்னேற்றம், உடல்நிலை,அவர்களின் சிறப்பு திறன்கள் போன்றவையும் இதன் மூலம் கண்காணிக்க இயலும். மாணவர்களின் 100 சதவீதம் சரியான விபரங்கள் இதில் இருக்கும். இந்த திட்டத்தில் தொடர்ந்து அனைத்து விபரங்களுடன் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் ஸ்மார்ட்கார்டு மூலமே மாணவர்களின் வருகை பதிவு செய்யப்படும்.தகவல் விபர சேகரிப்பு பணிகள் ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் வரும் நவம்பர் 15ம் தேதிக்குள் இப்பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

PallikudamNEWS

டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற்ற, 27 ஆயிரம் பேரில், 15 ஆயிரம் பேருக்கு, அரசு பள்ளிகளில், ஆசிரியர் வேலை உறுதி

         டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற்ற, 27 ஆயிரம் பேரில், 15 ஆயிரம் பேருக்கு, அரசு பள்ளிகளில், ஆசிரியர் வேலை உறுதி; 12 ஆயிரம் பேர், ஏமாற்றம் அடையும் நிலை எழுந்துள்ளது.


         டி.இ.டி., முதல் தாள் தேர்வில், 12,596 பேரும், இரண்டாம் தாள் தேர்வில், 14,496 பேரும், தேர்ச்சி பெற்றுள்ளனர். எனினும், அரசு பள்ளிகளில், 15 ஆயிரம் பணியிடங்கள் வரை, காலியாக இருப்பதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொடக்க கல்வித்துறையில், 880 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களும், 1,500 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், காலியாக இருக்கின்றன. பள்ளி கல்வித்துறையில், தற்போதைய நிலவரப்படி, 10,500 இடங்கள் காலியாக உள்ளன. மே மாதம், பணி ஓய்வு பெறும் ஆசிரியர் பணியிடங்களையும் சேர்த்தால், மேலும், சில ஆயிரம் இடங்கள் அதிகரிக்கலாம்.

           மொத்தத்தில், 15 ஆயிரம் பேருக்கு, அரசு பள்ளிகளில், ஆசிரியர் வேலை கிடைக்க, அதிக வாய்ப்புகள் உள்ளன.
            தேர்ச்சி பெற்ற, 27 ஆயிரம் பேருக்கும், இம்மாத இறுதியிலோ அல்லது, டிசம்பர், முதல் வாரத்திலோ, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும். அதன்பின், இறுதி பட்டியல் தயாரிக்கப்பட்டு,கல்வித்துறையிடம், டி.ஆர்.பி., வழங்கும். டிசம்பர் இறுதிக்குள், புதிய ஆசிரியர், பணி நியமனம் செய்யப்படலாம். இடைநிலை ஆசிரியர் பணியை பொறுத்தவரை, தேர்ச்சி பெற்றிருந்தாலும், மாநில அளவில், வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் தான், பணி நியமனம் நடக்கும். பட்டதாரி ஆசிரியர் மட்டும், தேர்வர் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், பணி நியமனம் செய்யப்படுவர். எனவே, 12 ஆயிரம் பேருக்கு, அரசு பள்ளிகளில், ஆசிரியர் வேலை  கிடைக்க வாய்ப்பு இல்லை.
            இவர்கள், தனியார் பள்ளிகளில், ஆசிரியர் வேலையில் சேரலாம். அரசு பள்ளிகளில், ஒவ்வொரு ஆண்டும், கணிசமான எண்ணிக்கையில், ஆசிரியர் நியமனம் செய்யப்பட்டுவருகின்றனர். ஆனால், மாணவர் சேர்க்கை சதவீதம், சரிந்துகொண்டே வருகிறது. இதனால், ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரம், 1:25 என்ற நிலை உள்ளது. டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களையும் நியமனம் செய்யும்போது, ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரம், மேலும் சரியும் என, எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, வரும் ஆண்டுகளில், ஆசிரியர் நியமனம், பெரிய அளவில் இருக்காது என, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tuesday, November 5, 2013

PallikudamNEWS

ஆசிரியர் தகுதித் தேர்வில் 4.09% (26000) பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்

 
          தமிழகத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றது. இதில் முதல் தாளை 17ஆம் தேதி சுமார் 2,62,187ம், இரண்டாம் தாளை 18ஆம் தேதி 4,00,311ம் பேரும் எழுதினர். இன்று வெளிடப்பட்ட தேர்வு முடிவுகளின் சுமார் 4.09% பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

PallikudamTETNEWS

PallikudamTETNEWS

TNTET Paper 2 Result Now Published.



