Thursday, January 9, 2014

Pallikudam

பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதை தவிர்க்கும் வகையில் நோட்டுப்புத்தக அட்டையில் வண்ணப்படங்களுடன் அரிய யோசனைகளையும் விழிப்புணர்வு வாசகங்களையும் பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது

விழிப்புணர்வு வாசகங்கள்
         பள்ளிகளில் ஒருசில ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் மாணவிகள் பல்வேறு விதமான பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாவதாக புகார்கள் எழுந்தன.
        இதைத்தொடர்ந்து, பாலியல் துன்புறுத்தல் நிகழ்வுகளில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வகையில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்தது. ஏற்கனவே, பாடப்புத்தகங்கள், மற்றும் நோட்டுப்புத்தகங்களில் மின் சேமிப்பு, சாலை பாதுகாப்பு, சுகாதாரம், மனித உரிமைகள், சுற்றுச்சூழல், உள்ளிட்டவை குறித்த விழிப்புணர்வு வாசகங் களை அச்சிட்டு வருகிறது.
அரிய யோசனைகள்
  பாடப்புத்தகத்தைப் படிக்கும் போதும்அட்டைப்பகுதிகள் மாணவ-மாணவிகளின் கண்ணில் அடிக்கடி தென்படுவதால் இந்த சிறப்பு ஏற்பாட்டை பள்ளிக் கல்வித்துறை தொடர்ந்து மேற் கொண்டு வருகிறது.
          இந்த நிலையில்பள்ளிகளில் மாணவிகள் பாலியல் துன்புறுத் தல்களுக்கு ஆளாவதை தவிர்க்க பல்வேறு அரிய யோசனைகளும் விழிப்புணர்வு வாசகங்களும் வண்ணப்படங்களுடன் பள்ளி நோட்டுப்புத்தகங்களில் வெளி யிடப்பட்டுள்ளன. அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் 3-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவி களுக்கு வழங்கப்பட்ட இலவச நோட்டின் அட்டைப் பகுதியில் அவற்றைக் காணலாம்.
பாதுகாப்புக்கு யோசனைகள்
    என் பாதுகாப்புக்கு சில யோசனைகள்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள யோசனை களும்விழிப்புணர்வு வாசகங் களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
பெரியவர்களிடம் சொல்
                 மனதுக்குப் பிடிச்சவங்க நம்மள இறுக்கமா கட்டிப் பிடிச் சிட்டாலோமுத்தம் கொடுத்தாலோ ரொம்ப சந்தோஷமாக இருக்கும்ல. அந்த மாதிரி உன்ன அவங்க தொடுவதை யாராவது ரகசியமாக வெச்சிருக்கச் சொன்னாங்கன்னாஅதை உடனே நம்பிக்கையான பெரியவங்ககிட்ட சொல்லிடு.
பரிசு
                    சிலபேர் பரிசுகாசுஇனிப்பு கொடுத்து ஏமாத்தி அவங்க சொல்றபடி நடக்க வைப்பாங்கஅப்போது நீ சங்கடமாககுழப் பமா,பாதுகாப்பு இல்லாத மாதிரி உணர்ந்தாஅவங்க சொல்றதை யும் செய்யாதே,கொடுப்பதையும் வாங்காதே.
உன்மீது தவறு இல்லை
சில சமயங்களில் உன்னால் வேண்டாம் என்று சொல்ல முடியவில்லை என்றாலோ அல்லது அந்த இடத்தில் இருந்து விலகிச்செல்ல முடிவில்லை என்றாலோ அல்லது மிகவும் பயமாக இருந்தாலோ ஒன்று மட்டும் நினைவில் வைத்துக்கொள், அந்த நிகழ்வுக்கு நீ காரணம் இல்லை, உன்னால் எப்போது மற்றவரிடம் சொல்ல முடியுமோ, அப்போது சொல்லலாம்.
எந்த குழந்தையிடமும் அவர் களுக்கு சங்கடமாக அல்லது பயம் ஏற்படும் வகையில் பேசவோ, பார்க்கவோ கூடவோ கூடாது.
சரி அல்ல
உன்னை சுத்தமாகவும், ஆரோக்கி யமாகவும் வைப்பதை தவிர உன் தனிப்பட்ட உறுப்புகளை மற்றவர்கள் தொடுவது சரி அல்ல, உன்னை மற்றவர்களின் தனிப்பட்ட உறுப்புகளை தொடச்சொல்வதும் சரி அல்ல.
அப்படி யாராவது உன்னை தொட்டால் அது உன் தவறு அல்ல, வேண்டாம் என்று சொல்லிவிட்டு அந்த நபரிடம் இருந்து விலகிச்சென்றுவிடு, உடனே பெரியவர்கள் யாரிடமாவது சென்று நடந்தவற்றை பற்றிக்கூறு, உனக்கு உடனடியாக உதவி கிடைக்காவிட்டால், உதவி கிடைக் கும் வரை சொல்லிக்கொண்டே இரு.
மேற்கண்ட வாசகங்கள் வண்ண விளக்கப் படங்களுடன் நோட்டுப்புத்தகத்தில் அச்சிடப் பட்டுள்ளன. இவற்றை படிக்கும் பள்ளி மாணவிகள் எச்சரிக்கை யாக இருப்பதற்கும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானால் ஆசிரியர்களிடம் அல்லது பெற் றோர்களிடம் தெரிவிப்பதற்கும் பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

