Friday, April 28, 2017

Pallikudam

நாளை மற்றும் நாளை மறுநாள் தேர்வு எழுத போறிங்க. உங்களுக்கு வாழ்த்துக்கள்

காலை எட்டரை  மணிக்கு எல்லாம் தேர்வு மையத்துக்கு வர சொல்லி இருக்காங்க. அதானால நைட் எல்லாம் தூங்காமல் இருக்காதீங்க. அலாரம் வச்சிட்டு நிம்மதியாக தூங்கி மகிழ்ச்சியாக தேர்வு எழுத போங்க.

ஹால் டிக்கெட் ஏற்கனவே Download பண்ணி வச்சு இருப்பீங்க. அதை ரெண்டு ஜெராக்ஸ் போட்டு வீட்டில் எங்கேயாவது பத்திரமாக வைங்க. சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் தேர்வு முடிவு பார்க்க ஹால் டிக்கெட் முக்கியம்.

தேர்வுக்கு போகும் போது ஒரு பாட்டில் தண்ணீர் கொண்டு போங்க. வெயில் காலம் நாக்கு உலர்ந்துடும். அதனால் டயர்டா feel ஆகும். தண்ணீர் குடிச்சுட்டு எக்ஸாம் எழுதலாம்.

காலையிலே பொங்கல், தயிர் சாதம் போன்றவற்றை சாப்பிடாதீங்க. இவை இரண்டுமே தூங்க வைக்கும்.

கேள்வித்தாள் வாங்கியதும் உடனே எல்லாத்தையும் படிச்சுட்டு எழுத இது பள்ளி தேர்வு கிடையாது. உங்களுக்கு எந்த பாடத்தின் (தமிழ் , ஆங்கிலம் , சைக்காலஜி , அறிவியல் மற்றும் கணிதம், சமூக அறிவியல் ) மீது அதிக நம்பிக்கை உள்ளதோ அந்த பாடத்தின் கேள்விகளை மட்டும் நன்கு படித்து புரிந்து கொண்டு அந்த பகுதி வினாக்களுக்கான விடைகளை சரியான எண்களை பார்த்து விடைத்தாளில் குறிப்பிடுங்கள். பிறகு மற்ற வினாக்களை முடிக்கலாம்.

தேர்வு மையத்தில் உங்கள் நண்பர்களும் தேர்வு எழுத வந்து இருப்பார்கள். அவர்களில் பலர் புத்தகங்களை வைத்து படித்து கேள்விகளை கேட்டு கொண்டு இருப்பார்கள். அப்படிபட்டவர்கள் இருக்கும் பக்கம் போக வேண்டாம்.

தேர்வுக்கு சில மணி நேரங்கள் இருக்கும் நிலையில் தேர்வு மையத்தில்  படிப்பதை தவிர்க்கவும்.

தேர்வு எழுதும் போது பிறரை வேடிக்கை பார்ப்பதை தவிர்க்கவும். இது நேர விரயத்தை ஏற்படுத்தும்.

தேர்வை நல்ல முறையில் எழுதி வெற்றி பெற இறைவனை வேண்டுகிறேன்.

Monday, April 10, 2017

Hall ticket TET2017

TNTET - 2017 Exam.

Click here to Information Page 👇

 http://trb.tn.nic.in/TET2017/10042017/msg.htm

Pallikudam TET

TNTET - கணிதத்தில் வெற்றி பெற.... (வழிகாட்டுதல் கட்டுரை
பாட வாரியான வழிகாட்டுதல் தொகுப்பு

பாடம் - கணிதம்

30 மதிப்பெண் :
நேரடி வினாக்கள் (6)
வாழ்வியல் கணிதம் (18)
தயாரிப்பு வினாக்கள் (6)

நேரடி வினாக்கள்

எண்கள்
இயற்கணிதம்
அளவியல்
வடிவியல்
புள்ளியல்
முக்கோணம், வட்டம், மற்ற வடிவங்கள்
பரப்பளவு, சுற்றளவு
(வகை, பிரிவுகள், மதிப்புகள், வரையறை)