Teachers Recruitment Board  College Road, Chennai-600006

TAMIL NADU TEACHERS ELIGIBILITY TEST - 2013
PROVISIONAL MARK LIST FOR PAPER II
As per the Notification No.03/2013, dated 22.05.2013, Teachers Recruitment Board conducted Teacher Eligibility Test – 2013 for Paper II on 18.08.2013. 4,00,311 candidates from Tamil Nadu Region and 4134 candidates from Pudhucherry Region appeared for Tamil Nadu Teacher Eligibility Test 2013 Paper II examination. The tentative answer keys were published on the website of the Teachers Recruitment Board and representations, objections etc. were invited from the candidates within one week. All the representations received within the stipulated time have been thoroughly examined by subject experts. After thorough scrutiny, a revised and final answer key has been arrived at and based on that, OMR answer sheets have been valued and provisional mark list of the written examination for Paper II is published herein
During the computerized scanning of OMR answer sheets of the candidates, it was found quite a number of candidates committed mistakes in marking/shading certain essentially required details for valuation in the OMR sheets. The candidates who have not marked question paper serial code in their OMR answer sheets their answer sheets could not be evaluated and hence rejected. For those who have written the serial code but not shaded or multiple shaded, written serial code alone has been considered for valuation. Those candidates who have not written or shaded the language option in their OMR sheets, evaluation was done as per their option given in the application form. Candidates who have written and not shaded or multiple shaded their language option, written alone has been considered for evaluation. In the case of candidates who have wrongly shaded/not shaded the Roll Numbers, the OMR answer sheets of those candidates were evaluated as per the actual Roll Number allotted to them for Tamil Nadu Teacher Eligibility Test 2013 examination. 
Now, the marks obtained by all the candidates who have appeared for Tamil Nadu Teacher Eligibility Test 2013 Paper II examination are hereby released along with the revised key answer. The revised answer key is released separately.
The list of candidates called for Certificate Verification will be released subsequently by Teachers Recruitment Board separately.

Utmost care has been taken in preparing the provisional mark list and in publishing them. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in. Incorrect list will not confer any right of enforcement.

          

Dated: 05-11-2013
Member Secretary


Paper 1 Result Only. Paper 2 Result update in shortly.

Teachers Recruitment Board  College Road, Chennai-600006

        Tamil Nadu Teacher Eligibility Test -2013

Best of Luck Friends.

 

TNTET 2013 Result Instructions now published


Teachers Recruitment Board  College Road, Chennai-600006

TAMIL NADU TEACHERS ELIGIBILITY TEST - 2013
PROVISIONAL MARK LIST FOR PAPER I
As per the Notification No. 03/2013, dated. 22.05.2013, Teachers Recruitment Board conducted Teacher Eligibility Test – 2013 for Paper I on 17.08.2013. 2,62,187 candidates from Tamil Nadu Region and 3,857 candidates from Pudhucherry Region appeared for Tamil Nadu Teacher Eligibility Test 2013 Paper I examination. The tentative answer keys were published on the website of the Teachers Recruitment Board and representations, objections etc. were invited from the candidates within one week. All the representations received within the stipulated time have been thoroughly examined by subject experts. After thorough scrutiny, a revised and final answer key has been arrived at and based on that, OMR answer sheets have been valued and provisional mark list of the written examination for Paper I is published herein.
During the computerized scanning of OMR answer sheets of the candidates, it was found quite a number of candidates committed mistakes in marking/shading certain essentially required details for valuation in the OMR sheets. The candidates who have not marked question paper serial code in their OMR answer sheets their answer sheets could not be evaluated and hence rejected. For those who have written the serial code but not shaded or multiple shaded, written serial code alone has been considered for valuation. Those Candidates who have not written or shaded the language option in their OMR sheets, evaluation was done as per their option given in the application form. Candidates who have written and not shaded or multiple shaded their language option, the option written alone has been considered for evaluation. In the case of candidates who have wrongly shaded/not shaded the Roll Numbers, the OMR answer sheets of those candidates were evaluated as per the actual Roll Number allotted to them for Tamil Nadu Teacher Eligibility Test 2013 examination. 
Now, the marks obtained by all the candidates who have appeared for Tamil Nadu Teacher Eligibility Test 2013 - Paper I examination are hereby released. The revised answer key will be released separately.
The list of candidates called for Certificate Verification will be released by Teachers Recruitment Board separately.

Utmost care has been taken in preparing the provisional mark list and in publishing them. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in. Incorrect list will not confer any right of enforcement.
          

Dated: 05-11-2013
Member Secretary