Wednesday, January 8, 2014

Pallikudam

அரசு ஊழியர்கள் அடையாள அட்டை அணிய உத்தரவு.

           தமிழக அரசு ஊழியர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு துறை அதிகாரிகளுக்கும் மாவட்ட கலெக்டர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 
          அதில், அரசுப் பணியாளர்கள் பணி நேரத்தில் அடையாள அட்டையை கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடையாள அட்டையில் பெயர் மற்றும் பதவியை மட்டும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒன்றின்கீழ் ஒன்று இடம்பெறுமாறு மாற்றி அமைத்து உரிய அட்டையை ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pallikudam

இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு எண்.33399 / 2013, 7.1.14 அன்றைய விசாரணை நிலவரம்

              தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் ( TATA ) சார்பில் தொடரப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையாக வழங்க கோரி தொடரப்பட்ட வழக்கின் 7.1.2014 அன்றைய நிலவரம். 7-1-2014 அன்று நீதிமன்ற விசாரணை FOR ORDERS என்ற பகுதியில் 8வது வழக்காக வந்தது, அரசு வழக்கறிஞர் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு பற்றியோ, அரியர் பற்றியோ வாதம் செய்யவில்லை, ஆனால் அவர்கள் மனுவில் தவறான அறிக்கை கொடுத்த திரு. ராஜீவ் ரஞ்சன் IAS, திரு கிருஷ்ணன் IAS ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அவகாசம் கேட்டார். இதையடுத்து நீதிபதி 17.1.14க்கு ஒரு வாரம் வாய்தா கொடுத்து ஒத்தி வைத்தார்.

        நமது மூத்த வழக்கறிஞர் திரு. அஜ்மல் கான் அவர்கள் 17-1-14 க்கு பதிலாக 21.1.2014 அன்று ஆஜராகி வழக்கை முடித்து தருவதாக உ றுதியளித்து உள்ளார்.
தகவல் : திரு. கிப்சன்

Pallikudam

NMMS தேர்வர்களின் விண்ணப்பங்கள் 06.01.2014 முதல் 10.01.2014 வரை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவு

2013, njÁa tUthŒ tê k‰W« Âw‹ go¥ò cjé¤ bjhif nj®Î(NMMS) r«gªjkhd nj®t®fë‹ é©z¥g§fis 06.01.2014 Kjš 10.01.2014 tiu www.tndge.in v‹w Ïizajs« thæyhf Ñœ¡f©lthW fâåæš gÂnt‰w« brŒJ bfhŸs bjçé¡f¥g£LŸsJ.
·       muR ca®ãiy/nkšãiy¥gŸë jiyikahÁça®fŸ V‰fdnt  njÁa ÂwdhŒ¤ nj®é‰F (NTS) cgnah»¤j mnj USER ID / Password  bfh©L  gÂnt‰w« brŒJ bfhŸsnt©L«.
·       gÂnt‰w« KoªjÎl‹ Ïizajs m¿¡if (Online Report) š bjçé¤JŸsgo r«gªj¥g£l kht£l¡ fšé mYtyçl«(DEO)cça nj®Î f£lz¤bjhifia gzkhf x¥gil¡f nt©L«.
·       muR eLãiy¥gŸëfS¡F x›bthU kht£l¤Â‰F« òÂajhf USER ID / Password  r«gªj¥g£l kht£l bjhl¡f¡ fšé mYtyU¡F« (DEEO)  tH§f¥gL«.  mjid¡ bfh©L eLãiy¥gŸë jiyikahÁça®fŸ NMMS é©z¥g§fis fâåæš gÂnt‰w« brŒJ bfhŸsnt©L«.
  ·        gÂnt‰w« KoªjÎl‹ Ïizajs m¿¡if (Online Report) š bjçé¤JŸsgo r«gªj¥g£l kht£l bjhl¡f¡ fšé mYtyçl« (DEEO)  cça nj®Î f£lz¤bjhifia gzkhf x¥gil¡f nt©L«.