இவை சார்ந்த நேரடி வினாக்கள் பாட பகுதி சார்ந்தவற்றை படிப்பதன் மூலம் பெறலாம்

வாழ்வியல் கணிதம்

விகிதம்
சதவிகிதம்
லாபம் , லாப %
நட்டம், நட்ட %
தனி வட்டி
கூட்டு வட்டி
இயற்கணித நடைமுறை கணக்குகள்
வயது கணக்குகள்
எண்ணியல் கணக்குகள்
மீ.பெ.வ , மீ.பொ.ம
கலப்பு மாறல்
முக்கோண பண்புகள்
வட்ட பண்புகள்
வடிவ அதிகரிப்பு, குறைப்பு
சுருக்குக
வேலை - ஆட்கள்
தூரம் - வேகம்
பரப்பு, சுற்றளவு, கன அளவு

தயாரிப்பு வினாக்கள்

மன கணக்குகள்
படம் சார் கணக்குகள்
விட்டுப் பட்ட எண்கள்
பொருந்தாத எண்
பெரியது, சிறியது எது?
எறுவரிசை, இறங்கு வரிசை
பின்னம், தசமம் ஒப்பீடு
கலப்பு பின்னம், நேர் பின்னம்

கூடுதல் பகுதிகள்

வகுப்பு 9 மற்றும் 10

கணம் (படம் சார் கணக்கு)
மெய்யெண் தொகுப்பு ( அனைத்து வகைகள்)
மடக்கை
இயற்கணிதம் ( தொகுப்பு )
வடிவியல் (இணை கரம், நாற்கரம், கன உருவம் / கூட்டு உருவம், வட்டம் )
அளவியல் (கன சதுரம், செவ்வகம், கூம்பு, உருளை , ேகாளம்)
புள்ளியியல் (சராசரி, இடைநிலை, முகடு, வீச்சு)
நிகழ்தகவு ( நாணயம், பகடை, சீட்டு கட்டு)

வகுப்பு 11, 12 தேவை இல்லை.

பயிற்சி முறை

அனைத்து கணக்குகளையும் விரைவாக எளிதாக பயிற்சியுடன் விடை காண பழகுங்கள்

வாழ்வியல் கணிதம் தெளிவுற அறிதல் கட்டாயம்

கணிதம் பொறுத்தவரை வினாவிற்கான விடை வினாவில் ஒளிந்துள்ளது. புரிந்து தெளிவாய் தீர்வு காணுங்கள்

தினம் 1 மணி நேரம் ஒரு தலைப்பை பயிற்சி காணுங்கள்

Friday, April 7, 2017

Shaala siddhi

Shaala siddhi எப்படி முடிப்பது? தயார் செய்ய வேண்டியது என்னென்ன? பயனுள்ள குறிப்புகள் உங்களுக்காக…

வரும் ஏப்ரல் 20 ஆம் தேதிக்குள் shaala siddhi பதிவேற்றம் செய்து முடிக்க வேண்டும்.அதற்காக தலைமை ஆசிரியர்கள் தயார் செய்ய வேண்டிய தகவல்களை பற்றி பதிவு இதோ உங்களுக்காக.

1.students profilesஇந்த பகுதில் நாம் 2016-2017 நடப்பு கல்வியாண்டின்மாணவர்கள் விவரத்தை பதிய வேண்டும். இனவாரியாக sc st obc General minority totalஇதில் minority பகுதியில் bcm bcc மாணவர்களை பதிய வேண்டும் . இவர்களை தவிர்த்து மற்றவர்களை obc ல் பதிய வேண்டும் .

