Pages
- HOME
- ஆசிரியர் தகுதி தேர்வு
- தொடக்க கல்வி
- அரசாணைகள்
- கற்பித்தல்
- பாடப்புத்தகம்
- துறை தேர்வு
- கல்வி
- கணினி நுட்பம்
- தமிழ் செய்தித்தாள்
- TN ABL CARDS
- PallikudamNEWS
- முக்கிய படிவம்
- செயல் முறைகள்
- தனி ஊதியம்
- Teachers resource
- B.Ed
- 2013
- TET CENTER
- முக்கியம்
- ENGLISH
- குழந்தை கதைகள்
- MATHS & SCIENCE
- ஜோசியம்
- HISTORY
- கணிதம்
Wednesday, July 31, 2013
பள்ளிக்கூடம்
5க்கும் குறைவாக உள்ள பள்ளிகளை அருகாமை பள்ளிகளுடன் இணைக்க முடிவு
உடனடியாக மாணவர் என்னிக்கை 5க்கும் குறைவாக உள்ள பள்ளிகளை அருகாமை பள்ளிகளுடன் இணைக்கவும், காலம் செல்லச் செல்ல 10 மாணவர்களுக்கு குறைவான பள்ளிகளை அருகாமை பள்ளிகளுடன் இணைக்கவும் முடிவெடுத்து இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதற்கான பணியினை கல்வித்துறை முடுக்கிவிட்டிருப்பதாக அலுவலக வட்டாரங்க்ள தெரிவிக்கின்றன.
ஒரு வேளை இச்செய்தி உண்மையானால் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, சிவகங்கை மாவட்டக்கிளை தன்னுடைய அதிர்ப்தியை பதிவு செய்கிறது. இதனால் பல ஆசிரியர்கள் இடம் மாறுவார்கள் என்பதைவிட் 1கி.மீ. சுற்றளவில் ஆரம்பப்பள்ளிக்ள அமைந்திட வேண்டும் என்ற அரசின் கொள்கை கேள்வி குறியாகி விடும். மாணவர்களை அருகாமை பள்ளிகளில் இணைப்பதால் மாணவர்கள் தொடர்ந்து அருகாமை பள்ளிகளுக்கு வருவார்களா? மேலும் இடைநிற்றலை அறவே ஒழிக்க வேண்டும் என போராடி வரும் மத்திய-மாநில அரசுகளின் முயற்சி விரயமாகிவிடும். பேருந்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதியில்லாமல் நகரங்களை நோக்கி இடம் பெயரும் மக்களை இது மேலும் ஊக்குவிக்கும் செயலாக அமைந்து விடும்.
பல ஊர்களில் புற்றீசல் போல அங்கீகாரம் இல்லாமல் எத்தனையோ ஆங்கிலவழிக்கல்வி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அப்பள்ளிகளை மூடுவதற்கு கல்வி அதிகாரிகள் முயற்சி மேற்கொள்ளாமல் அரசு பள்ளிகளை மூடுவதால் எதிர்மறை விளைவுகளைதான் ஏற்படுத்தும். பள்ளிகளுக்கு மூடுவிழா செய்யாமல் மாற்று வழி என்ன என்பதை அரசு யோசிக்க வேண்டும். காமராஜர் காலத்தில் பல கல்வி நிலையங்கள் தொடங்கப்பட்டன என்பதை வரலாறு பேசுகிறது. ஜெயலலிதா காலத்தில் பல் பள்ளிகள் மூடப்பட்டன என்ற அவப்பெயரை முதல்வருக்கு ஏற்படுத்தமாட்டார்கள் என்றே நம்புகிறேன். மாற்று வழி யோசிப்போம்! மகத்தான கல்வி புரட்சி காண்போம்.