Tuesday, January 7, 2014

Pallikudam

01.01.2014 முதல் அகவிலைப்படி உயர்வு எவ்வளவு இருக்கும் ?

Expected DA from Jan 2014 - Additional DA from Jan 2014 likely to hike by 11%

The one more and another additional Dearness allowance to Central Government employees and Pensioners from Jan 2014 will be announced in the middle of March 2014.

        This is too early and predict the enhancement in percentage of Dearness allowance with effect from January 2014. The prediction and announcement of this hike make us cool, that the additional DA will jump to 101% and another word, an additional DA would be 11%.
 
But, still we have to wait for one more month, that the magic number of AICPIN would be increased by 3% and more..! From the existing level of the AICPIN is now 243, if it becomes 246 in end of December 2013, out prediction will be right…or otherwise certainly we would cross century in total Dearness allowance…
 
The table describes the prediction of additional DA from Jan 2014…
MonthYearAICPIN (IW) BY 2001=100Points Increasing in AICPINTotalAverageApp. DADA
Jun201323132648220.6790.6290
Jul201323542671222.5892.28
Aug201323722694224.593.93
Sep201323812717226.4295.59
Oct201324132741228.4297.32
Nov201324322766230.599.12
Dec2013Expected 24632793232.75101.06101

Pallikudam

விரைவில் ஆன் - லைனிலேயே மதிப்பெண் சான்றிதழ் உண்மைத் தன்மையை சரிபார்க்கலாம்.

         பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை (Genuinity) ஆன்-லைனிலேயே உடனுக்குடன் சரிபார்க்கும் வசதியை விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது.
           அரசுத் தேர்வுத் துறை படித்த இளைஞர்கள் அரசுப் பணிகளில் சேரும்போதோ அல்லது மேல் படிப்புக்காக கல்லூரிகளில் சேரும்போதோ அவர்களின் அடிப் படை கல்வித் தகுதியாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத் தன்மை பரிசோதிக்கப்படும். சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் அல்லது துறைகள் மூலமாக பள்ளிக் கல்வித் துறைக்கு அனுப்பி வைக்கப்படும். அவை அரசுத் தேர்வுத் துறைக்கு அனுப்பப்பட்டு சரிபார்க்கப்பட்டு சம்பந்தப்பட்ட கல்விநிலையங்கள் அல்லது துறைகளுக்கு உரிய தகவல் தெரிவிக்கப்படும்.
சான்றிதழ்களை சரிபார்க்கலாம்
          கம்ப்யூட்டர் வாயிலாக இல்லாமல் ஆட்கள் மூலமாகவே இதுவரை சான்றிதழ்கள் சரிபார்க் கப்பட்டு வருகின்றன. இதனால், தேவையற்ற கால விரயம் ஏற் படுவதுடன் பணிச் சுமையும் கூடு கிறது. இதனால், சான்றிதழ் சரி பார்க்கக் கேட்டு அனுப்பப்படும் கடிதங்கள் மாதக் கணக்கில் கூட தேங்கிவிடுகிறது. இத்தகைய தேக்க நிலையை மாற்றுவதற்காக, ஆன்-லைன் மூலமாக சம்பந்தப் பட்டவர்களே சான்றிதழ்களை உட னுக்குடன் சரிபார்த்துக் கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்துகிறது அரசுத் தேர்வுத் துறை இயக்கு நரகம்.
முழுவீச்சில் பதிவேற்றப் பணிகள்
               இதுகுறித்து அரசுத் தேர்வுத் துறையினர் ‘தி இந்து’விடம் தெரி வித்ததாவது: ’’1980-ம் ஆண்டிலிருந்து இன்றுவரை வழங்கப்பட்ட 10மற்றும் 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல்கள் அனைத்தையும் ஆன்-லைனில் பதிவேற்றம் செய்யும் பணிகள் இப்போது முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கின்றன. அரசுத் தேர்வுத் துறை வளாகத்தில் இருபதுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் இதற்கான பணிகளை செய்து வருகிறார்கள்.
இதுவரை 5 கோடி சான்றிதழ்கள் பதிவேற்றம்
                இதுவரை சுமார் 5 கோடி சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டன. எஞ்சியவையும் பதிவேற்றம் செய்யப்பட்ட பிறகு விரைவில் இந்தத் திட்டத்தை முதல்வர் துவக்கி வைப்பார்.அனைத்து சான்றிதழ்களும் பதிவேற்றம் செய்யப்பட்ட பிறகு, அதை திறந்து பார்ப்பதற்கான பாஸ்வேர்டை அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் அரசுத் துறைகளுக்கும் நாங்களே அனுப்பி விடுவோம். அவர்கள், வேறு யாருடைய மதிப்பெண் சான்றி தழையாவது சரிபார்க்க நினைத்தால் பாஸ்வேர்டை பயன் படுத்தி உடனுக்குடன் சான்றிதழின் உண்மைத் தன்மையை சோதித்து விடலாம்’’ என்று அவர்கள் தெரிவித்தனர்.

