Wednesday, June 29, 2016

pallikudamnews

pallikudamnews

2016-17- PRIMARY/MIDDLE/HIGH/HSS-

MONTHLY WISE WORKING DAY LIST...

                                          Click Here

pallikudamnews

7 வது ஊதியக் குழு பரிந்துரையினை 29.06.2016 அன்று புதுடெல்லியில் கூடிய மத்திய அமைச்சரவை அடிபிறழாமல் ஏற்பு செய்து ஒப்புதல் அளித்துள்ளது என்பதை அறிய முடிகிறது.குறைநதபட்ச ஊதியம் ரூ 18,000 என்றும் அதிகபட்ச ஊதியம் 2.5 லட்சம் ஆகும்.
  தர ஊதிய நடைமுறை அறவே கைவிடப்பட்டுள்ளது.குழு காப்பீட்டு நிதி வழங்கும் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.01.01.2016 முதல் பரிந்துரையை அமல்படுத்தி ஊதிய உயர்வு நிலுவைத் தொகையையும் ரொக்கமாக வழங்க அறிவித்துள்ளது.
ஊதியக் குழுவின் ஊதிய உயர்வு பற்றிய கணக்கீடுகள்
தற்போது பணியில் இருக்கும் அனைவருக்கும் ஒரே மாதிரியாக அவரவர் பெறும் அடிப்படை ஊதியத்தில் (Basic pay Grade pay pp) சேர்த்து 32 % த்தை பெருக்கினால் வருகிற தொகையினை புதிய ஊதியமாக வழங்கிடமத்திய அமைச்சரவை முடிவு செய்து அறிவித்துள்ளது. இந்த உயர்வு தற்போது அவரவர் பெறும் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி 125 % சேர்த்து கணக்கிடும் போது 14.2 % சத உயர்வு வரும். ஒவ்வொருவரின் 01.01.2016ல் திருத்தப்பட்ட அடிப்படை ஊதியத்தினை கணக்கிட அவரவர் 01.01.2016ல் பெற்று வரும் அடிப்படை ஊதியத்தினை 2.57 % ஆல் பெருக்கினாலும் அதேஉயர்வுதான் வரும்.அவ்வாறு கணக்கிடும் போது ஊதியம் குறைவாக இருந்தால் 7 வது ஊதியக் குழுவில் ஏற்பு செய்து மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள தொகை இடைநிலை ஆசிரியர்களுக்குரூ 29200 (entry pay) ஊதியமாகும்.பணியில் மூத்தவருக்கு ஊதியம் குறைந்தாலும் ரூ 29200 லிருந்து ஊதியம் நிர்ணயம் செய்து சர்வீஸ் வெயிட்டேஜ்முறையில் கணக்கிட்டு ஊதியம் நிர்ணயம் செய்யும் பழைய முறையே அமல்படுத்துவார்கள் என அறிகிறோம்.ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் மேற்காணும் நடைமுறையே பொருந்தும்.
குறைந்தபட்ச ஊதியம் 26,000 நிர்ணயம் செயதிட சங்கங்கள் மத்திய அரசிடம் வலியுறுத்தியது.மத்திய அரசு 18,000 மட்டுமே என்று அறிவித்துள்ளது. அடிபிறழாமல் ஊதியக் குழு பரிந்துரையை ஏற்பு செய்ய 6 மாத காலம் அவகாசம் எடுத்துக்கொண்டது தேவையில்லை. ஆனால் மத்திய அரசு 6 மாதத்திற்குள் வழங்கியுள்ளதாக பெருமிதம் கொள்வதை உணர முடிகிறது.
(நாளேடுகளில் 23.5 % ஊதிய உயர்வு என்பது பொருத்தமில்லாத செய்தியாகும்.23.5 % ஊதிய உயர்வு என்பது பெருநகரங்களில் பணிபுரிவோர் பெறுகின்ற இதர படிகள் சேர்த்து கணக்கிடும் முறையாகும்.