Monday, July 29, 2013
pallikudam
PG TRB Exam Government Key Answers ஜூலை 2013 முதுகலை ஆசிரியர் போட்டி தேர்விற்கான வினா - விடைகள் மற்றும் விடைகள்
Saturday, July 27, 2013
pallikudam
SMC MEETING TO BE CONDUCTED LAST FRIDAY OF EVERY MONTH | ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளியன்று பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தை கூட்டவதை உறுதிப்படுத்தவும் அவ்வாறு நடைபெறாத பள்ளிகளின் தலைமையாசிரியர்களிடம் விளக்கம் கேட்கவும் அனைவருக்கும் கல்வி இயக்கம் உத்தரவு
CPS Forms/ Form Filling Guidelines, Schemes / Withdrawl/ Charges and Instructions |
பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் படிவங்கள்/ படிவம் பூர்த்தி செய்வதற்கான
வழிகாட்டுதல்கள், CPS திட்டங்கள்
click here to download the Application for Allotment of Permanent Retirement Account Number (PRAN)
வழிகாட்டுதல்கள், CPS திட்டங்கள்
click here to download the Application for Allotment of Permanent Retirement Account Number (PRAN)
a.Schemes
1.What is meant by Scheme Preference ?
Scheme Preference is the Pension fund schemes option chosen by the subscriber for investing the pension contribution amount. At present, there is only one default scheme for Tier I.
Tuesday, July 16, 2013
"கட்-ஆப்" அதிகரிப்பு
சட்டப்படிப்பு: பி.சி., எம்.பி.சி.,யை விட ஆதிதிராவிடர் "கட்-ஆப்" அதிகரிப்பு
ஐந்தாண்டு, சட்டப் படிப்புக்கான, "கட்-ஆப்" மதிப்பெண்ணை, சட்டப் பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்டது. இதில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோரை விட, ஆதிதிராவிட பிரிவினருக்கான, "கட்-ஆப்" மதிப்பெண் அதிகரித்து உள்ளது.
சென்னை, மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, செங்கல்பட்டு ஆகிய, ஆறு சட்ட கல்லூரிகளில் நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இக்கல்லூரிகளில், ஐந்தாண்டு சட்டப் படிப்புக்கு, 1,052 இடங்கள் உள்ளன. இவற்றுக்கு, 4,443 பேர் விண்ணப்பித்தனர். இதில், 4,163 விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்பட்டன. இதன் அடிப்படையில், ஐந்தாண்டு சட்டப் படிப்புக்கு ஜாதி வாரியான, "கட்-ஆப்" மதிப்பெண் வெளியிடப்பட்டு உள்ளது.
பிரிவு "கட்-ஆப்" மதிப்பெண்
பொது பிரிவு 85.25
பிற்படுத்தப்பட்டோர் 73.25
பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்) 69.62
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 71.62
ஆதிதிராவிடர் 75
ஆதிதிராவிடர் (அருந்ததியினர்) 72.50
பழங்குடியினர் 64.75
ஐந்தாண்டு, சட்டப் படிப்புக்கான, "கட்-ஆப்" மதிப்பெண்ணை, சட்டப் பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்டது. இதில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோரை விட, ஆதிதிராவிட பிரிவினருக்கான, "கட்-ஆப்" மதிப்பெண் அதிகரித்து உள்ளது.
சென்னை, மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, செங்கல்பட்டு ஆகிய, ஆறு சட்ட கல்லூரிகளில் நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இக்கல்லூரிகளில், ஐந்தாண்டு சட்டப் படிப்புக்கு, 1,052 இடங்கள் உள்ளன. இவற்றுக்கு, 4,443 பேர் விண்ணப்பித்தனர். இதில், 4,163 விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்பட்டன. இதன் அடிப்படையில், ஐந்தாண்டு சட்டப் படிப்புக்கு ஜாதி வாரியான, "கட்-ஆப்" மதிப்பெண் வெளியிடப்பட்டு உள்ளது.