ONLINE GENUINITY FOR SSLC & HSC

              Tamilnadu Directorate of Government Examination introduces ONLINE GENUINITY FOR SSLC & HSC. Since 1980 to till date SSLC & HSC Marksheet xeroxs uploading Process going on. Nearly 5crore certificates uploaded. Individual Usernam&Paswrd will be given to every schools.

Pallikudam

மூன்று நபர் ஊதியக்குழு அறிக்கை!!! SSTA EXCLUSIVE!!!

*SSTA சார்பாக திரு.மாரிதுரை மற்றும் மூன்று நபர்கள் பதிவு செய்த மதுரை உயர்நீதி மன்ற கிளை வழக்கினை WP (MD) 9218/2012 என்ற வழக்கில் நாம் கேட்ட 9300-34800+4200 என்பதனை சுட்டிக்காட்டி உள்ளார்கள்.
*சம்பளத்திலும்,நம் பலத்தினை காட்டி வீறுநடை போட்டு 
வெற்றியடைவோம்!!! 

 *மூன்றுநபர்  ஊதியகுழுவில் இடைநிலை ஆசிரியர்களுக்கு, ஏன் மத்திய அரசிற்கு இணையான ஊதியம் மறுக்கப்படுகிறது,என்பதற்கு கூறப்பட்டுள்ள காரணங்கள்.
*தமிழநாட்டை பொறுத்தமட்டில்,  இடைநிலை ஆசிரியர்கள் பத்தாம் வகுப்பு படித்துவிட்டு,பின்னர் இடைநிலை ஆசிரியர் பட்டய படிப்பினை முடிக்கிறோமாம்.(மூன்றுநபர் ஊதியக்குழு தயாரிக்கிறவர்களுக்கு,இடைநிலை ஆசிரியர்களின் கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு என்று அறிந்தவர்கள்,என்பது இந்த அறிக்கையினை கொண்டு தெளிவாகிறது .இப்படி  இடைநிலை ஆசிரியரின் கல்வித்தகுதியை அறியாதவர்கள் தயாரித்த அறிக்கை என்பதும்  தெளிவாகிறது.)
*இடைநிலை ஆசிரியர்கள் எண்ணிக்கை 1,16.129ஆம்,ஆகவே ஊதியத்தினை உயர்த்த முடியாதாம்.
* மத்திய அரசின் தொடக்க நிலையில் பணியாற்றுபவர்கள் ஹிந்தி,கணினி, ஆங்கிலம் கற்பிப்பவர்கள் திறமையாக கற்பிக்கிறார்களாம்.(தமிழ்நாட்டில் உள்ள இடைநிலை ஆசிரியர்கள், தமிழ்நாட்டில் ஹிந்தி பயிற்றுவித்து தரவேண்டும் எனக்கூற வருகிறார்கள் போலும்)
*ஆகமொத்தம், தமிழ்நாட்டில்  இடைநிலை ஆசிரியர் பயிற்சி என்பது ஒரு தரமற்ற படிப்பு என்கிறார்கள்.

*இடைநிலை ஆசிரிய பேரினமே!!! இப்போது தெரிகிறதா ,நம்முடைய நிலை,இனியும்  நாம் நமக்காக சிந்திக்கவில்லையெனில்,காலம் கடந்துவிடும்.
*பாதிக்கப்பட்ட மனம் மேலும் புண்படுகிற விதத்தில்,இவ்வறிக்கை காணப்படுகிறது.நம் தகுதியை பற்றி தரம் குறைந்து விமர்சிக்கப்பட்டுள்ளோம்.
*கடுமையான கண்டனத்தினை SSTA பதிவு செய்கிறது.
*இதற்கிடையில்  பல்வேறு வதந்திகள்,அறிவிப்புகள்,தீர்ப்புகள்.
*இடைநிலை சமுதாயமே!!!  SSTA பெற்ற ஒவ்வொரு வெற்றியும்,  கடின மற்றும் நேர்மையான பாதையில்  கிடைக்கப்பெற்றது.எனவே,கண்டிப்பாக சம்பளத்திலும்,நம் பலத்தினை காட்டி வீறுநடை போட்டு வெற்றியடைவோம்!!! உண்மையை சொல்வோம்!!! உரக்க சொல்வோம்!!! வெற்றி பெறுவோம்!!!

