ஆசிரியர் பணிக்கான டெட் தகுதித் தேர்வுக்கு 1,552 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அரசுப் பள்ளிகளில், ஆசிரியர் பணிகளில் சேருவதற்கு, மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி, டெட் தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரையில் பணியாற்ற, தகுதித் தேர்வின், முதல் தாளும், எட்டாம் வகுப்பு வரை பணியாற்ற, தகுதித் தேர்வின் இரண்டாம் தாளும் எழுதி,தேர்ச்சி பெற வேண்டும். இதன்படி, இந்த ஆண்டுக்கான டெட் தேர்வுகள் ஜூன் 8 மற்றும் 9-ஆம் தேதிகளில் நடத்தப்பட உள்ளன.
இந்தத் தேர்வில் ஆறு லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். 2010-ஆம் ஆண்டுக்குப் பின், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியில் சேர்ந்த ஆசிரியர்களில் இதுவரை தகுதித் தேர்வு முடிக்காதவர்களுக்கு, இந்த டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த தேர்வுக்கு 32 மாவட்டங்களில் 1,552 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் தாளுக்கு, 471 மையங்களும், இரண்டாம் தாளுக்கு, 1,081 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும், முதல் தாளுக்கு, 28; இரண்டாம் தாளுக்கு, 60 என, 88 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
Pages
- HOME
- ஆசிரியர் தகுதி தேர்வு
- தொடக்க கல்வி
- அரசாணைகள்
- கற்பித்தல்
- பாடப்புத்தகம்
- துறை தேர்வு
- கல்வி
- கணினி நுட்பம்
- தமிழ் செய்தித்தாள்
- TN ABL CARDS
- PallikudamNEWS
- முக்கிய படிவம்
- செயல் முறைகள்
- தனி ஊதியம்
- Teachers resource
- B.Ed
- 2013
- TET CENTER
- முக்கியம்
- ENGLISH
- குழந்தை கதைகள்
- MATHS & SCIENCE
- ஜோசியம்
- HISTORY
- கணிதம்
Thursday, May 30, 2019
TET Examcenter
TET HallTicket
இணையதளத்தில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் புதிய வழிமுறை
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஆசிரியர் தகுதித் தேர்வு ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்வதில் பிரச்னை ஏற்பட்ட நிலையில், www.trb.tn.nic.in இணையதளத்தில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் புதிய வழிமுறையை அறிவித்துள்ளது.
புதிய வழிமுறை:
முதலில் Forgot User ID-ஐ Click செய்தால் பதிவு செய்த ஈமெயில் முகவரிக்கு User ID அனுப்பப்படும். 2-ஆவதாக Forgot Password-ஐ Click செய்து User ID, Email பதிவிட்டால் Password Reset Link இமெயிலும் வரும். Password Reset Link-ஐ பயன்படுத்தி புதிய பாஸ்வோர்ட் உருவாக்கி பின்னர் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்
PROCEDURE TO DOWNLOAD HALL TICKET FOR FORGOT USER ID / PASSWORD
TRB issued Hall Tickets to attend TamilNadu Teacher Eligibility Test-2019 – Paper I and Paper-II, through TRB website from 26.05.2019.
Some candidates forgot their user ID / Password, hence they are unable to download the Hall Ticket. To download their Hall Ticket, the following steps to be followed by them.
Forgot User ID
Step 1 – Click Forgot User ID.
Step 2 – Type the registered Email ID and Submit.
Step 3 – User ID will be sent to the registered Email ID.
Forgot Password
Step 1 – Click Forgot password.
Step 2 – Type User ID, Email and submit.
Step 3 – Link will be sent to the registered Email ID.
Step 4 – Click the link to reset password.
Step 5 – Type the new password and login again.
Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in
9 th Term cancel
மாநில பாட திட்டத்தில், 9ம் வகுப்புக்கான, முப்பருவத் தேர்வு முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
வரும், 3ம் தேதி முதல், ஆண்டு இறுதி தேர்வு முறை அமலுக்கு வருகிறது.தமிழகத்தில், மாநில பாடத் திட்டத்தில், 2011 முதல், சமச்சீர் கல்வி முறை அமலில் உள்ளது. மத்திய, மாநில அரசுகளின், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, முப்பருவப் பாட முறை மற்றும் தேர்வு முறை அமலில் உள்ளது.
இந்த முறையில், ஒன்றாம் வகுப்பு முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலும், மூன்று வகை பருவத் தேர்வுகள் நடக்கும். முதல் பருவத் தேர்வுக்கு, ஒரு புத்தகம்; இரண்டாம் வகுப்புக்கு வேறு; மூன்றாம் வகுப்புக்கு, மற்றொரு புத்தகம் என, தனி தனியாக வழங்கப்படும்.ஒவ்வொரு பருவத் தேர்வு முடிந்ததும், அடுத்த பருவத்துக்கு, புதிய புத்தகம் தரப்படும்.
பழைய பருவ புத்தகத்தை, மாணவர்கள் படிக்க வேண்டியதில்லை. அதனால், மாணவர்களுக்கு படிப்பு சுமை குறைந்தது.இந்நிலையில், ஒன்பதாம் வகுப்புக்கான முப்பருவ பாட முறையை ரத்து செய்து, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், ஒன்பதாம் வகுப்புக்கு, ஒரே புத்தகம் மட்டும் தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும், முப்பருவ தேர்வுக்கு பதில், ஆண்டு இறுதியில் நடத்தக்கூடிய, ஒரே தேர்வு முறையும் அறிமுகமாகிறது.
இந்த புதிய மாற்றம், ஜூன், 3ம் தேதி, பள்ளிகள் திறப்பு முதல் அமலுக்கு வருகிறது. அதேபோல், ஒன்பதாம் வகுப்புக்கு, இனி ஆண்டு முழுமைக்கும் சேர்த்து, ஒவ்வொரு பாடத்துக்கும், ஒரே புத்தகமே வழங்கப்படும்.
காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு இறுதி தேர்வு என, நடத்தப்படும் என்று, பள்ளி கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.