2. Class wise annual attendance rate – இந்த பகுதியில் 2015-2016 கல்வி ஆண்டின் மாணவர்களின் ஆண்டு சராசரி வருகை சதவீதத்தை பதிவிட வேண்டும் . வகுப்புவாரியாக ஆண் பெண் தனிதனியாக கணக்கிட வேண்டும். இதனை கணக்கிடும் முறையை பற்றி பார்ப்போம் . உதாரணமாக ஒன்றாம் வகுப்பில் 5 ஆண் மாணவர்கள் எனில் அவர்களின் மொத்த வருகை நாட்கள் 206,210,207,200,198 எனில் மொத்த கூடுதல் 1021/1050*100=வருகை சதவீதம் .இது போன்று அனைத்து வகுப்புகளும் ஆண் பெண் என்று தனி தனியாக கணக்கிட்டு தயார் செய்ய வேண்டும் .

3.learning outcomes annual report பகுதி -இங்கு 2015-2016 கல்வி ஆண்டின் விவரத்தை பதிவு செய்ய வேண்டும்.மாணவர்களின் ஆண்டின் ஒட்டுமொத்த மதிப்பெண் சதவீதத்தை கணக்கிட்டு பதிவு செய்ய வேண்டும் . உதாரணமாக ஒன்றாம் மாணவன் முதல் பருவம் 350/400 இரண்டாம் பருவம் 370/400 மூன்றாம் பருவம் 360/400 எனில் 1080/1200*100= என்ற படி கணக்கிட்டு கொள்ள வேண்டும் . இவ்வாறு வகுப்புவாரியாகதயார் செய்து கொண்டு கீழ்கண்ட இடைவெளியில் <33, 33-40,41-50,51-60,61-70,71-80,81-90,91-100 குறித்து கொண்டு பதிவேற்றம் செய்ய வேண்டும் .

4.teachers profiles இதில் 2016-2017 நடப்பு கல்வியாண்டின் பணிபுரியும் ஆசிரியர் விவரம் ஆண் பெண்வாரியாக பதிவிட வேண்டும். இந்த பகுதியில் trained , untrained என பிரிக்கப்பட்டுள்ளது . நமது பள்ளியில் அனைவரும் trained teacher . நடுநிலை பள்ளியில் part-time teachers இருந்தால் அவர்களை untrained பகுதியில் காட்டக்கூடாது . Only subject teachers மட்டும். Untrained teacher's எனபது high , her secondary level pta staff -ஐ குறிக்கும்.

5. Teachers attendance இந்த பகுதியில் 2015-2016 கல்வியாண்டில் ஆசிரியர்கள் விடுப்பு விவரம் பதிய வேண்டும் . விடுப்பை கணக்கிடும் போது ஒருமாதத்திற்கு மேல் விடுப்பு எடுத்தவர்கள் , ஒரு வாரத்திற்க்குள்ளாக விடுப்பு எடுத்தவர்கள் என தனி தனியாக கணக்கிட்டு குறித்து கொண்டு பதிவேற்றம் செய்யவேண்டும் . Cl தவிர பிற விடுப்புகள் .

Thursday, April 6, 2017

pallikudam ptpf silp


TPF 2014- 15 *கணக்கீட்டுத்தாள்* *இன்று வெளியானது.
* *தங்களின் சேமநலநிதி எண் மற்றும்* *பிறந்ததேதியை உள்ளீடு செய்து* *கணக்கீட்டுத்தாளை* *பதிவிறக்கம் செய்யலாம்.*

*TPF 2014- 15 *கணக்கீட்டுத்தாள்*
*இன்று வெளியானது.*
*தங்களின் சேமநலநிதி எண் மற்றும்* *பிறந்ததேதியை உள்ளீடு செய்து* *கணக்கீட்டுத்தாளை*
*பதிவிறக்கம் செய்யலாம்.*
*TPF ஆசிரியர்கள் கவனத்திற்கு….*
*TPF* கணக்கு
*GPF* ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
AG அலுவலக இணையதளத்தில்
நம்முடைய
*கணக்கு எண்*
*Suffix*
*பிறந்த தேதி*
ஆகியவற்றை உள்ளீடு செய்யசெய்து
*2014-15 Account Slip*
download செய்துகொள்ளலாம்.
Just click here
👇🏼