CLICK HERE TO READ THREE MAN COMMISSION REPORT ABOUT SECONDARY GRADE TEACHER'S SALARY

Pallikudam

8th Standard CCE - 3rd Term Study Material


CCE Study Material

8th Standard CCE - English FA(A) Study Material - Click Here

Thanks to Mr. S. GOPINATH B.A., B.ED.,
Graduate Teacher in English, GBHSS, Valappady, Salem DT – 636115


Pallikudam

NMMS தொடர்பான குறிப்புகள் ......NMMS FAQ -2014

            NMMS விண்ணப்பங்கள் பதிவேற்ற தொடக்கக் கல்வித்துறைக்கு மாவட்டத்திற்கு ஒன்று என யூசர் நேம் மற்றும் பாஸ் வேர்டு அந்தந்த உ.தொ.க அலுவலரின் மெயில் க்கு அனுப்பப்பட்டுள்ளது,,,அதை பயன்படுத்தி அந்தந்த ஆசிரியர்கள் தங்களின் மாணவர்களின் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து புகைப்படத்தை பதிவேற்றி அதனை செட் ப்ரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளுங்கள்.அதனை உ.தொ.க அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்
         Just go to www.tndge.in by entering the user name and password of NTS exam which has been provided already and once u logged in, click the NMMS app button situated on the top left sideof the screen and proceed according to the instructions..

Sunday, January 5, 2014

Pallikudam NMMS

Pallikudam

அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ்:முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

           அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இந்த ஆண்டு பொங்கல் போனஸ் அறிவிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சி, டி பிரிவி ஊழியர்களுக்கு அதிகப்பட்சமாக ரூபாய் 3 ஆயிரத்திற்கு உட்பட்டு ஒரு மாத ஊதியம் போனஸாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். 
         ஏ, பி ஊழியர்களுக்கு ரூபாய் 1000 போனஸ் வழங்கப்படும் எனவும், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர், முன்னாள் விஏஒ-க்களுக்கு ரூபாய் 500 பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

Pallikudam

pallikudam

இடைநிலை ஆசிரியர்களுக்ககான ஊதிய வழக்கில், இன்று அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

           மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையாக தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு எண்.33399/2013 (6.1.2014) விசாரனைக்கு வருகிறது. நீதிமன்ற வரிசை எண்.11ல் வழக்கு வரிசை எண்.17ல் நீதியரசர் ஆர்.சுப்பையா அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வர உள்ளது.
          மேலும் இன்று அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக வழக்கு தாக்கல் செய்தவர்கள் மூலம் அறிய வருகிறது.
தகவல் : திரு. கிப்சன், TATA பொது செயலாளர்

Thursday, January 2, 2014

Pallikudam

இணையத்தில் எழுத்துருக்கள்: முக்கிய உத்தரவு

            அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், இணையதளங்களில், ஐந்து வகை தமிழ் எழுத்துருக்களை மட்டுமே, பயன்படுத்த வேண்டும்' என, அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது, அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில், 30க்கும் மேற்பட்ட எழுத்துருக்கள் பயன்படுத்தப்படுகின்றன.
 
             இவற்றில், 5 வகை எழுத்துக்களை மட்டும் பயன்படுத்த வேண்டும் என, தகவல் தொழில்நுட்பத் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ் பாரதி, தமிழ் கபிலர், தமிழ் கம்பர், தமிழ் வள்ளுவர், தமிழ் காவேரி ஆகியவை இந்த எழுத்துருக்கள் ஆகும். இவ் எழுத்துருக்களை, http://tamilvu.org ல், 'டவுன்லோடு' செய்து பயன்படுத்தலாம். நிதித்துறை செயலர் உதயச்சந்திரன், இதுகுறித்த சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.

Pallikudam

கல்வியியல் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி., விண்ணப்பம்: ஜன., 27 கடைசி நாள்.

         தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில், கல்வியியல் பாடத்தில், முழுநேர மற்றும் பகுதிநேர பிஎச்.டி., படிப்புக்கான விண்ணப்பங்களை இம்மாதம், 27ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்" என பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) ராஜேந்திரன் தெரிவித்து உள்ளார்.
         விண்ணப்பக் கட்டணம், 750 ரூபாய்; எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு, 350 ரூபாய். விண்ணப்பக் கட்டணத்தை, "பதிவாளர், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், சென்னை" என்ற பெயரில், டி.டி., ஆக செலுத்தி பதிவாளர் அலுவலகத்தில், விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பம் வாங்கும்போது, எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர், தங்கள் சாதிச் சான்றிதழ் நகலை,சமர்ப்பிக்க வேண்டும்.பல்கலைக்கழகத்தின் www.tnteu.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை, "டவுன்லோடு" செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, ஜன., 27ம் தேதி கடைசி நாள்.