பிரிவு "கட்-ஆப்" மதிப்பெண்
பொது பிரிவு 85.25
பிற்படுத்தப்பட்டோர் 73.25
பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்) 69.62
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 71.62
ஆதிதிராவிடர் 75
ஆதிதிராவிடர் (அருந்ததியினர்) 72.50
பழங்குடியினர் 64.75
Sunday, July 14, 2013
டி.ஆர்.பி., எச்சரிக்கை
TET - பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்: டி.ஆர்.பி., எச்சரிக்கை
x
டி.இ.டி., தேர்வை எழுதத் தயாராகி வருபவர்களிடையே, "பணம் கொடுத்தால், வேலை கிடைக்கும்" என்ற தகவலை, சில மர்ம கும்பல்கள், வேகமாக பரப்பி வருகின்றன. இதனால், உஷார் அடைந்துள்ள டி.ஆர்.பி., அமைப்பு, "தேர்வர்கள், யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்; நேர்மையான முறையில், தகுதி வாய்ந்தவர் மட்டுமே, ஆசிரியராக தேர்வு செய்யப்படுவர்" என இப்போதே எச்சரித்துள்ளது.
வரும் ஆகஸ்ட், 17, 18ம் தேதிகளில், டி.இ.டி., தேர்வு நடக்கிறது. 17ம் தேதி, இடைநிலை ஆசிரியர்களுக்கான, முதல் தாள் தேர்வும், 18ம் தேதி, பட்டதாரி ஆசிரியர்களுக்கான, இரண்டாம் தாள் தேர்வும் நடக்கிறது. இத்தேர்வுக்கு, 6.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தேர்வுக்கு, இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில், தேர்வர்கள் மத்தியில், திடீரென, "பணம் கொடுத்தால் வேலை" என்ற தகவலை, சில மர்ம கும்பல்கள் பரப்பி வருகின்றன. ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை நியமிக்கப்படும் இடைநிலை ஆசிரியர்கள், டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற்றால் போதும்.
மற்றபடி, மாநில பதிவு மூப்பு அடிப்படையில் தான், பணி நியமனம் செய்யப்படுகின்றனர். பட்டதாரி ஆசிரியர் மட்டும், முழுக்க முழுக்க, மதிப்பெண் அடிப்படையில், பணி நியமனம் செய்யப்படுகின்றனர். இதில், இடைநிலை ஆசிரியர்களை தேர்ச்சி அடையச் செய்ய, 3 முதல், 4 லட்சம் ரூபாய் வரை, தேர்வர்கள் மத்தியில், சிலர் பேரம் பேசி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த தகவலை உறுதி செய்ய, பல தேர்வர்கள், டி.பி.ஐ., வளாகத்தை சுற்றி வருகின்றனர். டி.இ.டி., தேர்வு மூலம், 15 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ள நிலையில், தேர்வர்கள் மத்தியில் உலா வரும் வதந்தியை அறிந்து, டி.ஆர்.பி., அதிர்ச்சி அடைந்துள்ளது.
இதுகுறித்து, அதிகாரி ஒருவர் கூறியதாவது: எழுத்து தேர்வும், அதைத் தொடர்ந்து, நியமன தேர்வு முறையும், நேர்மையான முறையில் நடக்கும். இதில், தேர்வர்கள், எவ்வித சந்தேகமும் அடையத் தேவையில்லை.
முழுக்க முழுக்க, தகுதியான ஆசிரியர் மட்டுமே, தேர்வு செய்யப்படுவர். தேர்வர்கள், அறிமுகம் இல்லாத நபர்களின் பேச்சைக் கேட்டு, பணம் கொடுக்கக் கூடாது. இந்த விவகாரத்தில், மோசடி பேர்வழிகள் சிக்கினால், அவர்கள் மீது, கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அந்த அதிகாரி கூறினார்.
அதிகாரிகள் இப்படி தெரிவித்தாலும், ஆசிரியர் தேர்வு முறையில், வெளிப்படைத் தன்மை இல்லாதது, பெரிய குறையாக உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன் வரை, ஒரு தேர்வு நடந்தால், அதில் தேர்வு பெற்றவர்களின் பெயர்கள் அனைத்தும், முழு விவரங்களும், டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியாகும்.
