Thursday, December 18, 2025

பழைய ஓய்வூதிய திட்டம்

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பிரதான கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை (ஓ.பி.எஸ்) மீண்டும் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக, 3 அமைச்சர்கள் புதன்கிழமை சென்னையில் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்குப் பின், ககந்தீப் சிங் பேடி அறிக்கையின் பேரில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பிரதான கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை (ஓ.பி.எஸ்) மீண்டும் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக, அமைச்சர்கள் குழு புதன்கிழமை சென்னையில் அவசர ஆலோசனை நடத்தியது.
அரசு ஊழியர்களே அரசு எந்திரத்தை இயக்குபவர்கள். அரசு ஊழியர்கள் அரசுத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பாலமாகத் திகழ்கிறார்கள். இதனால், அரசு ஊழியர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையாக தமிழ்நாடு அரசு, அகவிலைப்படி மற்றும் மருத்துவக் காப்பீடு போன்ற சலுகைகளை அரசு வழங்கி வருகிறது. 
ஆனாலு, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் தொடர்ந்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 2021 சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து வாக்குறுதி அளித்தது. ஆனால், தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றபின், அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையைக் கண்டுகொள்ளததால், அரசு ஊழியர்கள் தங்கல் அதிருப்தியை போராட்டங்கள் வழியாக தெரிவித்து வந்தனர்.
இதனால், தமிழக அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதியக் கோரிக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையைப் பரிசீலிக்க, கடந்த பிப்ரவரி மாதம் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ககன் தீப் சிங் பேடி தலைமையில் ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. இக்குழு பழைய ஓய்வூதியத் திட்டம் (ஓ.பி.எஸ்), பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (சி.பி.எஸ்), ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (யு.பி.எஸ்) ஆகிய மூன்று ஓய்வூதிய திட்டங்கள் குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொண்டது.
ககன் தீப் சிங் பேடி குழுவினர், பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் எல்.ஐ.சி போன்ற நிதி நிறுவனங்களுடன் ஆலோசித்து, கடந்த அக்டோபர் மாதம் இடைக்கால அறிக்கையைச் சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையில் உள்ள பரிந்துரைகள் குறித்து, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் புதன்கிழமை விரிவாக விவாதித்து ஆலோசனை நடத்தினர்.
அரசின் நிதி நிலைமை மற்றும் ஊழியர்களின் நலன் ஆகிய இரண்டையும் சமன்படுத்தும் வகையில் எந்தத் திட்டம் சிறப்பாக இருக்கும் என்பது குறித்து இந்த ஆலோசனையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து, டிசம்பர் இறுதிக்குள் ககன் தீப் சிங் பேடி குழு தனது இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய உள்ளது.