Pallikudam

Pallikudam

சிலிண்டர் இணைப்புக்கு ஆதார் கட்டாயம் எதிர்த்த வழக்கு : மத்திய அரசுக்கு நோட்டீஸ்.

          எரிவாயு சிலிண்டர் இணைப்புக்கு ஆதார் அட்டை கட்டாயம் என்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 
      உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிவகாசியைச் சேர்ந்த வழக்கறிஞர்ஆனந்த முருகன் இந்த வழக்கை தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப ஆணை பிறப்பித்தனர்.

Pallikudam

TAX - 2014 | Payroll 9.1 Software Entry Instruction


TAX - 2014 | Payroll 9.1 Software Entry Instruction - Click  Here

Wednesday, January 1, 2014

Pallikudam

தமிழகத்தில் 'ஆதார்' எண் பணி ஜனவரி இறுதி வரை நீட்டிப்பு

சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில், ஆதார் எண் உருவாக்கும் பணி, 50 சதவீதத்துக்கும் கீழ் இருப்பதால், ஜனவரி இறுதி வரை, இப்பணி நீடிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, தேசிய அடையாள எண் உருவாக்கும் துறை, இம்முடிவை எடுத்துள்ளது.

ஆதார் அட்டை உருவாக்கும் பணி, நாடு முழுவதும் தீவிரமாக நடந்து வருகிறது. ஆதார் அட்டை தயாரிப்பதற்கு முன், ஒவ்வொரு குடிமகனுக்கும், தனி எண் ஏற்படுத்தப்படுகிறது. இதற்காக, புகைப்படம் எடுத்தல், கைவிரல் ரேகை பதிவு, விழிரேகை பதிவு ஆகியவை, தமிழகத்தில், 2011 ஜனவரியில் துவங்கப்பட்டது.
மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில் இப்பணி நடக்காமல், சில மாவட்டங்களைத் தேர்வு செய்து முதல் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் இப்பணி நீட்டிக்கப்பட்டு, நடந்து வருகிறது.
ஆதார் எண் உருவாக்கும் பணி மேற்கொள்ளப்பட்ட மாவட்டங்களில், 70 சதவீதம் பேருக்கு, ஆதார் எண் உருவாக்கப்பட்டிருந்தால், அம்மாவட்டத்தில் ஆதார் எண் உருவாக்கும் பணி நிறுத்தப்படுகிறது.
இதன்பின், நிரந்தர ஆதார் மையங்கள் துவங்கப்பட்டு, விடுபட்டவர்களுக்கு ஆதார் எண் உருவாக்கும் பணி நடக்கும் என, அறிவிக்கப்பட்டது.
சென்னை, திருவண்ணாமலை, திருவள்ளூர், திருப்பூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட, 10 மாவட்டங்களில் இறுதி கட்டத்தில், ஆதார் எண் உருவாக்கும் பணி துவங்கப்பட்டது.
இதில், சென்னை மாவட்டத்தில், 42 சதவீதம் பேருக்கே, ஆதார் எண் உருவாக்கப்பட்டுள்ளது. இறுதியாக துவங்கப்பட்ட மாவட்டங்கள் எதிலும், 70 சதவீதம் என்ற இலக்கு எட்டப்படவில்லை.இந்நிலையில், டிச., 31ம் தேதியுடன், ஆதார் எண் உருவாக்கும் பணி முடிக்கப்படும். இனிமேல், நிரந்தர மையங்கள் துவங்கி, ஆதார் எண் உருவாக்கும் பணி நடக்கும் என, தேசிய அடையாள எண் உருவாக்கும் துறை அறிவித்திருந்தது.
தமிழகத்தில், இறுதியாகத் துவங்கிய மாவட்டங்களில், 70 சதவீத இலக்கு எட்டப்படாத நிலையில், ஆதார் எண் உருவாக்கும் பணியை, மேலும் நீட்டிக்க வேண்டும் என, தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. இதையடுத்து, ஜனவரி, 31ம் தேதி வரை, ஆதார் எண் உருவாக்கும் பணியை நீட்டிக்க, தேசிய அடையாள எண் உருவாக்கும் துறை முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில், அரியலுார், நாகபட்டினம் மாவட்டங்களில், ஆதார் எண் உருவாக்கம், 80 சதவீதத்தை கடந்துள்ளதாகவும், அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், ஆதார் எண்ணை நாடு முழுவதும் பல்வேறு பணிகளுக்கு அடிப்படையாக மற்றும் ஏற்க வசதியாக, ஆதார் அட்டையில் முகவரி மாற்றம், பெயர்களில் ஏற்படும் தவறுகளை திருத்தவும் வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது. சென்னை மாவட்டத்தில், 42 சதவீதம் பேருக்கே, ஆதார் எண் உருவாக்கப்பட்டுள்ளது. இறுதியாக துவங்கப்பட்ட மாவட்டங்கள் எதிலும், 70 சதவீதம் என்ற இலக்கு எட்டப்படவில்லை

Pallikudam

ஒரு நபர் குழு திரு . ராஜீவ் ரஞ்சன் .இ .ஆ .ப. .அவர்களால் டிப்ளமோ கல்வித்தகுதியை காரணம் காட்டி ஊதியம் 5200-20200+2800 -இருந்து 9300-34800+4200 மாற்றி அமைக்கப்பட்ட பணியிடங்கள்.

