Monday, April 25, 2016

pallikudamnews

CCE RESULTS 2015-2016

   CCE TERM MARKS EXCEL SOFT

                                                   CLICK HERE

    BRC SMF FORMAT  EXCEL SOFT

                                                   CLICK HERE

Sunday, April 24, 2016

PALLIKUDAM

FOR ELECTIONS


 Important Links: 

  • Know your Electoral Serial No, Part No, Constituency - Click Here
  • How to Vote in the Postal Ballot? - Click Here
  • Android App For "Know your Electoral Serial No, Part No, Constituency" - Click Here
  • Know your Election Poll Booth vis SMS Format - Click Here
  • Important Instructions for Postal Ballot Apply - Click Here
  • Tentative Schedule For Conducting Training Class (24.4.16) - Click Here
  • Tamilnadu Election Official Website - Click Here
  • Complete Guide of Polling Officers Duties & EVM in Tamil - Click Here
  • Presiding Officers Training Video for EVM operations - Click Here
  • No Cancellation for Election Duty Order - Collectors Instruction - Click Here
  • General Election - Public Holiday Announced Letter - Click Here

Saturday, April 23, 2016

Pallikudamnews

Search your name serial
  தங்களின் பெயரை தங்கள் வாக்காளர் பட்டியலில் எந்த வரிசையில் உள்ளது என்பதை அறிய
கீழே கிளிக் செய்ய

http://electoralservicessearch.azurewebsites.net/searchbyname.aspx



Thursday, April 14, 2016

pallikudamnews

தேர்வு நிலை பெற விண்ணப்பிக்க வேண்டியவர்களுக்கு 

                                       01.06.2006 முதல் ஒரே பதவியில் பத்து ஆண்டுகள் பணி முடித்ததற் கான தேர்வு நிலை பெற விண்ணப்பிக்க வேண்டியவர்களுக்கு விண்ணப்பம் அளிக்கவேண்டும்.

இங்கே கிளிக் செய்ய
                                                       தேர்வு நிலை விண்ணப்பம்

Thursday, April 7, 2016

pallikudamnews

MBBS / BDS படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை இருக்காது: தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு.

         கிராமப்புற மாணவர்கள் பாதிக் கப்படுவார்கள் என்பதால் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு களுக்கு ஆன்லைன் மூலம் விண் ணப்பிக்கும் முறை கொண்டுவரப் படாது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
 
          மாணவர்கள் வரவேற்புதமிழகத்தில் பொறியியல், மருத்துவம், கால்நடை மருத் துவத்துக்கான விண்ணப்பங் களை நேரடியாக பெற்று விண்ணப்பிக்கும் முறை இருந்து வந்தது


. சோதனை முயற்சியாகபொறியியல் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பங்களை நேரடியாக பெற்று விண்ணப்பிக்கும் முறையுடன், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறையும் கொண்டுவரப்பட்டது. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறைக்கு மாணவர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து கடந்த ஆண்டு கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கும்முறை அமல்படுத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு முதல் பொறியியல் படிப்புகளுக்கும் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கும் முறை அமல்படுத்தப்படுகிறது. ஏப்ரல் 15-ம் தேதி முதல் பொறியியல் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இவைதவிர விவசாயம், தோட்டக்கலை, வனவியல் படிப்புகளுக்கும் ஆன்லைன் மூலம் விண்ணப் பிக்கும் முறை அமலில் இருக்கிறது. ஆனால் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்பு களுக்கு மட்டும் இன்னும் விண்ணப்பங்களை நேரடியாக பெற்று விண்ணப்பிக்கும் முறையேஅமலில் இருக்கிறது. சோதனை முயற்சியாகக்கூட ஆன்லைன் மூலம் மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் முறைகொண்டுவரப்படவில்லை.

விண்ணப்பிப்பது சிரமம்

இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை கொண்டுவரப்படாது. ஆன் லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறையால் நிறைய பிரச்சினை களும், குளறுபடிகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. நகர்ப்புறங்களில் வசிக்கும் மாணவர்கள் எளி தாக ஆன்லைனில் விண்ணப் பித்து விடுவார்கள். கிராமப் புறங்களில் வசிக்கும் மாணவர் கள் ஆன்லைனில் விண்ணப் பிப்பது சிரமம். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையை கொண்டு வந்தால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார் கள். அதனால்தான் மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறையை கொண்டுவரவில்லை” என்றார்.

pallikudamnews

நெட் தேர்வு ஏப்ரல் 12 முதல் விண்ணப்பிக்கலாம்

           மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் மூலம் நடத்தப்படும் நெட் தேசிய அளவிலான தகுதித் தேர்வு ஜூலை மாதம் 10-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது.

 
            இதற்கான அறிவிப்பை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. வருகிற 12-ஆம் தேதி முதல் இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்தத் தேர்வானது ஜூலை 10-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. 


