Saturday, August 3, 2019

Amaravathi Cynic School

அமராவதிநகர் சைனிக் பள்ளி மாணவர் சேர்க்கை அறிவிப்பு: விண்ணப்பங்கள் பதிவிறக்கம்.  

உடுமலை:உடுமலை, அமராவதிநகர் சைனிக் பள்ளியில், 2020-21 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, விண்ணப்பங்கள் 'ஆன்லைனில்' நாளை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும், உடுமலை அமராவதி நகர் சைனிக் பள்ளியில், ஆறு மற்றும் ஒன்பதாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு, நுழைவுத்தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.வரும், 2020-21 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு 2020, ஜன., 5ம் தேதி நடக்கிறது.

ஆறாம் வகுப்பு சேர்க்கைக்கு, அங்கீகாரம் பெற்ற பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும்; 2008, ஏப்., முதல், 2010 மார்ச் மாதத்திற்குள் பிறந்திருக்க வேண்டும்.அதேபோல், ஒன்பதாம் வகுப்பு சேர்க்கைக்கு, 2005, ஏப்., முதல், 2007 மார்ச் மாதத்திற்குள் பிறந்திருக்க வேண்டும். ஆறாம் வகுப்பில், 90 மற்றும் ஒன்பதாம் வகுப்பில் 6 இடங்களுக்கும் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். உடுமலை, புதுச்சேரி மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப் படுகிறது. சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் 'ஆன்லைன்' மூலம் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.

'ஆன்லைன்' மூலம் விண்ணப்பங்கள் பெறுவதற்கும், கட்டணம் மற்றும் சேர்க்கை குறித்த கூடுதல் விபரங்களுக்கும், www.sainikschool amaravathinagar.edu.in , www.sainikschooladmission.in என்ற இணையதளங்களிலும் பார்வையிடலாம்.விண்ணப்பங்களை, நாளை (ஆக., 5ம்தேதி) முதல், செப்., 23ம்தேதி வரை சமர்ப்பிக்கலாம். நுழைவுத்தேர்வு குறித்த கூடுதல் தகவல்களுக்கு, 04252 256246 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.இத்தகவலை, பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.