1) Training Instruc
5200-20200+2800 - 9300-34800+4200
2) Hostal Superintendent and Physical Training Officer
5200-20200+2800 - 9300-34800+4200
3) Laboratory Assistant
5200-20200+2800 - 9300-34800+4200
4) Laboratory Technician Grade-1
5200-20200+2800 - 9300-34800+4200
5) Laboratory Technician Grade-II
5200-20200+2800 - 9300-34800+4200
6) Dental Hygienist/Dental Mechanic
5200-20200+2800 - 9300-34800+4200
7) Refractionist/opthalmic Assistant/Opticial / Optometrist
5200-20200+2800 - 9300-34800+4200
8)Leprosy physiotherapist Physio therapy Technician
5200-20200+2400 - 9300-34800+4200
9) Pharmacists
5200-20200+2800 - 9300-34800+4200
10) Health Inspector Grade-I
5200-20200+2800 - 9300-34800+4200
11) Food Inspector
5200-20200+2800 - 9300-34800+4200
12) Technician Grade-I
5200-20200+2800 -9300-34800+4200
13) Audio-Visual Technician
5200-20200+2400 - 9300-34800+4200
14) Librarian
5200-20200+2400 - 9300-34800+4200
15) Orthotic Technician
5200-20200+2800 - 9300-34800+4200
16) Pharmacist(Rural Develop)
5200-20200+2800 - 9300-34800+4200
17) Junior Foreman
5200-20200+2800 - 9300-34800+4200
18) Grading Assistant
5200-20200+2800 - 9300-34800+4200
19) Colour Processing Asst.
5200-20200+2800 - 9300-34800+4200
20) Boom Assistant 5200-20200+2800 - 9300-34800+4200
21) Junior Draughting Officer
5200-20200+2800 - 9300-34800+4200
22) Technician Assistant
5200-20200+2800 - 9300-34800+4200
23) Sanitary Inspector 5200-20200+2800 - 9300-34800+4200
24) Draughtsman Grade 5200-20200+2800 - 9300-34800+4200
25) Pharmacist 5200-20200+2800 - 9300-34800+4200
26) Sanitary Inspector 5200-20200+2800 - 9300-34800+4200
27) Over Seer 5200-20200+1900 - 9300-34800+4200
28) Pharmacist(Corporation) 5200-20200+2800 - 9300-34800+4200
29) Sanitory Inspector 5200-20200+2800 - 9300-34800+4200
தகவல்- TATA,கிப்ஸன் அவர்கள்.

Pallikudam

இளநிலை பயிற்சி அலுவலர் பணிக்காலியிடத்திற்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரை

           வேலைவாய்ப்பு பயிற்சி துறை(பயிற்சி பிரிவு) இணை இயக்குநரால் அறிவிக்கப்பட்டுள்ள இளநிலை பயிற்சி அலுவலர் பணிக் காலியிடத்திற்கு தகுதியானவர்களின் பதிவு மூப்பு விவரம் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
      இது குறித்து திருமலைச்செல்வி செவ்வாய்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:
         இப்பணிக்காலியிடத்திற்கு கல்வித் தகுதியாக டிப்ளமோ என்ஜினியங்கில் மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், பிரிண்டிங் டெக்னாலஜி, இன்ஸ்ட்ரூமென்டேசன் கன்ட்ரோல், எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன், கணிப்பொறி அறிவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பம் ஆகிய பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பதிவு மூப்பு விவரம்: இதில் டிப்ளமோ என்ஜினியரிங்கில் மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் முடித்த பொது பிரிவினர்-26.2.1988 வரையும், பெண்கள்- 13.12.1999 வரையும் இருக்க வேண்டும். பிரிண்டிங் டெக்னாலஜி முடித்த முன்னுரிமை பிரிவினர் அனைவருக்கும் நடப்பு தேதி வரையிலும், மிகவும் பிற்பட்ட வகுப்பினர்-11.8.2000 வரையும்,  இன்ஸ்ட்ரூமென்டேசன்-கன்ட்ரோல் முடித்த பிற்பட்ட வகுப்பினர்-15.5.1989 வரையும், எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் முடித்த அனைத்து பிரிவினர்-31.10.1985 வரையும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் கலப்பு திருமணம் புரிந்தோர்-20.4.1998 வரையும், எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் முடித்த அனைத்து பிரிவினர்-8.12.1989 வரையும், கணிப்பொறி அறிவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பம் முடித்த அனைத்து பிரிவினர்-8.12.1989 வரையும், இந்து ஆதிதிராவிடர் கலப்பு திருமணம் புரிந்தவர்கள்-22.6.2004 வரையிலும் இருக்க வேண்டும்.
எனவே மேற்குறிப்பிட்ட தகுதிகளை பதிவு செய்துள்ளவர்கள் தகுதிச் சான்றிதழ்களுடன் வருகிற-2ம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வந்து சரிபார்த்துக் கொள்ளலாம். குறிப்பிட்ட நாளுக்கு பின் வருகின்றவர்களின் கோரிக்கைகள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்படாது என மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திருமலைச்செல்வி கேட்டுக் கொண்டுள்ளார். 