இதற்கு http://cbsenet.nic.in/cbsenet/welcome.aspx என்ற இணையதளம் மூலம் வருகிற 12-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க மே 12 கடைசித் தேதியாகும். தேர்வுக் கட்டணத்தை மே 13-ஆம் தேதி வரை செலுத்த முடியும்.

pallikudamnews

வாட்ஸ்அப் மெசேஜ்-களை பாதுகாக்க வாட்ஸ்அப் என்க்ரிப்சன் புதிய வசதி !

வாட்ஸ்அப் மெசேஜ்-களை பாதுகாக்க வாட்ஸ்அப் என்க்ரிப்சன் புதிய வசதி !

வாட்ஸ்அப் மெசேஜ்-களை பாதுகாக்க வாட்ஸ்அப் என்க்ரிப்சன் புதிய வசதி ஸ்மார்ட் போன் பாவனையாளர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபல்யமான மெசஞ்சர் செயலியாக காணப்படும் வாட்ஸ்அப், தனது பயனர்களுக்காகசிறந்த பல வசதிகளை அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளது.

அந்த வகையில் அண்மையில் வாட்ஸ்அப்-இல் அறிமுகப்படுத்தப்பட்ட தடித்த மற்றும் வளைந்த எழுத்துக்கள் மூலம் செட் செய்யும் வசதியை குறிப்பிடலாம். இவ்வாறு பயனுள்ள பல வசதிகளை அறிமுகப்படுத்தி வந்த வாட்ஸ்அப் நிறுவனம், தற்போது வாட்ஸ்அப் பாதுகாப்பு சம்மந்தப்பட்ட சிறந்ததொரு வசதியைஅறிமுகப்படுத்தி உள்ளது. அதாவது வாட்ஸ்அப் என்க்ரிப்சன் எனப்படும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.

 என்க்ரிப்சன் என்றால் என்ன?

என்க்ரிப்சன் எனப்படுவது, நாம் குறித்த ஒருவருக்கு அனுப்பும் செய்தி வெறும் டெக்ஸ்ட் வடிவத்திலேயே செல்லாமல், இரகசிய குறியீடுகளாக மாற்றப்பட்டு அனுப்பப்படுவதாகும். ஆகவே குறித்த செய்தி ஒன்றை நாம் மற்றுமொருவருக்கு அனுப்பும் போது, அந்த செய்தி குறித்த நபரை சென்றடையும் வரை யாராலும் ஹேக் செய்து தெரிந்து கொள்ள முடியாது.

உதாரணமாக நாம் எமது வாட்ஸ்அப் மூலம் எமது நண்பர் ஒருவருக்கு மெசேஜ் ஒன்றை அனுப்பும் போது, குறித்த மெசேஜ்-ஐ நடுவில் இருந்து யாரேனும் ஹேக் செய்வதற்கான வாய்ப்பு உள்ளது. குறித்த ஹேகர், எமது மெசேஜ்-ஐ ஹேக் செய்து விட்டால், நேரடியாக அவரால் எம்முடைய மெசேஜ்-ஐ வாசித்து தெரிந்து கொள்ள முடியும். ஆனால் எமது மெசேஜ் என்க்ரிப்சன் செய்யப்படுவதால், எமது மெசேஜ்-ஐ யாரேனும் ஹேக் செய்தாலும் அவர்களால் குறித்த மெசேஜ் என்ன என்று வாசித்து தெரிந்து கொள்ள முடியாது. ஏன் என்றால், எம்முடைய மெசேஜ் வெறும் எழுத்துகளாக இல்லாமல் சிறப்பு குறியீடுகளாக காணப்படுவதே இதற்கு காரணம் ஆகும். இந்த என்க்ரிப்சன் வசதியை தான், தற்போது வாட்ஸ்அப் தனது பயனர்களுக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. ஆகவே இனி நீங்கள்அனுப்பும் ஒவ்வொரு வாட்ஸ்அப் மெசேஜ்-உம் சிறந்ததொரு பாதுகாப்பு முறை மூலம் பாதுகாக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வசதியை பெற்றுக்கொள்வது எப்படி?

இந்த வசதியை உங்களது வாட்ஸ்அப் கணக்கில் செயற்படுத்த, உங்களது வாட்ஸ்அப் பதிப்பை அப்டேட் செய்திடுங்கள். அப்டேட் செய்ததும், உங்களுடைய வாட்ஸ்அப்செட்டிங்க்ஸ் பகுதிக்கு சென்று, அங்கே Account என்பதில் Security என்பதை தெரிவு செய்யுங்கள். . இந்த மெனு-வில் உங்களது வாட்ஸ்அப் மெசேஜ் மற்றும் அழைப்புக்களை (கால்) என்க்ரிப்ட் செய்வதற்கான வசதி காணப்படும். ஆகவே இனி நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு மெசேஜ்-உம் என்க்ரிப்ட் செய்யப்பட்டே அனுப்பப்படும்.

pallikudam departmental

TNPSC :Departmental Examinations - DECEMBER 2015 Result (Updated on 06 April 2016)

07/04/2016