கலிபோர்னியா: 5 கோடி பேஸ்புக் கணக்குகளின் தகவல்கள் ஹேக்கர்களால் திருடப்பட்டிருக்கக் கூடும் என்ற அதிர்ச்சி தகவலை மார்க் ஜூகர்பெர்க் தெரிவித்துள்ளார்.
பேஸ்புக் எனப்படும் சமூகவலைதளம் உலகில் 223 கோடி பேரால் பயன்படுத்தப்படுகிறது. இதில் பதிவு செய்யப்படும் கருத்துகள் சில சமூகத்தில் பல்வேறு தாக்கங்களையும் ஏற்படுத்துவதாகவும் செல்பி என்ற பெயரில் சுய தம்பட்டம் அடித்து கொள்வதாகவும் இருக்கின்றன.
சுமார் 14 ஆண்டுகளாக இருந்து வரும் பேஸ்புக்கில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதை அந்த நிறுவனம் கண்டறிந்துள்ளது. இதுகுறித்து நிறுவன சிஇஓ மார்க் ஜூகன்பெர்க் கூறுகையில் சுமார் 5 கோடி பேரின் பேஸ்புக் கணக்கு விவரங்களை ஹேக்கர்கள் திருடியுள்ளனர்.
சந்தேகம்
கடந்த செப்டம்பர் 16-ம் தேதியில் இருந்து, ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்ததை பொறியாளர்கள் ஆராய்ந்தனர். அப்போது பேஸ்புக்கின் பயனாளர்கள் தகவல்கள் திருடப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
எளிது
ஆக்ஸஸ்
இதில் பாதிக்கப்பட்டவர்களின் கணக்குகளை எளிதாக அறிந்து கொள்ளலாம். இதுகுறித்து ஃபேஸ்புக் நிறுவனம் கூறுகையில், ஹேக் செய்யப்பட்ட கணக்குகள் தானாக லாக்அவுட் (logout) ஆகியிருக்கும் என்றும் மீண்டும் அவர்கள் லாக்இன் (login) செய்ய வேண்டும். ஒருவேளை பாஸ்வேர்ட்டை மறந்துவிட்டால் ஹெல்ப் சென்டர் மூலம் நீங்கள் உங்கள் கணக்கை ஆக்ஸஸ் செய்து கொள்ளலாம்.
தெரியவில்லை
திருடப்பட்டுள்ளனவா
இந்த கணக்குகளை யாரேனும் தவறாக பயன்படுத்தியுள்ளனரா என தெரியவில்லை. கணக்கு விவரங்களை திருடுவதை தடுக்க நாங்கள் பல்வேறு பாதுகாப்பு நடைமுறைகளை எடுத்துள்ளோம். தங்கள் தகவல்கள் திருடப்பட்டுள்ளனவா என மக்கள் எங்களை கேட்டு வருகின்றனர்.
உண்மை
விசாரணை
உண்மையை சொல்லபோனால் இதுபோல் தகவல்கள் ஹேக் செய்யப்படாத வகையில் புதிய டூல்ஸ்களை உருவாக்குவதில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். விவரங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது என்று தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
8 கோடி பேர்
தேர்தல்கள் கடும் பாதிப்பு
பிரிட்டிஷ் அனலிட்டிக்கா என்ற நிறுவனம் மூலம் கடந்த ஆண்டு நடந்த முறைகேட்டில் 8 கோடி பேர் தங்களது பேஸ்புக் ஹேக் செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்டனர். சில நாடுகளில் இது உயிரிழப்பையும் ஏற்படுத்தியது. அமெரிக்க அதிபர் தேர்தல்களை கடுமையாக பாதித்தது குறிப்பிடத்தக்கது.