Pages
- HOME
- ஆசிரியர் தகுதி தேர்வு
- தொடக்க கல்வி
- அரசாணைகள்
- கற்பித்தல்
- பாடப்புத்தகம்
- துறை தேர்வு
- கல்வி
- கணினி நுட்பம்
- தமிழ் செய்தித்தாள்
- TN ABL CARDS
- PallikudamNEWS
- முக்கிய படிவம்
- செயல் முறைகள்
- தனி ஊதியம்
- Teachers resource
- B.Ed
- 2013
- TET CENTER
- முக்கியம்
- ENGLISH
- குழந்தை கதைகள்
- MATHS & SCIENCE
- ஜோசியம்
- HISTORY
- கணிதம்
Thursday, October 30, 2014
4 th
CCE 4th Std Study Material
- 4th Standard - English - Mother Theresa (Term 2) - English Medium
new post
TET Paper 2: Next List will Publish Soon.
TET தேர்ச்சி பெற்ற நண்பர்களே முதலைமைச்சர் தனிப்பிரிவில் பெறப்பட்ட தகவல் படி 2011முதல்2013 வரை உள்ள ஆசிரியர் பணியிடங்களில் மீதம் உள்ள பணியிடங்கள் ஏற்கனவே வெற்றி பெற்ற தேர்வர்களை கொண்டு மட்டுமே நிரப்பப்படும் இவை விரைவில் நிரப்பட உள்ளது என முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு TRB அளித்துள்ள தகவல் கூறுகிறது.
Tuesday, October 28, 2014
cps
CPS ஒப்புகை சீட்டு (A/C SLIP) தங்கள் ஒன்றியத்தில் வழங்கப்பட்டுவிட்டதா??
Saturday, October 25, 2014
ஏஇஇஓ
தலைமை ஆசிரியர்கள் 67 பேர் கல்வி அதிகாரிகளாக உயர்வு
அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், 67 பேர், நேற்று, உதவி தொடக்கக் கல்வி அலுவலர் களாக, பதவி உயர்வு செய்யப்பட்டனர். உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வு கலந்தாய்வு, சென்னையில் உள்ள, தொடக்கக் கல்வி இயக்குனர் அலுவலகத்தில், நேற்று காலை நடந்தது.
காலியாக உள்ள, 67 இடங்களை நிரப்ப, பணிமூப்பு அடிப்படையில், 160 தலைமை ஆசிரியர்கள், கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர். இவர்களில், 67 பேர், பதவி உயர்வு இடங்களை தேர்வு செய்தனர். இதையடுத்து, 67 பேருக்கும், பதவி உயர்வுக்கான உத்தரவுகளை, தொடக்கக் கல்வி இயக்குனர், இளங்கோவன் வழங்கினார். பதவி உயர்வினால் ஏற்பட்ட தலைமை ஆசிரியர் காலி பணியிடம், விரைவில் நிரப்பப்படும் என,
இயக்குனர் தெரிவித்தார்.
10+2+3
பிளஸ் 2 படிக்காத ஆசிரியருக்கு பதவி உயர்வு : பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு
பிளஸ் 2 படிக்காமல், இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி முடித்த ஆசிரியரை, பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு அனுமதிக்காமல் தடை போட்ட தமிழக அரசு, தற்போது, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், 'இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி, பிளஸ் 2 படிப்பிற்கு நிகரானது' என, உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனால், பிளஸ் 2 படிக்காத இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியராக, பதவி உயர்வு பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த, 1987 வரை, இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர, குறைந்தபட்ச கல்வித் தகுதியாக, 10ம் வகுப்பு தேர்ச்சி இருந்தது. 1988 முதல், ஆசிரியர் பயிற்சியில் சேர்வதற்கான கல்வி தகுதியாக, பிளஸ் 2 நிர்ணயிக்கப்பட்டது.
ஆசிரியர் பயிற்சி படிப்பு : பிளஸ் 2 கல்வித்தகுதி நிர்ணயிப்பதற்கு முன், பிளஸ் 2 படிக்காமல், 10ம் வகுப்பு, பின், ஆசிரியர் பயிற்சி படிப்பு, அதன்பின், திறந்தவெளி பல்கலையில் பட்டம், முதுகலை பட்டம் பெற்று, பள்ளி கல்வித்துறையில், ஆசிரியராக ஏராளமானோர், பணியில் சேர்ந்தனர். இத்தகைய ஆசிரியர்கள், பிளஸ் 2 முடிக்காததால், பதவி உயர்வு வழங்க முடியாது என, 2011ல், கல்வித்துறை, திட்டவட்டமாக தெரிவித்தது. 2011க்குப் பின் நடந்த பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வில், மேற்கண்ட ஆசிரியரை, சேர்க்கவில்லை. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், பல ஆசிரியர்கள், வழக்கு தொடர்ந்தனர். இதில், ஆசிரியர்களுக்கு, சாதகமாக, சமீபத்தில், உத்தரவு வழங்கப்பட்டது.
இந்நிலையில், பள்ளி கல்வித்துறை செயலர், சபிதா பிறப்பித்துள்ள அரசாணை விவரம்:
நீதிமன்றம் உத்தரவு :
'பத்தாம் வகுப்பிற்குப் பின் பெறப்பட்ட இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி சான்றிதழை, பிளஸ் 2 படிப்பிற்கு இணையாக கருதி, பதவி உயர்வு வழங்க வேண்டும்' என, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில், ஆசிரியர் பயிற்சி சான்றிதழை, பிளஸ் 2 படிப்பிற்கு இணையாக கருதி, உரிய ஆணை வழங்கிட, பள்ளிக்கல்வி இயக்குனர்
கேட்டுள்ளார். அதன்படி, 1987ம் ஆண்டுக்கு முன் பெறப்பட்ட இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி சான்றிதழை, பிளஸ் 2 படிப்பிற்கு இணையானது என, அரசு உத்தரவிடுகிறது.