இது, ஒருவரை, ஒருவர் சரிபார்த்துக் கொள்ளவும், முறைகேடு நடக்கவில்லை என்பதை வெளிப்படுத்தவும், ஒரு வாய்ப்பாக இருந்தது. ஆனால், தற்போது, நேர்மையான முறையில் நடக்கிறது என, டி.ஆர்.பி., கூறினாலும், அதை, பொதுமக்களோ, தேர்வெழுதுவோரோ, உறுதி செய்ய முடியாத நிலை உள்ளது.
ஒருவர் தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறாரா, இல்லையா என்பதை, சம்பந்தப்பட்ட ஆசிரியர், தன் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை, டி.ஆர்.பி., இணையதளத்தில் பதிவு செய்தால், "செலக்டட் அல்லது நாட் செலக்டட்" என்ற விவரம் வரும்.
மேலும், அவர், பெற்ற மதிப்பெண் விவரத்தையும் அறியலாம். ஆனால், தேர்வு பெற்ற ஒருவரின் மதிப்பெண்ணை, மற்றொரு தேர்வர் அறிய முடியாது. இதனால், தேர்வர்கள் மத்தியில், ஒருவித நம்பிக்கையின்மை, தொடர்ந்து நிலவுகிறது.
இதுகுறித்து, டி.ஆர்.பி., ஏற்கனவே கூறுகையில், "முழுமையான விவரங்கள் அடங்கிய தேர்வு பட்டியலை, கண்டிப்பாக வெளியிடுவோம். அதற்கு, அதிகமான பணிகளை செய்ய வேண்டி உள்ளது. மற்றபடி, வெளியிடக் கூடாது என்ற எண்ணம் இல்லை" என பலமுறை, திரும்ப திரும்பக் கூறியுள்ளது.
தேர்வர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையிலும், முறைகேடுகள் நடக்கவில்லை; எல்லாம், வெளிப்படையாக, நேர்மையாக நடக்கிறது என்பதை வெளிப்படுத்தும் வகையிலும், தேர்வு செய்யப்பட்டவர்கள் குறித்த முழு விவரங்களையும், அனைவரும் பார்க்கும் வகையில் வெளியிட, டி.ஆர்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை செய்யாத வரை, டி.ஆர்.பி., மீதான சந்தேகப் பார்வையை, ஒழிக்க முடியாது.
Tuesday, July 9, 2013
RMSA - அரசு/அரசு உதவிபெறும் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 9 / 10ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு 10.07.2013 முதல் 30.07.2013 வரை 4 நாட்கள் பணியிடைப்பயிற்சி
|
1 முதல் 5 வகுப்புகளுக்கான CCE இணைச் செயல்பாடுகள் சார்பான ஆசிரியர் கையேட்டினை அகஇ சார்பில் வழங்கப்படும் பள்ளி மான்யம் மூலம் பெற்று பயன்படுத்திட தொடக்கக் கல்வி உத்தரவு
|
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் 2012-13 இணையதளத்தில் வெளியீடு
Direct Recruitment of Post Graduate Assistants for the year 2012-2013 - Click Here for Hall Ticket
Direct Link -2
Direct Recruitment of Post Graduate Assistants / Physical Director Grade - I for the year 2012-2013
1. List of Admitted Candidates - 167657
2. Subject-wise list of candidates admitted for the examination
Subject Code
| Subject | No. of Candidates |
13PG01 | Tamil | 33237 |
13PG02 | English | 14080 |
13PG03 | Mathematics | 22497 |
13PG04 | Physics | 12469 |
13PG05 | Chemistry | 12247 |
13PG06 | Botany | 8150 |
13PG07 | Zoology | 10991 |
13PG08 | History | 18380 |
13PG09 | Geography | 1481 |
13PG10 | Economics | 9501 |
13PG11 | Commerce | 18330 |
13PG12 | Political Science | 30 |
13PG13 | Home Science | 113 |
13PG14 | Physical Education Director Grade I | 3203 |
13PG15 | Micro-Biology | 1544 |
13PG16 | Bio-Chemistry | 1348 |
13PG17 | Telugu | 56 |
Total | 167657 |
Date of Examination: 21.07.2013 Timing: 10:00 A.M to 01:00 P.M
Subscribe to:
Posts (Atom)