pallikudamnews

அண்ணா பல்கலையின் இன்ஜி., பொது கவுன்சிலிங் ஜூன், 27ல் துவங்கியது. இதில், விளையாட்டு பிரிவு, மாற்றுத் திறனாளிகள் பிரிவு மற்றும் தொழிற்கல்வி பிரிவுக்கான அரசு இட ஒதுக்கீடு இடங்களை தவிர, பொதுப்பிரிவுக்கு, 1.83 லட்சம் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கான கவுன்சிலிங் நடந்த இரு நாட்களிலும், பெரும்பாலான மாணவர்கள், குறிப்பாக மாணவியர், கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இ.சி.இ., எனப்படும், 'எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன்ஸ்' துறையை தேர்வு செய்துள்ளனர். 
கவுன்சிலிங் துவங்கிய முதல் நாளிலேயே, சென்னை, அண்ணா பல்கலையின் கட்டுப்பாட்டிலுள்ள, கிண்டி இன்ஜி., கல்லூரி, குரோம்பேட்டை எம்.ஐ.டி., கல்லூரி, அரசு உதவி பெறும் கோவை பி.எஸ்.ஜி., கல்லூரி, மதுரை தியாகராஜா கல்லூரி போன்றவற்றில் இந்த படிப்புகளுக்கான இடங்கள் நிரம்பி விட்டன. மற்ற முன்னணி கல்லூரிகளிலும், இ.சி.இ., மற்றும் கம்யூ., சயின்ஸ் இடங்கள் நிரம்பி விட்டன. அதேபோல், 'எலக்ட்ரானிக்ஸ் அண்டு இன்ஸ்ட்ரூமென்டேஷன்ஸ்' பிரிவிலும் மாணவர்கள் அதிக அளவில் சேர்கின்றனர். இ.சி.இ.,க்கு அடுத்தபடியாக, மெக்கானிக்கல் படிப்பில் மாணவர்கள் சேர்ந்தாலும், ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தது போல், மெக்கானிக்கல் பிரிவுக்கு தற்போது அதிக போட்டி இல்லாத நிலை உள்ளது. எலக்ட்ரிக்கல் மற்றும் எல்க்ட்ரானிக்ஸ் துறைக்கும் பெரிய அளவில் போட்டி இல்லை.
மெக்கானிக்கல் படிப்பு பின்னடைவை சந்தித்ததற்கு, வேலை வாய்ப்பின்மையும், குறைந்த சம்பளமுமே காரணம் என, கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறியதாவது: கம்யூட்டர் சயின்ஸ் அறிமுகமான பின், அதற்கான மவுசு அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த, 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இம்முறை மெக்கானிக்கல், சிவில் மற்றும் எலக்ட்ரிக்கலுக்கு அதிக போட்டி இல்லை. இந்த நிலைக்கு வேலைவாய்ப்பின்மையே காரணம். கடந்த கல்வியாண்டில், தரவரிசையில் முதலில் உள்ள, 50 கல்லுாரிகளில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் சார்ந்த தொழிற்சாலை நிறுவனங்கள், வெறும், 8 சதவீதம் மட்டுமே வேலை அளித்துள்ளன. 
அடுத்த கட்டத்திலுள்ள கல்லுாரிகளில், 40 - 50 சதவீத மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற்றனர். அவர்களுக்கு மாதம், 8,000 ரூபாய் தான் சம்பளம் கிடைத்தது. முதல் தர கல்லூரிகளில், ஐ.டி., நிறுவன வேலைவாய்ப்பில், 25 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக சம்பளம் கிடைத்துள்ளது. அவற்றில் ஐ.டி., நிறுவனங்களே அதிக வேலைவாய்ப்பை அளித்துள்ளன. அதனால் தான், மெக்கானிக்கல் பின்னுக்கு தள்ளப்பட்டு, கம்யூ., சயின்ஸ் மற்றும் அதை சார்ந்த படிப்புகள் முன்னிலைக்கு வந்துள்ளன, என்றார்.

Wednesday, June 22, 2016