Pallikudam

அரசு பள்ளி மாணவர்களுக்கு 1.58 கோடி பாட புத்தகங்கள்

           'அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு, மூன்றாம் பருவத்திற்காக, 1.58 கோடி பாட புத்தகங்கள் அச்சிடப்பட்டு, மாநிலம் முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன" என பாடநூல் கழக நிர்வாக இயக்குனர் மகேஸ்வரன் தெரிவித்து உள்ளார்.
         அவரது அறிவிப்பு: ஒன்று முதல், 9ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு, மூன்றாம் பருவ பாட புத்தகங்கள் அச்சிடப்பட்டு, அனுப்பப்பட்டுள்ளன. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 89 லட்சம் மாணவர்களுக்கு, 1.58 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டு, மாநிலம் முழுவதும் அனுப்பப்பட்டன. இந்த புத்தகங்கள், பள்ளிகளுக்கு, வினியோகம் செய்யும் பணி நடந்து வருகிறது. 
        தனியார் பள்ளிகளில் பயிலும், 46 லட்சம் மாணவ, மாணவியருக்காக, 81.53 லட்சம் புத்தகங்கள் அச்சிடப்பட்டு, மாநிலம் முழுவதும் உள்ள, 22 பாடநூல் கழக குடோன்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. கடந்த, 26ம் தேதியில் இருந்து, தனியார் பள்ளிகளுக்கு, புத்தகங்கள் விற்பனையாகி வருகின்றன.
          புத்தக விற்பனை குறித்து, ஏதேனும் கருத்து தெரிவிக்க விரும்பினால், mdtntbc07@hotmail.com என்ற, இ - மெயில் முகவரி யில் தெரிவிக்கலாம். இவ்வாறு, மகேஸ்வரன் தெரிவித்து உள்ளார்.




PallikudamNEWS

இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு மீண்டும் இன்று (2.1.2014 ) விசாரணைக்கு வருகிறது

              இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு இன்று (2.1.2014 ) சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை அமர்வு முன், வரிசை எண் 50 ல் வழக்கு விசாரணைக்கு வருகிறது.  மேலும் ஏற்கனவே தமிழக அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
             இதையடுத்து   அரசு தரப்பு, ஒரு வருடம் மற்றும் மூன்று வருட பட்டப்படிப்பு சார்பான விவாதம் தொடர்ந்து இன்று  நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

PallikudamNEWS

இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு மீண்டும் இன்று (2.1.2014 ) விசாரணைக்கு வருகிறது

              இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு இன்று (2.1.2014 ) சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை அமர்வு முன், வரிசை எண் 50 ல் வழக்கு விசாரணைக்கு வருகிறது.  மேலும் ஏற்கனவே தமிழக அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
             இதையடுத்து   அரசு தரப்பு, ஒரு வருடம் மற்றும் மூன்று வருட பட்டப்படிப்பு சார்பான விவாதம் தொடர்ந்து இன்று  நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

PallikudamNEWS

2014 ஜனவரி முதல் அகவிலைப்படி உயர்வு 10% முதல் 11% வரை உயரக்கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது
              நவம்பர் 2013 மாதத்திற்கான விலைவாசி உயர்வு 
குறியீட்டு எண் நேற்று (31.12.2013) வெளியிடப்பட்டது. இதன்படி அகவிலைப்படி 
உயர்வு 99.12 சதவீதமாக உள்ளது. அதேபோல் வருகிற டிசம்பர் மாதத்திற்கான 
விலைவாசி குறியீட்டு எண் 100 சதவீதத்திற்கு மேல் உயரக்கூடும்....