இவ்வாறு, அரசாணையில், செயலர் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவின் காரணமாக, பள்ளி கல்வித்துறை மற்றும் தொடக்கக் கல்வித்துறையில், இடைநிலை ஆசிரியராக பணி புரியும் பலர், பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெறும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.
Rain
மழை கால நடவடிக்கைகள் : தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுக்கு கல்வித் துறை உத்தரவு
மழை காலங்களில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தொடக்க கல்வி இயக்குநர் இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு...
மழை காலங்களில் மாணவர்கள் பாதுகாப்புடன் பள்ளிக்கு வந்து செல்வதை உறுதி செய்து கொள்ளும் பொருட்டு, அனைத்து அரசு, ஊராட்சி, நகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள், மழலையர் மற்றும் தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு அந்தந்த பகுதி உதவி தொடக்க கல்வி அதிகாரி மற்றும் கூடுதல் உதவி தொடக்க கல்வி அதிகாரிகள் பின்வரும் அறிவுரைகளை வழங்க வேண்டும்.
* மழை காலங்களில் பள்ளி வளாகத்திற்குள் மழைநீர் தேங்கி மாணவர்களுக்கு இடையூறாக இருந்தால், அம்மழை நீரை மின் மோட்டார்கள் மூலம் அகற்றுவதற்கான துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்
* நீர் பிடிப்பு பகுதிகளான ஆறு, ஏரி, குளம், குட்டை, வாய்க்கால் முதலிய பகுதிகளில் நீர் நிரம்ப வாய்ப்பு இருப்பதால், இத்தகைய நீர்ப்பிடிப்பு பகுதிகளுக்கு அருகில் மாணவர்கள் செல்லாதவாறு கண்காணிப்பதுடன், நீர்ப்பிடிப்பு பகுதிகளுக்கு அருகில் செல்வதனால் ஏற்படும் அபாயத்தை விளக்க வேண்டும்.
* பள்ளி நேரம் முடிந்து வீடு திரும்பும் மாணவர்கள் பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்கும் வகையில் மனித உயிரின் மதிப்பு குறித்து மாணவர்களுக்கு அறிவுரை வழங்குவதுடன், அந்தந்த பகுதியை சேர்ந்த, பொறுப்பும் தலைமை பண்பும் உள்ள ஒரு மாணவரை பொறுப்பேற்று வழிநடத்தி செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.
மின் கசிவு, விழிப்புணர்வு
* பள்ளி வளாகங்களில் மின் கசிவு ஏற்படாத வகையில், மின்சாதனங்களையும், மின் கம்பிகளையும் மிகுந்த எச்சரிக்கையுடன் பராமரிப்பதுடன், மின்சாரம் சார்ந்த விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.
* மேல் நீர் தொட்டி, கழிவறை கழிவு நீர் தொட்டி ஆகியவற்றிற்கு அருகில் குழந்தைகளை அனுமதித்தல் கூடாது.
* மழை காலங்களில் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளதால், மாணவர்களுக்கு அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், காய்ச்சி வடிகட்டிய குடிநீரை பயன்படுத்த அறிவுரை வழங்க வேண்டும்.
மரங்களுக்கு கீழ் ஒதுங்குவதால்...
* மாணவர்கள் மழையில் நனையாமலும், இடி, மின்னல் போன்ற தாக்குதலுக்கு உட்படாமலும் பாதுகாப்பாக இருப்பதற்கு அறிவுரை வழங்குதல் வேண்டும். மழைக்காலங்களில் மரங்களுக்கு கீழ் ஒதுங்குவதால் ஏற்படும் அபாயத்தை மாணவர்களுக்கு விளக்கி கூற வேண்டும்.
* தற்போது பெய்து வரும் கனமழை மேலும் நீடிக்க வாய்ப்பு உள்ளதால் சனிக்கிழமை(நேற்று) மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்களும், மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகள் மற்றும் உதவி தொடக்க கல்வி அதிகாரிகள் தத்தம் தலைமை இடத்தில் தங்கி இருந்து சூழ்நிலைக்கு ஏற்றவாறு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Thursday, October 23, 2014
group 4
5 ஆயிரம் பணியிடங்களுக்கு ஒருவாரத்தில்
3 லட்சம் விண்ணப்பம்!!!
Monday, October 13, 2014
KIT TRI
TNPSC 4
TNPSC: Group IV Services : Notification Published.
Advt. No./
Notification No. |
Name of the Post (s) with Code No.
|
Date of Notification
|
Date of Closing
|
Date of Exam
|
Status
| ||||||||
18/2014
|
Group IV Services
|
14.10.2014
|
12.11.2014
|
21.12.2014
|
|
Friday, October 10, 2014
DA
தமிழகஅரசு ஊழியர்கள் -ஆசிரியர்களுக்கு 7 சதவிகித அகவிலைப்படி உயர்வு
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 7 சதவிகித அகவிலைப்படி உயர்த்தபட்டுள்ளதாக தமிழக முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம் 1-ம் தேதி முதல் கணக்கிடப்பட்டு ரொக்கமாக வழங்கப்படும்.மேலும் அகவிலைப்படி உயர்வு படி மூலம் ஓய்வூதியதாரர்களும் இதன் மூலம் பயனைடவார்கள் என்றும் அகவிலைப்படி உயர்வினால் மொத்தம் 18 இலட்சம் பேர் இதன் மூலம் பயனடைவார்கள் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது.